ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல்
செய்த குற்றப்பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் லைசென்சு பெற்ற சுவான் டெலிகாம்
நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, அதற்கு பிரதிபலனாக, தனது
டி.பி.ரியால்டி நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சம்
கொடுத்ததாக கூறப்பட்டு இருந்தது இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கு சொந்தமான
டி.பி.ரியால்டி, டைனமிக்ஸ் ரியால்டி மற்றும் கான்வுட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்,
எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், நிகார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகிய 5 நிறுவனங்களின்
சொத்துகளை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த சொத்துகளை பறிமுதல் செய்வது என்று அமலாக்கப்பிரிவு ஏற்கனவே அடையாளம் கண்டு கொண்டு விட்டது. பறிமுதல் செய்வதற்கான முறையான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.

No comments:
Post a Comment