|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 September, 2011

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புன்னகை !

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். அது நூறுசதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள், பலர். இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது, சிரிப்பு. வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றிருக்கையில் ஏன் வாய் மூடி இருக்கவேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி; மருந்துகளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள், கூறியிருக்கின்றார்கள். காரணம், சிரிப்பு என்னும் மருந்தே நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு.

உடம்பில் நோய் எதிர்ப்பு என்னும் சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிப்பைக் கேட்டால் வெள்ளை அணுக்கள்அதிக அளவில் உற்பத்தியாகின்றன. உடம்பிலுள்ள நரம்புகள் ஒரு வகையான ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சிரிக்கும் போது அந்த ரசாயனம் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது. மேலும், நாம் சிரிக்கும்போது, மூக்கிலுள்ள சளியில் ‘இம்யூனோகுளோபுலின்&ஏ’ என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால், பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது.

ரத்தம் தூய்மையாகும்: ரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிப்பதானாலேயே மாரடைப்பு மற்றும் இதயநோய்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அபாயகரமான நோய்கள் தோன்றாதிருக்க வேண்டுமானால், நாள் தோறும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது, சிரித்துப்பழகவேண்டும். நகைச்சுவைப் படங்கள், வசனங்கள், கதைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றைக் கேட்டு சிரிக்க வேண்டும்.

சிரிப்பினால், ரத்தம் தூய்மையாகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது. சிரிப்பினால், ‘என்சிபேலின்ஸ்’ என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அது தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது. ஸெப்டிக் அல்சர் என்னும் இரைப்பைப் புண் குணமாகிறது. மூளை நரம்புகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகின்றன. எனவே, நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயிலிருந்து விடுபடவும் சிரித்துப் பழகுங்கள்.

அதிகரிக்கும் நட்பு வட்டம்; சிரிப்பில் பலவகை இருந்தாலும் மகிழ்ச்சிக்காகச் சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு. நகைச்சுவைக்காகவும் பிறரைக் கேலி செய்வதற்காகவும் சிரிப்பு பயன்படுகிறது. சிலரது நகைச்சுவை, சிந்தனையை தூண்டக்கூடியதாகவும் அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். சிலரது நகைச்சுவைப் பொருள் பொதிந்ததாகவும் இருக்கும். பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவையினால் ஏற்படக்கூடிய சிரிப்பு மனத்துக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின் சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத் தருகிறது. நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு பலமாக இருக்கும்

புன்னகையால் மலரும் மனம்: புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல உடல் நலத்துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம். சிரிப்பினால், உடல் நலம் பெறும். சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால், இந்த உலகம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை கண்கூடாக காணலாம்.

மனத்துக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டுந்தான். அந்தச் சிரிப்பு மருந்து கசப்போ புளிப்போ உவர்ப்போ கார்ப்போ துவர்ப்போ இல்லை. சிரிப்புக்கு என்றிருப்பதும் ஒரே சுவை. அது இனிப்பு. இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா? சிரியுங்கள். சிரிக்கச்சிரிக்க மலரும் தாமரை போல், மனம் மலர்ந்து மணம் வீசத் தொடங்கும் என்பது நிதர்சனமான உண்மை

பெண்களின் நோய் தீர்க்கும் உத்தமகன்னிகை!

உத்தா மணியிலையா லும் வயிற்றுக் குன்மமொடுகுத்தாம் வலியும் குளிரும்போம்-பற்றிதுதியதன்று சொறிசிரங்குந் தொல்லுலகில் நாளும்புதியன் மூலின் புகல்.'என்று வேலிப்பருத்தி பற்றி சங்க இலக்கிய பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தாமணி என்றும் உத்தமகன்னிகை என்றும் அழைக்கப்படும் வேலிப்பருத்தி செடியானது தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளரும் தன்மை கொண்டது. பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள் காணப்படும். இதன் இலை,வேர் முதலியன மருத்துவ பயன் கொண்டவை.

இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும். நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

பெண்களுக்கு அருமருந்து: உரிய வயதடைந்தும் பெண்கள் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உட்கொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.

பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும். இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது. இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.

வேலிப்பருத்தி இலைச் சாறு: குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும். பூவரசு இலைச்சாற்றில் மிளகை ஊறவைத்து அதனை காயவைத்து அரைத்து தேனில் கலந்து கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளும் குணமாகும். உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.

வாதநோய் குணமாகும் : இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி முதலியன குணமாகும்.

இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம்,பொடித்துக் காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் 40, 50 நாள்களில் குணமாக்கலாம். கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும். இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும். காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம். வேலிப்பருத்தி இலையானது கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகும்

இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும். 5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, வாயு பிடிப்பு முதலியவை போகும்.

தொழுநோயை குணமாக்கும் பூவரசு!

மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.

காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.

சருமநோய்களை குணமாக்கும்: பூவரசு இலைகளை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும். இதன் பழுப்பு இலையை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறிசிரங்கு, கரப்பான்,ஊரல், அரிப்பு குணப்படும்.

பூவரசனது வயிற்றுப்புழுக்களைக் கொன்று நம் உடலைத் தூய்மையாக்கி உடலை உரமாக்கும் தன்மை உடையது. பூவரசங்காயிலிருந்து முறைப்படி எடுக்கப்படும் எண்ணெய் பெருவயிறு, வயிற்றுப்புண் இவைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்தால் இலேசான பசபசப்புடன் மஞ்சள் நிற சாறு வரும். இதை முகத்திலுள்ள கறுப்புப் பகுதிகள், செயின் உராய்வதால் உண்டான கறுத்த பகுதிகளில் தடவினால் கருமை மாறும். மஞ்சள் நிறமுள்ள பாலை தோலின் மீது தடவினால் எச்சில்தழும்புகள் மாறும். மூட்டு வீக்கங்களுக்கு பூச வீக்கம் கரையும். பூவரசம் பட்டை எண்ணெயினால் வெள்ளை நோயும், சரும நோயும் நீங்கும்.

பூவரசங்காய்களை உடைத்தால் மஞ்சள் நிறமான ஒரு திரவம் கசியும். இதனை எடுத்து அடிபட்ட காயங்கள், விஷக்கடிகள், சரும நோய்களான படர்தாமரை, செதில்படை, சிரங்கு இவைகளுக்குத் தடவி வர இளிதில் குணம் கிடைக்கும்.

தொழுநோய் குணமாகும்: பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பரங்கிப் பட்டை சேர்த்து செய்த சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை உட்கொள்ள நாள்பட்ட தொழு நோய் தீரும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.

காணாக்கடி போன்ற பூச்சிக்கடிகளுக்கு பூவரசு மரப்பட்டை 210 கிராம் எடுத்து இடித்து ஒரு சட்டியிலிட்டு, 1400 மி.லி. நீர் விட்டுக் காய்ச்சி மூன்றில் ஒன்றாக வற்றியபின் வடிகட்டி, தினமும் இரண்டு வேளை அருந்தி வந்தால் காணாக் கடி விஷம், பாண்டு, சோகை, பெருவயிறு முதலிய நோய்கள் குணமாகும்.

வெள்ளைப்படுதல் குணமாகும்: வெண்குஷ்ட நோயால் உதட்டில் ஏற்பட்ட வெண்புள்ளிகளைப் போக்க பூவரசின் முதிர்ந்த பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றினை வாயிலிட்டு அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். இது போல் பல தினங்கள் கொப்பளித்து வரவேண்டும். அந்தச் சாற்றை விழுங்கி விட்டால் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

வெள்ளைப் படுதல் நோய் ஏற்படும் பெண்களுக்கு, பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை தேவையான அளவு உள்ளுக்குக் கொடுக்க நோய் குணமாகும்.

கருத்தரிப்பதை தடை செய்யும் 
‘ நூறாண்டு சென்றதொரு நுண் பூவரசம் வேர்
நூறாண்டு குட்டைத் தொலைக்குங்காண்-வீறிப்
பழுத்த இலை, விதை, பூ, பட்டை இவை கண்டால்
புழுத்த புண் விரேசனமும் போம்.’ என்று பூவரச மரம் பற்றி பழம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 ஆண்டுகள் சென்ற மரத்தின் காய், பூ, பட்டை ஆகியவற்றைச் சம அளவு பொடித்துக் காலை, மாலை 1 தேக்கரண்டி நீண்ட நாள் சாப்பிட்டுவரத் தோல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

குழந்தை பேற்றினை தள்ளிப்போட விரும்புபவர்கள் பூவரசன் பட்டைத்தூள் 100 கிராம், சீமைக்காசிக்கட்டி 100 கிராம், இந்துப்பு 100 கிராம், சேர்த்து அரைத்து கருத்தடைக்காக இதனைச் சாப்பிடலாம். புதிதாக திருமணமான பெண்கள் மாத விலக்கான நாள் முதல் ஏழு நாள் 10 கிராம் அளவு வெந்நீரில் குடிக்கவும். ஏழு நாளும் பால், மோர், மிளகு ரசம், பருப்புத் துவையல் மட்டும் சாப்பிடவும். நல்லெண்ணெயில் தலை முழுகவும். இதனால் கருப்பை சுருங்கிவிடும்.. ஒரு வருடம் வரை கருத்தரிக்காது இது நல்ல கருத்தடை முறை. கருப்பைக் கோளாறுகளை நீக்கும். ஆண்களுக்கு ஆண்மையை வலுப்படுத்தும். மூலக்கிருமிகளை அழிக்கும்.

மஞ்சள் காமாலை குணமடையும்: கல்லீரலின் பலவீனம்தான் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம். பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும். இது மஞ்சள் காமாலை நோயை அறவே நெருங்க விடாமல் உடலை பாதுகாக்கும்.

மேக நோய்க்கு மருந்து: உடல் கிருமிகளை அழிக்க வல்ல சக்தி கொண்டது பூவரசு என்று அகத்தியர் கூறியுள்ளார். இதன் காயை இடித்து சாறு எடுத்தால் பசபசப்புடன் பால் இருக்கும். இது மேக நோய்களை போக்க சிறந்த மருந்தாகும். இது சித்தர்கள் கண்ட அனுபவ மருந்தாகும்.

சொறி, சிறங்கு குணமாகும்: நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.
பூவரசம் வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி 50 மி.லி.யுடன் 10 மி.லி. ஆமணக்கு எண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க பேதியாகும். பேதி நிற்க மோர் குடிக்கவும். இதனால் சொறி, சிறங்கு, படை நோய்கள் குணமாகும்.

தேக்கு, கோங்கு போன்ற மரங்கள் வரிசையில் சிறந்த மரம் இந்த பூவரசு மரம். இம் மரம் வீட்டு ஜன்னல்கள், கதவுகள் செய்வதற்கும், மரச்சாமான்கள் செய்வதற்கும் ஏற்றவை. இம் மரங்களை வீட்டு உபயோகத்துக்காகவும், ஏனைய பயன்பாட்டுக்காகவும் வெட்டியவர்கள், அதை வளர்க்க முன்வரவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்த இந்த மரம் தற்போது காண்பதற்கு அரிதாக மாறிவிட்டது. தற்போது கிராமப்புறங்களில் இந்த பூவரச மரம் காண்பதே அரிதாகிவிட்டது

ஆயில் புல்லிங் பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்!

ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.

நிரூபிக்கப்பட்ட உண்மை: நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

வலி நிவாரணி: தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.

எப்படி செய்வது ஆயில் புல்லிங்: காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.

விடியற்காலையே சிறந்தது: உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

நாளொன்றுக்கு மூன்று முறை: எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.

ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.

உங்களுடைய மேக்கப் சாதனங்களை பிறருடன் பரிமாற வேண்டாம்!


மேக்அப் இல்லாமல் இன்றைக்கு யாரும் வெளியில் செல்வதில்லை. விருந்து உள்ளிட்ட விழாக்களுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ எங்கு சென்றாலும் மேக் அப் என்பது அவசியமானதாகிவிட்டது. ரெடிமேடாக மேக் அப் சாதனங்களை பைகளில் வைத்திருக்கும் மங்கையர்கள் ஒருவருக்கொருவர் மேக் அப் சாதனங்களை பரிமாறிக்கொள்வதில் ஆபத்து அதிகம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் தோலியல் நிபுணர்கள்.

காம்பாக்ட் ஸ்பான்ச், ஐ லைனர், மஸ்கரா ப்ரஸ், போன்றவற்றை ஒருவர் பயன்படுத்தியதை மற்றவர் பயன்படுத்துவது முகத்தில் உள்ள தோலை பாதிக்கும் என்று நிமிஷா திவாரி என்பவர் எழுதிய நூலில் தெரிவித்துள்ளார்

நுண்கிருமிகள் பாதிப்புமும்பை போன்ற பணிச்சூழல் நிறைந்த வாழ்க்கையில் மேக்அப் என்பவது அவசியமானதாக உள்ளது. அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் மேக் அப் பொருட்களை லிப்ஸ்டிக், கண்மை பென்சில், உள்ளிட்டவற்றை ஒருவருக்கொருவர் உபயோகித்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அது தவறு என்கின்றனர். இதன் மூலம் கண்ணுக்குப்புலப்படாத நுண்கிருமிகள் பரவி தோலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் நிமிஷாதிவாரி.

அலர்ஜியை தவிர்ப்போம்மேக் அப் ப்ரஸ் மூலம் தோலை பாதிக்கும் பாக்டீரியா ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் என்கிறார் பிரபல தோலியல் நிபுணர் ரஷ்மி ஷெட்டி. ஏனெனில் மூடப்பட்ட நிலையில் இருக்கும் மேக் அப் சாதனங்கள் அனைத்திலும் எளிதில் கிருமிகள் புகுந்த நன்கு வளரவாய்ப்புதாக ரஷ்மி தெரிவிக்கின்றார்.

மிகவும் இலேசான தோலை உடைய முகத்திற்கு முகப்பூச்சுக்களை பயன்படுத்தும் போது இந்த பாக்டீரியாக்கள் முகத்தை பாதித்து பருக்கள் மற்றும் அலர்ஜி ஏற்பட காரணமாகின்றன. எனவே ஒருவருடைய பொருளை மற்றொருவர் உபயோகிக்காமல் இருப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள். கூடுமானவரை லிப்ஸ்டிக், ஐ லைனர் போன்றவைகளை தரமானவையாக வாங்கி உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் தோலியல் நிபுணர்கள். அதற்கென உள்ள பிரத்யேக கடைகளில் மட்டுமே அவற்றை வாங்கி உபயோகிக்க வேண்டும்.

காலாவதி சாதனங்கள்மேக்அப் சாதனங்களை வாங்கும் போது உபயோகிக்கும் தேதி பார்த்து வாங்குவது அவசியம். ஏனெனில் காலாவதியான மேக்அப் சாதனங்கள் முகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றார் மருத்துவர் விதுலா படீல். காலாவதியான கண்மையினை உபயோகிக்கும் போது கண்ணுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் அவர். அதுபோல மேக் அப் சாதனங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் உதடு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார் விதுலா.

தினந்தோறும் மேக் அப் சாதனங்களை உபயோகிப்பவர்கள் அதனை எளிதில் காற்றுப்புகாத நன்றாக மூடப்பட்ட பாக்ஸ்களில் மட்டுமே வைத்துக்கொள்ளவேண்டும் அப்பொழுதுதான் அதில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் புகுவதை தடுப்பதோடு முகத்திற்கும் பாதுகாப்பானதாக இருக்கும் என்கின்றனர் தோலியல் நிபுணர்கள். எனவே முகத்திற்கு பயன்படுத்தும் மேக் சாதனங்களை ஒருவர் கைப்பட உபயோகித்து பாதுகாப்பாக வைப்பதில்தான் முகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 கன்றுகள்!



ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. ஆனால் துணைவி ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால்தான் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி என்று முன்னாள் அமெரிக்கத் துணைத் தூதர் டென்னிஸ் ஹாப்பர், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்தத் தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருந்த டென்னிஸ் ஹாப்பர் அனுப்பிய கேபிளில், மூத்த காங்கிரஸ் உறுப்பினர் சிவப்பிரகாசம் என்பவர் தன்னிடம் பேசியது குறித்த தகவல்களை வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளார்.

அதில் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் சற்றும் பொருத்தமில்லாதவர். அவர் ஒரு மோசமான பிரதமராக இருப்பார். அவர் அடிப்படையில் ஒரு அதிகாரி. விலைவாசிப் பிரச்சினையால் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

மேலும் பிரகாசம் கூறுகையில், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் பதவிக்கு போட்டியிட தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அர்ஜூன் சிங், கருணாநிதியைக் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் அதற்கு கருணாநிதி ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக சோனியா காந்தி பிரதமராக விரும்புவதாக கூறினார் என்றார்.

அதேபோல தனது மகள் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வருவதில் கருணாநிதிக்கு விருப்பம் இல்லை என்றும், அவருடைய தாயார் ராஜாத்தி அம்மாளின் தொடர் வற்புறுத்தல் காரணமாகவே கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி சீட்டை கருணாநிதி கொடுத்ததாகவும் சிவப்பிரகாசம் கூறியுள்ளார்.

முதல் மனைவியான தயாளு அம்மாளின் இரு மகன்களான அழகிரி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் செல்வாக்கோடு இருப்பதைப் பொறுக்க முடியாமல்தான் மகள் கனிமொழியை அரசியலுக்கு கொண்டு வர ராஜாத்தி அம்மாள் துடித்ததாகவும் சிவப்பிரகாசம் கூறியதாக ஹாப்பர் தனது கேபிளில் கூறியிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...