யாருக்காக போராட்டம் ? எதற்காக இந்த தனி தனி போராட்டம்? நமர்க்காகவா ? இல்லை இவர்களின் அரசியல் செல்வாக்கை தெரிந்து கொள்ளவா ஏன் யாருக்கும் ஒற்றுமை இல்லை? ஊர் கூடி தேர் இழுக்க தெரியாதா இவர்களுக்கு... காசுக்கும், ஓட்டுக்கும் கூட்டணி சேரும்பொழுது நம்ம உரிமைய மீட்டெடுக்க ஏன் ஒண்ணா சேரல ?
16ந் தேதி உண்ணாவிரதம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை காக்க வலியுறுத்தியும், மதுரையில் 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் திராவிடர் கழக பொதுச்செயலர் வீரமணி,
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தி.மு.க., சார்பில் 12.12.2011 அன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது,
முல்லை பெரியாறுஅணை விவகாரம் தொடர்பாக கேரள அரசின் நிலைப்பாட்டை கண்டித்து
அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். டிசம்பர் 1
முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம் என
வலியுறுத்தி (03.12.2011) மாலை, மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர்
திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்
ஆர்ப்பாட்டம்.
விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்
முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின்
முயற்சிகளை தடுத்து நிறுத்தக் கோரி பாமக போராட்டம் டிசம்பர் 7
முல்லைப்பெரியாறு அணைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டிசம்பர் 8ஆம் தேதி தேனியில் உண்ணாவிரதம்
முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக் படத்திறப்பு விழா தங்கர் பச்சன் ஆவேசம்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கோர்ட்டு பணிகளை 12ந் தேதி (திங்கட்கிழமை) வக்கீல்கள் புறக்கணிக்கின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க கோரி மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் மறியல் மற்றும் மனித சங்கலி போராட்டம் நடத்தினர் டிசம்பர் 1
நூற்றாண்டு பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணை ஒப்பந்தத்தை மதிக்காமல் கேரள
அரசு தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு
வருவதை கண்டித்து சேலம் மாவட்ட பத்திரிகையாளர்கள் மன்றத்தின் சார்பில் மாவட்ட
ஆட்சியர் அலுவளாகம் முன்னர் 08/12/2011 காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் 12ந் தேதி நீதிமன்றம் புறக்கணிப்பு வக்கீல்கள் சங்கம் அறிவிப்பு
கேரள அரசை கண்டித்து கோவையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் நாடாளுமன்ற அவை உள்ளேயும் வெளியேயும் திருமா உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!
பேச்சுவார்த்தை தீர்வு தராது தமிழக கவர்னர் ரோசய்யாவை சந்தித்து பேசிய பின் பேட்டியளித்த விஜயகாந்த்.
முல்லை பெரியாறு அணை
விவகாரத்தில் தமிழக உரிமையை நிலை நாட்ட வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நடை
பயணம் சீமான்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொறுப்பை மத்திய அரசு
ஏற்க வேண்டும் 16 ந்தேதி மதுரை, தேனி, சிவகங்கை,
ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உண்ணாவிரத போராட்டம் தா.பாண்டியன்.
முல்லைப் பெரியாறு குறித்து விவாதிக்க டிச 15ம் தேதி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்-ஜெ. அறிவிப்பு
முல்லைப் பெரியாறு அணையை நோக்கி பல்லாயிரம் பேருடன் 16ம் தேதி நடைபயணம்-திருமா.