|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 May, 2012

வழக்கு எண் 18/9...MOVIE ONLINE


யாருக்கு யோகம்?

வாக்கிய பஞ்சாங்கப்படி, குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் இதையொட்டி ஏற்படும் பலன்களைக் காணலாம். நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம். சுமாரான பலன் பெறும் ராசிகள்: மிதுனம், தனுசு, கும்பம், மீனம். பரிகார ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம்.யாருக்கு யோகம்...? குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பதால் இப்பெயர் உண்டானது. மேலும் கு என்றால் இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்றால் போக்குபவர் என்றும் பொருள் உண்டு. உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தி: சிவபெருமானுடன் கையிலையில் உரையாடிக் கொண்டிருந்தார் பார்வதி தேவியார். அப்பொழுது சிவபெருமானிடம் ஐயனே தட்சனின் மகளானதால் தாட்சாயினி எனும் பெயர் எனக்கு ஏற்பட்டது. தங்களை அவமதித்த தட்சனின் இப்பெயரை வைத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை எனவே அப்பெயர் மாறும் வண்ணம் வரம் வேண்டுமெனக் கேட்க உடன் சிவபெருமானும் பார்வதி மலை மன்னன் குழந்தை வரம் வேண்டி தவமிருக்கிறான், அவனுக்கு நீ மகளாகச் செல். பின் நான் வந்து மணமுடிப்பேன் என்றுக் கூறி அனுப்பினார். அங்கே குழந்தை உருவில் வந்த பார்வதி தேவி வளரத் துவங்கினார். இதற்கிடையே நான்முகனின் நான்கு புதல்வர்களான சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் என்ற நான்கு முனிவர்கள் வேதாகமத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை படித்திருந்தனர். இருப்பினும் அவர்களது மனம் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. இதனை சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டினார். உடன் சம்மதித்த சிவபெருமான் நந்திதேவரிடம் சென்று மன்மதனைத் தவிர வேறு யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்றுக் கட்டளையிட்டு வந்து சனகாதியர்க்கு பதி, பசு, பாசம் இவற்றையெல்லாம் விளக்கி விரிவாகக் கூறினார். உடன் அவர்கள் மேலும் மனம் ஒடுங்கும்படி ஞான உபதேசம் செய்யச் சொன்னார்கள். உடனே சிவபெருமான் இதைக் கேட்டவுடன் மெல்லிய புன்னகைப் புரிந்து "அப்பொருள் இவ்வாறிருக்கும் என்றுக் கூறினார். பின்னர் மேலும் புரியவைக்க தன்னையே ஒரு முனிவன் போலாக்கி தியானத்தில் ஒரு கணநேரம் இருந்தார். அதே நிலையிலேயே அந்த நால்வரும் இருந்தனர். அப்போது மன்மதன் உள்ளே வந்து சிவபெருமான் மேல் பாணம் விட, கோபமுற்ற சிவபெருமான் அவனை நெற்றிக் கண்ணாலே எரித்தார். சிவபெருமான் அந்நிலை நீங்கி முனிவர்களை வாழ்த்தி அனுப்பினார். இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தால் அவரது பெயர் "தட்சிணாமூர்த்தி ஆயிற்று. தெட்சிணம் என்றால் என்ன? தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடுபவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தெட்சிணாமூர்த்தி. ஞானமானது தெட்சிணாமூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்றுகொண்டிருக்கிறது. குரு - தெட்சிணாமூர்த்தி வித்தியாசம் நவக்கிரக மண்டபத்தில் இருக்கும் குரு பகவான் வேறு. தெட்சிணாமூர்த்தி வேறு. ஆனால், இருவரும் தங்கள் தொழிலால் ஒன்றுபடுகிறார்கள். இதனால் தான் மக்கள் தெட்சிணாமூர்த்தியை குருவாகக் கருதி, குருவுக்குரிய வழிபாடுகளை தெட்சிணாமூர்த்திக்கு செய்து கொண்டிருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் திசை தெற்கு, குருவின் திசை நவக்கிரக சன்னதியில் வடக்கு. தேவர்களின் குருவே பிரகஸ்பதி. இவரே நவக்கிரக அந்தஸ்தைப் பெற்றவர். தெட்சிணாமூர்த்தி சிவனின் அம்சம். இவர் அம்பிகைக்கும், சனக, சனாதனர் உள்ளிட்ட நால்வருக்கும் வேதம் கற்பித்தவர். ஆனால், இருவருக்கும் மஞ்சள் ஆடை அணிவதில் ஒற்றுமை இருக்கிறது. தட்சிணாமூர்த்தி மவுனமானது ஏன்?  பிரம்ம புத்திரர்கள் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் நான்குவேதம், ஆறுசாஸ்திரம், 64 கலைகள், 96 தத்துவங்கள், ஆகமங்கள், உபநிஷத்துக்கள் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தனர். இவ்வளவு கற்றிருந்தும் அவர்களுக்கு மனநிறைவு கிடைக்கவில்லை. கயிலைக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். சிவபெருமான் அவர்கள் முன்னே தோன்றி இன்னும் என்ன வேண்டும் எனக்கேட்டார். மனம் அமைதி பெற அருள் வேண்டும் என்று விண்ணப்பம் செய்தனர். அவர்களது வேண்டுகோளின்படி சிவபெருமான் அவர்களுக்கு சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று மார்க்கங்களையும் விளக்கிக் கூறினார். சனகாதி நால்வரும் மகிழ்ச்சியுற்று ஞான மார்க்கத்தை போதிக்க வேண்டினர். அதற்கு சிவபெருமான், விளக்கத்தால் உணர்வதல்ல ஞானம் அனுபவத்தால் உணர்வது என்று கூறி, சின் முத்திரை காட்டி தெற்குமுகமாக மவுன நிøயில் கல்லால மரத்தடியில் ஞான சொரூபமாக அமர்ந்தருளினார். அதாவது ஆணவம், கன்மம் (புண்ணிய பாவங்கள்), மாயை (இவ்வுலக வாழ்வே நிலையானது என்ற எண்ணம்) ஆகியவற்றை ஒடுக்கி விட்டால் (விரித்த மூன்று விரல்கள்), சுட்டுவிரலான ஜீவாத்மா (உயிர்கள்) பெருவிரலான பரமாத்மாவை (இறைவன்) அடைந்து விடலாம் என்பதே அவர் போதித்த ஞானத்தில் விளக்கம்.  தெட்சிணாமூர்த்தி வழிபாடு: தெட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தெட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லை அல்லது மல்லிகை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும்.  வியாக்யான தெட்சிணாமூர்த்தி: தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோயில்களில் விளங்குபவர் வியாக்யான தெட்சிணாமூர்த்தியே ஆவார். வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர். குருவின் சின்முத்திரை: வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும். பத்து தெட்சிணாமூர்த்திகள் மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில் தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்) சிற்ப அழகு - ஆலங்குடி வீராசன நிலை - சென்னை திரிசூலம் மிருதங்க தெட்சிணாமூர்த்தி - கழுகுமலை (தூத்துக்குடி) யோகாசன மூர்த்தி - அனந்தபூர் (ஆந்திரா) வீணா தெட்சிணாமூர்த்தி - நஞ்சன்கூடு (கர்நாடகா) வியாக்யான தெட்சிணாமூர்த்தி - அகரம் கோவிந்தவாடி (காஞ்சிபுரம் அருகில்) நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி - மயிலாடுதுறை வள்ளலார் கோயில் நின்ற நிலையில் வீணையுடன் - திருத்தணி, நாகலாபுரம் வேதநாராயணர் கோயில்.

இதே நாள்...


  • இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது(1854)
  • ஈபெல் டவர், பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்து விடப்பட்டது(1889)
  • இந்திய விடுதலை வீரர் மோதிலால் நேரு பிறந்த தினம்(1861)
  • பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர் பிறந்த தினம்(1953)

குறைந்தபட்ச இருப்பு தொகை விதி்முறையை கைவிடுமாறு எஸ்பிஐ!


அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை விதி்முறையை கைவிடுமாறு எஸ்பிஐ உத்தரவிட்டுள்ளது.கடந்த மாதம் 17ந் தேதி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை மறுஆய்வு நடந்தது. அதில் வங்கி துறையின் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி வீட்டு கடனை மு்ன் கூட்டியே செலுத்தினால் அபராத வட்டி கூடாது என அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் சேமிப்பு கணக்கு தொடங்க அனைவரையும் அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் மிக பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது கிளைகளுக்கு ஏப்ரல் 25ந் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி எல்லா வகையான சேமிப்பு கணக்குகளிலும் மினிமம் பேலன்ஸ் விதியை நீக்கிவிடும்படி உத்தரவிட்டுள்ளது.இதை உடனடியாக அமுல்படுத்தவும், ஏப்ரல் 25-ந் தேதிக்கு பிறகு மினிமம் பாலன்ஸ் குறைந்ததாக யாருக்காவது பணம் பிடித்திருந்தால் அதை மீண்டும் அவர்களது கணக்கில் வரவு வைக்கவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்கள் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் எஸ்பிஐ தலைமை அலுவலகம் அனுப்பியுள்ளது. இனி சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் விதிமுறை கிடையாது என்று வாடிக்கையாளர்கள் எளிதில் பார்க்கும் வகையில் அறிவிப்பு பலகையில் இடம் பெற செய்யவும் எஸ்பிஐ வலியுறுத்தியுள்ளது.

பிள்ளைகளுக்கு நேர்மை - பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுங்கள்.


நேர்மறையான எண்ணங்களையும், நல்ல ஒழுக்கமான பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் தலை சிறந்தவர்களாக உயர்வார்கள் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். பிஞ்சு பருவத்திலேயே அவர்களுக்கு நேர்மை பொறுப்புணர்வை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவர்களின் ஆலோசனைகளை படியுங்களேன்.பொய் சொல்லக்கூடாது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்தான் சிறந்த முன் உதாரணம். எந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு நீங்கள்தான் கற்றுத்தரவேண்டும். பொய் சொல்வதனால் ஏற்படும் தீமைகளை பெற்றோர்கள்தான் கற்றுக்கொடுக்கவேண்டும். அதை விடுத்து யாரிடமாவது போனில் பேசும் போது வீட்டில் இருந்து கொண்டே வெளியூரில் இருப்பதாக கூறினால் அவசியத்திற்கு பொய் சொல்வது தப்பில்லை என்று நினைத்துக் கொள்வார்கள்.நேர்மையாக இருப்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து 'மரவெட்டியின் கதை' போன்ற நீதிக்கதைகளை கூறி பிள்ளைகளை மகிழ்வூட்டலாம்.பொறுப்புணர்ச்சி அதிகரிக்க வெளியிடங்களுக்கு குழந்தைகளை கூட்டிக்கொண்டு போவதானால் யாரிடமும் விட்டு விட்டு போகாதீர்கள். எங்கு போனாலும் கூட்டிக்கொண்டு போனால்தான் அவர்களுக்கும் எங்கு எப்படி நடந்து கொள்வது என்பது தெரியும்.

கோவிலுக்கு அழைத்துச் சென்றால் அங்கு விளையாடக்கூடாது என்று கூறி அழைத்துச் செல்லுங்கள். அப்பொழுதுதான் அங்கு அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். கண்ணை மூடி இறைவனை வழிபட்டால்மட்டுமே கோவிலின் அமைதி பாதுகாக்கப்படும் என்றும் அவர்களுக்குத் தெரியும்.ஹோட்டலில் சில குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். எதையாவது தட்டி உடைத்து விடுவார்கள். அதுமாதிரியான இடங்களுக்குச் சென்றால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுங்களேன். அதேபோல் அடுத்தவர்கள் வீட்டிற்குப் போகும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் பழக்கப் படுத்த வேண்டும்.சூப்பர் மார்கெட் போன்ற இடங்களுக்கு பர்ச்சேஸ் செய்ய சென்றால் குழந்தைகளுக்கு ட்ராலி தள்ள கற்றுக்கொடுங்கள். அதுவே மிகப்பெரிய பொறுப்பை அவர்களுக்கு கொடுத்தது போல ஆகும். அதேசமயம் பார்க் போன்ற விளையாடும் இடங்களுக்குச் சென்றால் ஒடி ஆடி விளையாட விடுங்கள். அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

இவன நிறுத்த சொல்லு!


கடந்த மே-1 ஆம் தேதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.  ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் இந்த விளம்பர போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. பசுமை தாயகத்தின் மாநில செயளாலர் சௌமியா அன்புமணி இது போன்ற காட்சிகளை படத்திலிருந்து நீக்கி நீதிமன்றம் வகுத்துள்ள அரசாணைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மற்றொரு சமூக ஆர்வலரான வி.செல்வகுமார் நேற்று (04-05-12) சென்னை கமிஷனர் அலுவகத்தில் அளித்துள்ள புகாரில் ”துப்பாக்கி படத்தின் விளம்பரத்தில் இந்திய புகையிலை எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருப்பதால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், விளம்பரத்தில் நடித்த நடிகர், மேலும் விளம்பர போஸ்டரை உருவாக்க உதவியாக இருந்தவர்கள் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியும், அந்த போஸ்டர்களை பொது இடங்களில் இருந்து நீக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.துப்பாக்கி படத்தின் மீது மேலும் மேலும் வழக்குகள் போடப்படுவதால் டென்ஷனான துப்பாக்கி படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு இந்தி திரைப்படத்தின் விளம்பர போஸ்டரை டுவிட்டரில் போட்டு “இவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்” என்று டுவீட்டியிருக்கிறார். அந்த ஃபோட்டோவில் ஒருவர் மற்றொருவரை கொலை செய்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

உலக அலர்ஜி மாநாடு

சுவாச அலர்ஜி நோய் அதிலும் குறிப்பாக ஆஸ்துமா உயிர் கொல்லி நோய்களில் ஒன்று. இந்நோய் உலக அளவில் கவலையளிக்கும் விதத்தில் வேகமாக பரவி வருகிறது.இநோய்க்கு மரபு, அதிகரித்து வரும் நகர்மயம், காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு, புகைப்பிடித்தல் ஆகியவை முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 15 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இச்சூழலில் புதிய மருந்துகள் உருவாக்குவது மற்றும் அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வது குறித்து விவாதிக்க உலக அலர்ஜி மாநாடு வரும் டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது.இம்மாநாடு டிசம்பர் 6 முதல் 8 வரை நடைபெறும் என்று இம்மாநாட்டின் தலைவர் டாக்டர் சுதர்சன ரெட்டி தெரிவித்தார்.இம்மாநாடு இரண்டாண்டிற்கு ஒருமுறை நடைபெறு வதாகவும் இந்தியாவில் இம்மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறை எனவும் தெரிவித்தார்.மேலும் அவர், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோய்களை போன்றவற்றை குணப்படுத்துவது மற்றும் அந்நோய்களை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆராய்வதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...