|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 July, 2011

போர்க் குற்றவாளிகள்: ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் தமிழாக்க புத்தக வெளியீடு!

ஐ.நா. நிபுணர் குழு இலங்கை மீது சுமத்தியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய ஆவண அறிக்கையை மனிதம் வெளியீடு தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட உள்ளது.

ஐ.நா. நிபுணர் குழு இலங்கை மீது சுமர்த்தியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய ஆவண அறிக்கையை மனிதம் என்ற மனித உரிமை அமைப்பு தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளது.

இரண்டு பாகங்களை கொண்டுள்ள இப்புத்தகத்திற்கு, இன்று உலக தமிழர்களை ஒன்றிணைத்து வரும் தமிழீழ நாடு கடந்த அரசின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரனும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பணியாளர் எம்.ஜே. இம்மானுவேல் அவர்களும், தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரெஜி அவர்களும், மற்றும் நிர்மல்கா பெர்னான்டோ (தலைவர், IMADR, இலங்கை), பேரா. பீட்டர் ஷால்க் (அப்சாலா, ஸ்வீடன்), ஊடகவியலாளர் மற்றும் செய்தி ஆசிரியர் இரா. துரைரத்தினம், டாக்டர் பிரயன் செனிவரத்னே (ஆஸ்திரேலியா) ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர்.

முதல் பாகத்தில், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை சார்ந்துள்ள பல்வேறு செய்திகளை கொண்ட நான்கு கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழீழம் மலருவதற்கான வாய்ப்பு - ராஜபக்சே குழு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவர் (அக்னி சுப்ரமணியம், தமிழ் நாடு), ஐ.நா. -இலங்கை இடையிலான அறிக்கை குறித்த மோதல் (டி.பி.எஸ்.ஜெயராஜ்), இலங்கையின் கொலைக்களம் - சாட்சிகளற்ற யுத்தம் குறித்த மூன்று ஆவணப்பட சாட்சியங்கள் (யமுனா ராஜேந்திரன், லண்டன்), எமது மக்களது விடுதலையை வென்றெடுக்க அய்யன்னா வல்லுநர் குழு அறிக்கையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் (தங்கவேலு வேலுபிள்ளை, தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகம் முழுவதும் 444 குறிப்பு எண்களைக் கொண்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை படங்களோடு, மொத்தம் 352 பக்கங்களை கொண்டு தமிழில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் இன்னும் சில தினங்களில் தமிழகம் மற்றும் உலகம் முழுக்க விற்பனைக்கு வரவிருக்கிறது.

வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்ட தமிழினப் படுகொலைகள் (1956-2008) என்ற புத்தகத்தை கடந்த 2009-ம் ஆண்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய மனிதம் வெளியீட்டாளரின் இரண்டாவது ஆவணப் புத்தகமாக, "போர்க் குற்றவாளிகள்" வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபயா- ராணுவ தளபதி !

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின்போது கண்ணில்படும் யாரையும் விடாமல் அவர்களை, சுட்டுத்தள்ள ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும், இந்த அதிகாரத்தை பாதுகாப்புத் துறை செயலாளரான கோத்தபயா ராஜபக்சே பிறப்பித்திருந்ததாகவும் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியதாக சேனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஈழப் போரின்போது நடந்த படு பாதக செயல்களை இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் டாக்குமென்டரியாக இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. அது தற்போது மேலும் சில புதிய செய்திகளை வெளியிட்டுள்ளது.

பெயர் சொல்ல விரும்பாத 2 இலங்கை ராணுவ வீரர்கள் கூறியதாக அந்த சேனல் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது சரண் அடைந்த விடுதலைப் புலிகளை சுட்டுத்தள்ளுமாறு அந்நாட்டு பாதுகாப்பு செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபயா ராஜபக்சே தான் உத்தரவிட்டார் என்று ஒரு வீரர் தெரிவித்தார்.

கோத்தபயா ராஜபக்சே தான் தமிழ் ஈழத் தலைவர்களைக் கொல்லுமாறு ராணுவத் தளபதி சவேந்திரா சில்வாவுக்கு உத்தரவிட்டுள்ளார் என்றார் இன்னொரு வீரர்.

கண்ணில் படுபவர்களையெல்லாம் எப்படியெல்லாம் தீர்த்துக்கட்ட முடியுமோ அப்படியெல்லாம் செய்யுங்கள் என்று ராணுவ வீரர்களுக்கு உத்தரவு வந்துள்ளது. இதையடுத்துத் தான் மக்களை கண்மூடித்தனமாக கொன்றுள்ளனர்.

யாரையும் கொல்லவில்லையாம்-சொல்கிறது இலங்கை? ஐ.நா நிபுணர் குழு சமர்பித்த அறிக்கையில் இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரில் லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ராஜபக்சே அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கோத்தபயா யாரையும் கொல்லுமாறு உத்தரவிடவில்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. சேனல் 4 வெளியிட்ட வீடியோக்கள் பொய் என்று ராஜபக்சே தெரிவித்திருந்தார்.

காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி!

ராமநாதபுரம்: விபசாரத்தில் ஈடுபடுத்த திருமங்கலம் சிறுமியை, ஊர், ஊராக வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது, "காப்பாற்ற' சொல்லி கதறியுள்ளார். ஆனால், விபசார கும்பல், அவரது வாயைப் பொத்தி இடம் மாற்றி அழைத்துச் சென்றது என, சிறுமியின் தாயார் தெரிவித்தார். மதுரை திருமங்கலம் அருகே உள்ள எஸ்.வாகைகுளத்தைச் சேர்ந்த, 17 வயது ஈஸ்வரியின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

தாய் கூறியதாவது: என் கணவர் ஆடு மேய்க்கிறார். மகன் பள்ளியில் படிக்கிறான். என் மகளை அப்பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தோம். திருமணத்தின் போது பேசப்பட்ட வரதட்சணையை கொடுக்க முடியவில்லை. இதனால், 10 நாட்களிலேயே ஈஸ்வரி எங்கள் வீட்டிற்கு துரத்தப்பட்டார். அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்த போது, திருமங்கலத்தைச் சேர்ந்த தோழியின் தாயார் பூங்கோதை என்பவர் பழக்கமானார். அவர், கோவையில் வேலை வாங்கித் தருவதாக கூறியதை தொடர்ந்து, வீட்டில் சொல்லி விட்டு வேலைக்கு சென்று விட்டார். நாங்களும் கோவையில் இருப்பதாக நம்பினோம். கடந்த, 25ம் தேதி, பூங்கோதை என்னிடம் வந்து, "உன் மகளை ராமநாதபுரத்தில் வைத்துள்ளனர். அவளை மீட்க ஒரு லட்சம் கேட்கின்றனர். அந்த பணத்தை நாங்கள் கொடுத்து விடுகிறோம், நீ போய் இவள் என் மகள் என்று கூட்டிக் கொண்டு வந்துவிடு' என, ஒரு புது சேலையும், சாப்பாடும் வாங்கி கொடுத்து, ஆட்டோவில் வைத்து, மதுரை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து வந்தார். வரும்போதே போனில், "பெண்ணின் தாயை அனுப்பி வைக்கிறோம், நீங்கள் சிறுமியை மீட்டு வாருங்கள்' என யார்? யாரிடமோ பேசினார். நான், ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கியவுடன், சிலர் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விபசார கும்பலால், முன்பு என் மகள் மதுரை வழியாக காரில் அழைத்துச் செல்லும்போது, உறவினர்களை பார்த்து காப்பாற்றும்படி கதறியுள்ளார். ஆனால், அவள் வாயை பொத்தி விட்டனர். மேலும், "எனக்கு பணம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, என் தாய், தந்தை, தம்பியை பார்க்க அனுமதி தாருங்கள்' எனவும் கெஞ்சிய எனது மகளிடம் அந்த கும்பல் இரக்கமே காட்டவில்லை எனக்கூறி கதறி அழுதார்.

மாத்திரை கொடுத்த கொடூரம் : பூங்கோதை கொடுத்த தகவலின்படி, ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் புரோக்கர்கள் காத்து நின்றனர். ஆனால், சிறுமியை மீட்க முடியாத நிலையில், தப்பிச் சென்றனர்.

* சிறுமி ஈஸ்வரியை தொடர்ச்சியாக, தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக, மாதவிடாய் வராமல் இருக்க, மாத்திரைகளை அதிகமாக கொடுத்துள்ளனர்.

* ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல், ஒரு பெண்ணிடம் ஒரு முறை மட்டுமே தனிமையில் இருப்பார். இதையடுத்து, தன் சகாக்களுக்கு தாரைவார்ப்பது வழக்கம்.

* ராமேஸ்வரத்தில் நேற்று பிடிபட்ட இருவரிடம், பகல் முழுவதும் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறுமி முன் ஆஜர்படுத்தி அடையாளம் காட்ட வைத்தனர். "இவர்கள் இல்லை' என சிறுமி கூறியதை தொடர்ந்து, இருவரையும் நேற்று மாலையில் விடுவித்தனர்.

110ல் 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி! 153 கல்லூரிகளில்!!

சென்னை அண்ணா பல்கலை வெளியிட்ட, 153 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில், 110 கல்லூரிகள், 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 15 கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் பத்துக்குள் தான் இருக்கின்றன. போதிய உள் கட்டமைப்பு வசதிகள், தகுதியான ஆசிரியர்கள் இல்லாதது தான், தேர்ச்சி சதவீதம் சரிவதற்கு, முக்கிய காரணமாக இருக்கின்றன. இதுபோன்ற கல்லூரிகளில் சேர்வதிலிருந்து தப்பிக்க, சேர்வதற்கு முன், கல்லூரிகளைப் பற்றி மாணவர்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும்.

பொறியியல் கல்லூரிச் சேர்க்கை, விறு விறுப்பாக நடந்து வருகிறது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், இன்ஜினியர் கனவு இருக்கிறது. நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்து, "கேம்பஸ் இன்டர்வியூ'வில் நல்ல கம்பெனியில் சேர்ந்துவிட வேண்டும் என்று, கனவு காண்கின்றனர். இந்த கனவு, முன்னணி கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு மட்டுமே நனவாகிறது. மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, 500ஐ தாண்டிவிட்டது.

இது ஒரு பக்கம் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும், புற்றீசல்போல் பெருகிவிட்ட கல்லூரிகளில், போதுமான தரம் இல்லை. பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதை கொடுத்து, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்தை பெற்றுவிடுகின்றனர். ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த விதிமுறைகளை, 100 சதவீதம் அளவிற்கு பூர்த்தி செய்யாமல், பொறியியல் படிப்பை வியாபாரம் போல் நடத்துகின்றனர். மாணவர்கள் சிக்கினால் போதும் என்று, கல்வி நிறுவனங்கள் வளைத்து போட்டுவிடுகின்றன. அதன்பின், மாணவர்களால் அக்கல்லூரிகளில் இருந்து வெளியேற முடிவதில்லை.

எந்தவித அடிப்படை வசதிகளும், தரமான ஆசிரியர்களும் இல்லாத கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் வாழ்க்கை, சூனியமாகிவிடுகிறது. அண்ணா பல்கலை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலால், தரமில்லாத கல்லூரிகளின் முகமூடிகள், வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சென்னை அண்ணா பல்கலை, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் நடந்த தேர்வு முடிவின் அடிப்படையில், 153 கல்லூரிகளையும் தர வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டது. இதில், அதிகபட்சமாக, 83.17 சதவீதம் முதல், 51.53 சதவீதம் வரை 43 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற, 110 கல்லூரிகள், 50 சதவீதத்திற்கும் குறைவானத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. கடைசி, 15 கல்லூரிகளின் தேர்ச்சி, வெறும் 10 சதவீதத்திற்குள் தான் இருக்கிறது. செங்கல்பட்டு அருகில் உள்ள ஒரு கல்லூரி, 2.16 சதவீதம் தான் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியில் 139 மாணவர்கள் தேர்வெழுதியதில், மூன்று மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளன. பொறியியல் கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன், கல்லூரியைப் பற்றிய முழு ஜாதகத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். கவுன்சிலிங் அறைக்கு வந்தபின் எதையும் விசாரிக்க முடியாது. விரும்பும் கல்லூரிகளை பட்டியலிட்டு, அவற்றின் தரம், உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை முன்கூட்டியே விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் விசாரித்தால், கல்லூரியைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். இப்படி எதுவுமே செய்யாமல் கவுன்சிலிங்கிற்கு வந்து, ஏதோ ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தால் போதும் என்று நினைத்தால், பாதிப்பு ஏற்படும்.

மாணவர்கள் குழப்பம் : சென்னை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மற்ற மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள், வெவ்வேறு அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கீழ் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைப்பதாக அரசு அறிவித்தது. வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில், இதற்கான சட்ட மசோதா கொண்டுவந்து நிறைவேற்றியபின், மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு பல்கலையும் தனித்தனியாகத் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டிருப்பது, மாணவர்கள், பெற்றோர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தர வரிசைப் பட்டியல் விவகாரத்தில், மாநிலம் தழுவிய அளவில் ஒரே பட்டியலை வெளியிட்டால், அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சமஸ்கிருத தலைப்புக்கு வரிவிலக்கு கூடாது! தங்கர் பச்சான்!

சமஸ்கிருதமும் வேற்றுமொழிதான், எனவே சமஸ்கிருத மொழி கலப்புடன் தலைப்பு வைக்கும் படங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கக் கூடாது என்று டைரக்டர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார். கேளிக்கை வரி விலக்கு தொடர்பாக புதிய நிபந்தனைகளை விதித்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கும் தங்கர் பச்சான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது: சினிமா என்னும் திரைப்படக்கலையின் மூலம் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், நமக்கான மரபுகலைகளையும், பழங்கலைகளையும், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வையும் அது அழித்திருக்கிறது. இன்று மக்களின் கலையாகவும், அவர்களின் வாழ்வையும் பிரதிபலிக்கிற கலையாகவும் மாறிவிட்ட திரைப்படக்கலையை மிகவும் பொறுப்புடனும், கவனமாகவும் கையாள வேண்டிய கடமை அதனை சார்ந்த உருவாக்குபவர்களுக்கு இருக்கிறது. நம் மொழியையோ, பண்பாட்டையோ, நம் மதிப்பீடுகளையோ பற்றி கவலைப்படாமல் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மக்கள் விரும்புகிறார்கள் எனச்சொல்லி திரைப்படத்தை உருவாக்குபவர்களும் சமூகத்தின் முன் குற்றவாளிகள்தான். தமிழ் படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் முந்தைய தமிழக அரசு தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளித்தது. ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டோமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு புரியும். இதே வரிவிலக்கு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் நிபந்தனைகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

தமிழில் பெயரை சூட்டி விட்டு மொழி, பண்பாட்டு, கலாசார கூறுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சிதைக்கலாம், யதார்த்தம் என்கிற பெயரில் ஆபாசம், வன்முறைக்காட்சிகளை கூசாமல் காட்டி வருங்கால தலைமுறைகளையும் சீரழிக்கலாம் என்கிற போக்குக்கு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. தேவையில்லாமல் அயல் மொழிகளை புகுத்துபவர்களுக்கும், வன்முறை, ஆபாச காட்சிகளை உருவாக்கி பொழுதுபோக்கு என்கிற பெயரில் உருவாகிற திரைப்படங்களுக்கும் வரி விதிக்கப்படும், தமிழ்பண்பாடு, கலாசாரம், மொழியை போற்றுகின்ற படைப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்கிற இத்தகைய அறிவிப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத புரட்சிகரமான அறிவிப்பாகும். இது பொறுப்புள்ள கலைஞர்களும், தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி, பண்பாடு அடையாளங்களை காப்பதற்கு மேற்கொண்டுள்ள தமிழக அரசு இவை முழுமையாக நிறைவேற வேறொரு நிபந்தனையையும் விதிக்க வேண்டும். ஆங்கிலத்தில் பெயரிட்டாலும், சமஸ்கிருதத்தில் பெயரிட்டாலும் இரண்டுமே வேற்று மொழி தான். கடந்த காலங்களில் வரி விலக்கினைப் பெற்று பலனை அனுபவித்து வெளியான படங்களில் சமஸ்கிருதம் சொற்களை கலந்து வந்தவை ஏராளம். தூய தமிழ் சொற்களுடன் சமஸ்கிருதம் கலக்காத பெயர்களை சூட்டுபவர்களுக்குத்தான் வரி விலக்கு என்பதை உடனே அறிவிக்க வேண்டும். இதனை தான் தமிழ் அறிஞர்களும், தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர். வரிவிலக்கு தொடர்பான நிபந்தனைகளை செயல்படுத்தும் குழுவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இடம் பெறுவார்கள் என நம்புகிறோம். இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு, கலைஞன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும், எனது அளவற்ற மகிழ்ச்சியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தங்கர் பச்சான்

z      சமஸ்கிருதமும் வேற்றுமொழிதான், எனவே , எனவே சமஸ்கிருத மொழி கலப்புடன் தலைப்பு வைக்கும் படங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கக் கூடாது என்று டைரக்டர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார். கேளிக்கை வரி விலக்கு தொடர்பாக புதிய நிபந்தனைகளை விதித்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கும் தங்கர் பச்சான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது: சினிமா என்னும் திரைப்படக்கலையின் மூலம் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், நமக்கான மரபுகலைகளையும், பழங்கலைகளையும், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வையும் அது அழித்திருக்கிறது. இன்று மக்களின் கலையாகவும், அவர்களின் வாழ்வையும் பிரதிபலிக்கிற கலையாகவும் மாறிவிட்ட திரைப்படக்கலையை மிகவும் பொறுப்புடனும், கவனமாகவும் கையாள வேண்டிய கடமை அதனை சார்ந்த உருவாக்குபவர்களுக்கு இருக்கிறது. நம் மொழியையோ, பண்பாட்டையோ, நம் மதிப்பீடுகளையோ பற்றி கவலைப்படாமல் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மக்கள் விரும்புகிறார்கள் எனச்சொல்லி திரைப்படத்தை உருவாக்குபவர்களும் சமூகத்தின் முன் குற்றவாளிகள்தான்.

தமிழ் படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் முந்தைய தமிழக அரசு தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளித்தது. ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டோமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு புரியும். இதே வரிவிலக்கு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் நிபந்தனைகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

தமிழில் பெயரை சூட்டி விட்டு மொழி, பண்பாட்டு, கலாசார கூறுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சிதைக்கலாம், யதார்த்தம் என்கிற பெயரில் ஆபாசம், வன்முறைக்காட்சிகளை கூசாமல் காட்டி வருங்கால தலைமுறைகளையும் சீரழிக்கலாம் என்கிற போக்குக்கு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. தேவையில்லாமல் அயல் மொழிகளை புகுத்துபவர்களுக்கும், வன்முறை, ஆபாச காட்சிகளை உருவாக்கி பொழுதுபோக்கு என்கிற பெயரில் உருவாகிற திரைப்படங்களுக்கும் வரி விதிக்கப்படும், தமிழ்பண்பாடு, கலாசாரம், மொழியை போற்றுகின்ற படைப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்கிற இத்தகைய அறிவிப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத புரட்சிகரமான அறிவிப்பாகும். இது பொறுப்புள்ள கலைஞர்களும், தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி, பண்பாடு அடையாளங்களை காப்பதற்கு மேற்கொண்டுள்ள தமிழக அரசு இவை முழுமையாக நிறைவேற வேறொரு நிபந்தனையையும் விதிக்க வேண்டும். ஆங்கிலத்தில் பெயரிட்டாலும், சமஸ்கிருதத்தில் பெயரிட்டாலும் இரண்டுமே வேற்று மொழி தான். கடந்த காலங்களில் வரி விலக்கினைப் பெற்று பலனை அனுபவித்து வெளியான படங்களில் சமஸ்கிருதம் சொற்களை கலந்து வந்தவை ஏராளம். தூய தமிழ் சொற்களுடன் சமஸ்கிருதம் கலக்காத பெயர்களை சூட்டுபவர்களுக்குத்தான் வரி விலக்கு என்பதை உடனே அறிவிக்க வேண்டும். இதனை தான் தமிழ் அறிஞர்களும், தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

வரிவிலக்கு தொடர்பான நிபந்தனைகளை செயல்படுத்தும் குழுவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இடம் பெறுவார்கள் என நம்புகிறோம். இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு, கலைஞன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும், எனது அளவற்ற மகிழ்ச்சியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.மஸ்கிருத மொழி கலப்புடன் தலைப்பு வைக்கும் படங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கக் கூடாது என்று டைரக்டர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார். கேளிக்கை வரி விலக்கு தொடர்பாக புதிய நிபந்தனைகளை விதித்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கும் தங்கர் பச்சான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: சினிமா என்னும் திரைப்படக்கலையின் மூலம் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், நமக்கான மரபுகலைகளையும், பழங்கலைகளையும், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வையும் அது அழித்திருக்கிறது. இன்று மக்களின் கலையாகவும், அவர்களின் வாழ்வையும் பிரதிபலிக்கிற கலையாகவும் மாறிவிட்ட திரைப்படக்கலையை மிகவும் பொறுப்புடனும், கவனமாகவும் கையாள வேண்டிய கடமை அதனை சார்ந்த உருவாக்குபவர்களுக்கு இருக்கிறது. நம் மொழியையோ, பண்பாட்டையோ, நம் மதிப்பீடுகளையோ பற்றி கவலைப்படாமல் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மக்கள் விரும்புகிறார்கள் எனச்சொல்லி திரைப்படத்தை உருவாக்குபவர்களும் சமூகத்தின் முன் குற்றவாளிகள்தான்.

தமிழ் படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் முந்தைய தமிழக அரசு தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளித்தது. ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டோமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு புரியும். இதே வரிவிலக்கு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் நிபந்தனைகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

தமிழில் பெயரை சூட்டி விட்டு மொழி, பண்பாட்டு, கலாசார கூறுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சிதைக்கலாம், யதார்த்தம் என்கிற பெயரில் ஆபாசம், வன்முறைக்காட்சிகளை கூசாமல் காட்டி வருங்கால தலைமுறைகளையும் சீரழிக்கலாம் என்கிற போக்குக்கு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. தேவையில்லாமல் அயல் மொழிகளை புகுத்துபவர்களுக்கும், வன்முறை, ஆபாச காட்சிகளை உருவாக்கி பொழுதுபோக்கு என்கிற பெயரில் உருவாகிற திரைப்படங்களுக்கும் வரி விதிக்கப்படும், தமிழ்பண்பாடு, கலாசாரம், மொழியை போற்றுகின்ற படைப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்கிற இத்தகைய அறிவிப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத புரட்சிகரமான அறிவிப்பாகும். இது பொறுப்புள்ள கலைஞர்களும், தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி, பண்பாடு அடையாளங்களை காப்பதற்கு மேற்கொண்டுள்ள தமிழக அரசு இவை முழுமையாக நிறைவேற வேறொரு நிபந்தனையையும் விதிக்க வேண்டும். ஆங்கிலத்தில் பெயரிட்டாலும், சமஸ்கிருதத்தில் பெயரிட்டாலும் இரண்டுமே வேற்று மொழி தான். கடந்த காலங்களில் வரி விலக்கினைப் பெற்று பலனை அனுபவித்து வெளியான படங்களில் சமஸ்கிருதம் சொற்களை கலந்து வந்தவை ஏராளம். தூய தமிழ் சொற்களுடன் சமஸ்கிருதம் கலக்காத பெயர்களை சூட்டுபவர்களுக்குத்தான் வரி விலக்கு என்பதை உடனே அறிவிக்க வேண்டும். இதனை தான் தமிழ் அறிஞர்களும், தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

வரிவிலக்கு தொடர்பான நிபந்தனைகளை செயல்படுத்தும் குழுவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இடம் பெறுவார்கள் என நம்புகிறோம். இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு, கலைஞன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும், எனது அளவற்ற மகிழ்ச்சியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

இதே நாள்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...