மிஷ்கினின் கனவுப் படம் என்று வர்ணிக்கப்படும் முகமூடியின் தொடக்க விழா பூஜையுடன் இன்று ஆரம்பமானது. ஜீவா - பூஜை ஹெக்டே ஜோடியாக நடிக்க, மிஷ்கின் இயக்கும் இந்த பெரிய பட்ஜெட் படம், இதுவரை தமிழில் யாரும் மேற்கொள்ளாத ஒரு பெரிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போல ஒரு சாகஸப் படமாக உருவாகிறது முகமூடி. இன்று சாந்தோம் பள்ளி அரங்கில் அதிகாலையிலேயே படத்தின் பூடை நடந்தது. இதில் நடிகர் ஜீவா, நடிகை பூஜா ஹெக்டே உள்பட பலரும் பங்கேற்றனர். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது.ஏராளமான துணை நடிகர்கள் குங்பூ சீருடையில் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மிஷ்கின், "முகமூடி கதையை வைத்துக் கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேல் சரியான ஹீரோவைத் தேடி அலைந்திருக்கிறேன். கடைசியில் ஜீவாதான் அந்தக் கதைக்கு பொருத்தமாக அமைந்தார்.
இந்தப் படத்தில் நடிக்க குங்பூ கற்க வேண்டியிருக்கும் என்று நான் சொன்னபோது, ஏற்கெனவே 2 ஆண்டுகள் குங்பூ கற்றதாக அவர் தெரிவித்தார். அப்போதே இவர்தான் சரியான ஹீரோ என முடிவு செய்துவிட்டேன். ஜீவா மட்டும் 90 நாட்கள் எனக்கு தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தால் இந்தப் படத்தை வரும் கோடையில் நிச்சயம் வெளியிட்டுவிடுவேன்," என்றார். இதைத் தொடர்ந்து பேசிய ஜீவா, "சரியான திட்டமிடல், அதிகபட்ச ஒழுங்குடன் இயங்கும் மிஷ்கினிடம் பணியாற்றுவது பெருமையளிக்கிறது. 90 நாட்கள் என்ன 120 நாட்கள் கூடத் தருகிறேன். நினைத்தபடி படத்தை எடுங்கள்," என்றார். இந்தப் படத்துக்கு கே இசையமைக்கிறார். சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். சேகர் மாஸ்டர் குங்பூ காட்சிகளை அமைக்கிறார். இவர் ஒரிஜினல் குங்பூ மாஸ்டர். இவரிடம்தான் குங்பூ கற்றுக் கொண்டாராம் இயக்குநர் மிஷ்கின். யுடிவி நிறுவனத்தின் முதல் நேரடி பிரம்மாண்டத் தயாரிப்பு முகமூடி.
No comments:
Post a Comment