|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 August, 2011

ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்!

சி.டி. ஸ்கேன் போன்ற மருத்துவப் பரிசோதனைகளின் போது ஏற்படும் கதிர்வீச்சுத் தாக்கம் குறித்து நோயாளிகளுக்கு முன்னமேயே அறிவுறுத்துவதுதான் முறை என்று மருத்துவத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட அது போன்ற பிற பரிசோதனைகளின் போது இயந்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுத் தாக்கம் புற்று நோய் உள்ளிட்ட பிற நோய்களுக்குக் காரணமாகும் அபாயம் உள்ளது. மேலும் செல்லின் மரபுப் பூர்வாங்கப் படிவத்தில் (gene blue-print) சேதம் ஏற்படுத்துகிறது இதனால் பல ஆரோக்கியக் கேடுகள் ஏற்படுகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"சில வேளைகளில் செல்கள் செயல்படாமல் போகும், அல்லது தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் அல்லது இறந்து விடும். ஆனால் மேலும் சில வேளைகளில் செல் பல்கிப் பெருகும் அதாவது கட்டுப்படுத்த முடியாத வகையில் பல்கிப்பெருகும், அப்போது புற்றுநோய் ஏற்படும் என்று கங்காராம் மருத்துவமனையின் சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிபுணர் டி.பி.எஸ். புக்சி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும், பரிசோதனை மையங்களிலும் சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களால் உடலில் உள்வாங்கப்படும் கதிர்வீச்சு அளவு குறித்த விவரம் உள்ளது.இதனால் ஒரு நோயாளியை ஸ்கேன் செய்யும் முன் அவரிடம் கதிர்வீச்சு அளவு குறித்து கூறப்படவேண்டும் என்பதை ஒரு கொள்கையாக அரசு வடிவமைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

டெல்லிய்ல் உள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவனமையின் மருத்துவர் ஒருவரும் இந்தக் கதிர்வீச்சு அபாயத்தை உறுதி செய்துள்ளார், அதாவது சி.டி. ஸ்கேன்கள் கதிர்வீச்சுத் தாக்கத்தின் மிகப்பெரிய ஆதாரமாகும். திடீர் கதிர்வீச்சு அல்லது நீண்ட நாளைய கதிர்வீச்சுத் தாக்கம் எலும்பு செல்களை செயலிழக்கச் செய்வதோடு, சிலருக்கு விதையிழப்பும் ஏற்படுகிறது என்றார்.

பி.சி.சி.ஐ.-யை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர மசோதா!

மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றவுள்ள தேசிய விளையாட்டு மசோதாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகளையும் கொண்டு வர முடிவெடுக்கப்படுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ. இந்த மசோதா பி.சி.சி.ஐ.,யை கட்டுப்படுத்தவே நிறைவேற்றப்பட உள்ளதாக குற்றம்சாட்டியது. இந்த மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வரும் செப்டம்பர் 8ம் தேதியன்று தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு பி.சி.சி.ஐ., சட்ட மசோதாவில் சேர்க்கப்பட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் வந்தாகவேண்டும். இந்த மசோதாவில், விளையாட்டுத்துறை அமைப்புகளில் பதவியில் உள்ளவர்களுக்கு வயது 70க்குமேல் இருக்கக்கூடாது. ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளுக்கு மேல் வகிக்கக்கூடாது என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஐ.சி.சி., தலைவராக உள்ள சரத்பவார் மத்திய விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக உள்ளார். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்க தலைவராக உள்ளார். மேலும் இந்த மசோதாவில், பி.சி.சி.ஐ., வந்தால், இந்திய கிரிக்கெட் அணியும், மற்ற விளையாட்டு வீரர்களை போல் போதை தடுப்பு சோதனைக்கு உட்பட வேண்டும். இந்திய அணி வீரர்கள் சர்வதேச போதை மருந்து தடுப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதா குறித்து பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கான், விளையாட்டுத்துறையில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இதனை தேசிய விளையாட்டு மசோதா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மசோதா நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை முடிந்து விட்டது. இந்த மசோதா நாளை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.

ஊட்டச்சத்து நிறைந்த பனம்பழம்!

பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை என்பதாலேயே இதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. இது கூந்தல் பனை, மற்றும் கரும்பனை என இரு வகைப்படும். பனை இந்தியாவில் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.

“தென்னையை வைத்தவன் தின்று விட்டு சாவான், பனையை வைத்தவன் பார்த்துக்கொண்டே சாவான்” என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப பனையின் வளர்ச்சி மெதுவாகவே இருக்கும். ஆனால் நூறு ஆண்டுகள் வரை பனை உயிருடன் இருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பனை மரத்தில் நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன் தரும் பகுதியாகும். பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது. கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்: பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். தினமும் காலை எழுந்தவுடன் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் குணமடையும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும். கோடை காலத்தில் பதநீரும் நுங்கும் கலந்து பருக உடலுக்கு குளுமை தரும்.

ஊட்டச்சத்து நிறைந்த பனம்பழம்: பனைமரத்தின் பழமே பனம் பழமமாகும். இது உருவத்தில் தேங்காயை விட பெரியதாகவும், உருண்டையாகவும் இருக்கும். பழம் கருப்பாக இருக்கும். தலையில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும். பனம் பழத்தினுள் இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகளிலிருக்கும். இந்த கொட்டைகளைச் சுலபத்தில் சுலபத்தில் உடைக்க முடியாது. கெட்டியானது. பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினூடே சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். பனம் பழத்தை அவித்தும் சுட்டும் உண்ணலாம்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சொரி சிரங்கு, புண், உள்ளவர்கள் தின்றால் இவைகள் மேலும் அதிகரிக்கும். பனம்பழம் மலத்தை இறுக்கிவிடும்.

உடலைத் தேற்றும் பனங்கிழங்கு: பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் வெட்டினால் வரும் நீரை எடுத்து அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும். கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சல் தீரும்.

பனை மரத்தின் பாகங்கள்: பனையின் அனைத்து பாகமும் பயன்படுகிறது. பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் தாக்காது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி போன்ற கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். பனங்காயில் பிரஷ், கயிறுகள் தயார் செய்யலாம். வேலிக்கும் பயன்படுகிறது.

கொரிய திரைப்பட விழாவில் பார்த்திபன் படம் உள் விலாசம்!

புகழ்பெற்ற கொரிய திரைப்பட விழாவில் திரையிட பார்த்திபன் நடித்த உள்  விலாசம் படம் தேர்வாகியுள்ளது.இயக்குநர் பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ள படம் உள் விலாசம். மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.

கொரியாவில் ஆண்டுதோறும் பூசோன் நகரில் சர்வதேச திரைப்பட நடக்கிறது. இந்த விழாவில் சிறப்புத் திரையிடலுக்கு இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'எ விண்டோ ஆன் ஆசியன் சினிமா' என்ற பிரிவில் இந்தப்படம் திரையிடப்படுகிறது.

உலகம் முழுவதுமிருந்து வரும் திரைப்பட கலைஞர்கள் இந்தப் படத்தை பார்வையிடுகின்றனர்.பூசோன் திரைப்பட விழாவில் ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படம் தேர்வாகி, திரையிடப்பட்டது. இரண்டு தினங்கள் திரையிடப்பட்ட இந்தப் படத்தைக் காண கூட்டம் குவிந்ததில் டிக்கெட்டுகள் தீர்ந்து போனது நினைவிருக்கலாம்.

இப்போது அடுத்த தமிழ்ப் படமாக உள் விலாசம் தேர்வாகியுள்ளது.

தானத்தை தவறாகப் பயன்படுத்தி, அதை வர்த்தரீதியில் விற்பதை தடுக்க புதிய சட்டம்!

சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானத்தை தவறாகப் பயன்படுத்தி, அதை வர்த்தரீதியில் விற்பதை தடுக்க புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியர்களின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறவும், வெளிநாட்டினரின் உறுப்புகளை இந்தியர்கள் வாங்கவும் தடை விதிக்கப்படவுள்ளது.

கடந்த 13ம் தேதி நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த சட்டம் அமலுக்கு வரும்.

இதன்படி திசுக்கள், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை சட்ட விரோதமாக விற்றால் 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 1 கோடி அபராதமும் விதிக்கப்படும். இதன்மூலம் ஏழை மக்கள் தங்கள் உடல் உறுப்புக்களை பணத்துக்காக விற்பதை தடை செய்ய முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இந் நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை, ஜிப்மர், சென்னையைச் சேர்ந்த உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பு அமைப்பான "மோகன் பவுண்டேஷன்' ஆகியவை இணைந்து மனித உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின. அதில் பேசிய, மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் என்.கே. மொகந்தி கூறுகையில், இப்போது உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான அனுமதி வழங்கும் குழுவின் ஒப்புதலுடன் இந்தியரின் உறுப்புகளை வெளிநாட்டினர் பெற்று மாற்று சிகிச்சை செய்து கொள்ளும் நிலை உள்ளது. திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு இதற்கு தடை ஏற்படும்.

இந்தியாவில் மனித உறுப்புகள் தானம் தேவைப்படுவோருக்கும், அதைக் கொடுப்போருக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. இந்தியாவில் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிறுநீரகங்கள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.5 லட்சமாக உள்ளது. ஆனால், ஆண்டுக்கு 4,500 முதல் 5,500 சிறுநீரகங்கள் மட்டுமே உறவினர்கள் மூலமும் தானமாகவும் கிடைத்து வருகின்றன.

அதே போல ஆண்டுக்கு 50,000 பேருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 400 பேருக்கு மட்டுமே கல்லீரல்கள் மட்டுமே தானம் மூலம் கிடைக்கின்றன. பொது மக்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவுக்கு இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என்றார்.

மோகன் பவுண்டேஷனின் தலைவர் டாக்டர் சுனில் ஷெராப் பேசுகையில், உடல் உறுப்புகள் தானம் தென்னிந்தியாவில்தான் அதிகம் நடக்கின்றன. வட இந்தியாவில் தானம் தருவோர் மிக மிகக் குறைவு. இதில் தமிழ்நாடு தான் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. இப்போது மக்களிடம் பொருளாதார வசதி அதிகரித்துவிட்டதாலும், சுகாதார காப்பீடு திட்டம் போன்ற பல்வேறு வசதிகளாலும், நவீன மருத்துவ தொழில்நுட்பங்களாலும் உடல் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால், உடல் உறுப்புகளைத் தானமாகப் பெறுவது சவாலாகத்தான் இருக்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் பவுண்டேஷனின் நோக்கம். உறுப்புகள் மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டியையும் எங்கள் பவுண்டேஷன் நடத்தியது என்றார்.

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு இனி நேரடித் தேர்தல்!

மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்களை மக்கள் நேரடியாகவே வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வகை செய்யும் மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுவரையிலும் மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் முறை இருந்து வந்தது. இதை மாற்றி நேரடித் தேர்தல் மூலம் மக்களே அவர்களைத் தேர்வு செய்ய இந்த மசோதா வழி வகுக்கும். இந்த மசோதாவை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது மாநகராட்சிகளின் மேயர்களும், மற்றும் நகராட்சிகளின் தலைவர்களும் மன்ற உறுப்பினர்களால் அவர்களுக்கு இடையே இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலான மேயர்கள் அல்லது தலைவர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதி முழுவதின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துவதற்கு பதிலாக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியின் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.எனவே மாநகராட்சியின் மேயருக்கான மற்றும் நகராட்சியின் தலைவருக்கான தேர்தல் முறையை மறைமுக தேர்தல் முறையிலிருந்து நேரடி தேர்தல் முறைக்கு மாற்றுவதென்று அரசு முடிவு செய்துள்ளது.

அது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் மேம்பட்ட நிர்வாகத்திற்கு எளிதாக வழிவகுக்கும். மக்களுக்கு இன்னமும் திறம்பட்ட முறையிலும் விரைவாகவும், பொதுப் பணிகளை வழங்கும் விளைவினை ஏற்படுத்தும்.எனவே தமிழக அரசானது மாநகராட்சியில் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை தக்கவாறு திருத்துவதென்று முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கு சொந்தமான டி.பி.ரியால்டி, டைனமிக்ஸ் ரியால்டி மற்றும் கான்வுட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், நிகார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகிய 5 நிறுவனங்களின் சொத்துகளை அமலாக்கப்பிரிவு பறிமுதல்!

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் லைசென்சு பெற்ற சுவான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, அதற்கு பிரதிபலனாக, தனது டி.பி.ரியால்டி நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டு இருந்தது இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கு சொந்தமான டி.பி.ரியால்டி, டைனமிக்ஸ் ரியால்டி மற்றும் கான்வுட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், நிகார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகிய 5 நிறுவனங்களின் சொத்துகளை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த சொத்துகளை பறிமுதல் செய்வது என்று அமலாக்கப்பிரிவு ஏற்கனவே அடையாளம் கண்டு கொண்டு விட்டது. பறிமுதல் செய்வதற்கான முறையான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.

விசைத்தறி மூலம் பட்டுச்சேலை தயாரித்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை !

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், விசைத்தறி மூலம் பட்டுச்சேலை உற்பத்தி செய்பவர்களின் மீது, அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம், தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில், இரண்டரை லட்சம் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம், கோ - ஆப்டெக்சால் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும், 200 கோ- ஆப்டெக்ஸ் ஷோரூம்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில், 131 ஷோரூம்கள் உள்ளன. நூறு சதவீத பட்டு நூல் கலந்த சேலைகளை, கைத்தறி நெசவாளர்கள் மூலமே நெய்யப்பட வேண்டும். விசைத்தறி மூலம் நூறு சதவீத பட்டு கலந்த சேலைகள் உற்பத்தி செய்யக் கூடாது என்றும், மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டத்திற்கு புறம்பாக, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரமான, கைத்தறி நெசவுத் தொழிலை சிதைக்கும் நோக்கில், பல விசைத்தறி நிறுவனங்கள், நூறு சதவீத பட்டுச்சேலைகளை மறைமுகமாக தயாரித்து, அவைகளை கைத்தறியில் செய்தது போல விளம்பரம் செய்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. 'சேலம் மாவட்டத்தில் கருங்கல்பட்டி, கொண்டலாம்பட்டி, வனவாசி, ஜலகண்டபுரம், இலம்பில்லை, பஞ்சுகாலிப்பட்டி மற்றும் இளந்தமாவூர் பகுதிகளிலுள்ள விசைத்தறி மூலம், 100 பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இது, மத்திய அரசின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை. கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், நடைபெறும் இச்செயலை தடுக்க வேண்டும். இத்தகைய செயலில் ஈடுபடும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, விசைத்தறிக் கூடங்களில், 100 சதவீதம் பட்டு கலந்த சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, தகவல்களை கோ - ஆப்டெக்ஸ் தலைமையகத்திற்கு அனுப்பும்படி, கைத்தறி நெசவாளர்கள் சங்கங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. 

இதே நாள்...


  • ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண்‌ நகரம் அமைக்கப்பட்டது(1835)
  •  டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது(1984)
  •  அசர்பைஜான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1991)
  •  இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா இறந்த தினம்(2008)
  • LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...