|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 July, 2011

இதே நாள்...


  • ஈராக் குடியரசு தினம்
  •  எம்.பி.,3 பெயரிடப்பட்டது(1995)
  •  பிரெஞ்சு புரட்சியின் 200வது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது(1989)
  •  நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது(1967)
  • சன் டிவி' கலாநிதி ஓட்டம்???


    வினியோகஸ்தர்களை மிரட்டிய வழக்கில், சென்னை கே.கே.நகர் போலீஸ் அனுப்பிய சம்மனில், "சன் டிவி' கலாநிதி ஆஜராகவில்லை. சேலத்தைச் சேர்ந்த கந்தன் பிலிம்ஸ் உரிமையாளர் செல்வராஜ்; இவர், கடந்த 1ம் தேதி, கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதில், "தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் வினியோக உரிமையை, சன், "பிக்சர்ஸ்' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, சேலம் பகுதிக்கு கொடுப்பதாக, 1.25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, பணத்தை பெற்றுக் கொண்டார்.
    ஒப்பந்தப்படி, வினியோக உரிமையை தனக்கு கொடுக்காமல், தியேட்டர் உரிமையாளர்களுக்கு வினியோகித்து விட்டார். பணத்தை கேட்ட போது, அதில், 82.53 லட்ச ரூபாயை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். புகாரை அடுத்து, கடந்த 3ம் தேதி, சக்சேனா கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் தள்ளப்பட்டார். கோர்ட் உத்தரவின்படி, சக்சேனாவை இரண்டு நாட்கள், "கஸ்டடி'யில் எடுத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையின் போது, சக்சேனா, "நான், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஊழியன் மட்டுமே. என் முதலாளி(கலாநிதி) சொன்னதைத் தான் செய்தேன். வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சக்சேனா மீது, சேலத்தைச் சேர்ந்த சண்முகவேல் மற்றும், "மாப்பிள்ளை' படத் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் புகார் அளித்ததையடுத்து, அந்த வழக்குகளிலும் சக்சேனா, ஐயப்பன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். சக்சேனா அளித்த தகவலின் அடிப்படையில், சன் குழும நிர்வாக இயக்குனரான கலாநிதியை, நேற்று(புதன் கிழமை) காலை 10 மணிக்கு ஆஜராகக் கூறி, கே.கே.நகர் போலீசார், கடந்த திங்களன்று சம்மன் அனுப்பினர். கலாநிதி, போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை வந்தாக வேண்டும் என்பதால், பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர்.

    பரபரப்பான சூழலில், காலை 10:15 மணிக்கு, பாட்சா என்பவர் தலைமையில் ஏழு வக்கீல்கள், கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி, கலாநிதி சார்பில் மனு ஒன்றை அளித்தனர்.
    அதில், கலாநிதி, சொந்த விஷயமாக தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், வரும், 26ம் தேதி சென்னை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ஐயப்பன், விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதால், தானும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில், கலாநிதி திடீரென வெளிநாடு பயணம் சென்றதாக தெரிகிறது. எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் கலாநிதி சம்பந்தப்பட்டிருப்பதால், அவருக்கு கால அவகாசம் கொடுப்பதா அல்லது அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் கைது செய்வதா என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    கலாநிதி எங்கே? : திங்களன்று சம்மனை பெற்ற கலாநிதி, நேற்று முன்தினம் பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்று, அங்கிருந்து, "சுவிஸ்' விமானம் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்று விட்டார். எப்போதும், விமானத்தில் முதல் வகுப்பிலேயே பயணம் செய்யும் கலாநிதிக்கு, அந்த வகுப்பில், அப்போது, "சீட்' இல்லை எனக் கூறி விட்டனர். "பிசினஸ் வகுப்பில்' பயணம் செய்வதை தவிர்க்கும் கலாநிதி, வேறு வழியில்லாமல், "பிசினஸ்' வகுப்பிலேயே, அவரது கன்னடத்து மனைவி காவிரியுடன், "ஜூரிச்' நகரத்துக்கு பறந்து விட்டார். 

    இதயக் குழாய் நோய்களால் உயிரிழப்பு தென் இந்தியாவில் அதிகம்!

    உலகில் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இதயக் குழாய் நோயால் ஏற்படுகிறது என்று டாக்டர் தல்வார் கூறினார். சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை விழாவில் சண்டிகர் மேல்பட்டப்படிப்பு கழகத்தின் தலைவர் டாக்டர் கே.கே.தல்வார் பேசுகையில், மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை தரவேண்டும். இதயக் குழாய் நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்களுடைய ஆய்வுப்படி ஆயிரத்தில் 65 ஆண்களும் 48 பெண்களும் இந்த நேராயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் இதைத் தடுக்கும் முறை நாட்டில் சீராக இல்லை; இந்த நோய் தடுப்பு விகிதம் கிராமப்புறங்களில் 3 முதல் 4 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 8 முதல் 10 சதவீதமாக உள்ளது. வட இந்தியாவை விட தென்இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது. மாரடைப்பு ஏற்படும் 40 வயதுக்குட்பட்டவர்களை ஆய்வு செய்ததில் உலக அளவில் 3 முதல் 11 சதவீதம் பேரும் இந்தியாவில் 25 சதவீதம் பேரும் இதயக்குழாய் நோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். உலக அளவில் 52 நாடுகளில் நடைபெற்ற ஆய்வு மூலம் புகைப் பிடித்தல், மன அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவையே இந்த நோய்க்கான மூல காரணங்களாக உள்ளன என்றார்.

    எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் மயில்வாகனன் நடராஜன் பேசுகையில், தற்போது நீரிழிவு நோய் அனைத்து பிரிவினரையும் இளைஞர்களையும் கூட பாதிக்கிறது என்றார். அமெரிக்க எமோரி பல்கலைக்கழக பேராசிரியர் கே.எம். வெங்கட் நராயணனுக்கு டாக்டர் மோகன் நீரிழிவு நோய் நிபுணர்கள் மைய தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்த மையத்தின் தலைவர் வி.மோகன், துணைத்தலைவர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன், இணை மேலாண்மை இயக்குநர் ஆர்.எம்.அஞ்சனா, இந்திய நீரிழிவு ஆராய்ச்சி மையத் தலைவர் சஷாங்க் ஜோஷி ஆகியோர் பேசினர்.

    ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் : போலீஸ் தடியடி!




    உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.   சிகிச்சை முடிந்து இன்று இரவு 10. 45 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.    ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர். விஐபி வாயில் வழியாக நடந்து வந்த ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சிறிது உரையாடினார்.  தூரத்தில் நின்றிருந்த ஏராளமான  ரசிகர்களின் வாழ்த்துக்களை கையசைத்து ஏற்றுக்கொண்டார்.

    பண்ணை வீட்டுக்கு சென்றார் ரஜினி: சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் ஓய்வெடுப்பதற்காக பண்ணை வீட்டுக்குச் சென்றார்.


    உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.   சிகிச்சை முடிந்து இன்று இரவு 10. 45 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து நேராக கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்றார்.

    தீபாவளி பண்டிகைக்கான ரயில்வே டிக்கெட் முன்பதிவு வரும் 28ம் தேதி தொடங்குகிறது.

    தீபாவளி இந்த ஆண்டு வரும் அக்டோபர் 26ம் தேதி (புதன்கிழமை) வருகிறது.


    ரயிலில் பயணம் செய்வதற்கு 90 நாட்கள் இருக்கும்போதுதான் முன் பதிவு செய்ய முடியும். தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு வரும் 28ம் தேதி தொடங்குகிறது. எனவே, முன்பதிவு நாட்களில் ரயில்வே போலீசார், புரோக்கர்கள், டிராவல் ஏஜன்ட்கள் டிக்கெட்களை மொத்தமாக வாங்குவதைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     ஏழைய எளிய, நடுத்தர மக்களுக்கு டிக்கெட் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உதட்டில் பிளாஸ்திரி ஒட்டினால் குறட்டையை தடுக்க முடியும்!


    மனிதர்கள் விடும் குறட்டை குறித்தும், அதை தடுப்பது பற்றியும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சாதாரண மனிதர்களிடமும், நோயாளிகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மூச்சு விடுதலில் ஏற்படும் சிரமங்கள் தான் குறட்டையாக வெளி வருகிறது.

    இந்த பிரச்சினை உள்ளவர் ஒரு இரவில் அதிகபட்சமாக 100 தடவை குறட்டை விட வாய்ப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு குறட்டையும் 10 வினாடிகள் வரை நீடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நோயாளிகளை தான் குறட்டை அதிகமாக பாதிக்கிறது என்றும், அவர்களது ஆழ்ந்த தூக்கத்தை இது கெடுக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது.  

    ஆராய்ச்சியை தொடர்ந்து குறட்டையை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அதன் விளைவாக பிளாஸ்திரி போன்ற புதிய உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பிளாஸ்திரியை உதட்டில் ஒட்டிக்கொண்டால் மூச்சு விடுவது சீராகி, குறட்டை விடுவது தடுக்கப்படுகிறது.

    தூங்கப்போகும் முன்பு, மேல் உதட்டில் இந்த பிளாஸ்திரியை ஒட்டிக்கொள்ள வேண்டும். இடையில் பேசிக்கொண்ட இருந்தாலும், பிளாஸ்திரியால் சிரமம் இருக்காது.   இந்த பிளாஸ்திரி இன்னும் சில சோதனைக்கு பிறகு சந்தைக்கு வரவிருக்கிறது. தற்போது இந்த புதிய பிளாஸ்திரி உபகரணம், அமெரிக்காவில் உள்ள மயோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் 125 பேருக்கு பொருத்தி சோதித்து பார்க்கப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்ட சோதனையிலேயே இந்த பிளாஸ்திரி உபகரணம் நல்ல பலனை அளித்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முழுமையான பரிசோதனைக்கு பிறகே இந்த உபகரணம் வெளிச் சந்தைக்கு அனுப்பப்பட உள்ளது.

    உலகின் டாப் 500 கம்பெனிகள்...!!


    NO : 1

    உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் சிறந்த 500 பெரிய நிறுவனங்களில் இந்தியன் ஆயில் உட்பட 8 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
    பார்ச்சூன் என்ற இதழ் ஒவ்வொரு ஆண்டும் அதிக வருமானம் ஈட்டிய 500 பெரிய நிறுவனங்களை பட்டியலிட்டு வருகிறது. அவ்வாறாக இந்த ஆண்டின் சிறந்த முன்னணி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் இடம் பிடித்துள்ள 8 இந்திய நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் அரசு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியன் ஆயில் நிறுவனம் முன்னணி வகிப்பதுடன், டாப் 100ல் இடம்பிடித்த ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமைமையும் பெற்றுள்ளது. கடந்த 2010ம் ஆண்டுன் ஒப்பிடுகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை தவிர மற்ற 7 நிறுவனங்களும் இந்த ஆண்டில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன.

    அதில் இந்தியன் ஆயில் 98வது இடத்தையும் (125), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 134 (175), பாரத் பெட்ரோலியம் 271 (307), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 291 (282), இந்துஸ்தான் பெட்ரோலியம் 335 (354), டாடா மோட்டார்ஸ் 358 (410), ஓஎன்ஜிசி 360 (413), டாடா ஸ்டீல் 369வது இடத்தையும் (410) பிடித்தன. இந்த பட்டியலில் சில்லரை வியாபார நிறுவனமான வால்&மார்ட், ராயல் டட்ச் ஷெல், எக்ஸான் மொபைல் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.

    Flying car...


    மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்!


    மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது.

    இந்த குண்டுவெடிப்புகளில், 4 பேர் பலியானதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மும்பை முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலால் மும்பையில் பதட்டம் நிலவுகிறது. மும்பை குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

    இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் இணைந்து லஷ்கர் இ தொய்பா நடத்திய தாக்குதல்?

    மும்பையில் இன்று 3 இடங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என மும்பை போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

    இன்று மாலை 6.45 மணிக்கு ஆரம்பித்து 7 மணிக்குள் தாதர், ஜவேரி பஜார் மற்றும் ஒபரா ஹவுஸ் என மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து மும்பை நகரை அதிர வைத்தன. இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.குண்டுவெடிப்பு நடந்த இடங்களை போலீஸார் முற்றுகையிட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    முதல் கட்ட விசாரணையில் இந்த குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    மூன்று இடங்களிலும் ஐஇடி வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தேர்வு செய்து குண்டுகளை வைத்துள்ளதால் பெருமளவில் உயிர்ச்சேதத்தை நிகழ்த்தும் திட்டமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

      மகாராஷ்டிர முதல்வருடன் பிரதமர் பேச்சு: குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானை தொடர்பு கொண்டு பேசினார். நிலவரம் குறித்து கேட்டறிந்த அவர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு கேட்டுக் கொண்டார்.

    அஸ்தமனத்தில் 'சன் பிக்சர்ஸ்'?

    தமிழ்த் திரையுலகைப் புரட்டிப் போட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் இனிமேல் எழ முடியாது என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத நிறுவனங்கள் எத்தனையோ. ஏவிஎம், ஜெமினி என பல நிறுவனங்கள் சகாப்தங்களைக் கண்ட திரையுலகம் தமிழ். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவை எதுவுமே தமிழில் படமெடுக்க முடியாத நிலை. இவர்களை விட மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் சிறு படத் தயாரிப்பாளர்கள்தான். சிறிய அளவிலான முதலீட்டில் படம் எடுத்து அதில் வரும் லாபத்தை வைத்து பிழைத்து வந்தவர்கள் இவர்கள்.

    இப்படி அத்தனை பேரின் பிழைப்பிலும் கிட்டத்தட்ட மண்ணைப் போட்டு மூடிய நிறுவனம் சன் பிக்சர்ஸ் என்கிறார்கள் அதனால் பாதிக்கப்பட்ட திரையுலகினர்.எங்கிருந்தோ வந்த டைனசோர் போல தடாலடியாக வந்து திரையுலகத்தையே வளைத்துப் போட்டு விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது திரையுலகினரின் கருத்து.

    ஆரம்பத்தி்ல விநியோகத்தில் இறங்கியது சன் பிக்சர்ஸ். அதாவது படத்தை எடுத்து முடித்து விட்டு அதை வெளியிட்டால் லாபம் கிடைக்குமா, நஷ்டம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களை அணுகி, அவர்களது தயாரிப்புச் செல்வை முழுமையாக கையில் கொடுத்து படத்தை அப்படியே வாங்கியது சன் பிக்சர்ஸ்.

    இது ரிஸ்க் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்து, லாபத்தையும் கொடுத்ததால் பல தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸிடம் படத்தைக் கொடுக்க முண்டியடித்தனர். ஆனால் அது நாளடைவில் சன் பிக்சர்ஸிடம்தான் படத்தைக் கொடுத்தாக வேண்டும் என்ற கஷ்ட காலத்திற்கு தயாரிப்பாளர்களைத் தள்ளி விட்டது. ஆரம்பத்தில் சன் பிக்சர்ஸ் காட்டிய வழி சிறப்பாக இருப்பதாக கருதிய தயாரிப்பாளர்களுக்கு, பின்னர்தான் அது திரும்பி வரவே முடியாத ஒத்தையடிப் பாதை என்பது தெரிய வந்து திடுக்கிட்டனர்.

    ஆனால் அவர்கள் விழித்து எழுவதற்குள் ரெட் ஜெயன்ட் மூவிஸ், கிளவுட் நைன் மூவிஸ் என்று கருணாநிதி குடும்பத்தினர் படையெடுத்து வந்து விட்டனர். இதனால் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ், தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என முக்கோணச் சிக்கலில் மாட்டிக் கொண்டனர் தமிழ்த் திரையுலகினர். எப்படி 'பெர்முடா' முக்கோணத்தில் சிக்கினால் அதோ கதியோ, அதே நிலைதான் தமிழ்ச் சினிமாக்காரர்களுக்கும் ஏற்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்தனை காலத்தில் வாங்கி விநியோகித்த படங்களின் எண்ணிக்கை 18 ஆகும். அவர்கள் வாங்கி விநியோகித்த முதல் படம் காதலில் விழுந்தேன். கடைசியாக விநியோகித்த படம் எங்கேயும் காதல்.

    சன் பிக்சர்ஸ் இதுவரை ஒரே ஒரு படத்தை மட்டுமே தயாரித்துள்ளது. அது ரஜினிகாந்த் நடித்த எந்திரன். இப்படத்தின் மூலம் ரூ. 179 கோடி அளவுக்கு சன் பிக்சர்ஸ் லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸால், சன் டிவிக்கு கிடைத்து வந்த லாபம் கிட்டத்தட்ட 11.5 சதவீதமாகும். சன் பிக்சர்ஸ் மீது தற்போது பெருமளவில் மோசடிப் புகார்களும், பண முறைகேடு புகார்களும் குவி்ந்து வருவதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவிலேயே முடங்கி விடும் என்று திரையுலகில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    சிங்கள தீவிரவாத ஆய்வு நிபுணர், லக்பீமா பத்திரிக்கை மீது கனடிய தமிழ் அமைப்பு வழக்கு

    சிங்கள பத்திரிக்கையான லக்பீமா மற்றும் சிங்கள தீவிரவாத ஆய்வ நிபுணர் ரோஹன் குணரத்னா ஆகியோர் மீது கனடா கோர்ட்டில், கனடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. கனடாவைச் சேர்ந்த கனடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு உலகில் உள்ள மிக வலுவான, தமிழர் அமைப்புகளில் முக்கியமானதாகும். இந்த அமைப்பில் கனடாவில் வாழும் 3 லட்சம் தமிழர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    ஈழப் போரின்போது ஈழத்தில் நடத்தப்பட்ட போர்க்குற்றம் மற்றும் அநியாயத் தாக்குதல்களைக் கண்டித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது இந்த அமைப்பு. இலங்கையின் தாக்குதல் செயல்களை கனடா அரசுக்கும், உலக நாடுகளுக்கும் அம்பலப்படுத்தி வந்தது.

    இந்தநிலையில் சிங்களப் பத்திரிக்கையான லக்பீமா மற்றும் ரோஹன் குணரத்னா ஆகியோர் மீது டோரன்டோ கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது இந்த அமைப்பு. இந்த வழக்கை அமைப்பின் தலைவர் உமாசுதன் சுந்தரமூர்த்தி, செய்தித் தொடர்பாளர் டேவிட் பூபாளப் பிள்ளை ஆகியோர் தொடர்ந்துள்ளனர்.

    அதில், சிங்கப்பூரிலிருந்து செயல்படும் ஹோரன் குணரத்னா, லக்பீமா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகளின் கனடிய பிரதிநிதிகளாக கனடிய தமிழ் காங்கிரஸ் செயல்படுவதாக பேட்டி அளித்துள்ளார். அதை லக்பீமா செய்தியாக வெளியிட்டுள்ளது.

    தனது பேட்டியில், விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில், கனடிய தமிழ் காங்கிரஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. கனடாவில் இந்த அமைப்புதான் புலிகள் அமைப்பின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார் குணரத்னா.

    2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட கனடியத் தமிழ்க் காங்கிரஸ் தமிழ்மக்களின் வாழ்வாதரத்தை உயர்விக்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது. ஆனால் ரோஹன் குணரத்னாவின் இக் கூற்று இந்த அமைப்பை களங்கப்படுத்துவதாக உள்ளது. அவர் கூறியது அவதூறானது மட்டுமல்ல, பொய்யான தகவலும் கூட.எனவே இந்த அவதூறான செய்திக்காக அவர்கள் பத்து லட்சம் டாலர் நஷ்ட ஈட்டைத் தர வேண்டும் என்று வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உலக செஸ் போட்டி!

    இந்தியாவில் முதன் முறையாக சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் தற்போதைய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் போரிஸ் கெல்ஃபேண்டு ஆகியோர் மோதவுள்ளனர்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் கிர்சன் இலயும்ழினோவ் சந்தித்தார். அப்போது 2012ம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான (World Chess championship title) போட்டியை சென்னையில் நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.

    இதுவரை இந்தியாவில் சதுரங்கப் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற 24 பேரில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். உலக சதுரங்கத்தில் இந்தியா 7வது இடத்தைப் பெற்றுள்ளது.

    2012ம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டி, தற்போதைய உலக வாகையரான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் போரிஸ் கெல்ஃபேண்டு ஆகியோரிடையே நடைபெறும். இந்தப் போட்டியை 2012ம் ஆண்டு சென்னையில் நடத்திட முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார்.

    உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டி இதுவரை இந்தியாவில் நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்கான செலவு சுமார் ரூ. 20 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாக சென்னையில் இந்தப் போட்டியில் நடைபெறுவது குறித்து விஸ்வநாதன் ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    ஜெகனின் வருமானம் ரூ.43,000 கோடி? சொத்துகுவிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருக்கையில் ஜெகன் மோகன் ரெட்டி மக்கள் உடைமைகளை கொள்ளயைடித்துள்ளதாக குற்றம் சாட்டி, அவரது சொத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி காங்கிரஸ் தலைவர் பி. சங்கர் ராவ் கடந்த நவம்பர் மாதம் ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். சங்கர் ராவ் தற்போது அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று சில தெலுங்கு தேச கட்சித் தலைவர்களும், ஒரு வழக்கறிஞரும் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் தலைமை நீதிபதி நிசார் அகமது கக்ரு மற்றும் நீதிபதி விலாஸ் வி அப்சல்புர்கார் முன் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த அவர்கள் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துகுவிப்பு குறித்து விசாரணை நடத்தி இன்னும் 2 வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டனர். அந்த அறிக்கை சமர்பிக்க்ப்பட்ட பிறகே இறுதி விசாரணை நடக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த விசாரணைக்கு அனைத்து அரசுத் துறைகளும் சிபிஐக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இது குறித்து சங்கர் ராவ் கூறியதாவது, ஜெகன் மோகன் ரெட்டி அவரது தந்தை முதல்வராக இருக்கையில் மக்கள் பணத்தை கொள்ளையடித்து சொத்து குவித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெகனின் வருமானம் ரூ. 11 லட்சம். ஆனால் அவரது தற்போதைய வருமானம் ரூ. 43,000 கோடி.

    ஒய்.எஸ்.ஆர் பதவியில் இருக்கையில் ஜெகன் சுரங்கங்கள், நிலங்கள் ஒதுக்கீடு, உரிமம் வழங்குதல் ஆகியவற்றில் இருந்து பணம் சம்பாதித்தார் என்றார். அரசியல் நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற ஜெகனின் வழக்கறிஞர் ராகேஷ் திவேதியின் வாதத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. திவேதி மேலும் கூறுகையில், ஜெகன் காங்கிரஸில் இருக்கும் வரை சங்கர் ராவ் எதுவும் கூறவில்லை. ஆனால் தற்போது தனிக் கட்சி ஆரம்பித்தவுடன் ஜெகனுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக குற்றம்சாட்டுகிறார் என்றார்.

    சங்கர் ராவ் தனது மனுவில் ஜெகன் உள்ளிட்ட 43 பேர், ஜகதி பப்ளிகேஷன்ஸ், இந்திரா டெலிவிஷன், பாரதி சிமெண்ட்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், பென்னார் சிமெண்ட்ஸ், கார்மெல் ஏசியா ஹோல்டிங்ஸ் லிட் மற்றும் சந்தூர் பவர் ஆகிய நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டியுள்ளார்.

    ஆந்திர பிரதேசம் தொழில் உள்கட்டமைப்பு கழகத்துடன் சேர்ந்து ஹைதராபாத்தில் ஒரு குடியிருப்பு மற்றும் கோல்ப் கோர்ஸ் கட்டியதில் துபாயைச் சேர்ந்த ஈமார் ப்ராபர்டீஸ் முறைகேடு செய்துள்ளது என்ற சங்கர் ராவின் மனுவை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஜெகன் கடந்த நவம்பரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மார்ச் மாதத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் துவக்கினார். கடந்த மே மாதம் நடந்த இடைத் தேர்தில் வெற்றிபெற்று மீண்டும் கடப்பா தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பள்ளி, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்-ஐ.நா!

    கலவரங்கள், போர்கள், வன்முறைச் சம்பவங்களின்போது பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் குழந்தைகளுக்கான புகலிடமாக கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தில், இந்த இடங்களை யாரும் தாக்கக் கூடாது. மீறி தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூறியுள்ளது.

    2 வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் பள்ளி, மருத்துவமனைகளைக் குறி வைத்து கொத்து எறிகுண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக சின்னஞ் சிறார்களையும், வயோதிகர்களையும், நோயாளிகளையும், பெண்களையும் சிங்களப் படையினர் கொடூரமாகக் கொன்று குவித்தபோது இந்த விதிமுறைகளையும், எச்சரிக்கையையும் பிறப்பிக்காத ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இப்போது இப்படிப் பேசியிருப்பது ஐ.நா.வின் இரட்டை வேட முகத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

    இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றியுள்ளனர். அதில், போர்க்காலங்கள், தாக்குதல் நடைபெறும் இடங்களில், பள்ளிகள், மருத்துவமனைகளை யாரும் தாக்கக் கூடாது. அவை குழந்தைகளுக்கான புகலிடமாக கருதப்பட வேண்டும்.

    இதை மீறி அங்கு தாக்குதல் நடத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சிறார் உரிமைகளை மீறும் செயலும் ஆகும். எனவே இதுபோன்ற வன்முறைகளை யாரும் அனுமதிக்கக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறுகையில், கற்பிக்கும் இடங்களையும், உடலைக் குணமாக்க வரும் இடங்களையும் யாரும் போர்க்களமாக்கக் கூடாது. அதை அனுமதிக்க முடியாது என்று பட்டவர்த்தனமாக தனது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார்.

    இலங்கையில், ஈழத்தில் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் கொடூரமாக குண்டு போட்டு அநியாயமாக பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும், வயோதிகர்களையும் கொன்று குவித்த இலங்கை காடையர்கள் மீது இதே பாதுகாப்பு சபையும், இதே பான் கி மூனும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது இன்று வரை விசித்திரமான மர்மமாகவே உள்ளது. ஆனால் இப்போதாவது இப்படி ஒரு தீர்மானத்தைப் போட்டுள்ளனரே என்று ஆறுதல் அடைய வேண்டியுள்ளது.

    24 நிறுவனங்கள் மூலம் கைமாறிய ஸ்பெக்ட்ரம் பணம்- நாளை நிரா ராடியாவின் டேப் நீதிமன்றத்தில் தாக்கல்!

    2ஜி விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளின் மனைவி மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட மேலும் 10 பேரை சாட்சியாக சேர்க்க அனுமதிக்குமாறு டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இவர்களோடு மேலும் 28 ஆவணங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது. முன்னதாக இன்று நிரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சிடிக்களை இன்று சிபிஐ தாக்கல் செய்ய இருந்தது. ஆனால், அதை பின்னர் தாக்கல் செய்வதாக சிபிஐ கூறிவிட்டது.

    அதே நேரத்தில் அடிமாட்டு விலைக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் கோயங்காவின் மனைவி அசீலா, கோயங்காவின் சகோதரர் பிரமோத் மற்றும் உறவினர் யஷ்வர்தன் ஆகியோரை சாட்சிகளாக சேர்க்க அனுமதிக்குமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியிடம் சிபிஐ இன்று கோரிக்கை விடுத்தது.

    மேலும் நிரா ராடியா-கனிமொழி, ராடியா-ராசா ஆகியோர் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சிடிக்கள் தவிர மேலும் 28 ஆவணங்களையும் தாக்கல் செய்வதாக சிபிஐ கூறியுள்ளது.

    இந்த 28 ஆவணங்களில் நிரா ராடியாவிடம் கடந்த மே மாதம் 12ம் தேதி நடத்திய விசாரணையின் விவரம், டைகர் டிரேடர்ஸ் நிறுவனத்திலிருந்து ஸ்வான் கேபிடல் நிறுவனத்துக்கு நடந்த பண பரிமாற்றம், டிபி ரியாலிட்டி நிறுவன போர்ட் மீட்டிங்கில் நடந்த உரையாடல் விவரங்கள் ஆகியவை அடங்கும்.

    ஆனால், சாட்சிகளாக உறவினர்களை சேர்ப்பதற்கும், புதிய ஆவணங்களை தாக்கல் செய்வதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து இதன் மீது அடுத்த வாரம் முடிவை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

    இந் நிலையில் நிரா ராடியாவின் உரையாடல்கள் அடங்கிய டேப்பை சி.பி.ஐ. நாளை தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே நீரா ராடியாவின் உரையாடலின் ஒரு பகுதிதான் வெளியாகியுள்ளது. நாளை இந்த உரையாடலின் முழு விவரமும் தாக்கல் செய்யப்பட்டால் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    24 நிறுவனங்கள் மூலம் கைமாறிய பணம்: இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் கை மாறியது தொடர்பான புகார்களை அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சைப்ரஸ், மொரீசியஸ் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தியதில் 24 நிறுவனங்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளனர்.

    சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது 2 மாதத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்டுள்ளன.
    இந்தத் தகவலை ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த 24 நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களில் தொடங்கப்பட்டுள்லன. இந்த 24 நிறுவனங்களும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வந்துள்ளன.

    ஆபாச ‌வீடியோ ஒழு‌க்க ‌பிர‌ச்சனை ம‌ட்டுமே - நி‌த்யான‌ந்தா ???

    ஒரு பெண்ணுடன் இருப்பது போல ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சியில் இருப்பது நானோ அல்லது நடிகை ரஞ்சிதாவோ அல்ல என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தமிழகத்திற்கு சுதந்திரமாக வரத் தொடங்கியுள்ளனர். நேற்று ரஞ்சிதா சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது புகார் கொடுத்தார். பின்னர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பேட்டியும் அளித்தார்.

    இந்த நிலையில் இன்று காலை சென்னை வந்த நித்தியானந்தா எழும்பூரில் உள்ள மெரீனா டவர் ஹோட்டலி்ல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  3வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை நானும் தியான பீடமும் வாழ்த்தி வணங்குகிறோம். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    'மார்ப்' செய்யபப்ட்ட வீடியோ: என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு 'மார்ப்' செய்யப்பட்டது. டி.வியில் காட்டப்பட்ட காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பியதில் அது உண்மை என்று சொன்னதாக தகவல் வந்தது. ஆனால் அந்த காட்சிதான் லேபுக்கு அனுப்பப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. ஒரு வழக்கில் லேப் ரிப்போர்ட்டை கோர்ட் ஏற்கவில்லை. எனவே லேப் ரிப்போர்ட்டை உண்மை என்று கூற முடியாது. எனது சம்பந்தப்பட்ட வீடியோவும் அதுபோல்தான்.

    தூய்மையானவர்கள்தான் என்னைக் கேள்வி கேட்கலாம்: என்னைப்பற்றி ஒளிபரப்பான வீடியோ சித்தரிக்கப்பட்டது. இது சதி செயல். பொய்யான தகவல். ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.

    நானும் ஒரு பத்திரிக்கையாளன்: நானும் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன். வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன்.

    சில பத்திரிகைகள், டி.விகள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வியும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள்.

    நிலத்தை அபகரித்தனர், மிரட்டினர், அடித்து உதைத்தனர்: அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்திருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.

    'டிஸ்கவுண்ட்' செய்து ரூ.60 கோடி கேட்டார்கள்:  முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு. நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.

    பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள். எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மதரீதியிலான தாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

    ஜூலை 15ம் தேதி பெங்களூர் தியான பீடத்தில் மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி நடத்துகிறோம். இதில் உடல், மன வியாதிகள் குணமாவதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து இருக்கிறோம்.இதை மீண்டும் ஒருமுறை மக்களுக்காக செய்து காட்ட இருக்கிறோம். இதில் பங்கு பெற்றால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும். இதில் எல்லோரும் பங்கு பெறுமாறு அழைக்கிறேன் என்றார் நித்தியானந்தா.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...