|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 January, 2012

விசா கட்டுப்பாட்டை எதிர்த்து உக்ரைன் பெண்கள் போராட்டம்!










இந்திய தூதரகம் உக்ரைன் நாட்டுப் பெண்களுக்கு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளைக் கண்டித்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலக கட்டடத்தில் ஏறி மேலாடைகளைக் கழற்றி விட்டு நான்கு உக்ரைன் பெண்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்களது மேலாடைகளைக் கழற்றி விட்டு இவர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இவர்கள் பெமென் எனப்படும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மத்திய ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் இளம் பெண்களுக்கு விசா கட்டுப்பாடுகளை இந்தியா அறிவித்துள்ளது. செக்ஸ் சுற்றுலா, விபச்சாரம் மற்றும் இளம் பெண்கள் கடத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில், 15 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை இந்தியத் தூதரகம் விதித்துள்ளது. இதைக் கண்டித்தே இந்த நூதனப் போராட்டம்நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும் மேலாடையின்றி, உக்ரைன் பெண்கள் விபச்சாரிகள் அல்ல என்ற பேனர்களை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். இந்திய தேசியக் கொடியையும் அவர்களில் ஒருவர் கையில் ஏந்திப் பிடித்திருந்தார்.

போராட்டம் நடத்திய பெண்கள் கூறுகையில், இந்திய தூதரகத்தின் விசா கட்டுப்பாட்டைப் பார்த்தால் ஏதோ உக்ரைன் நாட்டுப் பெண்கள் எல்லோருமே விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் என்ற கருத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கண்டனத்துக்குரியது என்று அவர்கள் கூறினர்.இந்தப் பெண்கள் ஏற்கனவே இதுபோல பலமுறை நிர்வாணப் போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இதற்கு முன்பு, இத்தாலி பிரதமராக இருந்த சில்வியோ பெர்லுஸ்கோனியின் செக்ஸ் லீலைகளைக் கண்டித்து இத்தாலி நாட்டுத் தூதரகம் முன்பு நிர்வாணப் போராட்டம் நடத்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் படுகொலைக்கு உதவிவிட்டு இப்போது பள்ளிக்கூடம் கட்டுகிறார்களாம்-வைகோ


இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது என்றும். அரசியல் சட்டத் திருத்ததை இலங்கையிடம் வலியுறுத்தியதாகக் கூறி தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுலத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்யும், கோரமான தமிழ் இனப்படுகொலையை இலங்கையின் ராஜபக்சே அரசு செய்தது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008ம் ஆண்டிலும், 2009 மே 18 வரையிலும், ஈழத்தமிழ் மக்கள், வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே, சிங்கள விமானப்படை குண்டுவீச்சாலும், பீரங்கி தாக்குதலாலும் கொல்லப்பட்டனர்.  சிங்கள அரசு செய்த கொலை பாதகக் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்றும், மனித உரிமைகள் அழிக்கப்பட்டதற்கு ஐ.நா. மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் ஜெனீவாவின் மனித உரிமைக் கவுன்சிலில் எடுத்த முயற்சியை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தோற்கடித்து, சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை மூடி மறைக்க உதவியாகச் செயல்பட்டன.  இலங்கையில் போரின்போது சிங்கள ராணுவம் நடத்திய குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் அறிந்து ஆய்வு செய்து அறிக்கை தர, மார்சுகி தாரிஸ்மன், யாஸ்மின் சுகா, ஸ்டீவன் ராட்னர் ஆகிய மூவர் குழுவை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அறிவித்தார்.  அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த ராஜபக்சே அரசு, உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக, essons Learned and Reconciliation Council-LLRC என்ற ஒரு கமிஷனை தானே அறிவித்துக் கொண்டது.  முழுக்க முழுக்க பொய்களைக் கொண்ட 388 பக்கங்கள் கொண்ட அந்தக் கமிசன் அறிக்கையை, கடந்த டிசம்பர் 16ம் தேதி வெளியிட்டது. குறிப்பாக, ஐ.நா. மன்றத்தின் மூவர் குழு அறிக்கை, ஆதாரங்களோடு வெளியிட்ட, சிங்கள ராணுவத்தின் இனக்கொலைக் குற்றங்களை, சிங்கள அரசின் கமிசன் மூடி மறைத்து விட்டது.  சிங்கள ராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டுவீசித் தாக்கியதற்கு ஆதாரங்கள் இருப்பதால், அதை மறுக்க வழியின்றி, விடுதலைப் புலிகள் மீது பழியைச் சுமத்தி உள்ளது. ஈழத்தமிழ் இளைஞர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில், அம்மணமாக இழுத்துச் செல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதையும், இசைப்பிரியா எனும் தமிழ் நங்கை, ராணுவத்தினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டதையும், இத்தகைய பல்வேறு சம்பவங்களைப் பற்றி, ஒரு வரி கூட அந்த அறிக்கையில் இல்லை.  எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில், சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. ராணுவ சிப்பாய்கள் உடன் இருந்து மிரட்டிய நிலையிலேயே சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.  திட்டமிட்டே இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, உலகின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத்தான், தானே மோசடியாக கமிசனை நியமித்து, விசாரணை நாடகத்தை நடத்தி, அறிக்கையும் தந்து விட்டது.  

உலகின் பல்வேறு நாடுகள், மனித உரிமை அமைப்புகள், இந்த அறிக்கையைக் கண்டித்துள்ளன.  எனவே, சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக் குற்றத்தை, முழுமையாக உலக அரங்குக்குத் தெரியப்படுத்தவும், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் ராஜபக்சே அரசை நிறுத்தித் தண்டிக்கவும், ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும், நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குரிய சுதந்திரமான விசாரணை, தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா. மூவர் குழு, ஏற்கனவே தெரிவித்து உள்ளது.  இந்திய அரசுதான் போரை நடத்த உதவியது என்றும், இயக்கியது என்றும், அதனால்தான் புலிகளைத் தோற்கடித்தோம் என்றும், சிங்கள அதிபர் ராஜபக்சேவும் அமைச்சர்களும் இலங்கை நாடாளுமன்றத்திலேயே கூறினர். ஈழத்தமிழ் இனக்கொலையின் கூட்டுக்குற்றவாளிதான் இந்திய அரசு ஆகும்.  2009 மே மாதத்துக்குப் பின்னரும், தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளிலேயே சிங்கள அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழர் தாயகத்தில், சிங்கள ராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு உள்ளன. தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, கற்பழிப்பது போன்ற அக்கிரமங்களில் சிங்கள ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களிலும் சிங்கள ராணுவம் அதிகாரம் செலுத்துகிறது. தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை எல்லாம் அழித்து வருகிறது. பௌத்த விகாரைகளைத் தமிழர் பகுதிகளில் அமைக்கிறது.  உண்மைகளை வெளியே சொல்ல, ஈழத்தமிழர்கள் அஞ்சுகின்ற அபாயத்தில் உள்ளனர். உலக நாடுகள், சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை அறிந்து வருவதாலும், எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடும் என்பதாலும், இந்திய அரசு திட்டமிட்டு, சிங்கள அரசுக்கு உதவுகின்ற வேலையில் தற்போது ஈடுபட்டு உள்ளது.  2006ம் ஆண்டு செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறுமிகள், சிங்கள விமானக் குண்டுவீச்சால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத இந்திய அரசு, சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றதைக் கண்டிக்காத இந்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களான நான்கு தமிழர்கள் நடு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டிக்காத இந்திய அரசு, லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது.  தமிழர் தாயகம் என்பதே கிடையாது என்றும், சிங்கள மொழிதான் ஆட்சி மொழி என்றும், சிங்களவர்களுக்கு அடங்கித்தான் தமிழர்கள் வாழ வேண்டும் என்றும் சொல்லிவிட்ட ராஜபக்சேவிடம், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிரூஷ்ணா இப்போது பேசி விட்டதாகவும், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை வலியுறுத்தியதாகவும் கூறி இருப்பது, தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றுவதற்காக, இந்திய அரசு செய்கின்ற பித்தலாட்ட வேலை ஆகும்.  தமிழக மீனவர்கள் மீது இனி சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தாது, என்று தன்னிடம் சிங்கள அரசு உறுதி அளித்ததாக கூறிய இந்திய அமைச்சர் கிருஷ்ணா முகத்தில் சிங்கள அரசு மூன்று நாட்களுக்குள் கரியைப் பூசிவிட்டது. நேற்றும், ராமேஸ்வரம் அருகில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியுள்ளது.  சிங்கள அரசும், இந்திய அரசும் செய்கின்ற மாய்மால வேலைகளை முறியடித்து, ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு ஆகும் என்பதை நிலைநாட்டவும், ஈழத்தமிழர்கள் மத்தியில் அதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும், உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் உறுதி பூண வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ. 

Mounaragam


Engeyum Epodhum (2011) Tamil Movie Watch Online Free


KAAVALAN ... TAMIL MOVIE


Paiya - Tamil Movie


மங்கத்தா ... MOVIE ONLINE


இதே நாள்...

  •  தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)
  •  பேடன் பவல், சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)
  •  ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம், லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)
  •  முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)
  •  இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ரத்த தானம்!


 ரத்த தானத்தை வலியுறுத்தி, திருமணக் கோலத்தில், புதுமணத் தம்பதியினர் ரத்த தானம் செய்தனர். புதுச்சேரி, உப்பளம் நேத்தாஜி நகரில் வசிக்கும் வேணுகோபால் மகன் தசரதன், 35; இவர் புதுச்சேரி போலீஸ் கண்காணிப்பு அலுவலகத்தில், எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், ஆக்கனூர் பாளையத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகளான உமா, 24, என்பவருக்கும், நேற்று காலை, கடலூர், திருவந்திபுரத்தில் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் இருவரும், திருமணக் கோலத்தில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு,  வந்தனர். ரத்தவங்கி தலைவர் டாக்டர் மணி முன்னிலையில், புதுமணத் தம்பதியினர் ரத்த தானம் செய்தனர். மணமக்கள் இருவரும் மருத்துவமனைக்கு வந்து, ரத்த தானம் வழங்கியதை, டாக்டர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர். மணமக்களுடன் வந்திருந்த உறவினர்கள் இருவர், ரத்ததானம் செய்தனர்.

மணமகன் கூறியதாவது: திருமணத்திற்கு முன்பே எடுத்த முடிவின்படி, ரத்த தானம் செய்தோம். மேலும், இரு வாரத்திற்கு முன், இருவரும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டோம். திருமணத்திற்குப் பிறகு, ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்காகவும், வாரிசுகளுக்கு ரத்த சம்பந்தமாக ஏற்படும் உடல் சீர்கேட்டைத் தடுக்கும் பொருட்டும், முழு உடல் பரிசோதனை செய்து கொண்டோம்.இருவரும் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய, சென்னையிலுள்ள மோகன் பவுண்டேஷனில், பெயர்களைப் பதிவு செய்துள்ளோம். ரத்ததானம், உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான், இருவரும் திருமணத்தின் போதே இந்த இரண்டையும் கடைபிடித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தடை நாட்கள் அதிகரிப்பு....?

 தமிழகத்தில், "டாஸ்மாக்' மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) ஆண்டுக்கு, 5 நாட்கள் தடை செய்யப்படும். விற்பனையில்லா நாட்களாக பாவித்து (ட்ரை டே) இத்தடை மேற்கொள்ளப்படும். இந்தாண்டு இத்தடை, 8 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜன., 16 திருவள்ளுவர் தினம், ஜன., 26 குடியரசு தினம், பிப்.,5 நபிகள் நாயகம் பிறந்த தினம், ஏப்.,5 மகாவீரர் ஜெயந்தி, மே 1 தொழிலாளர் தினம், ஆக., 15 சுதந்திர தினம், அக்., 2 காந்தி ஜெயந்தி, அக்., 5 வள்ளலார் பிறந்த தினம் ஆகிய நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும்.

மதுரை சிறையில் சிறைக்கைதியை சந்திக்க நேருவுக்கு அனுமதி மறுப்பு

மதுரை சிறையில், ஜெயிலர் அறையில் "குண்டாஸ்' கைதியை சந்திக்க தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகரும், நேரு ஆதரவாளருமான விஜய் என்ற காஜாமலை, சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் இருந்த இவர், இடநெருக்கடி காரணமாக, ஜன., 13ல், மதுரைக்கு இடம் மாற்றப்பட்டார். இன்று காலை 11.20 மணிக்கு இவரை சந்திக்க நேருவும், திருச்சி முன்னாள் துணை மேயர் அன்பழகனும் சிறைக்கு வந்தனர். ஜெயிலர் அறையில் காஜாமலையை சந்திக்க விரும்பினர். அமைச்சராகவும், வேறு அரசு பொறுப்பில் இல்லாததாலும், சிறை விதிகளை காரணம் காட்டி, ஜெயிலர் அறையில் சந்திக்க அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் கைதிகள், உறவினர்கள் சந்திக்கும் வழக்கமான இடத்தில், காஜாமலையை, நேரு 7 நிமிடங்கள் சந்தித்தார்.

புதிய அபராத கட்டணம், சென்னையில் வரும் 30ம் தேதி முதல்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய அபராத கட்டணம், சென்னையில் வரும் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் நடக்கும் விபத்துகளுக்கு முக்கிய காரணம், வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்கள் தான். விதிமீறல்கள் நிகழும் போது, போக்குவரத்து போலீசார் அந்த வாகனங்களைப் பிடித்து அபராதத் தொகை விதிக்கின்றனர். விதிமீறல்களின் அடிப்படையில் இந்த அபராதத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. முன்னதாக, 50 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையில், மீறல்களுக்கு ஏற்ற வகையில் இருந்த அபராத கட்டணத்தை, தற்போது 100 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் என மாற்றி அமைத்துள்ளனர். இதற்கான அரசாணை, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய போக்குவரத்து விதிமீறல் கட்டணம், சென்னை பெருநகரில் வரும் 30ம் தேதி முதல் அமலாகிறது. முன்னதாக, கட்டணம் ஒருமுறை விதி மீறினால் விதிக்கப்படும் கட்டணமே, அடுத்தடுத்த முறை சிக்கினாலும் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் முறை மாட்டினால் விதிக்கப்படும் கட்டணத்தின் இரு மடங்கிற்கு மேலாக, அடுத்தடுத்த முறைகளில் கட்டணம் விதிக்கப்படுகிறது.

அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும்...

சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில், தங்களின் 

பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் 

சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் 

மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் 

கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது 

மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.... முதலுதவி அளித்த 

பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்... தயவு செய்து இந்த 

செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....அது 

அனைவருக்கும் உதவியாக இருக்கும்...ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக 

இருக்கலாம்...நாகரீகமென்ற அநாகரீகம்

"நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் பொதுமக்கள் படுத்துத் தூங்கும் நிலை!


நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் பொதுமக்கள் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. வீடுகள் இல்லாத மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தற்காலிக தங்கும் வசதிகளை, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும்'என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வீடுகள் இல்லாத ஏழை மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தங்குமிட வசதி அமைத்துத் தருவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வட கிழக்கு மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில், தற்போது கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இந்த கடும் குளிரிலும், வீடுகள் இல்லாத ஏழை மக்கள், திறந்தவெளிகளிலும், நடைபாதைகளிலும் படுத்துத் தூங்குவது, கவலை அளிக்கிறது. வசிப்பிடம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஏழை மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர், இமாச்சல், உத்தரகண்ட், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உ.பி., பீகார் உள்ளிட்ட மாநில அரசுகள், இதுபோன்ற வீடுகள் இல்லாத மக்களுக்கு, இரவு நேரங்களில் தங்குவதற்கு தற்காலிகமான கூரை வசதிகளுடன் கூடிய வசதியை அமைத்துத் தர வேண்டும். மூன்று வாரங்களுக்குள் இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும். ஏழை மக்களை பாதுகாப்பதைத் தவிர, மாநில அரசுகளுக்கு வேறு எதுவும் முக்கியப் பணி இல்லை. நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நாகரிக உலகில், பொதுமக்கள் தூங்குவதற்கு இடமில்லாமல், நடைபாதைகளில் படுத்துத் தூங்குவது என்பது, கவலைக்குரிய விஷயம். இந்த விஷயத்தில், மேற்கு வங்க மாநில அரசு, சரியாக செயல்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த விஷயத்தை முதல்வரிடம் எடுத்துக் கூற வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை, அடுத்த மாதம் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்த தமிழக அரசின் உத்தரவு ரத்து ஐகோர்ட் .

மக்கள் நலப்பணியாளர்களை பணிநீக்கம் செய்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரைவும் உடனே பணியில் சேர்க்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் 8ஆம் தேதி 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்களின் இரண்டு சங்கங்களும் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...