தமிழகத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை. ஆனால் மத்திய அரசோ இதை கொள்ளவில்லை. இதற்கு எதிராக இலங்கையுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இலங்கைப் பொருட்களை பயன்படுத்துவதை கைவிட வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள தமிழர் பண்பாட்டு நடுவம் முயற்சிகளை மேற்கொண்டது. தமிழகத்தில் பல கடைகளில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிஸ்கட், பழங்கங்கள், இறைச்சி, பருத்டி ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.