|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 February, 2013

இந்தப்படத்துல அப்படி என்ன?

இந்தப்படத்துல அப்படி என்னதான் இருக்குன்னு தெரியல USA ல NO 1 பாக்ஸ் ஆபீஸ் HIT பிணமா இருந்து பிணத்தை தின்னும் மனிதன் கொஞ்சம், கொஞ்சமாய் மனிதனாய் மாறும் கதை அதுவும் காதலோடு!
 பணத்தை பார்த்தால் பிணமும் வாய் பிளக்கும் ( தமிழ் பழமொழி )
பெண்ணை பார்த்தால் பிணமும் காதல் வயப்படும் (ஹாலிவுட் புதுமொழி)

Padagotti Full Movie


Unbelievable Little Kid


பவர்ஸ்டார் சில உண்மைகள்!

பவர்ஸ்டார் சில உண்மைகள்! பவர்ஸ்டார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்சல் செய்யப்பட்டது. 

பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.

பவர்ஸ்டாரின் மெயில் ஐ.டி.gmail@powerstar. com 

ஒரு நாள் பவர்ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.  

And, the powerstar award goes to oscar....

 பவர்ஸ்டார் ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் -ப்ளூடூத் வழியாக. 

பவர்ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர்ஸ்டார் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது. 

பவர்ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டா ர். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.

 கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோதே  ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர்ஸ்டாரிடமிருந்து இருந்து போய்யிருந்தன..

பவர்ஸ்டார் தனது தோட்டத்தின் மூன்று மூலைகளிலும் நான்குகிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக! 

நோக்கியா விளம்பரத்தில் கைகுலுக்கிக்கொள்ளும்  இரண்டு கரங்கள் யாருடையவை என்பது பவர்ஸ்டாருக்கு மட்டுமே தெரியும். 

ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோத அதை முதன்முதலில் பவர்ஸ்டாரிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக பவர்ஸ்டார் குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிகாப்டரில். 

ரொனால்டினோ: என் காலால் ஒருமுறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்... பவர்ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா? 

கடவுள் பவர்ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், 'ஓ மை பவர்ஸ்டார். 

பவர்ஸ்டார் ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார். 

ஒருமுறை பவர்ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக்கும்போது தவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது . சுவிஸ் பேங்க் உருவானது. 

பவர்ஸ்டார் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில் 'கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர்ஸ்டாரின் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய. 

பவர்ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறைதினமான கதை இதுதான்.

பார்த்ததில் பிடித்தது!


போதிக்கும் திறன் ஆசிரியர்களுக்கு இல்லை?

நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங். பள்ளி படிப்பை, பாதியிலேயே கைவிடுவோரின் எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளி படிப்பை, பாதியில் கைவிடுவோரின் எண்ணிக்கை, அதிகமாகவே உள்ளது. இது, மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.நாட்டின் குடிமகன்கள், தரமான கல்வி கற்றால் மட்டுமே, நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்லும். சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ளவர்களும், தரமான கல்வி கற்க வேண்டும். தரமான கல்வி கற்பதற்கு, அவர்களுக்கு, போதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில், இது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதற்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும். தரமான கல்வியை அளிப்பதில், கேந்திரிய வித்யாலயா சிறப்பாக செயல்படுகிறது. இந்த பள்ளிகளில், தங்களுக்கு அருகில் உள்ள, மற்ற பள்ளிகளுக்கு, முன் மாதிரியாக செயல்பட வேண்டும்.இவ்வாறு, மன்மோகன் சிங்.

கையாலாகாத முதல்வர்!

ஒன்பதாம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்டு, கொடூர தாக்குதலுக்கு உள்ளானதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு "பெண்கள் பாதுகாப்புக்கு, உத்தரவாதம் இல்லாத நகரமாக, டில்லி மாறி வருகிறது' என, முதல்வர் ஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார். அவர், "பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது. மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, டில்லியில் போராட்டங்கள் நடந்தன. அதன் விளைவாக, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக, கடுமையான தண்டனை அளிக்கும், அவசர சட்டம், சில நாட்களுக்கு முன், பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், டில்லியில் மீண்டும் பயங்கர கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. லஜ்பத்நகரில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளதுடன், தொண்டையில் இரும்பு கம்பியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து,  முதல்வர், ஷீலா தீட்ஷித்திடம், நிருபர்கள்  கேள்வி? 

அதற்கு பதிலளித்த ஷீலா,""தலைநகர் டில்லியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களின் பாதுகாப்புக்கு, உத்தரவாதம் இல்லாத நகரமாக, டில்லி மாறி வருகிறது. பாதுகாப்பு அளிக்க போலீசார் உள்ளனர். எனினும், அவர்கள், பெண்கள் பாதுகாப்பை, உறுதிபடுத்த தவறி வருகின்றனர்,'' என்றார்.டில்லி முதல்வரின் பதில், தலைநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு, பல தரப்பில் இருந்தும், எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியுள்ளன.
 
 

தமிழனை காப்பாற்றாதவன் தமிழனா?

அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கையில் தமிழர்களின் உயிர்களை காப்பாற்றத் தவறியவர்கள் தமிழர்களா? என்று வைகைச்செல்வன் கேட்டார். ஆளுநர் உரையின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-  
நாட்டில் முதல் முறையாக காவல் துறையினருக்காக மூன்று சலுகைகள்​அங்காடிகள் தந்திருக்கிற ஒரே அரசாங்கம் முதல்வர் ஜெயலலிதாவின் அரசாங்கம்தான். கூடுதலாக வீட்டு வசதிக்காக 472.50 கோடி ரூபாய்க்கு அனுமதி வழங்கி (மேசையைத் தட்டும் ஒலி) 36,000 காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் சிறைத் துறைப் பணியாளர்களுக்காக சொந்த வீடு கட்டித்தரும்பொருட்டு, உங்கள் சொந்த இல்லம் தந்திருக்கிற ஒருமாதரசிதான் தமிழகத்தினுடைய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த முதலமைச்சர் ஜெயலலிதா.எல்லோர் இல்லத்தையும் தங்கள் இல்லமாக்கிக் கொண்டவர்கள்தான் கடந்தகால ஆட்சியிலே இருந்தவர்கள்.  1 முதல் 12 குறுக்குத் தெருக்களையும் வைத்துக்கொண்டு கோபாலபுரத்தில் வாழும் குடியிருப்போர் சங்கத்தை வைத்திருந்தவர்தான் கடந்த ஆட்சியாளர்கள்.  ஆனால் காவலர்களுக்கு மாத்திரமல்ல, அனைத்து மக்களுக்கும் நன்மை செய்கிற ஒரே ஒரு நல்லாட்சியாக, சிறந்த ஆட்சியாக, மனிதாபிமானமிக்க ஆட்சியாக, மானிடப்பற்றுள்ள ஆட்சியாக, கருணை மிக்க ஆட்சியாக, காருண்யம் மிக்க ஒரு ஆட்சியாக செய்துகொண்டிருப்பவர்தான் வரலாற்று சிறப்பு மிகுந்த முதல்வர் ஜெயலலிதா என்பதை இந்த நேரத்திலே நான் பணிவுடனும் அடக்கத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த ஆளுநர் உரையிலே, சித்திரை தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் கொண்டு வந்திருக்கிற தமிழகத்தினுடைய தன்னிகரில்லாத முதலமைச்சரை ஒட்டுமொத்த உலகத் தமிழ் இனமே கொண்டாடி மகிழ்கிறது.  கடந்த கால ஆட்சியாளர்கள், தமிழ்ப் புத்தாண்டை தைத் திங்கள் என்று குறித்தார்கள்.  தமிழ்த் தாய்க்கு 12 குழந்தைகள்.  முதல் குழந்தை சித்திரை, 10​வது குழந்தை தை.  முதல் குழந்தை சித்திரை இருக்க, 10​வது குழந்தை தையைக் கொண்டுபோய் முதல் குழந்தைதான் இனிமேல் சொல்ல வேண்டுமென்று சொன்னால் அதை யார் ஏற்றுக்கொள்வார்கள்.  உலகம் முழுவதும் கேட்கப்படுகிற கருத்து.  அண்ணன் இருக்க, தம்பிக்கு மகுடம் சூட்டுவதற்கு நீங்கள் தயாரா என்று கேட்பதைப் போலத்தான். இந்தக் கேள்வி பிறக்கிறது.  பாவம், அண்ணனுக்கும் விஷயம் இல்லை, தம்பிக்கும் விஷயம் இல்லை.  எட்டாவது படித்துக்கொண்டிருக்கிறபோது ஆசிரியர் கணக்குப்பாட புத்தகத்தை வாங்கி வரச் சொன்னாராம்.  கடைக்குப்போன அண்ணனோ எட்டாவது வகுப்பு பாடப் புத்தகம், கணக்குப் புத்தகம் இல்லை என்பதற்கான நான்காவது வகுப்பு 2 புத்தகம் வாங்கி வந்ததாக சற்று முன்னர் கிடைத்த செய்திகள் சொல்கிறது.  அப்படிப்பட்ட அறிவாளிகள் எல்லாம் கடந்த காலத்தில் செய்திருக்கிற தவறுகளை மிகச் சரியாக திருத்தி, இந்த மானிட பற்றோடு தமிழ் சமுதாயத்திற்கு ஒரு நன்மை கருதி செய்தவர்தான் தமிழகத்தினுடைய முதலமைச்சர் ஜெயலலிதா.

அவற்றோடு மாத்திரம் அல்ல, பல்வேறுபட்ட விருதுகள் ​ தமிழ்த் தாய் விருது என்றும், கபிலர் விருது என்றும், உ.வே.சா. விருது என்றும், ஒளவையார் விருது என்றும் பல்வேறுபட்ட விருதுகளில் சரியானவர்களுக்கு, தகுதியுள்ளவர்களுக்குத்தான் தர வேண்டும் என்பதற்காக பல்வேறு விருதுகளை உருவாக்கி இருக்கிற தமிழ்த்தாயினுடைய மொத்த வடிவமாக இருப்பவர்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.  ஒரு பாவேந்தனைப்போல, ஒரு பாரதியைப் போல, ஒரு தமிழ்த் தாயினுடைய வடிவமாக  திகழ்கிற முதல்வர் ஜெயலலிதாவுக்குத்தான் தமிழனுடைய உண்மையான நிலை தெரியும்.   ஏதோ வசனம் எழுதுகிறவர்கள், ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு ஓட்டிக்கொண்டவர்கள் எல்லாம் தமிழுக்கு பிரதியை எடுத்ததைப்போல சொல்லிக்கொண்டிருக்கின்றபோது ஆளங்கால் கண்டவர்.  தமிழில் எந்த இடத்தில் போடவேண்டும், எந்த இடத்தில் வைக்க வேண்டும், எந்தச் சொற்றொடரை எந்த நேரத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை மிக அழகாக உணர்ந்தவர் தமிழக முதலமைச்சர் புரட்சித் முதலமைச்சர் ஜெயலலிதா. 

விருதுகளையெல்லாம் கடந்த காலத்திலே, ஒன்று அவர்கள் வைத்துக்கொள்வார்கள், இல்லையென்று சொன்னால் அவர்களுக்குத் துதி பாடுகின்ற அடிவருடிகளையெல்லாம் வைத்துக்கொள்வார்கள். தகுதி இருக்கிறதா? தகுதி இல்லையா? என்றெல்லாம் பார்ப்பதில்லை.  தன்னைச் சுற்றி நிற்கின்றவர்களுக்குத்தான் அந்த விருது போகவேண்டுமென்ற அடிப்படைக் கோட்பாட்டு விதிகளை வைத்திருந்தவர்கள்தான் கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள்.  கர்னல் பென்னிகுவிக்கிற்கு சிலையுடன் கூடிய மண்மண்டபம், நன்றிக்குரியவர்கள் தமிழர்கள்.  சாதாரணமாக ஒரு தேநீர் வாங்கிக் கொடுத்தால்கூட நாம் நன்றி சொல்ல  கடமைப்பட்டிருக்கிறோம். அப்படி நன்றிக்கு இலக்கணமாக, நயத்தகு பண்பாடோடு விளங்குகின்ற முதலமைச்சர் ஜெயலலிதா பென்னிகுவிக்கிற்கு சிலை வடித்ததோடு மாத்திரமல்லாமல், தஞ்சைப் பெருவளத்தான் கரிகால் பெருவளத்தான் சோழனுக்கும்  மணிமண்டபம் கட்ட வேண்டுமென்ற ஒரு பிரகடனத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று சொன்னால், நன்றிக்குரியவர் அவர்கள்.  

கடந்த காலத்தில், நான் தஞ்சையில் பிறந்தவன், தஞ்சைப் பெருவளத்தானுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் காவிரிக்கு என்ன செய்தார்கள்?  வேருக்கு வென்னீரும், விவசாயிக்குக் கண்ணீரும் தந்ததுதான் மிச்சம்.  கரிகாலனுக்கு சிலை வைப்பதைவிட தனக்குச் சிலை வைத்தால் எப்படி நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்ப்பவர்கள் மத்தியிலே, கரிகாலனுக்குச் சிலை வைக்கின்ற ஒரு ஆற்றலை, மதிநுட்பத்தைப் படைத்து  ஒட்டுமொத்த உலகத் தமிழினத்திற்கு இப்படி ஒருவன் வாழ்ந்திருக்கிறான் என்ற வரலாற்றை மீண்டும் புடம்போட வைத்திருக்கிற ஆற்றல் படைத்த தலைவர்தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.

அதோடு மாத்திரம் அல்ல, உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு 100 கோடி ரூபாய், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு 11.84 கோடி ரூபாய், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 3.23 கோடி, சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு 40 லட்சம் ரூபாயாக இருந்ததை 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதை உலகளாவச் செய்ய வேண்டுமென்கிற ஒரு பிரகடனத்தையும் இன்று ஆளுநர் உரையிலே அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இதைப் பார்த்து தமிழுக்குத் தொண்டு செய்யும் தமிழ்த் தாயாக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒட்டுமொத்த உலகத் தமிழினம் பார்க்கிறது. கடந்த காலத்திலே செம்மொழி மாநாடு என்று கொடீசியா மஹாலில் கோயம்புத்தூரில் 500 கோடிகளை கட்டவிழ்த்துவிட்டு, கோடானு கோடிகளைக் கொட்டி ஈழத்தின் படுகொலையை மறைக்கப் பார்த்த ஒரு நாடகத்தைத்தான் அம்பலப்படுத்தினார்களே தவிர, தமிழுக்கு உண்மையான ஒரு சேவையை அவர்கள் செய்யவில்லை.  தாத்தாவிற்கு கவியரங்கம், பேரனுக்கு பேச்சரங்கம், பேத்திக்கு வீணை அரங்கம், அண்ணனுக்கு கருத்தரங்கம்,  தம்பிக்கு பவுடர் அரங்கம் (மேசையைத் தட்டும் ஒலி) தங்கைக்கு இன்னொரு அரங்கம்,  வாழ்க செம்மொழி மாநாடு, வளர்க அவர்களின் தமிழ்த் தொண்டு என்றுதான் தமிழறிஞர்கள் கோட்பாடிட்டார்கள். இலங்கையில் நடைபெற்றிருக்கக்கின்ற மனித உரிமை மீறல்களுக்கு, அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அந்த மீறல்களைத் தடுத்தார்களா? படுகொலை நிகழ்ந்தபோது அதைப்பற்றி ஏதாவது பேசினார்களா?  கடிதம் எழுதினார். 

காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்டதுதான் உண்ணாவிரதம் என்று சொல்கிற ஒரு கோட்பாட்டை கண்டறிந்தவர்கள் அவர்கள்.  அவற்றோடு மாத்திரமல்லாமல் மகேந்தா ராஜபக்சே டெல்லிக்கு வருகிறபோது கருப்புச் சட்டையை அணிவோம் என்று தற்போது கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  யாருக்குத் தேவை இந்த நாடகம்.  இந்த நாடகம் என்பதைத்தான் ஒட்டுமொத்த உலகத் தமிழகமும் உங்களை ஒதுக்கி வைத்திருக்கிறது என்பதை இந்த நேரத்திலே நான் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். 2011 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 8 ஆம் நாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமென்று இந்த வரலாற்றுச் சிறப்புமிகுந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றித் தந்தவர்தான் தமிழகத்தினுடைய தன்னிகரில்லாத முதலமைச்சர் ஜெயலலிதா. இங்கே நீங்கள் 5 ஆண்டுகாலம் முதலமைச்சராக கடந்த முறை பணியாற்றினீர்கள். மத்திய அரசின் செல்வாக்கை ங்கள் பெற்றிருந்தீர்கள்.  ஆனை, சேனை, ஆள் என்று கோட்டை கொத்தளம் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டிலே இருந்தது.  எல்லா அதிகாரமும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறபோது, கூப்பிடு தூரத்தில் இருக்கிற தமிழனுடைய உயிரைக் காப்பாற்றத் தவறிய நீங்களா தமிழன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். வெட்கமாக இல்லையா?  வேதனையாக இல்லையா?  இப்பொழுதெல்லாம் நீங்கள் நாடகம் நடத்திக் கொண்டிருப்பதுதானே டெசோவைப் புலப்படுத்திக் காட்டுகிறது.  

அவற்றோடு மாத்திரமல்ல, இத்தகைய ஆற்றலும், திறமையும் பெற்றிருக்கிற முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்கு செல்கிறார். டெல்லிக்கு சென்றால் ஜனநாயகத்தினுடைய முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிற முதல்வர்கள் அத்தனை பேரும் மாநாட்டில் அமர்ந்திருக்கிறார்கள்.  10 நிமிடங்கள்தான் உங்களுக்கு ஒதுக்குவோம் என்று சொல்லி 10  நிமிடத்தில் மணியடித்து உட்கார வைக்கிறார்களே,  கோவாவிற்கு 10 நிமிடம், தமிழ்நாட்டிற்கு 10 நிமிடம் என்று பாரபட்சம் பார்க்கவில்லை என்று சொல்கிறார்களே,  கோவாவிற்கு 10 நிமிடம், தமிழ்நாட்டிற்கு 10 நிமிடம்.  இது ஏற்றுக்கொள்கிற கருத்தா?  அஸ்ஸாமுக்கு 10 நிமிடம், தமிழ்நாட்டிற்கும் 10 நிமிடம் என்பது ஏற்றுக்கொள்கிற கருத்தா?  திரிபுராவும், தமிழ்நாடும் ஒன்றா?  அஸ்ஸாமும், தமிழ்நாடும் ஒன்றா?  பரப்பளவில் விரிந்து பரந்து கிடக்கிற தமிழ்நாட்டினுடைய எல்லைப் பகுதிகளில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளை தீர்மானித்து, இந்தியாவின் தலையெழுத்தை நிர்மாணிக்கிற சக்தி படைத்தவராக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கின்றபோது  யாருக்கு நீங்கள் மணி அடிக்கிறீர்கள் என்பதை இன்று  நாடே உங்களைப் பார்த்து வெகுவிரைவிலே உங்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு கேபிள் டி.வி​யை டிஜிட்டல் மையப்படுத்த வேண்டுமென்று தமிழக முதலமைச்சர், தலைமை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.  இதுவரை பதில் இல்லை என்கிற நிலைமையில் இருக்கிறபோது இப்படிப்பட்ட தொடர் துரோக செயலுக்கு தமிழக மக்கள் மாத்திரமல்ல இந்திய மக்களே பதில் அளிக்கிற காலம் வெகு விரைவில் இருக்கிறது.  இன்றைய யுத்தப் போராட்டம்​காவிரி ஆணையத்தின் இறுதி ஆணையை அரசிதழில் வெளியிடவேண்டும் என்பதற்காக யுத்தப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.  இந்தியாவிலேயே யாரும் துணிய முடியாத போராட்டம் ஒன்றை நடத்துகிற ஆற்றல் படைத்தவராக முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்திய மக்கள் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டின் வரைபடமாக இருக்கிறவர், நாளை இந்தியாவின் வரைபடமாக மாறப்போகிறார் என்பதுதான் சத்தியத்தின் சாட்சியாக இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே பச்சரிசியையும், சர்க்கரையையும், 100 ரூபாயையையும் கொடுக்கின்றபோது அந்த ஏழையெளிய மக்கள் எத்தனை ஆனந்தமடைகிறார்கள், மகிழ்ச்சியடைகிறார்கள், சந்தோஷப்படுகிறார்கள்  என்பதுதான் முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மனிதநேயத்திற்கு சாட்சி.  இன்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை​உயர் நீதிமன்றம் சென்றார்கள்.  உயர் நீதிமன்றம் நமக்கு சரியான தீர்ப்பைத் தந்தது.  மருத்துவமனை இன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.  இன்று மக்கள் அத்தனைபேரும் பாராட்டுகிறார்கள்.  
இவ்வாறு வைகைச்செல்வன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...