|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 June, 2011

இலங்கை அரசை கட்டாயப்படுத்துங்கள் - இந்தியாவுக்கு சர்வதேச குழு வலியுறுத்தல்


போருக்கு பிந்தைய நிவாரணப் பணிகளை முடுக்கி விடும்படி, இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும். இதன்மூலம், இலங்கையில் மீண்டும் ஒரு மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியும்' என, சர்வதேச நெருக்கடி கால குழு அறிவித்துள்ளது.

சர்வதேச நெருக்கடி கால குழு வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த நீண்ட கால சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போர் நடந்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படவேண்டும். இது தொடர்பாக, இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும். இவ்வாறு வலியுறுத்துவதன் மூலம், இலங்கையில் மீண்டும் ஒரு பெரும் மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியும். இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில், ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக, சர்வதேச விசாரணை நடக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை. மேலும், நிர்வாக ரீதியிலான விஷயத்திலும், ராஜபக்ஷே அரசை வலியுறுத்துவதற்கும், இந்தியா தயக்கம் காட்டுகிறது. இலங்கை விவகாரத்தில், இந்தியா தற்போது பின்பற்றும் கொள்கைகள் பலன் அளிக்காது. இந்த விவகாரத்தில், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும், ஐரோப்பிய யூனியனுடனும், இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதே நாள்...


  • மொசாம்பிக் விடுதலை நாள்(1975)

  •  இந்தியாவின் கடைசி வைசிராயான மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம்(1900)

  •  வின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)

  •  கொரியாப் போர் ஆரம்பமானது(1950)

  •  பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியிடம் சரணடைந்தது(1940)

  • ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கத்தரி!

    கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது.

    இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையான வேதிப்பொருட்கள் அர்ஜினைன், லுஸைன், நிகோடின் அமிலம், சொலசோடைன், டையோஸ்ஜெனினி, டிரான்ஸ், கெபெய்க் அமிலம், டேடுரடியோல். ஆஸ்துமா நோயை குறைக்கும் கத்தரியின் இலைகள் ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய்; சிறுநீர்க் கழிப்பின் போது ஏற்படும் வலி ஆகியவற்றினை குணப்படுத்தும்; வாயில் எச்சில் சுரக்க உதவும். வேர் ஆஸ்துமா மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது. வேரின் சாறு காதுவலி போக்க பயன்படுத்தப்படுகிறது.

    கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும். அதனால் தான் பத்திய வைத்தியத்தில் இந்தக் காய் முக்கிய இடம் வகிக்கிறது. அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். காலின் வீக்கத்தை குறைப்பதற்கு அப்பகுதியில் பூசிக்கொள்வார்கள். இதை பிழிந்து சாறு எடுத்து உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் பூசுவதன் மூலம் வியர்வையை தடைசெய்யலாம்.

    கொழுப்புக்கு எதிரானது மேலும் கொழுப்பு சேர்வதற்கு எதிரானது. கல்லீரல் நோய்களுக்கு நல்ல மருந்தாகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவினைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தினை சரிப்படுத்த சிறந்த உணவாகும். உடலில் கூடுதலாக உள்ள கொழுப்புச்சத்தின் அளவை கட்டுப்படுத்த கத்தரிக்காய் உதவுகிறது. அத்துடன் இது ஒரு போஷாக்கு நிறைந்த உணவாகையால் ஏழைகளின் இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது,

    ஜெர்மனி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கத்தரியின் மருத்துவப் பயன்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளன. சுத்த ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவத்தை தடுக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூலநோய்க்கு மேல் பூச்சாக பயன்படுகிறது. நசுக்கப்பட்ட கனியானது வெங்குரு மற்றும் வெயில் காரணமாக முகம் சிவந்திருத்தலை போக்க வல்லது.

    சர்வதேச சித்திரவதை நாள்-லண்டனில் 26ம் தேதி பிரதமர் அலுவலகம் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

    சர்வதேச சித்திரவதை நாள்-லண்டனில் 26ம் தேதி பிரதமர் அலுவலகம் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

    லணட்ன்: சர்வதேச சித்திரவதை நாளையொட்டி, 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, மாலை 4 மணி முதல் 7 மணி வரை பிரதமர் அலுவலகம் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்திடவுள்ளனர்.

    லண்டன் டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் டேவிட் காமரூனின் இல்ல-அலுவலகம் முன்பு இந் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    கொலை சித்திரவதை கற்பழிப்பு அடக்குமுறை சொத்தழிப்பு என சொல்லணாத் துயரங்களால் துன்பப்படுகின்ற இக்கால கட்டத்தில் தஞ்சம் கோரி இங்கிலாந்திற்கு வந்துள்ள ஈழத்தமிழர்களை இனவெறிபிடித்த இலங்கை அரசின் கரங்களில் ஒப்படைப்பதைத் தடுத்து நிறுத்திட இன உணர்வுடன் ஒன்றுதிரண்டு குரல் கொடுப்போம் என புகலிடம் தேடும் தமிழர்களின் நடவடிக்கைக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

    ராசா மீதான குற்றச்சாட்டுக்களை வெளியிட பிரதமர் அலுவலகத்திற்கு சிஐசி உத்தரவு!

    முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மீதான புகார்கள், குற்றச்சாட்டுக்கள் என்ன என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்திற்கு தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏல நடைமுறையில் முறைகேடாக நடந்ததால் நாட்டுக்கு ரூ. 1.75 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார் என்பது ராசா மீதான புகார். இந்த வழக்கில் தற்போது ராசா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் ராசா இருந்தபோதே அவர் மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் எழுந்தது. ஆனால், அதை அவர் மறுத்து வந்தார். அந்த சமயத்தில், ஆ.ராசா மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட போதிலும் அமைச்சராக அவர் நீடிக்க காரணம் என்ன? என்பது போன்ற விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் தகவல் ஆர்வலர் ஒருவர் கேட்டிருந்தார்.

    ஆனால் அதற்கு பிரதமர் அலுவலகம் ஒரு பதிலையும் அனுப்பாமல் அமைதி காத்து வந்தது. இதையடுத்து மனுதாரர், தலைமைத் தகவல் ஆணையர் அலுவலகத்தில் மேல் முறையீடு செய்தார்.
    அந்த மனுவைப் பரிசீலித்த மத்திய தலைமை தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி, பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு உத்தரவு கலந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    அதில், 

    இந்த நாட்டு மக்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என மனுதாரர் விரும்புகிறார். அவருடைய கேள்விகளை இந்தியில் தொகுத்திருக்கிறார். அவரை அழைத்து நடத்திய ஆலோசனைக்கு பிறகு அவருடைய கேள்விகள் அனைத்தும் சரியான முறையில் தொகுத்து பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையம் அனுப்புகிறது. எனவே, ஆ.ராசாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான சான்றிட்ட நகல்கள் மற்றும் அவை தொடர்பாக பிரதமர் அலுவலகம் மேற்கொண்ட கடித தொடர்புகள் ஆகியவற்றை நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

    ஆ.ராசா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விவரங்களை ஜுலை 10-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.'ராசா, பிரதமர் இடையிலான கடித விவரங்களைத் தருகிறோம்' தலைமைத் தகவல் ஆணையரின் கடிதத்தைத் தொடர்ந்து தற்போது அசைந்து கொடுக்க ஆரம்பித்துள்ளது பிரதமர் அலுவலகம். இருப்பினும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கும், ராசாவுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்த தகவல்களைத் தருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதை ஏற்கனவே அது பலமுறை சொல்லி, வெளிப்படுத்தியுள்ளது, உச்சநீதிமன்றத்திலும் இதையேதான் தனது தரப்பு வாதத்திற்குப் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து தொடர்பான தகவல்களை மனுதாரருக்குத் தருவோம். ஆர்டிஐ மூலம் தகவல் கோரியிருந்த மனுதாரருக்கு எந்தத் தகவலையும் அளிக்க நாங்கள் மறுக்கவில்லை. இருப்பினும் சில குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து மன்மோகன் சிங், ராசா இடையிலான கடிதப் போக்குவரத்துகளில் விவாதிக்கப்படவில்லை என்பதால் அதுகுறித்த தகவலை தர முடியாத நிலை ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டனில் சிபிஐ விசாரணை: வசமாய் சிக்கும் தயாநிதி!

    ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் லண்டன் சென்ற சிபிஐ குழு, அங்கு இரு நிதித்துறை ஆலோசகர்களிடம் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது. இதனால் தயாநிதி மாறன் மீதான சிபிஐயின் பிடி விரைவில் இறுகும் என்று தெரிகிறது. ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபரான சிவசங்கரன் சிபிஐயிடம் தந்த வாக்குமூலத்தில், 2004-2007ம் ஆண்டு காலத்தில் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தை அவரது நண்பரான மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு வற்புறுத்தினார் என்று கூறியிருந்தார்.

    மேலும் இந்தியாவில் பிற பகுதிகளிலும் தனது செல்போன் சேவையை விரிவாக்க லைசென்ஸ் கோரி தொலைத் தொடர்புத்துறையை அணுகியபோதெல்லாம், அந்த பைல்களையும் கோரிக்கைகளையும் தயாநிதி மாறன் தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும்,

    ஏர்செல் நிறுவனத்தை அனந்த கிருஷ்ணனுக்கு விற்றே ஆக வேண்டும் என்று மிரட்டியே பணிய வைத்ததாகவும், ஏர்செல்லை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றவுடன் அந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 14 மண்டலங்களில் செல்போன் சேவை தொடங்க தயாநிதி உடனே லைசென்ஸ் தந்ததாகவும் சிவசங்கரன் கூறியிருந்தார்.

    மேக்சிஸ் நிறுவனத்துக்கு இந்த லைசென்ஸ் கிடைத்தவுடன், அந்த நிறுவனம் சன் டிவியின் டிடிஎச் பிரிவில் ரூ. 600 கோடியை முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரங்கள் குறித்து லண்டன் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 10 நிதி ஆலோசகர்களுக்கும் முழு விவரமும் தெரியும் என்றும் சிவசங்கரன் சிபிஐயிடம் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து கடந்த 12ம் தேதி அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் குழு லண்டன் சென்று அங்கு சிவசங்கரன் குறிப்பிட்ட நபர்களில் 2 முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும் அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக் கொண்டு இந்தக் குழு கடந்த 19ம் தேதி இந்தியா திரும்பியது. இந்த வாக்குமூல விவரங்கள் தயாநிதி மாறனை பெரும் சிக்கலில் மாட்டிவிடும் என்று தெரிகிறது.

    இதேபோல இன்னொரு அமலாக்கப் பிரிவு-சிபிஐ அதிகாரிகள் குழு விரைவில் சிங்கப்பூருக்கும் செல்கிறது. அங்கு இந்த டீல் குறித்து விவரம் அறிந்தவர்கள் என்று சிவசங்கரனால் சுட்டிக் காட்டப்பட்ட நபர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி அங்கேயே அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யும் என்று தெரிகி்றதி.

    கலைஞர் டி.விக்கு பணம்: இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன்-விஜய் மல்லையாவிடம் விசாரிக்க சிபிஐ முடிவு!

    கலைஞர் டி.வி. நிறுவனத்துக்கு பணம் கொடுத்தது ஏன் என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் மல்லையாவிடம் விளக்கம் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கிய டிபி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி தந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கலைஞர் டி.வியின் பங்குதாரரும், திமுக எம்பியுமான கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத் குமார் ஆகியோர் சிறையில் உள்ளனர்.

    டிபி ரியாலிட்டி நிறுவனம் கலைஞர் டிவிக்கு பணம் தந்தது குறித்து சிபிஐ கண்டுபிடித்தவுடன் அந்தப் பணத்தை கடன் போல காட்டி வட்டியுடன் திருப்பித் தந்துவிட்டது கலைஞர் டிவி. ஆனால், அவ்வாறு அந்தப் பணத்தைத் திருப்பித் தர இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் விஜய் மல்லையாவும் உதவியதாக இப்போது தெரியவந்துள்ளது. இது குறித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன், யு.பி. குரூப் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

    டிபி ரியாலிட்டி நிறுவனம் தந்த பணத்தை கலைஞர் டிவி செலவு செய்துவிட்ட நிலையில், அந்தப் பணத்தை திருப்பித் தர இந்தியா சிமெண்ட்ஸ், யுபி குரூப் நிறுவனம் ஆகியவை கலைஞர் டி.விக்கு பணம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே இது தொடர்பாக அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

    இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் தலைவரான சீனிவாசன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராகவும் உள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், சிபிஐ எங்களிடம் விளக்கம் கேட்கவுள்ளதா என்பது குறித்து எனக்குத் தெரியாது என்றார்.

    யுபி நிறுவனத்தின் துணைத் தலைவரான பிரகாஷ் மிர்பூரி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் டிவிக்கு விளம்பரம் தந்த வகையில்தான் யுபி குரூப் நிறுவனம் பணம் கொடுத்துள்ளது. இதுதவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கும் எங்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இல்லை. இது தொடர்பாக சிபிஐ எங்களிடம் தொடர்பு கொண்டால், விளக்கம் தருவோம் என்று கூறியுள்ளார்.

    விஜயகாந்த் மகனுக்கு சீட்டு கிடையாதா? லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள்!

    தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் பிரபாகரன், +2 தேர்வில் 1200க்கு 585 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் பட்டய படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார்


    பிரபாகரனின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கல்லூரி நிர்வாகம் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. இதையடுத்து தேமுதிக நிர்வாகிகள் கல்லூரி முதல்வர் அருட்தந்தை போனிபஸ் ஜெயராஜை சந்தித்து, இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் விளக்கம் அளிக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    கல்லூரிக்குள் புகுந்து முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சினிமா துறையில் நுழைய ஆசைப்பட்ட பிரபாகரன், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த ஆசையில் பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன்ஸ் படிக்க ஆசைப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    என்ஜினீயரிங் தரவரிசைப் பட்டியல்: திருச்சி மாணவி திவ்யா முதலிடம்; சென்னை மாணவர் சுரேஷ்பால்ராஜ் 3-வது இடம்!


    என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பொது “கவுன்சிலிங்” சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.  
     
    ஒரே மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான “ரேண்டம்” எண் கடந்த 20-ந்தேதி வெளியிடப்பட்டது. இன்று தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார். ரேங்க் பட்டியல் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது.
     
    பின்னர் அமைச்சர் பழனியப்பன், ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 “கட்-ஆப்” மார்க் எடுத்த மாணவ- மாணவிகளின் பட்டியலையும், படங்களையும் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  
     
    இந்த ஆண்டு என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேருவதற்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 355 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 109 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், 3,492 பேர் கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள்.
     
    விண்ணப்பித்தவர்களில் “கட்-ஆப்” மார்க் அடிப்படையில் திருச்சி திருவெறும்பூர் பிரகாஷ் நகர் மாணவி திவ்யா முதல் இடம் பிடித்துள்ளார்.   ராசிபுரம் யோகபரசுகன் 2-வது இடம் பிடித்திருக்கிறார். பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.
     
    சென்னை நன்மங்கலத்தை சேர்ந்த சுரேஷ்பால்ராஜ் 3-வது இடம் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் ஒதுக்கீட்டில் இவருக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
     
    சின்னசேலம் ஹரிநிவாஸ் 4-வது இடமும், ஈரோடு பவானி அகிலா 5-வது இடமும், நாமக்கல் ஜீவிதா 6-வது இடமும், அரூர் விக்னேஷ் 7-வது இடமும் பெற்றுள்ளனர். சென்னை மடிப்பாக்கம் மகாலெட்சுமி 8-வது இடம், சிவகாசி ஆகாஷ் 9-வது இடம், நாமக்கல் அபிநயா 10-வது இடம், கோவை கள்ளப்பாளையம் கவுதம் பிரகாஷ் 11-வது இடம், பெருந்துறை சபீதா 12-வது இடம், நாமக்கல் அருண்பிரசாத் 13-வது இடம், சிவகங்கை கல்லல் சிதம்பரம் 14-வது இடம், கோவை கே.கே.புதூர் அர்ச்சனா 15-வது இடம், மோகனூர் பூவிழி 16-வது இடம் பெற்றுள்ளனர்.
     
    இதுதவிர ஈரோடு விக்னேஷ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டி யலில் முதல் இடமும், ஒட்டுமொத்த ரேங்க் பட்டியலில் 29-வது இடமும் பிடித்திருக்கிறார்.
     
    ஈரோடு ஷானாபீர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவில் முதல் இடமும் ஒட்டுமொத்த ரேங்க் பட்டியலில் 44-வது இடத்தை யும் பிடித்துள்ளார். மொத்தம் 18 பேர் 200-க்கு 200 “கட்-ஆப்” மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
     
    தாழ்த்தப்பட்ட பிரிவில் பெரம்பலூர் செல்வபிரபாத் 199.75 “கட்-ஆப்” மதிப்பெண்கள் பெற்று அந்த பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவில் திருச்செங்கோடு நவீனா 199.50 எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
     
    பழங்குடியினர் பிரிவில் நாமக்கல் கொல்லிமலை வேலவன் 197.75 “கட்-ஆப்” மார்க் வாங்கி அந்த பிரிவில் முதல் இடத்துக்கு வந்திருக்கிறார். 

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...