மண்ணு மோகனுக்கு அடுத்ததா உள்ள மண்ணு முட்டி இதுதான் இது இப்ப சொல்லுது தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவருக்கோர் குணம் உண்டுன்னு இதுதான் சாவுக்கு வர சொன்னா கருமாதிக்கு வருவது... எம்மாம் பெரிய பதவில இருக்கு ஏதாவது வாய் திறந்தா எங்க பதவிக்கு ஏதாவது வந்துடுமோன்னு (ஏற்கனவே இத பதவில இருந்து தூக்கனும்னு எதிர் கட்சிகள் காத்து கிடக்கு அது வேற) கேரளாவுல இருந்து ஒவ்வொரு தமிழனும் அடிச்சி விரட்டி வீடு வந்து சேர்ந்துட்டான். அங்க காங்கிரஸ் ஆட்சி வேற? டெல்லிள இருந்த வரை ஒன்னும் வாய் திறக்காம இங்க தமிழ்நாட்டுக்கு வந்தோன இங்க இதுங்க ஒண்ணா கூடி இப்ப ஒப்பாரி வைக்குதுங்க! ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையை இல்லா இருக்கு. இன்னும் இன்னும் இந்த மாதிரி இனப்பிரவிக்கு நாம ஒட்டு போட்டு தேர்ந்தேடுக்கனுமா? ஆமாம் என்ன கத்து கத்துன்னு கத்தினாலும் என்ன? தலைவலியும் உடம்பு வழியும் தனக்கு வராதவரை ஒன்னும் இல்லைங்கிற மாதிரி 4 M.L.A. வ தேர்ந்தெடுத்தாச்சு ... தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவருக்கோர் குணம் உண்டுன்னு இந்த மாதிரி டயலாக் விட்டா நிங்களும் நம்பி மறுபடியும்? ஒட்டு போடத்தான் போறீங்க! இந்த மாதிரி நாய்ங்க ஒரு ஒட்டு கூட வாங்க கூடாது அதுதான் நான் நினைக்குறது, நான் சொல்லுறத சொல்லி புட்டேன்,
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
17 December, 2011
ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாமியார் உயிர் நிலையில் தாக்கி ஆத்திரம் ...
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகில் உள்ள செட்டிமாங்குறிச்சி கொத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு வயது 32. ஜே.சி.பி வாகனத்தின் ஓட்டுனரான இவருக்கும் இதே ஊரில் உள்ள சின்னத்தாயி என்பவரின் மகள் பரிமளா (வயது 19) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு கலாநிதி என்ற ஒருவயது ஆண் குழந்தையும் உள்ளது. மனைவியை பிரசவத்துக்கு தாயார் வீட்டுக்கு அனுப்பிய முருகேசன், மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கடந்த ஒரு வருடமாக அங்கேயே விட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த திங்கள் அன்று உள்ளூரை சேர்ந்த மணி என்பவர் முருகேசனை கூட்டிக்கொண்டு சின்னத்தாயி வீட்டுக்கு சென்று பரிமளாவை முருகேசனோடு அனுப்பிவையுங்கள் அவர்கள் போய் குடும்பம் நடத்தட்டும் என்று சொல்லியுள்ளார். அப்போது மாமியார் சின்னத்தாயிக்கும், மருமகன் முருகேசனுக்கும் வாக்குவாதம் தொடங்கி அது சண்டையாக மாறிவிட்டது. முருகேசனின் மாமியார் சின்னத்தாயும், மாமனார் சன்முகநாதனும் சேர்ந்து முருகேசனை அடித்துள்ளனர்.
மாமியார் சின்னத்தாயி, மருமகன் முருகேசனை கீழே தள்ளி அவரின் பிறப்பு உறுப்பின் மீது காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த தாக்குதலில் முருகேசன் பிறப்பு உறுப்பில் ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார். மயங்கிவிழுந்த முருகேசனை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் மணி. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முருகேசனுக்கு அங்கு முதலுதவி கொடுக்கப்பட்டு பிறப்புறுப்பில் தையல் போடப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருமகன் தாக்கியதாக கூறி மாமியார் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். மருமகன் கொடுத்த புகாரின் பேரில் மாமியார் சின்னத்தாயி மீதும், மாமியார் கொடுத்த புகாரின் பேரில் மருமகன் முருகேசன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் எடப்பாடி போலீசார். இந்நிலையில், முருகேசனின் உறவினர்கள் நேற்று சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்துசாமியை சந்தித்து கொடூரமாக நடந்து கொண்ட சின்னத்தாயி மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், முருகேசனின் தாயார் ஆராயி, சகோதரர் ராமநாதன், சகோதரி அம்மாசி உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.
முருகேசன் மீது எவ்வளவு கொடூரமாக தாக்கியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக, அவர் அணிந்திருந்த ரத்தக்கரை படிந்த உள்ளாடையை (ஜட்டி) எடுத்து வந்து ஆராயி கண்காணிப்பாளரிடம் காட்டினார். மருமகன் முருகேசன் மீது மோகம் கொண்ட மாமியார் சின்னத்தாயி அவரை, தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார் என்றும், அதற்கு முருகேசன் உடன்படாத காரணத்தால் தான் பிரசவத்துக்கு போன மகளை கணவர் வீட்டுக்கு அனுப்பாமல் தன்னுடைய வீட்டிலேயே வைத்துக்கொண்டார் என்றும் மாமியார் சின்னத்தாயி மீது புகார் கூறினார்கள் முருகேசனின் உறவினர்கள்
இன்னும் இருக்கிறார்கள் சில மங்குஸ் மண்டையர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்ல...
சேலம், அம்மாபேட்டை வித்தியா நகர் அருகில் உள்ள கிருஷ்ணன் நகரில் உள்ள ராமச்சந்திர மூர்த்தி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமர் கோவில் உள்ளது. 1986ம் வருடம் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு வித்தியாநகர், பச்சப்பட்டி, அம்மாபேட்டை பகுதியில் இருக்கும் அனைத்து சமூக மக்களும் சென்று சாமி கும்பிட்டுவந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் பச்சபட்டி பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் யாரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று அறிவிப்பு கோவில் கதவில் ஒட்டப்பட்டிருந்தது. இதனால், அந்தப்பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூக பொதுமக்கள் கோவிலின் முன்பு திரண்டு கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக முழக்கமிட்டனர். பொதுமக்களிடமிருந்து நிதி வசூல் செய்து கட்டப்பட இந்த கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று தடை விதிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோவிலுக்கு வந்த காவல் ஆய்வாளர் இராமாண்டவர் பொதுமக்களிடமும், கோவில் நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை அகற்றினார். முன்பு போலவே எல்லா தரப்பு பொதுமக்களும் கோவிலுக்குள் செல்லலாம் யாரும் உங்களை தடுக்கக் முடியாது என்று பொதுமக்களிடம் கூறினார். தனியார் ஒருவரால் கட்டப்பட்ட இந்த கோவிலின் தற்போதைய நிர்வாகிகளுக்கும் கோவிலில் உள்ள தலைமை அர்ச்சகருக்கும் உள்ள தனிப்பட்ட பகைமையின் காரணமாக இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பு ஓட்டப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பேஸ்புக் பழக்கம் பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண்...
திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள். பல சமூக வலைதளங்களை இப்போது எல்லோரும் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான பாதையிலும் சிலர் செல்ல வழிவகை ஏற்பட்டு விடுகிறது. சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ஒரு பெண் தொடர்புகளை ஏற்படுத்தி பலரை ஏமாற்றி பணம் பறித்த தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்துவருகிறார். இணையதள பிரியரான முருகன், பேஸ்புக்கில் தன்னுடைய முழு விபரங்களையும், தொழில் பற்றியும் பதிவு செய்துள்ளார். மேலும் பேஸ்புக்கில் இவருக்கு ஏராளமான டாக்டர்கள் மற்றும் தொழில்அதிபர்கள் நண்பர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அபிநயா என்கிற அனுஷ்கா (வயது 23) பேஸ்புக்கில் முருகனை பற்றிய தகவல்களை அறிந்து இ.மெயில் மற்றும் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும், பேஸ்புக்கில் நண்பராக ஆட் செய்து அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அப்போது அபிநயா தன்னை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரியில் படித்துவருவதாகவும், விடுதியிலே தங்கி கல்லூரிக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது தந்தை கரூர் பகுதியை சேர்ந்த பிரபல அரசியல்வாதி எனவும் தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார்.
முதலில் அபிநயா, தன்னை ஒரு நபர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள இருப்பதாகவும் கூறி உள்ளார். இதனால் முருகன், அபிநயாவிற்கு அறிவுரைகள் கூறி அவரை சமாதானப்படுத்தினார். அதனைதொடர்ந்து முருகனும், அபிநயாவும் பேஸ்புக்கில் சாட் செய்தும், அவ்வப்போது செல்போனிலும் சகஜமாக பேசினர். இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் வளர்ந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் நமது பழக்கத்தை வெளி உலகிற்கு எடுத்துக்கூறி அசிங்கப்படுத்தி விடுவதாகவும், இல்லையென்றால் சொத்தில் பாதியை கொடுத்துவிட வேண்டும் என முருகனை, அபிநயா மிரட்டத்தொடங்கினார்.
பேஸ்புக்கில் சாதாரணமாக பழகியது இப்படி வில்லத்தனமாகி விட்டதே என பதறி போன முருகன் அவரிடம் பின்பு தொடர்பை துண்டித்தார். இதற்கிடையில் அபிநயா, முருகனின் தொழில்நிறுவனங்களுக்கு நேரில் சென்று முருகனை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், தனக்கு மரியாதை தர வேண்டும் என அங்கு பணியில் இருப்பவர்களை மிரட்டி சென்று உள்ளார். மேலும் முருகனையும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து போனில் வற்புறுத்தினார்.
இதனால் பயந்துபோன முருகன் இது குறித்து கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பேஸ்புக்கில் முருகனிடம் பழக்கத்தை ஏற்படுத்திய அபிநயா, அவரை மட்டுமல்லாமல் டாக்டர்கள், தொழில் அதிபர்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்ததுள்ளது. அபிநயா தனது பேஸ்புக் அக்கவுண்டில் தான் பெரிய கோடீசுவரி என்றும் தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பலர் இவரிடம் ஆசையுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கடைசியில் பணத்தை இழந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அபிநயாவின் முகவரி போலியானதும், அவர் மருத்துவகல்லூரி மாணவி இல்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அபிநயாவை பிடிக்க போலீசார் வியூகம் அமைத்தனர். அவர் எந்த ஊரில் தங்கி இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் முருகன் மற்றும் அவரது நண்பர்களை வைத்து அபிநயாவை செல்போனில் தொடர்பு கொண்டு நைசாக பேசி திருச்சிக்கு வரவழைத்தனர்.
அப்போது அபிநயா திருச்சி வந்தார். அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். உடனடியாக அவரை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1ல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு இளங்கோவன் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் அபிநயா குறித்த விபரங்களை சேகரித்தும், பேஸ்புக் மூலம் வேறுயாரிடமும் இதுபோன்று பணம் கேட்டு மிரட்டி உள்ளாரா? எனவும் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அபிநயாவை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1ல் ஆஜர்படுத்துவதற்காக திருச்சி கோர்ட்டிற்கு நேற்று மதியம் அழைத்து வந்தனர். அப்போது கோர்ட் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே அபிநயா கோர்ட்டுக்குள் வர மறுத்து அழுது புரண்டு அடம்பிடித்தார்.
Subscribe to:
Posts (Atom)