|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2013

எங்கள் மக்களைக் கொல்வதற்கு எங்கள் வரிப்பணம் !



சிங்கள பௌத்த இனவெறி அரசு, ஈழத் தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்ததை ஐ.நா. செயலாளர் அமைத்த மூவர் குழு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. சேனல்-4 உள்ளிட்ட அனைத்துலக முன்னணி ஊடகங்கள் இதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. இவை அனைத்தும் உலகம் முழுவதிலும் பேசப்பட்டாலும், 7 கோடித் தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டை ஆளும் இந்திய அரசு, ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழ்ப் பொதுமக்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்ட கொடுமையை இனப்படுகொலை என்று இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை தமிழீழப் படுகொலையை “இனப்படுகொலை” என்று தீர்மனம் இயற்ற முடியாது என காங்கிரசு ஆட்சி மட்டுமல்ல, நடுவண் அரசில் இல்லாத பா.ச.க., சமாஜ்வாதி கட்சி, பகுசன் சமாஜ் கட்சி, ஐக்கிய சனதா தளம், திரிணமுல் காங்கிரசு,  சி.பி. எம். உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கூறியுள்ளன.

இந்தியத் தேசியக் கட்டமைப்பில், தமிழ் இனத்திற்கு எதிராக செயல்புரிவதில் இடது சாரி, வலதுசாரி என்று வேறுபாடில்லை. பார்ப்பன - இந்துத்துவாக் கட்சி, பிற்படுத்தப்பட்டோர் கட்சி, தாழ்த்தப்பட்டோர் கட்சி என்ற மாறுபாடில்லை. இந்திய தேசிய அரசியல் தலைமை அனைத்தும் தமிழினப் புறக்கணிப்பில் ஒரே சிந்தனை கொண்டுள்ளன. 2008-2009 இல் இலங்கை அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரில் இந்திய அரசும் பங்கு கொண்டது போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்ற பெயரில் இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு வலுவற்ற தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன்மொழி ந்தது. மன்மோகன் - சோனியா ஆட்சி அத்தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்யும் திருத்தங்களைச் செய்து இராசபட்சே கும்பல் மீது துரும்பும் படாமல் பாதுகாத்துள்ளது.

அரபிக் கடலில் இரண்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, இத்தாலியுடன் தூதரக உறவையே முறித்துக் கொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளது இந்தியா. ஆனால், நாதியற்ற 600 தமிழ் மீனவர்களைச் சிங்களப்படை சுட்டுக் கொன்றதற்கு ஒரு கைது கிடையாது. ஒரு வழக்கு கிடையாது.இத்தனைக்குப் பிறகும் இந்தியாவுக்கு நாம் ஏன் வரிகொடுக்க வேண்டும்? நம் பணத்தைக் கொண்டு நம் இனத்தை அழிக்க ஆயுதம் வாங்கவா? என்ற கேள்வி தமிழர்கள் மனதில் பூதாகரமாக இந்நிலையில் எழுந்துள்ளது.  

முதல் சாதனை பெண்கள்



அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலம் மலையேறி தற்போது, பெண்கள் இடம்பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு காணலாம்.

சில முக்கியத் துறைகளில் முதல் இடம் பிடித்த பெண்களின் பட்டியல் இது...

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் - அன்னி பெசன்ட்
மௌன்ட் எவரெஸ்ட்டில் முதல் முறையாக ஏறிய பெண் - பச்சேந்திரி பால்
மௌன்ட் எவரெஸ்ட்டில் இரண்டு முறை ஏறி சாதனை படைத்த பெண் - சந்தோஷ் யாதவ்
இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி. முத்தம்மா
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
முதன் முதலாக  ஞானபீட விருது பெற்றவர் - ஆஷ்பூர்ணா தேவி
முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் - இந்திரா காந்தி
முதன் முதலாக நோபல் பரிசு பெற்றவர் - அன்னை தெரசா
ஆங்கிலக் கால்வாயை முதன் முதலாக நீந்தி கடந்த பெண் - ஆர்த்தி சாஹா
இந்தியாவில் அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் - நிர்ஜா பனோட்
இந்தியாவில் முதல் ஐபிஎஸ் அதிகாரி - கிரண் பேடி
இந்தியாவில் முதல் பெண் ஏர் வைஸ் மார்ஷல் - பி. பண்டோபாத்யாயா
இந்திய உச்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - குமாரி எம்.  பாதிமா பீவி
உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - லீலா சேத் (ஹிமாச்சல்)
முதல் பெண் நீதிபதி - அண்ணா சாண்டி
முதல் பெண் வழக்குரைஞர் - கார்நெலியா சொராப்ஜி
முதல் பெண் முதலமைச்சர் - சுசீதா கிரிபாலனி
ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் வென்ற இந்திய பெண் - கமலிஜித் சாந்து
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் - கர்ணம் மல்லேஸ்வரி (2000)
முதல் பெண் விமானி - சுசாமா
முதல் பெண் தபால் நிலைய தலைமை அதிகாரி - கன்வால் வர்மா
கிரிக்கெட் விளையாட்டில் முதல் பெண் நடுவர் - அஞ்சலி ராஜகோபால்
ஆங்கிலப் படையுடன் போரிட்டு வென்ற பெண் - ராணி வேலு நாச்சியார்
புக்கர் விருது பெற்ற இந்தியப் பெண் - அருந்ததி ராய்
இராணுவத்தில் பதக்கம் பெற்ற முதல் பெண் - பீம்லா தேவி
உலக அழகி பட்டம் வென்ற முதல் இந்திய பெண் - ரெய்தா பரியா
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்
இதுபோன்று முக்கியத் துறைகளில் இடம்பிடித்த முதல் பெண்கள் என்ற பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கும். அவ்வளவையும் தொகுக்க முடியாமல் இங்கு ஒரு சில முக்கியத் துறைகளை மட்டும்..

தமிழர்களுக்கு கொடுமை.. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் ராணி எலிசபெத்!



இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இங்கிலாந்து ராணி எலிசபெத் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இங்கிலாந்து ராணி பங்கேற்கமாட்டார் என்பது பெரும்பாலும் உறுதியாகி விட்டதாக லண்டனில் உள்ள காமன்வெல்த் அமைப்பின் செயலகத்தின் பெயர் வெளியிடாத மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கி கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கனடா பிரதமர் இந்த மாநாட்டை புறக்கணிக்க உள்ள நிலையில், பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்ரேலியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என திமுக, அதிமுகவும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் இங்கிலாந்து ராணி பங்கேற்காவிட்டால் அது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு முக்கியமான பின்னடைவாக அமையும். இந் நிலையில் இந்த மாநாட்டையே மொரீசியசுக்கு மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


6 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு இவ்ளோ தான் இழப்பு?



தமிழக சட்டசபையில் சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 மாத காலத்துக்கு 'எம்.எல்.ஏ' என்ற தகுதியை இழக்கின்றனர். இதனால் அவர்கள் இழக்கும் சலுகைகள் என்ன தெரியுமா? 
சம்பளம் ரூ50 ஆயிரம்,
 தமிழக எம்.எல்.ஏக்களுக்கான சம்பளம் - ரூ.8,000,
 ஈட்டுப்படி - ரூ.7,000, 
டெலிபோன் படி - ரூ.5,000, 
தொகுப்பு படி - ரூ.2,500, 
தொகுதி படி - ரூ.5,000, 
தபால் படி - ரூ.2,500, 
வாகனப்படி - ரூ.20,000 என மொத்தம் ரூ50 ஆயிரம். 
 பயண சலுகைகள் எம்.எல்.ஏ. விடுதி வாடகை ரூ.250, பயணப்படி -
 ரெயிலில் ஏ.சி. இரண்டு அடுக்கு பெட்டிக்கான கட்டணம், தினப்படி - ரூ.500, தமிழகம் முழுவதும் இலவச பஸ் பாஸ். துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம், 
வீட்டில் ஒரு டெலிபோன். எம்.எல்.ஏ. விடுதியில் ஒரு டெலிபோன், எம்.எல்.ஏ. குடியிருப்பில் மாதம் ரூ.250 வாடகையில் ஒரு வீடு. (அல்லது) விடுதி வாடகை ஒரு நாளைக்கு 2 ரூபாய் 50 பைசா மட்டும்.
 சிகிச்சை சலுகைகள், இதுமட்டுமின்றி அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, 
வெளிச்சந்தையில் வாங்கும் மருந்துகளுக்கான தொகையை திரும்ப பெறலாம், 
பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு சில நிபந்தனைகளுடன் நிதி உதவி.,
அனைத்து புத்தகங்களுடன் கூடிய பிரமாண்டமான சட்டசபை நூலகத்தை பயன்படுத்தலாம், 
ஒரு உதவியாளர் உண்டு, 
நோட்டு, பேனா, பென்சில், கவர் உள்ளிட்ட எழுதுபொருட்கள் இலவசம், எம்.எல்.ஏ. விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்காக பிரத்யேக ரயில் டிக்கெட் கணினி முன்பதிவு மையம், 
ரயில் நிலையத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு ஆண்டுக்கு 2 தவணையாக ரூ.20,000, 
நிவாரண உதவிகள் இறந்தால் ரூ.2 லட்சம், எம்.எல்.ஏ.வுக்கு எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் வசதி, இறந்த எம்.எல்.ஏ. குடும்பத்திற்கு குடும்பப்படி மாதம் ரூ.1,000, சட்டப்பூர்வ வாரிசுக்கு மொத்த தொகையாக ரூ.2 லட்சம் தரப்படும். இறந்த எம்.எல்.ஏ.வின் சட்டப்பூர்வ வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.5,000 கிடைக்கும் ஆனால் தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கும் இத்தனை சலுகைகளும்  ஆறு மாதம் கிடைக்க வழியில்லையாம்!!


சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!


தமிழ் நாட்டில் கடையைபோட்டு சிங்களவனுக்கு வியாபாரம்! இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனம் சிங்களத்தில் நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த கடைகளில் பலவகையான சிங்கள பொருட்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருட்களை வாங்க வருகிறார்கள். அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்களின் வசதிக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது. தமிழில் கொடுத்தது போய் இப்போது சிங்களத்தில் கொடுப்பது தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் எந்த தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களை சிங்கள மொழியிலேயே அச்சடித்து சிங்கள மக்களை கவர்ந்து வருகிறது சரவணா நிர்வாகம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...