அது என்னமோ தெரியலை இன்றைய தேதிக்கு சூப்பர் ஸ்டாரைப்பத்தி தெரியாதவங்க
கூட,பவர் ஸ்டாரைப்பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம்.,
யார்,எவ்வளவு கேவலமாக கிண்டல் செய்தாலும் தாங்கிக்கொள்ளும் குணமாகத்தான்
இருக்கவேண்டும்.அவர் நடித்து வெளியாகியுள்ள ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ படம்
ஒரு லட்சம் நாட்கள் ஒடவேண்டி அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள
போஸ்டர்.போஸ்டரின் ஒவ்வொரு வாசகமுமே காமெடிதான்
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
15 January, 2013
. கொலை,கொள்ளை, பாலியல். வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்?
இந்தியாவில் 2011ம் ஆண்டு மட்டும் 18 வயதை பூர்த்தியடையாத 33000 மைனர் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம். ஒருவன் 18 வயதை பூர்த்தியடையாதவன் என்ற காரணத்தினாலேயே தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பிவிடுகிறான். கொலையோ, கொள்ளையோ, பாலியல் வன்முறையோ இப்போது பதினாறு வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர்தான் அதிகம் ஈடுபடுகின்றனர். ஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அதேபோல் காம இச்சையை தீர்த்துக்கொள்ள பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். மைனர் குற்றவாளிகள் இன்றைக்கு பெருகிவருகின்றனர். இதனால் குற்றச்செயல்களுக்கு தண்டனை தருவதற்காக மேஜர் வயதை 18ல் இருந்து 16ஆக குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில்,"'மைனர்கள் எனப் படும் சிறார்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாகவே மிகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், 2011ல் மட்டும் 16லிருந்து 18 வயதுக்குட்பட்ட 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலானவை கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள்தான் அதிகம். நாடுமுழுவதும் 1,419, பாலியல் பலாத்கார வழக்குகள் மைனர் குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் இது போன்ற சிறார்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.என்று மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் இது போன்ற சிறார்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.என்று மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)