|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 August, 2011

வித்தியாசமான முறையில் அமைந்த ஐ.போன் கவர்!





தனிமையில் வாடுபவர்களுக்காகவே இந்த கை இணைக்கப்பட்ட iPhone உறை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது யப்பானின் டோக்கியோவில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது இந்த கை இணைக்கப்பட்ட போன் உறை. ஐபோன் 4 இல் பயன்படுத்தத்தக்க வகையில் இது ஆக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது நிஜக் கைகளின் அளவிலேயே ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொட்டு உணரும் போது ஓர் நிஜக் கையை ஸ்பர்சிக்கும் உணர்வே ஏற்படுகிறது.

ஆண்,பெண், குழந்தையின் கை வடிவங்களில் வெளிவந்துள்ள இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்துவோர், இந்த உறையில் இணைக்கப்பட்ட கையுடன் கைகோர்த்து பிடித்தமானவர்களுடன் பேசுகையில் அவர்களின் அருகில் இருப்பது போல தாம் உணர்வதாக தெரிவித்தனர். இதன் தயாரிப்பாளர், தனிமையில் வாடுபவர்கள் தாம் பிரிந்திருக்கும் உறவுகளுடன் இந்த உறை இணைக்கப்பட்ட போனில் பேசும் போது தனிமை மறந்து உல்லாசமாக இருப்பதற்காகவே இந்தத் தயாரிப்பு தயாரிக்கப்படுவதாக தெரிவித்தார். இதன் சந்தைப்பெறுமதி 65 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Literally ‘handy’ iPhone cases from Japan’s Strapya World give a little bit of goosebumps.
The Dokkiri Hand Case ‘reaches out’ in three sizes: Male, Female, and Kids.

லைவ் டிவி வசதியுடன் வரும் சாம்சங் கேலக்ஸி!

ஆற்றல் கொண்ட மின்னணு சாதன தயாரிப்பில் புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வரிசை டேப்லெட்களின் பெர்மான்சுக்கு யாரும் கியாரண்டி கொடுக்கவேண்டியதில்லை. இதனால், டேப்லெட் மார்க்கெட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கு இணையாக மார்க்கெட்டை பங்கு போட்டுக்கொண்டுள்ளது சாம்சங்.

இந்நிலையில், மார்க்கெட் பங்களிப்பை தக்கவைக்கும் விதமாக இரண்டு புதிய கேலக்ஸி வரிசை டேப்லெட்களை சாம்சங் விரைவில் அறிமுகப்படுத்துகிறது. மேலும், இந்த புதிய டேப்லெட்கள் வோடபோன் ஒத்துழைப்புடன் இந்தியாவில் அறிமுகமாகின்றன.

கேலக்ஸி-750 மற்றும் கேலக்ஸி-730 என்ற குறியீட்டு பெயர்களில் மார்க்கெட்டை கலக்க வரும் இந்த இரண்டு டேப்லெட்டுகளும் சில வேறுபாடுகளையும், பல பொதுவான அம்சங்களை கொண்டிருக்கும். ஆன்ட்ராய்டு 3.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் கேலக்ஸி-750 ரூ.36,200 விலையில் மார்க்கெட்டிற்கு வருகிறது. இதைவிட சற்று சிறிய 8.9 இஞ்ச் ஸ்கிரீன் கொண்ட கேலக்ஸி-730 டேப்லெட் ரூ.33,990 விலையில் வருகிறது.

16 ஜிபி சேமிக்கும் திறன் கொண்ட இரண்டு போன்களும் 1ஜிபி ரேம், 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி-750யில் 7,000எம்ஏஎச் பேட்டரியும், கேலக்ஸி-730யில் 6,100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் பொருத்தப்பட்டிருக்கும். இதில், லைவ் டிவி வசதி மூலம் 55 டிவி சேனல்களை கண்டு களிக்கலாம்.

தவிர, 17 செய்தித்தாள்கள் மற்றும், இந்திய மொழிகளில் 30,000 புத்தகங்களை படிக்கும் வசதிகளையும் பெற முடியும். அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் இந்த புதிய டேப்லெட்டுகளை அறிமுகம் செய்வதற்கு பல இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டன.

இறுதியில் வோடபோன் நிறுவனம் சாம்சங்கிடமிருந்து இந்த வாய்ப்பை பெற்றுள்ளது. கேலக்ஸி-750 மற்றும் 730 டேப்லெட்டுகள் வோடபோன் நிறுவனம் மூலம் அறிமுகமாகிறது. மேலும், புதிய கேலக்ஸி வரிசை டேப்லெட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள 2ஜிபி தகவல்களை 6 மாதத்திற்குள் இலவசமாக டவுண்லோடு செய்துகொள்வதற்கான சலுகையை வோடபோன் வழங்க உள்ளது.

இந்த மாத இறுதிக்குள் இந்த போன்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட்டில் அதிகம் தேடப்படும் ஆட்டோ நிறுவனங்களில் மாருதி முதலிடம்!

இணையதளங்களில் அதிகம் தேடப்படும் ஆட்டோ நிறுவனங்களில், மாருதி நிறுவனம் முதலிடம் வகிப்பதாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் இணையதள பயன்பாடு குறித்த அறிக்கையை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஆட்டோமொபைல் துறை குறித்து பிரத்யேக அறிக்கையையும் கூகுள் வெளியிட்டுள்ளது. அதில், இணையதளங்களில் அதிகம் தேடப்படும் ஆட்டோ நிறுவனங்களில் மாருதி முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: "இந்திய மக்களால் அதிகம் தேடப்படும் ஆட்டோ நிறுவனங்களில் பட்டியலில் மாருதி முதலிடத்தில் உள்ளது. ஹோண்டா கார் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், ஹூண்டாய் மூன்றாமிடத்திலும் இருக்கின்றன.இதற்கடுத்து, ஜெனரல் மோட்டார்ஸ் நான்காவது இடத்திலும், டாடா மோட்டார்ஸ் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன.

டொயோட்டோ, ஃபோர்டு முறையே ஆறாவது மற்றும் ஏழாவது இடத்திலும், வோக்ஸ்வேகன், ஃபியட் முறையே எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்திலும் இருக்கின்றன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூகுள் இந்தியா நிர்வாக இயக்குனர் ராஜன் ஆனந்தன் கூறுகையில்," "கார் மற்றும் பைக் வாங்குபவர்கள் விலை, வாகனத்தின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தெரிந்துகொள்வதிலும், ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்வது மற்றும் வாங்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கார், பைக் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வதற்காக இன்டர்நெட்டை பயன்படுத்துவோரின் சதவீதம் 84 சதவீதம் வரை அதிகரித்து 110 சதவீதமாக பதிவாகி உள்ளது," என்றார்.

முன்னாள் எஸ்.ஐ.ஓ. மாநில தலைவருக்கு இளம் சாதனையாளர் விருது!

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்.ஐ.ஓ), தமிழக மண்டல முன்னாள் மாநில தலைவர் சகோ. சலீம் M.Sc.,B.ed., PGDSA, அவர்களுக்கு, கோவை சாந்தி ஆசிரமம் சார்பில் இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கோவையில் சமூக சேவை, இஸ்லாமிய சமூகத்தினரிடையே ஆக்கப்பூர்வமான பணி, இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதற்காக அவருக்கு விருது காக பாடுபட்டது ஆகிய பணிகளுக்காக சகோ. சலீம் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

கோவை சாந்தி ஆசிரமத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கலை, இலக்கியம், அரசியல், சமூக சேவை, சுற்றுச்சூழல், சுகாதாரம் போன்ற 25 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சகோ. சலீம் அவர்களுக்கான விருதினை சாந்தி ஆசிரமத்தின் அறங்காவலர்களில் ஒருவரான திரு. ரங்கண்ணா அவர்கள் வழங்கினார். கோவை குமரகுரு கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

25-ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு 2012-ஐ பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் ஆண்டாக அனுஷ்டிக்க இருப்பதாக சாந்தி ஆசிரம நிர்வகாம் அறிவித்துள்ளது. இதையொட்டி சே நோ வயலன்ஸ் டு விமன் (SAY NO VIOLENCE TO WOMEN) என்கிற குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

வெள்ளி விழா காணும் சாந்தி ஆசிரமம் கோவையில் சமூக முன்னேற்ற பணிகளையும், இளம் தலைமுறையினரிடையே சமூக சேவை உணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை உருவாகுவதற்காக பாடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற சலீம் கூறியதாவது, இந்த விருது கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது அகில இந்திய எஸ்.ஐ.ஓ. வின் ஒவ்வொரு ஊழியருக்கும் கிடைத்த விருது. ஏனென்றால் எஸ்.ஐ.ஓ. வின் ஒவ்வொரு ஊழியரும் தேசம் முழுவதும் இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளையே இளம் தலைமுறையினரிடையே செய்து வருகின்றனர். என்னை அடையாளம் கண்டு கொண்டதால் எனக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இது போன்ற விருதினை பெற எஸ்.ஐ.ஓ. வின் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் தகுதியானவர்கள் தான் என்றார்.

சலீம் அவர்கள் கோவை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அவர் கல்வி வழிகாட்டுதல்கள் வழங்கி இருக்கிறார்.

உறவை பலப்படுத்த உதவும் மதனகாமப்பூ

இயற்கையானது உண்ண உணவும் பாதுகாப்பான இருப்பிடத்தையும் அளித்துள்ளது. பழங்களும், காய்கறிகளும் உடலுக்கு எத்தகைய சத்துக்களை தருகின்றனவோ அதுபோல பூக்களும் அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. பூக்களின் அரியவகை மருத்துவக் குணங்களை காணலாம்

தும்பைப் பூ: ஒரு பலம் தும்பைப் பூவை சேகரித்து கால்படி நல்லெண்ணையில் காய்ச்சி வடிகட்டி தலை முழுகினால் தலை தொடர்பான நோய்கள் குணமடையும் மூக்கில் நீர் வடிதல் குணமடையும், தலையில் ஏற்படும் பீணிச நோய் சரியாகும். மூளை சுறுசுறுப்படையும்.

எருக்கம் பூ: எருக்கலைப் பூ, கிராம்பு, மிளகு இவற்றை அரைத்து தினமும் சிறிதளவு மாத்திரை வடிவில் உட்கொள்ள வேண்டும் இதனால் கடுமையான இரைப்பு குணமாகும். இருமல் நோய் தீரும்

வேப்பம் பூ: வேப்பம்பூ, இலுப்பைபூ, சிவனார் வேம்பின் பூ இவற்றை சம அளவு எடுத்து அரைத்து கசாயமாக்கி தினசரி இருவேளை குடித்து வர பித்த பைத்தியம் குணமாகும். அறிவு விருத்தியாகும்.

முல்லைப் பூ: முல்லைப்பூவை தலையில் சூடுவது மட்டுமல்ல அதன் மனத்தை முகர்ந்தாலே மனோ வியாதி குணமடையும். மனத்தெளிவு உண்டாகும். முல்லைப்பூவின் சாறு பிழிந்து அதன்சாறு மூன்று துளி மூக்கில் விட தலைவலி குணமடையும். முல்லைப் பூவை அரைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் உடலில் பூசி குளிக்க சொரி, சிரங்கு போன்றவை குணமடையும். முல்லைப்பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் கருப்பை நோய்களை குணமாக்கும்.

மதனகாமப்பூ: மதனகாமப் பூ, குங்குமப் பூ, மராட்டி மொக்கு இவற்றை சம எடை எடுத்து முருங்கை பூச்சாற்றினால் அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரையாக்கி நிழலில் உலர்த்தி, காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் பசுவின் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் உடல் பலம் உண்டாகும். உறவின் போது விந்து விரைவில் வெளிப்படாது.

எள் பூ: எள்ளின் பூவை பறித்து பல்லில் படாமல் விழுங்கிவிட கண்பார்வை குணமாகும். எத்தனை பூக்களை சாப்பிடுகிறோமோ அத்தனை ஆண்டுகள் கண் வலி வராது. இதனால் கண் ஒளி அதிகரிக்கும். கண்ணில் பூ விழாது.

இலங்கையில் தமிழர் படுகொலை' என்ற வார்த்தைக்குத் தடை!

இந்த நாய்களா துகில் உரித்திருந்தால்தெரிந்து இருக்கும் ! ரோசம்? மானம்? வெக்கம்? ஏன் நமக்கே இல்லாத பொது?  இல்லாட்டி நம்ப தமிழ் நாட்டுல ஒரு காங்கிரஸ் காரன் ஜெய்துருக்கமுடியும்மா ? மலம் தின்னும் நாய்களை நாம் மடியிலே  வைதிருக்கும் பொழுது? 

2009ல் நடந்த போரின்போது இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை குறித்த விவாதம் என்று காலையில் குறிப்பிட்ட லோக்சபா செயலகம், பிற்பகலில் அந்த வார்த்தைகளை அப்படியே தலைகீழாக மாற்றி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்று மாற்றியதால், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்களும், பிற கட்சிகளின் எம்பி்க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலங்கைப் படுகொலை என்று கூறக் கூடவா மத்திய அரசுக்கு தைரியமும், துணிச்சலும் இல்லை என்று எம்.பிக்கள் குமுறியுள்ளனர். நேற்று லோக்சபாவில் எந்தவிவாதமும் நடைபெறவில்லை. ஊழல் புகார்கள் தொடர்பாக பாஜக தலைமையில் நடந்த போராட்டத்தால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இருப்பினும் அவையின் விவாதங்கள் குறித்த பட்டியல் காலையில் வெளியிடப்பட்டது. அதில் 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை மீதான விவாதம் என்ற ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அந்த விவாதத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலுவும், சமாஜ்வாடிக் கட்சி சைலேந்திர குமாரும் இதில் கலந்து கொண்டு பேசுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென பிற்பகலில் இன்னொரு பட்டியல் வெளியானது. அதில், இலங்கையில் தமிழர் மறுவாழ்வு குறித்த இந்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகள் என்று மொட்டையாக அந்த வாசகத்தை மாற்றி விட்டனர். லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. இப்படி மாற்றுமாறுமத்திய அரசிடமிருந்து உத்தரவு வந்ததால்தான் வாசக மாற்றம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இது திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இலங்கைப் படுகொலை என்று கூறக் கூடவா மத்திய அரசுக்குத் தைரியம் இல்லாமல் போய் விட்டது. அப்படி எதற்காக இலங்கைக்கு இந்தியா பயந்து சாக வேண்டு்ம் என்று திமுக உறுப்பினர்கள் சிலர் ஆவேசமாக கேட்டனர்.

மீரா குமாரிடம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பிதான், இலங்கை தொடர்பான விவாத வார்த்தைகளை மாற்றுமாறு நேரில் வலியுறுத்தினாராம். மத்திய அரசும் கூட இதுகுறித்து மீரா குமாரிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர்தான் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இலங்கையிலிருந்து வந்த நாடாளுமன்ற சபாநாயகர் குழுவை வரவேற்று சபாநாயகர் மீரா குமார் முகம் மலர, புன்சிரிப்புடன் வரவேற்று மகிழ்ந்தார். சிங்களக் குழுவின் வருகைக்கு அதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சபாநாயகரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. தமிழக எம்.பிக்களை கடுமையாக அவர் கண்டித்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இலங்கையின் மனம் நோகாத வகையில் அவர் நடந்து கொண்டிருப்பது தமிழக எம்.பிக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் மீரா குமாரின் செயலை நேரடியாக தட்டிக் கேட்க முடியாததால், இலங்கைப் பிரச்சினையை இன்னும் தீவிரமாக லோக்சபாவில் எழுப்புவது, இதற்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவையும் திரட்டுவது என்று தமிழக எம்.பிக்கள் தீர்மானித்துள்ளனராம். லோக்சபாவை முடக்கும் வகையில் அந்தப் பிரச்சினையை எழுப்புவோம் என்றும் தமிழக எம்.பிக்கள் சார்பில் தெரிவிக்கப்ப்டுள்ளது.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கோரிய அதிமுக: இதற்கிடையே, இன்று லோக்சபாவில், கோத்தபயா ராஜபக்சேவின் விஷமப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்க வலியுறுத்தி சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அதிமுக வலியுறுத்தியது. இதுதொடர்பாக அதிமுக தலைவர் தம்பித்துரை கோரிக்கை விடுத்தார். அவருக்கு ஆதரவாக பிற அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

கொளுந்து விட்டு எரியும் கலவரம்- வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழர்கள்

இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் தலைவிரித்தாடும் கலவரத்தைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனராம். லண்டனில் தொடங்கிய கலவரம் இப்போது மான்செஸ்ட்ர், நாட்டிங்காம், பிர்மிங்காம், லிவர்பூல், பிரிஸ்டல் என பல நகரங்களுக்கும் பரவியுள்ளது.

இந்தக் கலவரம் வெடிக்க முதலில் ஒரு காரணம் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது காரணமே இல்லாமல் கலவரம் பரவி வருகிறது. கடைகளையும், வர்த்தக நிறுவனங்களையும் சூறையாடி வருகின்றனர் கலவரக்காரர்கள். இந்த வன்முறைக் கலவரத்தில் சிக்கி 3 ஆசியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக சீக்கியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். வீடுகளை விட்டு வெளியேறாத வகையில் இருந்து கொள்கின்றனர். பல இந்தியர்களுடைய வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதனால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பிற நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் மிகவும் முன்ஜாக்கிரதையாக வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கி்க் கிடக்கின்றனர்.

அலு்வலகங்களுக்குச் செல்வதையும் முடிந்தவரை தவிர்த்து வருகின்றனராம். ஈஸ்ட் ஹாம் பகுதியில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஹரீஷ் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் கூறுகையில், எங்களில் பெரும்பாலானவர்கள் அலுவலகம் செல்லாமல் தவிர்த்து வருகிறோம். சிலர் மட்டும் அலுவலகம் சென்றனர். எங்களது குடும்பத்தினருக்கு அவ்வப்போது போன் செய்து பத்திரமாக இருப்பதைத் தெரிவித்து வருகிறோம். இப்போதைக்கு ஆட்களைக் குறி வைத்து லண்டனில் யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை. கடைகளை மட்டுமே சூறையாடி வருகின்றனர். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இருக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்றார்.

அதேபோல ஈழத் தமிழர்களும் வெளியே நடமாடுவதை முடிந்தவரை தவிர்க்கின்றனர். ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது இங்கிலாந்தில் வசித்து வரும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் லண்டனில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தியதது நினைவிருக்கலாம். அதேபோல ராஜபக்சே லண்டன் வந்தபோதும் அவரை எதிர்த்து விமான நிலையத்தையே கலங்கடித்தனர்.

இந்த நிலையில் தற்போதைய கலவரத்தைப் பயன்படுத்தி சிங்களர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் அல்லது கலவரகக்காரர்களுடன் இணைந்து தாக்கலாம் என்ற சந்தேகம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகவும், வனமுறையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். வெளியே போவதாக இருந்தாலும் கூட மிகுந்த பாதுகாப்புடன் போய் வருகின்றனராம்.

'தலைக்கு மேலே கழுகுகள்...ஏ.கே.கான்!

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ்சுக்கு சிக்கல் வரலாம் என்று கூறியிருந்தேன்.  இதோ.. அது வந்தேவிட்டது. அமெரிக்காவின் கடன் தர வரிசை குறைக்கப்பட்டதையடுத்து உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக பிரான்ஸ் குறித்த பயமும் சேர்ந்து கொண்டு, உலக பொருளாதாரத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் கடன் வாங்கும் தர வரிசையும் AAAவிலிருந்து AA ஆகக் குறைக்கப்படலாம் என்ற அச்சம் பரவிதாலும், பிரான்ஸ் நாட்டின் 2வது மிகப் பெரிய வங்கியான Société Générale வங்கியின் நிதி நிலைமை மோசமாக உள்ளதாகவும், விரைவிலேயே அந்த வங்கி திவால் ஆகலாம் என்றும் புரளி பரவியுள்ளது.

இதையடுத்து ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க பங்குச் சந்தையிலும் இந்த வங்கியின் பங்குகள் பெருமளவு சரிந்தன. மேலும் பிரான்ஸின் தர வரிசை குறைக்கப்படலாம் என்ற தகவலும் பரவியதால் எல்லா சந்தைகளில் வீழ்ச்சி வேகம் பிடித்துள்ளது. ஏற்கனவே கிரீஸ், போர்சுகல், ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளின் பொருளாதாரம் சரிந்து, அடிப்படை செலவுகளுக்கே மற்ற நாடுகளின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. இத்தாலியின் நிதி நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் இந்த நாடுகளின் கடன் சுமை ஐரோப்பாவின் பொது கரன்சியான ஈரோ மீது 'ஏறிவிட்டது'. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் எல்லா சந்தைகளிலுமே நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இந் நிலையில் பிரான்ஸ் குறித்த பயம் நேற்று அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகளை புரட்டி எடுத்துவி்ட்டது. சந்தைகள் சரிந்து, படுத்த பின்னர் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர், மூடிஸ், பிட்ச் ஆகிய உலகின் 3 முன்னணி நிதி நிலை தர நிர்ணய நிறுவனங்களும், பிரான்ஸ் அரசும் விளக்கம் தெரிவித்து அறிக்கை விட்டுள்ளன. அதில், பிரான்ஸின் தர வரிசை தொடர்ந்து AAA நிலையிலேயே இருக்கும்.. அதை தரம் குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அறிவித்துள்ளன.

ஆனால், இந்த விளக்கம் மக்களிடம் (குறிப்பாக, பங்கு சந்தையின் யூக வியாபாரிகள்) போய்ச் சேரும் முன்பாக, அமெரிக்க பங்குச் சந்தையிலும் ஐரோப்பாவிலும் 4% அளவுக்கு பங்குகளின் விலை சரிந்து பல டிரில்லியன் டாலர்கள் காற்றில் கரைந்துவிட்டன. அமெரிக்கா அளவுக்கு இல்லாவிட்டாலும் பிரான்சின் நிதி நிலைமையும் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை. அமெரிக்காவின் தர வரிசையைக் குறைத்த ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. அரசியல் விளையாட்டில் இந்த நிறுவனம் இறங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தான் பிரான்ஸ் விஷயத்தில் அந்த நிறுவனம் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகக் கூறப்படுகிறது.

வரும் 2015ம் ஆண்டில் பிரான்சின் கடன் சுமை அந் நாட்டின் மொத்த உற்பத்தி அளவில் (GDP) 83 சதவீதமாக இருக்கும் என்கிறார்கள். (இப்போது அமெரிக்காவின் கடன் சுமை 95 சதவீதமாக உள்ளது. இதனால் தான் அதன் தரத்தை இறக்கியது ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்). இதை பிரான்ஸ் இப்போதே கட்டுப்படுத்தத் தவறினால், அதுவும் AAAவிலிருந்து AA அல்லது அதற்கும் கீழே தரம் இறக்கப்படலாம். இந்த பயம் தான் ஐரோப்பிய பங்குச் சந்தைகளை அலற வைத்து வருகிறது.

பிரான்சின் Société Générale வங்கியின் முதலீடுகளில் முக்கிய பங்கு வகிப்பது கிரீஸ். இப்போது அந்த நாடு 'திவால் நிலைக்கு' மிக அருகே இருப்பதால், இந்த வங்கியும், இதைச் சார்ந்த மேலும் பல வங்கிகளின் பங்குகளும் சரிந்து கொண்டுள்ளன. இந் நிலையில் தங்கள் வங்கி குறித்து புரளி கிளப்பிவிட்டவர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு பிரான்ஸ் உளவுப் பிரிவினரைக் கேட்டுக் கொண்டுள்ளது Société Générale.

அமெரிக்காவின் தரம் இறக்கப்பட்டதையடுத்து எது உண்மை, எது பொய் என்ற கவலையே இல்லாமல் உலகெங்கும் யூகங்கள் தலைவிரித்தாடி உலக பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகின்றன. (அமெரிக்காவுக்கு) 'அடுத்தது யார்' என்ற கேள்விகளோடு திகிலைப் பரப்பி வருகின்றன. அடுத்தது யாரோ நமக்குத் தெரியாது. ஆனால், பிரான்சின் தலைக்கு மேலே கழுகுகள் பறந்து கொண்டிருக்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

உலகளவில் பங்குச் சந்தைகளில் தொடரும் இந்த பிரச்சனைகளால், இந்திய அரசு தனது பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று காசு பார்க்கும் திட்டத்துக்கு 'பிரேக்' போடும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ. 40,000 கோடி வரை திரட்ட மத்திய அரசு தனக்குத் தானே இலக்கு நிர்ணயித்திருந்தது.
ஆனால், இப்போது பங்குச் சந்தைகள் உள்ள நிலையில் இதில் பாதி அளவு பணத்தைக் கூட அரசால் திரட்ட முடியாது என்கிறார்கள்.

இப்போது, ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் தர வரிசைப்படி இந்தியாவின் ரேங்க் BBB ஆக (குறைந்த முதலீட்டு தரம் கொண்ட சந்தை-Considered lowest investment grade by market participants) உள்ளது. ஆனால் இந்தியா, ஜப்பான், மலேசியா, தைவான், தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் நிதி நிலைமையும் கடன் விகிதமும் திருப்தி அளிக்கவில்லை என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அவற்றின் தர வரிசையும் குறைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

சுத்தம்!

ஜன லோக்பால் சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து,16ந் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் பொது மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அணைக்கும்படி அன்னா ஹசாரே!

ஊழலை எதிர்த்து போராடும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வருகிற 16ந் தேதி அன்று பிரோஷ் ஷா கோட்லா மைதானத் துக்கு அருகே உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்கிறார்.


உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முந்தைய நாளான 15ந் தேதி இரவு 7 மணிக்கு அன்னா ஹசாரே நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். வலிமையான ஜன லோக்பால் சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, அன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் பொது மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அணைக்கும்படி அன்னா ஹசாரே வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

தற்போது நாம் அனுபவித்து வருவது முழுமையான சுதந்திரம் அல்ல. மின் விளக்குகளை அணைக்கும் நேரத்தில் கல்வி அறிவின்மை, வறுமை மற்றும் ஊழலை இந்த நாட்டில் இருந்து அகற்றும் நம்பிக்கை ஒளிக்கீற்றாக, அகல் விளக்குகளை ஏற்றி வைக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த தகவலை ஹசாரே குழுவை சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

பார்க்காமலேயே மலர்ந்த காதல் பர்கமாலே முடிந்து போனது!

 கோவையை அடுத்த கவுண்டம்பாளையத்தை சேந்தவர் சண்முகம். இவரது மகள் காயத்ரி(வயது25). கோவையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திருப்பூரை சேர்ந்தவர் விஜய். கடந்த ஒரு வருடமாக இருவரும் செல்போனிலேயே பேசி காதலை வளர்த்து வந்தனர். தினமும் போனில் பேசிக் கொள்வார்கள்.

அப்போது விஜய் தனது வீட்டு முகவரியை காயத்ரியிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக விஜய் தனது ஆசை காதலியிடம் பேசவில்லை. அவருடைய செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்த காயத்ரி தனது காதலன் கூறிய முகவரியில் சென்று தேடினார்.

அப்போதுதான் அவருக்கு அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. விஜய் விபத்ததில் இறந்து விட்டார் என்பது தான் அந்த தகவல். மனவேதனையில் ஊர் திரும்பிய காயத்ரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து கிடைக்கும் வரை எனது அரசு ஓயாது: ஜெயலலிதா!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று இலங்கை உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை  மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இயற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே விமர்சித்ததால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து 11.8.2011 அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது,


கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மீது  ராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். 

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், இனப் படுகொலையை நடத்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும் என்றும்; இது மட்டுமல்லாமல், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீது, பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபக்சே Headlines Today கூடினயல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருப்பது இலங்கை அரசு தான் செய்த தவற்றை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது. இந்தத் தீர்மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோத்தபய ராஜபக்சே கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 


இந்தோனேஷியாவைச் சேர்ந்த Marzuki Darusman; அமெரிக்காவைச் சேர்ந்த Steven Ratner; தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த Yasmin Sooka ஆகியோர் அடங்கிய, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய, அரசியல் ஆதாயத்திற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை முதலில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும்; மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் பேட்டி அளித்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.

இலங்கை ராணுவத்திற்கும் எல்.டி.டி.ஈ.க்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தையும் அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை குழு,

இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட, குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதியின் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தது; மருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிந்தது; மனிதாபிமானமற்ற முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது;  இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதி வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது; என பல மனிதாபிமானமற்ற பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறிய செயல்களை இலங்கை ராணுவம் நிகழ்த்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.

இது மட்டுமல்லாமல், மிகப் பெரிய ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த பின்னரும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்றும் இந்த வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.


மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் இலங்கை அரசு தடையை உருவாக்கியதாகவும் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து, பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.
அடுத்தபடியாக, இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை கூறி இருக்கிறார் கோத்தபய ராஜபக்சே. கச்சத்தீவிற்கு இதுவரை வந்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகள் இதே காரணத்திற்காக வந்து செல்லும் போது, பயண ஆவணங்களையோ அல்லது நுழை விசைவையோ பெற வேண்டும் என இலங்கை கோராது என்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தும் பொருட்டு, இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்; மற்றும் வலைகளை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. 

மேலும், கோத்தபய ராஜபக்சே, வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தான் தற்போதைய முக்கியப் பணி என்றும்; போர்க் குற்றவாளிகள் என்று தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டி அளித்து இருக்கிறார்.  இலங்கையில் நிலவும் உண்மை நிலவரம் என்னவென்றால், போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவோ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பது தான். 

இவருடைய இந்தப் பேட்டியிலிருந்தே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரிந்து இருக்கிறது; இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.  உண்மையிலேயே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் செய்யவில்லை என்றால், இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்து இருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் தேவையற்ற பேட்டிகளை அளித்து வருவது செய்த தவறை மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை  சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது.  

கோத்தபய ராஜபக்சே, நான் கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இலங்கை தமிழ் சகோதர, சகோதரிகளின் நெஞ்சை பிளக்கும் துயரங்களை அறிந்த சர்வதேச நாடுகள் போர்க்குற்றத்திற்கு இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சூழ்நிலையில், 

“போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அரசியல் ஆதாயத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபய ராஜபசேவுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கு, தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை;  இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை; சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும்; தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு;

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபசேவுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன். 


தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்டம்!

சமீப காலமாக எழுந்து நின்று ஆடிய நில மோசடி தொடர்பான விஷயங்கள் பழமையாகிப்போச்சு. தற்போது தமிழகத்தில் மறைமுகமாக நடந்து வந்த சூதாட்டம் குற்றம் வெளி வரத்துவங்கியிருக்கிறது. இதுதொடர்பாக பலர் பல லட்சங்களை இழந்ததுடன், தங்களுடைய நகைகள் மற்றும் கார்களை இழந்த சோக கதையும் நடந்திருக்கிறது.


பழங்காலத்தில் நடந்த சூதாட்டத்தினால் பாண்டவர்கள் மனைவியை இழந்த கதை கூட உண்டு. இதன் பின்னர் சட்ட நடவடிக்கைகளால் குறையத்துவங்கினாலும், வயல்வெளிகளிலும், கோயில் பிரகாரங்களிலும், வேலைவெட்டி இல்லாதவர்கள், பணத்தை என்ன செய்வது என அறியாதவர்கள் இது போன்று சீட்டாட்டம், சொக்கட்டான் விளையாட்டு, வை ராஜா வை, ரம்மி, என பல வழிகளில் சூதாடி பணத்தை இழந்தனர். பணக்காரர்கள் மத்தியில் இந்த ஆட்டம் கிளப் என்ற போர்வையில் சூதாட்டம் நடக்கிறது என்ற தகவலை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தென் சென்னையில் 21 கிளப்புகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 10 லட்சம் வரை பறிக்கப்பட்டுள்ளது.


திருமங்கலம் கோயில் மரத்தடியில் சூதாட்டம்: திருமங்கலம் ராஜபாளையம் சங்கையன் கோயில் மரத்தடியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம் வருமாறு: குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் ரோந்து சென்ற போது மரத்தடியில் விளையாடுவது தெரிந்தது. இவர்களை பிடித்து விசாரித்ததில் கையில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில். முரளி கிருஷ்ணன்(29), ராஜா (40) , மோகன்ராஜ் ( 20 ) , ஜெயச்சந்திரன் ( 47 ) என்றும் நால்வரும் விருதுநகரை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 22 லட்சம் ரொக்கப்பணமும், 76 பவுன் தங்கநகையும், பொலிரோ என்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.


முதலில் போனில் அழைப்பு வரும்: நீங்கள் பணம் சம்பாதிக்க ஆசையா என்று மனம் குளிர, நெகிழ பேசும் குரல் வரும். பின்னர் எங்கு வரவேண்டும் என்ன சட்ட திட்டம் என்று விளக்கப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி ஆட்டம் துவங்கும். இதில் மயங்கி பலர் பல லட்சம் , நகை, நிலப்பத்திரம் என இழந்துள்ளனர். சென்னையில் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட விவரத்தை போலீசார் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இன்னும் பல மாவட்டங்களில் இது போன்ற சோதனை நடக்கவிருக்கிறது.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, திருச்சி தஞ்சம்மாள் துவக்கப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியை விசாலாட்சி தேர்வு!

தேசிய அளவிலான நல்லாசிரியர் விருதுக்கு, திருச்சி தஞ்சம்மாள் துவக்கப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியை, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருச்சி, சேவாசங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தஞ்சம்மாள் துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 35 ஆண்டாக பணியாற்றும் தலைமை ஆசிரியை விசாலாட்சி, 56.கடந்த 2009ம் ஆண்டு, இவருக்கு மாநில அளவிலான நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய அவருக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில், 15 ஆசிரியர்கள் இவ்விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருச்சி விசாலாட்சியும் ஒருவர். ஆசிரியர் தினமான செப்., 5ம் தேதி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கையால், விருது வாங்க டில்லி செல்ல உள்ளார்.

திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை! இந்த ஆளு கமொடிக்கு அளவே இல்லாம போயிட்டுருக்கு...!!

கடந்த, 49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க.,பொதுக் குழு கூட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில்நடந்தது. பா.ம.க., மாநில தலைவர் மணி தலைமை வகித்தார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: திராவிட கட்சிகளால் தமிழகம் சீரழிந்து விட்டது. இப்போதாவது தனித்து போட்டி என்ற எடுத்துள்ள முடிவில் உறுதியாக இருப்பீர்களா என, என்னிடம் பலர் கேட்கின்றனர். காரிருள் உள்ள வரை, கடல் நீர் இருக்கும் வரை தனித்துப் போட்டி என்ற கொள்கையில் இருப்போம். காங்கிரஸ் தமிழகத்தை சீரழித்து விட்டது. இதை மாற்ற வேண்டும் .காங்கிரஸை ஒழிப்பது தான் திராவிடக் கட்சிகளின் கொள்கை என, 1949ம் ஆண்டில் இருந்து கூறி வந்தவர்கள் கொள்கை அழிந்து விட்டது. எனவே, 49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை. திராவிட கட்சிகளின் ஆட்சியை மாற்ற நம்மால் தான் முடியும். இலவசங்கள், சினிமா, மது கொடுத்து ஏமாற்றி விட்டனர். விவசாயம் அழிந்து விட்டது. திராவிட கட்சிகள் கட்டாய கல்வி, இலவச கல்வி, தரமான கல்வியை அளிக்கவில்லை. இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிடக் கட்சிகளை தூக்கி எறிய வேண்டும். இந்த கட்சி கொடிகளை பார்க்கும் போது இந்த எண்ணம் நமக்கு வர வேண்டும். இப்போது சமச் சீர் கல்வி திட்டம் கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நிறைய மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், சி.பி.எஸ்.சி.,க்கு மாற்றுவதற்கு தயாராகி வருகின்றனர். இப்படி மாற்றினால் இந்த பள்ளிகள் முன் கடுமையான முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழி பாடமாக இருக்க வேண்டும். அனைத்து பாடங்களும் தமிழில் தான் இருக்க வேண்டும். இதை அமுல்படுத்தாத பள்ளிகள் அரசுடமையாக்கப்படும் என இந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த தைரியம் அரசுக்கு உள்ளதா? சாயக் கழிவுகளால் நொய்யலாறு மாசுபட்டுள்ளதை தடுக்க, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர். ஆனால் பாலாற்றை தூய்மையாக்க இந்த அரசு என்ன செய்தது? தமிழகம் முழுவதும் காயம்பட்டு கிடக்கின்றது.
ரணம் அதிகம் உள்ளது. திராவிட கட்சிகள் இந்தளவு பாழ்படுத்தி விட்டது. ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு, பா.ம.க.,வுக்கு வந்து விட்டது. வரும் உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., வை மட்டும் தான் வெற்றி பெறணும். மற்ற கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை 1 1/2 மாதத்தில் கண்டுபிடிக்கலாம் ஆய்வில்!



தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க அலட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கருவுற்று 4 1/2 மாதத்துக்கு பிறகே ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்க முடியும். ஆனால் இப்போது புதிய முறையை பயன்படுத்தி கருவுற்ற 1 1/2  மாதத்திலேயே குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்து விடலாம் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாயின் ரத்த மாதிரியை எடுத்து அதில் உள்ள மரபணு மூலம் (டி.என்.ஏ.) 1 1/2 மாதத்தில் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் 57 விதமான ஆய்வுகளை நடத்தியுள்ளனர். 6500 கருவுற்ற பெண்களை இதற்காக அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இதில் 1 1/2 மாதத்திலேயே 99 சதவீதம் சரியாக குழந்தைகளின் பாலினத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இதன் மூலம் ஆரம்பத்திலேயே குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டு பிடித்து தாய்க்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

world,s most dangerous market... தாய்லாந்த்!


Understanding the Financial Crisis,,,


Best of just for laughs...யூடுபில் இருந்து!


US Debt Crises... தென்னமரத்துல தேள் கொட்டுன பனமரத்துல நெரி கட்டும் இதுதனோ?


நம்ம வூர் I.T. கம்பனி விசீட் எப்படி இருக்கும் ஒரு நகைசுவைக்காக!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...