விடுதலைப்
புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது ராணுவம் மனித உரிமையை மீறியதா
என்பதை சர்வதேச போலீஸ் விசாரிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை
திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.இதை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெய்ரீஸ் புதன்கிழமை தெரிவித்தார்.மேலும்
அவர் கூறியது: இலங்கை ராணுவத்தின் மீது எழுந்துள்ள புகார் உள்நாட்டு
விவகாரம். இதில் எந்த ஒரு அன்னிய நாடும் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம்.புலிகளுக்கு
எதிரான இறுதிக்கட்டப் போரின் போது மனித உரிமை மீறப்பட்டதா என்பது குறித்து
உள்நாட்டு விசாரணை நடத்தப்படாது. சர்வதேச போலீஸ் விசாரணை என்ற
பேச்சுக்கும் இடமில்லை என்றார்.இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப்
போரின் போது அப்பாவி மக்களை கொன்று குவித்து மனித உரிமையை ராணுவம் மீறியதாக
ஐ.நா. குழு குற்றம்சுமத்தியது. அதுகுறித்து சுதந்திரமான விசாரணைக்கு
உத்தரவிட வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு
பரிந்துரை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment