|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 May, 2012

குறைந்தபட்ச இருப்பு தொகை விதி்முறையை கைவிடுமாறு எஸ்பிஐ!


அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை விதி்முறையை கைவிடுமாறு எஸ்பிஐ உத்தரவிட்டுள்ளது.கடந்த மாதம் 17ந் தேதி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை மறுஆய்வு நடந்தது. அதில் வங்கி துறையின் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி வீட்டு கடனை மு்ன் கூட்டியே செலுத்தினால் அபராத வட்டி கூடாது என அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் சேமிப்பு கணக்கு தொடங்க அனைவரையும் அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் மிக பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது கிளைகளுக்கு ஏப்ரல் 25ந் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி எல்லா வகையான சேமிப்பு கணக்குகளிலும் மினிமம் பேலன்ஸ் விதியை நீக்கிவிடும்படி உத்தரவிட்டுள்ளது.இதை உடனடியாக அமுல்படுத்தவும், ஏப்ரல் 25-ந் தேதிக்கு பிறகு மினிமம் பாலன்ஸ் குறைந்ததாக யாருக்காவது பணம் பிடித்திருந்தால் அதை மீண்டும் அவர்களது கணக்கில் வரவு வைக்கவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்கள் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் எஸ்பிஐ தலைமை அலுவலகம் அனுப்பியுள்ளது. இனி சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் விதிமுறை கிடையாது என்று வாடிக்கையாளர்கள் எளிதில் பார்க்கும் வகையில் அறிவிப்பு பலகையில் இடம் பெற செய்யவும் எஸ்பிஐ வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...