|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 December, 2011

வீடுகளில் சந்தனமரம் வளர்க்க அரசு அனுமதி தேவையில்லை வனத்துறை...

உலகத்தில் எங்த மண்ணிலும் விளையாத அறிய வாசானை திரவியமான “சாந்து” என்று இலக்கியங்களில் சொல்லப்படும், சந்தனமரம் தமிழகம் மற்றும் கர்நாடகத்திலும் இனைந்துள்ள மலைப்பகுதிகளில் மட்டுமே விளைகிறது. அதுவும் குறிப்பாக சேலம், தருமபுரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் தான் அதிகம் விளைகிறது.முன்பெல்லாம் தமிழகத்தின் சவ்வதுமலை, கவராயன் மலை, கொல்லிமலை போன்ற பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் மிகுதியாக காணப்பட்ட சந்தனமரம், வாசனை எண்ணை, மற்றும் கலைப்பொருட்கள் செய்வதற்காக சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்தி செல்லப்பட்டு விட்டதாலும்,

வனத்துறையின் சார்பில் காடுகளில் தேவையான அளவுக்கு மரக்கன்றுகளை நடவு செய்யாததாலும், தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களை அவர்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் அந்த மரங்கள் அரசுக்கே சொந்தம் என்று வனத்துறையினர் வெட்டிக் கொண்டு போனதாலும் தமிழகத்தில் இப்போது சந்தனமரங்களை கண்ணால் பார்ப்பதே அரிதாகி விட்டது.சந்தனமரங்களுக்கு தட்டுப்பாடு வந்தவுடன் தனியார் நிலங்களிலும், அரசு அனுமதியோடு சந்தன மரம் வளர்க்கலாம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு தமிழக வனத்துறை அறிவித்தது... இப்படி வளர்ந்த மரங்களை வெட்டி பக்கத்தில் உள்ள அரசு மரக்கிடங்கில் வைத்து ஏலம் விடப்படும் என்றும், ஏலத்தில் கிடைக்கும் தொகையில் நில உரிமையாளர்களுக்கு 47.5 விழுக்காடும், மீதியை அரசும் எடுத்துக்கொள்ளும் என்றும் அறிவித்தது.

இப்படி வீடுகளில், கல்வி நிறுவனங்கள், மற்றும் தொழிற்ச்சாலைகள் போன்ற இடங்களில் வளர்க்கும் சந்தன மரங்களுக்கு வனத்துறையிடம் அனுமதியும் பெற தேவையில்லை, முதிர்ந்த பின்னர் நீங்கள் வெட்டி வனத்துறையிடம் கொடுங்கள் நாகல விற்கும் விலையில் உங்களுக்கு உரிய பங்கை கொடுத்துவிடுகிறோம் என்று அறிவித்துள்ளார்கள். தரமான சந்தன நாற்றுகள் சேலம் வணச்சரகத்தில் 14 ரூபாய் விலையில் பொதுமக்களுக்கு வழங்குகிறோம் தேவையானவர்கள் வாங்கி வீடுகளில் சந்தன மரம் வளருங்கள் என்று அறிவித்துள்ளனர்.

தொடர்புக்கு- சேலம் மாவட்ட வண அலுவலர். தொலைபேசி-0427 2415097.

ஆனாலும், விவசாயிகள் யாரும் சந்தன மரம் வளர்க்க முன்வரவில்லை. இதற்க்கு காரணம், விவசாயிகள் காடு தோட்டங்களில் வளர்க்கும் சந்தன மரங்களை திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் இரவில் புகுந்து மரத்தை வெட்டி கொண்டுபோய் விடுகிறார்கள். சில இடங்களில் இப்படி நடந்த மோதல்களில் உயிரிழப்புகள் கூட ஏற்ப்பட்டுள்ளது.


இப்போது நான்கு முதிர்ந்த சந்தனமரத்தின் கட்டை சராசரியாக கிலோ 7500 முதல் 9000 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை மதிப்பு மிக்க இந்த அறிய பொக்கிசத்தை வளர்க்க பொதுமக்கள் பலரும் பயப்படுவதால், இப்போது தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் வீடுகளில் சந்தனமரம் வளருங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேசிய விருதை கவுரவமாக நினைக்கக்கூடாது; முகத்தில் வீசி எறிய வேண்டும் தங்கர்பச்சான்.

சென்னையில் ‘கொள்ளைக்காரன்’ பட விழாவில் இயக்குநர்கள் செல்வமணி, தங்கர்பச்சான், அமீர், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.விழாவில் தங்கர்பச்சான், ’’தமிழன் எப்படி வஞ்சிக்கப்படுகிறானோ?  அதே மாதிரி தமிழ் சினிமாவும் புறக் கணிக்கப்படுகிறது.    தேசிய விருதை நாம் கவுரவமாக நினைத்துக்கொள்ளக்கூடாது.   மத்திய அரசு நமக்கு கொடுத்திருக்கும் தேசிய விருதுகளை நாம் தூக்கி வீசுவோம். எனக்கு அப்படி ஒரு  விருது கொடுத்திருந்தால், முகத்தில் வீசி எறிந்திருப்பேன்.   என்றைக்கு காவேரி பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ?  என்றைக்கு முல்லைப்பெரியாறு பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ?  என்றைக்கு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படுகிறதோ?  அன்றைக்கு வாங்கிக்கொள்வோம் தேசிய விருதுகளை’’ என்று ஆவேசமாக பேசினார். அவர் மேலும்,   ‘’டெல்லியில்தான் நம்மை மதிக்கமாட்டேங்கிறார்கள்.  நம்மை நாமே ஒதுக்கி வைப்பதுதான் வேதனை. சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அனைவராலும் பாராட்டப்பெற்ற தென்மேற்கு பருவக்காற்று, செங்கடல் படங்கள் தேர்வாகவில்லை’’ என்று பேசினார்.

சென்னை சர்வதேச பட விழாவில் 12 தமிழ் படங்கள்...

9வது ஆண்டு சென்னை சர்வதேச பட விழா சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.செய்தி ஒளி பரப்பு துறை செயலாளர் ராஜாராம், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இந்தி பட இயக்குனர் சேகர் கபூர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவர் டி.ஜி.தியாகராஜன், பிலிம்சேம்பர் செயலாளர்கள் ஆனந்தா எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, இந்தோ சினி அப்ரிசியேஷன் தலைவர் கண்ணன், துணை தலைவர் ராமகிருஷ்ணன், செய லாளர் தங்கராஜ், நடிகர்கள் பார்த்திபன், கணேஷ் வெங்கட்ராம், நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், ரோகிணி, பாத்திமாபாபு, அபர்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

முன்னதாக நடிகைகள் கார்த்திகா, தன்ஷிகா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.ட விழா வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. 9 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் 50 நாடுகளை சேர்ந்த 153 படங்கள் திரையிடப்படுகின்றன. சத்யம், உட்லண்ட்ஸ், உட்லண்ட் சிம்பொனி, ஐநாக்ஸ், பிலிம்சேம்பர் ஆகிய தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.இவ்விழாவில் போட்டி பிரிவில் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’, விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன. நடுவர்களாக பிரதாப்போதன், ரோகிணி, மதன் உள்ளனர். இந்த விழாவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட இரு நாடுகளும் தீர்மான வரம்பிற்குள் வரவில்லை. கியோட்டோ உடன்பாட்டிலிருந்து கனடா விலகல்!

வி வெப்பமடைவதைத் தடுப்பதற்காக ஜப்பானின் கியோட்டோ நகரில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டிலிருந்து விலகுவதாக கனடா அறிவித்துள்ளது.கரியமில வாயு வெளியேற்றுவதைக் குறைப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி கியோட்டோவில் 1997-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட இரு நாடுகளும் இந்த மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மான வரம்பிற்குள் வரவில்லை. எனவே உடன்பாட்டிலிருந்து விலகுவதாக கனடா அறிவித்துள்ளது.கனடாவின் விலகல் தீர்மானத்தை அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் பீட்டர் கென்ட் முறைப்படி வெளியிட்டார்.தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இம்மாநாட்டில் 194 நாடுகள் பங்கேற்றன. அப்போது கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன. மாநாடு முடிவடைந்த இரண்டே நாளில் கியோட்டோ உடன்பாட்டிலிருந்து விலகுவதாக கனடா அறிவித்துள்ளது. கியோட்டோ உடன்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அதிலிருந்து விலக முடிவு செய்யப்பட்டதாக கென்ட் அறிவித்தார். இப்போது டர்பனில் எட்டப்பட்ட தீர்மானத்தின்படி நடக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். டர்பன் தீர்மானத்தை பின்பற்ற முக்கிய நாடுகள் முன்வந்துள்ளதாக அவர் கூறினார். இந்த வார தொடக்கத்தில் உலக அளவில் கரியமில வாயுவை 30 சதவீத அளவுக்கு வெளியேற்றும் நாடுகள் கியோட்டோ உடன்பாட்டு பட்டியலில் இடம்பெற்றிருந்தன. அதில் கனடா விலகியதால் இந்த அளவு 13 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது.அமெரிக்காவும், சீனாவும் கியோட்டோ உடன்பாட்டு வரம்புக்குள் வராததால், இந்த உடன்படிக்கை சரிவர செயல்படுத்தப்படாது என்பதாலேயே இதிலிருந்து விலக கனடா முடிவு செய்ததாக கென்ட் அறிவித்தார். சர்வதேச அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் கனடாவின் பங்கு 2 சதவீதமாகும். இருப்பினும் சர்வதேச அளவில் இந்த உடன்படிக்கையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டதாக கென்ட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச போலீஸ் விசாரிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் இலங்கை...

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது ராணுவம் மனித உரிமையை மீறியதா என்பதை சர்வதேச போலீஸ் விசாரிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.இதை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெய்ரீஸ் புதன்கிழமை தெரிவித்தார்.மேலும் அவர் கூறியது: இலங்கை ராணுவத்தின் மீது எழுந்துள்ள புகார் உள்நாட்டு விவகாரம். இதில் எந்த ஒரு அன்னிய நாடும் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம்.புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின் போது மனித உரிமை மீறப்பட்டதா என்பது குறித்து உள்நாட்டு விசாரணை நடத்தப்படாது. சர்வதேச போலீஸ் விசாரணை என்ற பேச்சுக்கும் இடமில்லை என்றார்.இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது அப்பாவி மக்களை கொன்று குவித்து மனித உரிமையை ராணுவம் மீறியதாக ஐ.நா. குழு குற்றம்சுமத்தியது. அதுகுறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு பரிந்துரை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹிக்ஸ் போஸான் எனும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன...

அணுவுக்கு நிறையைத் தரக்கூடியவை என்று கருதப்படும் ஹிக்ஸ் போஸான் எனும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதற்கான அறிகுறிகளை தாம் கண்டறிந்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள செர்ன் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவற்றை தெய்வீகத் துகள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.எனினும், இது குறித்த இறுதியான ஆதாரத்தை வழங்குவதற்கு தாம் இன்னமும் சில கூடுதல் ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.நுண்துகள்களை சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் உள்ள ஒரு சுரங்கத்தில் பெரும் வேகத்துடன் முடுக்கிவிட்டு அவற்றை மோதச் செய்து லார்ஜ் ஹட்ரன் கொலைடரை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் தாகூர் சிலை...

கழ்பெற்ற இலக்கிய எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்தரநாத் தாகூரின் சிலை ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது.சிட்னியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மெக்குயர் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தாகூர் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் இந்திய சார்பில் ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் அமித் தாஸ் குப்தா கலந்து கொண்டார்.பல்கலைக்கழகத்தின் வேந்தர் மைக்கேல் ஏகன், துணைவேந்தர் ஸ்டீவென் ஷ்வார்ட்ஸ், மற்றும் சிட்னியில் உள்ள மேற்குவங்க சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சிட்னியில் உள்ள மேற்குவங்க சங்கத்தின் தலைவர் விஸ்வஜித் குப்தா தாகூர் சிலைக்கு அருகில் புதிய பூங்கா ஒன்றை நிறுவ குறிப்பிட்ட தொகையை சங்கத்தின் சார்பாக பல்கலைக்கழகத்துக்கு வழங்கினார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியாவின் கலாசாரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு "ஏக்தால்' எனப்படும் கல்வித்திட்டம் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ஆராய்ச்சி மற்றும் கலாசாரம் சார்ந்த படிப்புகளில் விரிவுரையாளர்கள் மற்றும் உதவித்தொகை போன்ற செயல்களில் கூட்டுமனப்பான்மையுடன் செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது.தாகூரின் புத்தகம் ஏலம்... தாகூரின் புத்தகம் ஒன்று சுமார் ரூ.8,500,000 க்கு அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. தாகூர் எழுதிய பாடல்கள், கவிதை மற்றும் முக்கியமான வரைவுகள் அடங்கிய புத்தகம் புதன்கிழமை ஏலம் விடப்பட்டது. இந்தப் புத்தகம் சுமார் ரூ.13 கோடிக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்...


சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்: 1. ஒருவரது வயது, 2. பணம் கொடுக்கல் வாங்கல் 3. வீட்டு சச்சரவு, 4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், 5. கணவன்-மனைவி அனுபவங்கள், 6. செய்த தானம், 7. கிடைக்கும் புகழ், 8. சந்தித்த அவமானம், 9. பயன்படுத்திய மந்திரம். இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இதே நாள்...

  • தாய்லாந்து தேசிய விளையாட்டு தினம்
  •  பஹ்ரைன் தேசிய தினம்(1971)
  •  நேபாள அரசியலமைப்பு சட்ட தினம்(1962)
  •  கசக்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
  •  தாய்லாந்து ஐநா.,வில் இணைந்தது(1946)

இந்தியர்களின் தனிநபர் சொத்து மதிப்பு ரூ.86.5 லட்சம் கோடியாக உயர்வு...

2010-11ம் ஆண்டில் இந்தியாவில் தனிநபர்களின் சொத்து மதிப்பு 18 சதவீதம் அதிகரித்து ரூ.86.5 லட்சம் கோடியாக உள்ளது. ஃபிக்சிடு டெபாசிஷிட் மற்றும் பாண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு இந்த ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் 3ல் ஒரு பங்காகும். 2015-16ல் இந்தியாவில் தனிநபர்களின் சொத்த மதிப்பு ரூ.249 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தனிநபர் சொத்து மதிப்பு ரூ.73 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்...

தமிழகத்தில், 2011ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கடந்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய அளவில், குழந்தைகள் பாலின விகிதாசாரப் படி, 31 லட்சம் பெண் கருக்கொலைகள் நடந்திருக்கலாம் என, கணிக்கப் படுகிறது.

"பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம்' என்ற தன்னார்வ நிறுவனம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் படி, தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், பெண் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

14 மாவட்டங்கள்: அதுபோல், தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம், 1,547 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 434 நிலையங்களில், பெண் பிறப்பு விகிதம், 900க்கும் குறைவாக உள்ளது. இயற்கை பெண் பிறப்பு விகிதமான, 952யை விட, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய, 14 மாவட்டங்களில், குறைவாக உள்ளது. இந்த விவரங்கள், கருவிலேயே பெண்கள் கொல்லப் படுவதையே காட்டுகிறது.

காற்றில் பறக்கும் விதிகள்: கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு உள்ளதா எனக் கண்டுபிடிக்க, கருத்தரித்த நான்காவது மாதத்தில், ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனால், சிலர், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என அறிந்து கருவை அழித்து விடுவதாக, புகார்கள் குவிந்தன. பாலின தேர்வை தடை செய்ய 1994ல் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, தமிழகத்தில், 4,060 "ஸ்கேன்' மையங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஸ்கேன் செய்யும் கர்ப்பிணிகளின் விவரங்களைச் சேகரித்து, அதை ஒவ்வொரு மாதமும், மருத்துவ சேவை இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். 50 சதவீத மையங்கள் கூட, சட்டத்தில் உள்ள இத்தகைய விதிகளை முழுமையாக பின்பற்றுவது இல்லை.

நடவடிக்கை இல்லை: சென்னையில் உள்ள பிரபலமான ஸ்கேன் மையம் கூட, இந்த விவரங்களை சேகரிக்கவில்லை. விவரங்களை அனுப்பாதது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகளும் கேட்பதில்லை. சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு, மருத்துவ சேவைகள் இயக்குனரிடம் (டி.எம்.எஸ்.,) கொடுக்கப் பட்டுள்ளது. இப்போது, மாவட்ட கலெக்டர்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால், இதுவரை எந்த கணிசமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. விதியை மீறியதாக தமிழகம் முழுவதும், 73 ஸ்கேன் மையங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உதாரணத்துக்கு, "நீங்கள், கர்ப்பிணி பெண்களுக்கான படிவங்களை சரியாக பராமரிக்க வில்லை என தெரியவந்துள்ளது. உங்கள் குறையை, 30 நாள்களுக்குள் சரி செய்ய வேண்டும்,' என வெறும் கடிதம் மட்டும் வருகிறது; அதோடு சரி. மதுரையில் ஒரு மையம், 6 மாதத்துக்கு மூடப்பட்டு, தற்போது வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.

விதி மீறும் மையங்கள்: கருக் கொலைக்கு எதிரான பிரசார அமைப்பின், மையக் குழு இயக்குனர் ஜீவா கூறியதாவது: பெண் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதன் காரணம் குறித்து அரசும், இதுவரை எந்த ஆய்வும் நடத்தவில்லை. இந்த சட்டத்தை முனைப்பாக அமல்படுத்தும் ஆலோசனை குழு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் இந்தக் குழுவின் கூட்டம், பல மாதங்கள் நடப்பதே இல்லை. இவ்வாறு ஜீவா கூறினார்.

கடும் நடவடிக்கை: சுகாதார துறை அமைச்சர் விஜய்யிடம் இதுகுறித்து கேட்டபோது, ""கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை ரகசியமாக வெளியிடுவதை தடுக்க, ஸ்கேன் மையங்கள் மற்றும் குழந்தை பேறு மருத்துவமனைகள் மீது கண்காணிப்பு அதிகரிக்கப்படும். தவறு செய்யும் ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப் படும்,'' என்றார்.

எடை குறைந்த சிலிண்டர் சப்ளை செய்தால் அபராதம்...

எடை குறைவான காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்த நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.மதுரையில் வீடுகளுக்கு வினியோகம் செய்யும் காஸ் சிலிண்டர்களின் எடை அளவு குறைவாக இருப்பதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.கூடுதல் தொழிலாளர் கமிஷனர் ராஜா, இணைகமிஷனர் ராதாகிருஷ்ண பாண்டியன் ஆலோசனைப்படி, உதவி கமிஷனர் என்.கோவிந்தன் குழுவினர் 38 இடங்களில் சோதனை நடத்தினர். சிலிண்டர்களை எடை போட்டு பார்த்ததில் 12 சிலிண்டர்கள் 300 கிராம் முதல் 1200 கிராம் வரை எடை குறைவாக இருந்தன.இவற்றை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு ரூ. 12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், ""சிலிண்டர்கள் எடை குறைவாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. எடை குறைந்து இருப்பதாக தெரிந்தால், தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தை 0452- 232 4388 ல் தொடர்பு கொள்ளலாம்'' என்றனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...