|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 July, 2011

உதட்டில் பிளாஸ்திரி ஒட்டினால் குறட்டையை தடுக்க முடியும்!


மனிதர்கள் விடும் குறட்டை குறித்தும், அதை தடுப்பது பற்றியும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சாதாரண மனிதர்களிடமும், நோயாளிகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மூச்சு விடுதலில் ஏற்படும் சிரமங்கள் தான் குறட்டையாக வெளி வருகிறது.

இந்த பிரச்சினை உள்ளவர் ஒரு இரவில் அதிகபட்சமாக 100 தடவை குறட்டை விட வாய்ப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு குறட்டையும் 10 வினாடிகள் வரை நீடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நோயாளிகளை தான் குறட்டை அதிகமாக பாதிக்கிறது என்றும், அவர்களது ஆழ்ந்த தூக்கத்தை இது கெடுக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது.  

ஆராய்ச்சியை தொடர்ந்து குறட்டையை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அதன் விளைவாக பிளாஸ்திரி போன்ற புதிய உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பிளாஸ்திரியை உதட்டில் ஒட்டிக்கொண்டால் மூச்சு விடுவது சீராகி, குறட்டை விடுவது தடுக்கப்படுகிறது.

தூங்கப்போகும் முன்பு, மேல் உதட்டில் இந்த பிளாஸ்திரியை ஒட்டிக்கொள்ள வேண்டும். இடையில் பேசிக்கொண்ட இருந்தாலும், பிளாஸ்திரியால் சிரமம் இருக்காது.   இந்த பிளாஸ்திரி இன்னும் சில சோதனைக்கு பிறகு சந்தைக்கு வரவிருக்கிறது. தற்போது இந்த புதிய பிளாஸ்திரி உபகரணம், அமெரிக்காவில் உள்ள மயோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் 125 பேருக்கு பொருத்தி சோதித்து பார்க்கப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்ட சோதனையிலேயே இந்த பிளாஸ்திரி உபகரணம் நல்ல பலனை அளித்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முழுமையான பரிசோதனைக்கு பிறகே இந்த உபகரணம் வெளிச் சந்தைக்கு அனுப்பப்பட உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...