பொதுவாக ஒருவரை நாம் புரிந்து கொள்ளாமல் போவதற்கு, அவர்கள் மீதான வெறுப்பு
தான் காரணமாக இருக்கும், அவர்களை வெறுக்கக் காரணமே அவர்களை நாம் புரிந்து
கொள்ளாமல் போவதுதான். எனவே, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் கருத்துக்களுக்கு
மதிப்பளிப்போம். அவர்கள் நிலையில் இருந்து ஒரு பிரச்னையை ஆராய்ந்து பார்க்க
முயற்சிக்க வேண்டும். இதுவே ஒரு பிரச்னையை எளிதாகக் கையாள சரியான வழியாக
இருக்கும்.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
24 January, 2013
வேண்டாம் என்றால் வேண்டாம்!
எதற்கும் கீழ்ப்படியாமல் நடப்பவர்களை விட, எல்லாவற்றையுமே ஏற்றுக்
கொள்ளும் நபர்களிடம் தான் பிரச்னை அதிகம். அதெப்படி, எதற்கும்
கீழ்ப்படியாமல் இருப்பவர்களுக்குத்தானே பிரச்னைகள் அதிகம் என்று கேட்டால்
அதற்கு பதில், இல்லை என்பதுதான்.பொதுவாக ஒருவர் யார் சொல்வதையும் கேட்காமல், தான்தோன்றித் தனமாக
நடப்பதாக வைத்துக் கொள்வோம். அதனால் அவர் செய்யும் எந்த செயலுக்கும் அவர்
மட்டுமே காரண கர்த்தாவாகிறார். அவர் செய்யும் காரியத்தால் ஏற்படும் நன்மை
தீமைகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பு. எனவே, அவர் தான் செய்யும் காரியம் மீது
மிகுந்த அக்கறை காட்டுவார். அதில் சறுக்கல்கள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு
கையாள்வது என்றும் சிந்தித்து வைத்திருப்பார்.
ஆனால், யார் எது கூறினாலும் அதை தனது மனதுக்குப் பிடிக்காவிட்டாலும்,
தனது மூளை அது தவறு என்று கூறினாலும் ஒருவர் கூறிவிட்டார் என்பதாலேயே அதனை
செய்யும் நபருக்குத்தான் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அதற்குக் காரணமும்
இருக்கிறது. ஒருவர் தனக்குப் பிடிக்காத காரியத்தை மற்றவர்களின் தூண்டுதல் காரணமாக
செய்யும் போது அதனை ஆர்வத்துடன் செய்ய இயலாது. மேலும், அதன் சாதக, பாதகம்
குறித்து ஆராய்ந்திருக்க மாட்டார். அதே சமயம் அதில் ஏதேனும் தவறு
நேர்ந்தால் உடனடியாக, அதை செய்யச் சொன்னவரின் பேரில் பொறுப்பை
போட்டுவிடலாம் என்ற அலட்சியமும் இருக்கும். இந்த சூழ்நிலையில்தான்,
ஒருவருக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், தனக்குப் பிடிக்காத
காரியத்தை செய்யும் போது, அவரது மனம் அவரை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கும்.
அவரது மனம் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியாமல் மன
அழுத்தத்துக்கு உள்ளாவார்.
எனவே, ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக அதனை
மறுத்துவிடுங்கள். உங்களை செய்யச் சொல்லும் விஷயத்தில் சாதக பாதகங்களை அலசி
ஆராயந்து, அதில் சாதகம் இல்லை என்று உங்களுக்குத் தெரிந்தால், அதனை செய்ய
முடியாது என்று உறுதியாகக் கூறி விடுங்கள். உங்கள் நண்பர்கள் உங்களை சினிமாவுக்கு அழைக்கிறார்கள். உங்களுக்குப் போக
விருப்பமில்லை. ஆனால் நண்பர்களுக்காக செல்வீர்கள். இது ஒரு சாதாரண
காரியமாக இருக்கலாம். ஆனால், உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நீங்கள்
செய்வதால், காலம், பணம் விரயம் தான் ஏற்படுமேத் தவிர, அது உங்கள் மனதுக்கு
மகிழ்ச்சியை அளிக்காது. இது எல்லா விஷயத்துக்குமே பொருந்தும். ஒரு விஷயத்தை நீங்கள் வேண்டாம்
என்று நினைத்தால், அதனை தெளிவாக உறுதியாக வேண்டாம் என்று கூற வேண்டியது
மிகவும் அவசியமாகும்.
பொண்ணுக்கே புதன் கிடைத்தால்?
பெண்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு புதன்கிழமை, பிற்பகல், 3:30 மணிக்கு
தங்களின் இயல்பான வயதை விட, மிகவும் வயதானவர்களாகத் தோற்ற மளிக்கின்றனர்'
என, பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. புதன்கிழமைகளில்
கடும் பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. வாரக் கடைசியில்
ஏற்பட்ட அழுத்தமும், புதன்கிழமைகளில் ஒன்றாக சங்கமிப்பதால், அன்றைய
தினத்தில், பெண்கள், அவர்களது இயல்பான வயதைக் காட்டிலும் அதிக வயது
உடையவர்களாகத் தெரிகின்றனர். இது தொடர்பாக பெண்களிடம் நடத்திய ஆய்வில்,
12 சதவீதம் பேர், புதன்கிழமைகளை அதிக சுமை தரும் நாட்களாக
தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில், வியாழக்கிழமைகளில் பெண்களைப் பொறுத்தவரை
அன்பாகவும், காதல் வசப்படுபவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாகத்தான்,
வெள்ளிக்கிழமைகளில், பெண்கள் மிகவும்அழகானவர்களாக தெரிவது மட்டுமின்றி,
மகிழ்ச்சியாகவும் உள்ளனர். 60 சதவீத பெண்கள், வெள்ளிக்கிழமைகளில் தாங்கள்
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகதெரிவித்துள்ளனர்.பெண்களில், 25
சதவீதத்தினருக்கும் மேல், பணிச்சுமை அல்லது பிற காரணங்களால்,
மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால், புதன்கிழமைகளில் மதிய உணவு
இடைவேளையின்போது கூட, ஓய்வில்லாமல் பணியாற்றவேண்டியுள்ளதாக, 19 சதவீதம்
பேர் கருத்துதெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்த ஆய்வை நடத்திய, "செயின்ட் த்ரோப்ஸ்' நிறுவனத்தை சேர்ந்த நிபுணர் நிகோலா ஜாஸ் கூறியதாவது:பெண்களில், மூன்றில் ஒரு பகுதியினருக்கு, புதன்கிழமைகளில் மன அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக, பிற்பகல், 3:30 மணி அளவில் அதிகப்படியான அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதனால்தான், பெண்கள், தங்களின் இயல்பான வயதைக் காட்டிலும், மிகவும் வயதானவர்களாக தெரிகின்றனர்.அதுபோல், 46 சதவீதத்தினர், வார இறுதிநாட்களில் மதுபானங்களை குடிப்பதும் மற்றொரு காரணம். இதனால்,திங்கள் கிழமைகளில், தூக்கமின்மையால், 37 சதவீதம் பேர் அவதிப்படுகிறார்கள். இதுவும், முதிர்ச்சியை காட்டிக்கொடுப்பதற்கான மற்றொரு முக்கிய காரணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் சகஜநிலைக்கு திரும்ப, இரண்டு நாட்கள் ஆகுமாம்
இது குறித்து இந்த ஆய்வை நடத்திய, "செயின்ட் த்ரோப்ஸ்' நிறுவனத்தை சேர்ந்த நிபுணர் நிகோலா ஜாஸ் கூறியதாவது:பெண்களில், மூன்றில் ஒரு பகுதியினருக்கு, புதன்கிழமைகளில் மன அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக, பிற்பகல், 3:30 மணி அளவில் அதிகப்படியான அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதனால்தான், பெண்கள், தங்களின் இயல்பான வயதைக் காட்டிலும், மிகவும் வயதானவர்களாக தெரிகின்றனர்.அதுபோல், 46 சதவீதத்தினர், வார இறுதிநாட்களில் மதுபானங்களை குடிப்பதும் மற்றொரு காரணம். இதனால்,திங்கள் கிழமைகளில், தூக்கமின்மையால், 37 சதவீதம் பேர் அவதிப்படுகிறார்கள். இதுவும், முதிர்ச்சியை காட்டிக்கொடுப்பதற்கான மற்றொரு முக்கிய காரணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் சகஜநிலைக்கு திரும்ப, இரண்டு நாட்கள் ஆகுமாம்
வேளாங்கண்ணி அஞ்சல் தலை வெளியீடு!
வேளாங்கண்ணி தேவாலயம், "பசிலிக்கா அந்தஸ்து பெற்ற பொன் விழா ஆண்டையொட்டி,
சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. நாகை அடுத்த,
வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயம், கீழை நாடுகளின் லூர்து என,
அழைக்கப்படுகிறது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தேவாலயம், 1962ல்,
பசிலிக்கா (பேராலயம்) அந்தஸ்து பெற்றது. பசிலிக்கா அந்தஸ்து வழங்கப்பட்ட,
50வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியாக, இந்திய அஞ்சல் துறை மூலம்,
வேளாங்கண்ணி தேவாலயம் படம் பொறிக்கப்பட்ட, சிறப்பு அஞ்சல் தலை
வெளியிடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, தேவாலய கலையரங்கில் நடந்த
நிகழ்ச்சியில், தமிழ்நாடு அஞ்சல் துறைத் தலைவர் சாந்தி நாயர், தேவாலயம்
படம் பொறிக்கப்பட்ட, சிறப்பு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறையை
வெளியிட்டார்.
60 லட்சத்திற்கு ஏலம் போன 25 பைசா!
ராணி விக்டோரியாவின் படத்தை தலைகீழாக அச்சிட்டிருந்த 159 ஆண்டு
பழமையான இந்திய அஞ்சல் தலை ஒன்று லண்டனில் 60 லட்சத்திற்கு ஏலம்
விடப்பட்டுள்ளது.
1854ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கல்கத்தாவில் உள்ள சர்வே
அலுவலகத்தில் ஒரு நாலணா (25 பைசா) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அதில், ராணி
விக்டோரியாவின் படம் தவறுதலாக தலைகீழாக அச்சாகி விட்டது. இதை கவனிக்காத
அதிகாரிகள் அப்படியே விற்பனைக்கு அனுப்பி விட்டனர். இதை சில பகுதிகளில்
விற்பனையும் செய்து விட்டனர்.பின்னர் விஷயம் தெரிந்து விற்பனையாகாத
ஸ்டாம்ப்களை அழித்து விட்டனர்.
இந்த நிலையில் அந்த அஞ்சல் தலைகளில் சுமார் 30 மட்டுமே இப்போது இருப்பதாக
கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றினை அமெரிக்காவை சேர்ந்த, அஞ்சல்தலை
சேகரிப்பாளர் ராபர்ட் குன்லிப் என்பவர் பாதுகாத்து வைத்திருந்தார்.
பின்னர், அதை வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.
அந்த அஞ்சல்தலை நேற்று லண்டனில் ஏலம் விடப்பட்டது. லண்டனை சேர்ந்த ஸ்பிங்க்
என்ற ஏல நிறுவனம் இதை ஏலத்தில் விட்டது. இது ரூ.60 லட்சம் ரூபாய்க்கு ஏலம்
போனது என்று அந்த ஏல நிறுவனம் கூறியுள்ளது.
பாடகிக்கு சிக்கல்.
ஜப்பானைச் சேர்ந்த ஒரு இசைக் குழுப் பாடகிக்கு புதுச் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. அவரது வெற்று மார்புகளை ஒரு சிறுவன் பின்னாலிருந்து தனது
கைகளால் தொடுவது போல வெளியான படத்தால் அவர் மீது வழக்கு பாயும் அபாயம்
எழுந்துள்ளது.
இதுதொடர்பான புகைப்படம் ஒரு பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. அந்தப்
பாடகியின் பெயர் டோமோமி கசாய். 21 வயதாகும் இவர் நிர்வாணமாக காட்சி
தருகிறார்.அவரது மார்புகளை பின்னாலிருந்தபடி ஒரு சிறுவன்
பிடித்திருக்கிறான். இந்தப் படம் ஷுகான் யங் என்ற பத்திரிக்கையில் இடம்
பெற்றுள்ளது.
இந்தப் படத்தை சம்பந்தப்பட்ட பாடகியே தனக்குக் கொடுத்ததாக பத்திரிக்கை
பதிப்பாளர் கூறியுள்ளார். இருப்பினும் இதுகுறித்துத் தகவல் கிடைத்தவுடன்
போலீஸார் விரைந்து வந்து விசாரணையில் இறங்கி விட்டனர். சம்பந்தப்பட்ட
பத்திரிக்கை மீதும், பாடகி மீதும் சிறார் விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின்
கீழ் நடவடிக்கை பாயும் அபாயமும் தற்போது எழுந்துள்ளது.
ஜப்பானின் பிரபலமான பாடகியாக இருப்பவர் கசாய். தற்போது அவருக்கு சிக்கல்
ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு
Subscribe to:
Posts (Atom)