|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 December, 2011

இன்னும் இருக்கிறார்கள் சில மங்குஸ் மண்டையர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்ல...


சேலம், அம்மாபேட்டை வித்தியா நகர் அருகில் உள்ள கிருஷ்ணன் நகரில் உள்ள ராமச்சந்திர மூர்த்தி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமர் கோவில் உள்ளது. 1986ம் வருடம் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு வித்தியாநகர், பச்சப்பட்டி, அம்மாபேட்டை பகுதியில் இருக்கும் அனைத்து சமூக மக்களும் சென்று சாமி கும்பிட்டுவந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் பச்சபட்டி பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் யாரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று அறிவிப்பு கோவில் கதவில் ஒட்டப்பட்டிருந்தது. இதனால், அந்தப்பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூக பொதுமக்கள் கோவிலின் முன்பு திரண்டு கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக முழக்கமிட்டனர். பொதுமக்களிடமிருந்து நிதி வசூல் செய்து கட்டப்பட இந்த கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று தடை விதிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோவிலுக்கு வந்த காவல் ஆய்வாளர் இராமாண்டவர் பொதுமக்களிடமும், கோவில் நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை அகற்றினார். முன்பு போலவே எல்லா தரப்பு பொதுமக்களும் கோவிலுக்குள் செல்லலாம் யாரும் உங்களை தடுக்கக் முடியாது என்று பொதுமக்களிடம் கூறினார். தனியார் ஒருவரால் கட்டப்பட்ட இந்த கோவிலின் தற்போதைய நிர்வாகிகளுக்கும் கோவிலில் உள்ள தலைமை அர்ச்சகருக்கும் உள்ள தனிப்பட்ட பகைமையின் காரணமாக  இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பு ஓட்டப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...