ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
02 February, 2017
புடிங்கிய ஆணிகள் போதும்!
நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக மட்டுமே பேசுவோம்..மற்ற மக்கள் பிரச்சனைக்கெல்லாம் நாங்கள் போராட மாட்டோம் ..நம்மை ஆளும் முதல்வரும் ,பிரதமரும் தெய்வ பிறவிகள் அவர்களை பற்றி பேசுவது ஒரு பாவச்செயல்.. அவர்களை பற்றி பேசினால் அது முறையா ? நுரையா? என்று பிதற்றுபவர்களெல்லாம் எல்லாம் தேசியவாதிகள் நீயூட்ரலாக பேசுகிறவர்களாம்..
சீமான் ,கோவன் ,திருமுருகன் காந்தி , கவுதமன் இவர்கள் வேறு வேறு இயக்கமாக இருந்தாலும் ஆளும் அரசுகள் செய்யும் மக்களை விரோத போக்கை தைரியமா தட்டி கெட்டவர்கள் ..அதற்காக பலமுறை சிறை சென்றவர்கள் ...இவர்களுக்கு அரசு தேச துரோக பட்டம் கட்டத்தான் செய்யும்...அரசு சொல்கிற அதே குரலை நீ எதுக்கு சொல்ற??? இன்றைக்கு கூட லாரன்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தீ வைத்தது மாணவர்கள் இல்லை..மக்களும் இல்லை என்று மொட்டையா சொல்லி விட்டு நகர்கிறார் ..https://www.youtube.com/watch?v=G17znB3VnMU&spfreload=10 ..இந்த நால்வர்தான் காரணம் என்ற தொனியில் பேசிவிட்டு நகர்கிறார் ..காவல் துறைதான் காவல்நிலையத்திற்கு தீ வைத்தது ..அரசு தான் இதற்கு காரணம் என்று சொல்ல தைரியம் இல்லை ..நீயெல்லாம் என்ன நடுநிலை வாதி ..உன்ன மாதிரி நடுநிலைவாதிகள் புடிங்கிய ஆணிகள் போதும் லாரன்ஸ் ..நீ அரசியலுக்கு வந்து எண்ணத்தை கிழிக்க போற ..கிளம்புங்க உங்க நடுநிலையை ஆந்திர பக்கம் போய் காட்டுங்க
Subscribe to:
Posts (Atom)