ஏழு ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் இந்திய பெருங் கடலில் ஏற்பட்ட சுனாமியின் நினைவலைகள், என்றும் நீங்காத வடுவாக தொடர்கிறது.
அதற்கு முன் இந்த சொல் இந்திய மக்களிடையே பிரபலம் இல்லை. ஆனால் 2004, டிச., 26க்கு பின் மக்களால் அதிகமாக உச்சரிக்கப் பட்ட சொல் சுனாமி தான். இது ஜப்பானிய மொழிச் சொல். "துறைமுக அலை' எனப் பொருள். "ஆழிப் பேரலை' எனவும் அழைக்கப் படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பிய ஆழிப் பேரலைகள், இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தின.
சாதாரணமாக தூங்கிக் கொண்டிருந்த கடல் அலைகள் அன்று கோபம் கொண்டு உயர்ந்து மேல் எழும்பின. மக்கள் நினைத்துப்பார்க்க முடியாத கொடூரத்துடன். சில நிமிடங்கள் நீடித்த கடல் கொந்தளிப்பு மிகப்பெரிய பேரழிவை இந்திய துணைக் கண்டத்தில் ஏற்படுத்தியது. இதில் 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர்வரை உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. இது உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6வது இடம், என்ற சோகமான சாதனையை பெற்றது. உயிர்ச் சேதத்துடன், கோடிக்கணக்கான ரூபாய்க்கு பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது.
தமிழகம் அதிகம்: இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியா கினர். தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேர் இறந்தனர். தமிழக கடலோர மாவட்டங் களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்படபல மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டன. கடலை நம்பி வாழ்ந்த மீனவ குடும்பங்கள், கடற்கரை பகுதி யிலுள்ள வழிபாட்டு தலங்களில் நேர்த்திக்கடன் செலுத்த மற்றும் சுற்றுலா சென்றவர்கள் என குடும்பம் குடும்பமாக பலியாகிய சம்பவம் இன்றும் நெஞ்சை விட்டு அகலவில்லை.