இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்.ஐ.ஓ), தமிழக மண்டல முன்னாள் மாநில
தலைவர் சகோ. சலீம் M.Sc.,B.ed., PGDSA, அவர்களுக்கு, கோவை சாந்தி ஆசிரமம்
சார்பில் இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கோவையில் சமூக சேவை,
இஸ்லாமிய சமூகத்தினரிடையே ஆக்கப்பூர்வமான பணி, இளம் தலைமுறையினரின்
முன்னேற்றத்திற்காக பாடுபடுவதற்காக அவருக்கு விருது காக பாடுபட்டது ஆகிய
பணிகளுக்காக சகோ. சலீம் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
கோவை சாந்தி ஆசிரமத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கலை, இலக்கியம், அரசியல், சமூக சேவை, சுற்றுச்சூழல், சுகாதாரம் போன்ற 25 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சகோ. சலீம் அவர்களுக்கான விருதினை சாந்தி ஆசிரமத்தின் அறங்காவலர்களில் ஒருவரான திரு. ரங்கண்ணா அவர்கள் வழங்கினார். கோவை குமரகுரு கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
25-ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு 2012-ஐ பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் ஆண்டாக அனுஷ்டிக்க இருப்பதாக சாந்தி ஆசிரம நிர்வகாம் அறிவித்துள்ளது. இதையொட்டி சே நோ வயலன்ஸ் டு விமன் (SAY NO VIOLENCE TO WOMEN) என்கிற குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
வெள்ளி விழா காணும் சாந்தி ஆசிரமம் கோவையில் சமூக முன்னேற்ற பணிகளையும், இளம் தலைமுறையினரிடையே சமூக சேவை உணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை உருவாகுவதற்காக பாடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற சலீம் கூறியதாவது, இந்த விருது கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது அகில இந்திய எஸ்.ஐ.ஓ. வின் ஒவ்வொரு ஊழியருக்கும் கிடைத்த விருது. ஏனென்றால் எஸ்.ஐ.ஓ. வின் ஒவ்வொரு ஊழியரும் தேசம் முழுவதும் இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளையே இளம் தலைமுறையினரிடையே செய்து வருகின்றனர். என்னை அடையாளம் கண்டு கொண்டதால் எனக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இது போன்ற விருதினை பெற எஸ்.ஐ.ஓ. வின் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் தகுதியானவர்கள் தான் என்றார்.
சலீம் அவர்கள் கோவை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அவர் கல்வி வழிகாட்டுதல்கள் வழங்கி இருக்கிறார்.

No comments:
Post a Comment