|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 July, 2011

மன அழுத்தம் போக்கும் ஏலக்காய் டீ!

சமையலின் போது வாசனைக்காக பயன்படுத்தப்படும் ஏலக்காய் வாசனைப்பொருட்களின் அரசி என்று அழைக்கப்படுகிறது. அசைவ உணவில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனிதான்! செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் கனியும் விதைகளும் மருத்துவப் பயன் கொண்டவை.

நறுமணம் கொண்ட விதைகள் வயிற்று வலியினை சரிசெய்கின்றன. ஜீரணத்தை தூண்டுபவை. உடலின் வெப்பத்தை கூட்டி ஜீரணத்தினைத் அதிகப்படுத்தும். இது தசை சுரிப்பு கோளாறுகளுக்கு எதிரானது.

நாற்பது ஆண்டுகால ஆய்வுகள் ஏலக்காயில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய்களின் மருத்துவத்தை உறுதி செய்கின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள்: ஏலக்காயில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன: போர்னியோல்,கேம்ஃபர், பைனின், ஹீயமுலீன்,கெரியோஃபில்லென், கார்வோன்,யூகேலிப்டோல், டெர்பினின்,சேபினின், இவை இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாகும்.

வயிறு உப்புசம் நீக்கும்: இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல்அழற்சி, சிறுநீராகத்தின் கல், நரம்பு தளர்ச்சி, மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது. சீன மருத்துவத்தில் சிறுநீர்ப் போக்கு கட்டுப்பாடின்மையினைப் போக்கவும் வலுவேற்றியாகவும் உதவுகிறது. வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது; பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது.

ஏலக்காய் டீ: மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், "ஏலக்காய் டீ" குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து (ஒரு கப் டீக்கு இரண்டு ஏலக்காய் போதுமானது!) டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்!

நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா வாயில் போட்டு மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.

விக்கல் போக்கும்

வெயிலில் அதிகம் அலைவதால் வரும் தலைசுற்றல், மயக்கத்திற்கு ஏலக்காய் சிறந்த மருந்தாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும்.

விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும்.

வாயுத் தொல்லையால் அவதிபடுகிறவர்கள் , கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.

குழந்தைகளுக்கு அரு மருந்து: குழந்தைகளுக்கு வாந்தி பிரச்சினை இருந்தால் பயப்படாமல் ஏலக்காயை மருந்தாகத் தரலாம். இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப்பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினால், வாந்தி உடனே நிற்கும். ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே திறக்கும்.

படுக்கை அறை காட்சியை எடுத்தது ரஞ்சிதா தான்: நித்தியின் வழக்கறிஞர் ஸ்ரீதர்


2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின. இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச்சாட்டை கூறினார்.

இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும்  நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர்  முன்பாக  இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது. இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர், 

எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன். நான் எந்தக் கட்சியையும் சாராதவன். நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட். நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை. 

இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும்போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.

இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார். தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லை படு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும். அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க. 


அப்போது நான் வழக்கறிஞராக சொல்லிவிட்டேன். ரஞ்சிதாதான் எடுத்திருக்காங்க. ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்து நித்யானந்தா அந்த அட்வைஸை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் என்று கூறினார். 

சமச்சீர் கல்வியை தொடர வேண்டும்-உயர்நீதிமன்றம் !


சமச்சீர் கல்வித் திட்டத்தை 1 முதல் 10ம் வகுப்பு வரை தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஜுலை 28ம் தேதிக்குள் சமச்சீர் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எல்லோருக்கும் சமமான கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமச்சீர் கல்வியை முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி 1 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்பட்டது.

இந்த கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அஇஅதிமுக பதவியேற்றது. புதிய அரசு சமச்சீர் கல்வி முழுமையானதாக இல்லை என்று கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 1 மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி தொடரவும், மற்ற வகுப்புகளில் சமச்சீர் கல்வி தொடர்வது குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்து அவர்களின் அறிக்கையை பெற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்
ஜுன் 15ம் தேதி முதல் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படாமல் பொதுவான விஷயங்கள் கற்பித்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், நிபுணர் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தது. அறிக்கையில், இந்தக் கல்வி முறை தரமானதாக இல்லை. மொழிப்பெயர்ப்பில் தவறுகள் உள்ளன. புத்தகம் திருத்தம் உட்பட முற்றிலும் மாற்றி அமைக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்பத்த முடியாது என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பை அறிவித்தது. தீர்ப்பில், நடப்பாண்டில் 1 முதல் 10ம் தேதி வரை அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்றும், வரும் 28 தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட வேண்டும்.

பழைய பாடத்திட்ட புத்தகங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் 3 மாதத்திற்குள் ஒரு குழுவை அமைத்து சமச்சீர் கல்வி குறைபாடுகளை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் இது குறித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சமச்சீர் கல்வியை ரத்து செய்து நடவடிக்கை எடுத்தபோதே, பழைய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி துரித கதியில் பல மாவட்டங்களில் நடந்தது. அப்பணிகள் தற்போது நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...