சுவாச அலர்ஜி நோய் அதிலும் குறிப்பாக ஆஸ்துமா உயிர் கொல்லி நோய்களில் ஒன்று. இந்நோய் உலக அளவில் கவலையளிக்கும் விதத்தில் வேகமாக பரவி வருகிறது.இநோய்க்கு மரபு, அதிகரித்து வரும் நகர்மயம், காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு, புகைப்பிடித்தல் ஆகியவை முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 15 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இச்சூழலில் புதிய மருந்துகள் உருவாக்குவது மற்றும் அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வது குறித்து விவாதிக்க உலக அலர்ஜி மாநாடு வரும் டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது.இம்மாநாடு டிசம்பர் 6 முதல் 8 வரை நடைபெறும் என்று இம்மாநாட்டின் தலைவர் டாக்டர் சுதர்சன ரெட்டி தெரிவித்தார்.இம்மாநாடு இரண்டாண்டிற்கு ஒருமுறை நடைபெறு வதாகவும் இந்தியாவில் இம்மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறை எனவும் தெரிவித்தார்.மேலும் அவர், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோய்களை போன்றவற்றை குணப்படுத்துவது மற்றும் அந்நோய்களை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆராய்வதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment