|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 August, 2011

லைவ் டிவி வசதியுடன் வரும் சாம்சங் கேலக்ஸி!

ஆற்றல் கொண்ட மின்னணு சாதன தயாரிப்பில் புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வரிசை டேப்லெட்களின் பெர்மான்சுக்கு யாரும் கியாரண்டி கொடுக்கவேண்டியதில்லை. இதனால், டேப்லெட் மார்க்கெட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கு இணையாக மார்க்கெட்டை பங்கு போட்டுக்கொண்டுள்ளது சாம்சங்.

இந்நிலையில், மார்க்கெட் பங்களிப்பை தக்கவைக்கும் விதமாக இரண்டு புதிய கேலக்ஸி வரிசை டேப்லெட்களை சாம்சங் விரைவில் அறிமுகப்படுத்துகிறது. மேலும், இந்த புதிய டேப்லெட்கள் வோடபோன் ஒத்துழைப்புடன் இந்தியாவில் அறிமுகமாகின்றன.

கேலக்ஸி-750 மற்றும் கேலக்ஸி-730 என்ற குறியீட்டு பெயர்களில் மார்க்கெட்டை கலக்க வரும் இந்த இரண்டு டேப்லெட்டுகளும் சில வேறுபாடுகளையும், பல பொதுவான அம்சங்களை கொண்டிருக்கும். ஆன்ட்ராய்டு 3.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் கேலக்ஸி-750 ரூ.36,200 விலையில் மார்க்கெட்டிற்கு வருகிறது. இதைவிட சற்று சிறிய 8.9 இஞ்ச் ஸ்கிரீன் கொண்ட கேலக்ஸி-730 டேப்லெட் ரூ.33,990 விலையில் வருகிறது.

16 ஜிபி சேமிக்கும் திறன் கொண்ட இரண்டு போன்களும் 1ஜிபி ரேம், 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி-750யில் 7,000எம்ஏஎச் பேட்டரியும், கேலக்ஸி-730யில் 6,100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் பொருத்தப்பட்டிருக்கும். இதில், லைவ் டிவி வசதி மூலம் 55 டிவி சேனல்களை கண்டு களிக்கலாம்.

தவிர, 17 செய்தித்தாள்கள் மற்றும், இந்திய மொழிகளில் 30,000 புத்தகங்களை படிக்கும் வசதிகளையும் பெற முடியும். அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் இந்த புதிய டேப்லெட்டுகளை அறிமுகம் செய்வதற்கு பல இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டன.

இறுதியில் வோடபோன் நிறுவனம் சாம்சங்கிடமிருந்து இந்த வாய்ப்பை பெற்றுள்ளது. கேலக்ஸி-750 மற்றும் 730 டேப்லெட்டுகள் வோடபோன் நிறுவனம் மூலம் அறிமுகமாகிறது. மேலும், புதிய கேலக்ஸி வரிசை டேப்லெட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள 2ஜிபி தகவல்களை 6 மாதத்திற்குள் இலவசமாக டவுண்லோடு செய்துகொள்வதற்கான சலுகையை வோடபோன் வழங்க உள்ளது.

இந்த மாத இறுதிக்குள் இந்த போன்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...