|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 February, 2012

இதே நாள்...


  • செர்பியா தேசிய தினம்
  •  யூட்யூப் சேவை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(2005)
  •  அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் நகரம் அமைக்கப்பட்டது(1764)
  •  ரஷ்யாவில் அதிபர் பதவி ஏற்படுத்தப்பட்டது(1994)

Vettai DVD


இவன் சத்ரியன் MOVIE


பார்த்ததில் பிடித்தது!

எச்சரிக்கை: எதிர்கால தமிழகம்....தமிழனே தனிநாடு கேள் தண்ணீராவது 


உனக்கு கிடைக்கும்.







மரத்த வெட்னா, இப்படி தான் நாளைக்கு 


அவனுங்களும் கேடக்கனும்னு தெரியாத மனசாட்சி 


இல்லாத மடையன்கள்...





காரில் பிரேக் பிடிக்காமல் போனால்...?

கார்கள் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பிரேக்குகளுடன் வருகின்றன. மேலும், பிரேக் உள்ளிட்டவை சரியாக இயங்குகிறதா என்பது குறித்து எச்சரி்க்கை செய்யும் வசதிகளும் கார்களில் இருக்கிறது. ஆனாலும், டாப் வேரியண்ட் கார்களில் மட்டும் இந்த நவீன பிரேக் சிஸ்டம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கார்களில் சில சமயம் தொழில்நுட்ப கோளாறுகளால் பிரேக் பிடிக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.எவ்வளவு திறமை வாய்ந்த டிரைவராக இருந்தாலும் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் காரை கன்ட்ரோல் செய்வது மிக கடினமான விஷயமாக இருக்கும். அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

காரில் செல்லும்போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவதுதான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்துவிடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம்.அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்துவிட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!

எப்ப பார்த்தாலும் சண்டைதான், எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் வீட்டில் நிம்மதியே இல்லை என்று புலம்புபவரா நீங்கள். உங்களுக்குத்தான் இந்த கட்டுரை... தம்பதியரிடையே இணக்கம் ஏற்படவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

அவமதிப்பது ஆபத்து பேச்சுவார்த்தை சின்னதாக தொடங்கும்போதே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழியை தேடவேண்டும். அதை விடுத்து ஒருவருக்கு ஒருவர் எதிர்பேச்சுப் பேசி அவமதிக்கும் வகையில் பேசுவது மிகச்பெரிய பிரச்சினைக்கு வழி வகுக்கும். எனவே பேசிய பின்னர் இப்படி பேசி விட்டோமே என்று நினைத்து வருந்துவதை விட எதையுமே பேசும் முன்பு யோசித்து பேசுவது இருவருக்குமே நல்லது.

உண்மையை கண்டறியுங்கள் கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் எனவே உங்கள் துணைவரைப் பற்றி உங்களுக்குத்தான் முழுதாக தெரிந்திருக்க வேண்டும். உங்க வீட்டுக்காரரை அங்கே பார்த்தேனே என்று பக்கத்தில ஒரு பொண்ணு இருந்திச்சே என்று யாராவது கொளுத்திப் போட்டால் அதையே சாக்காக வைத்து வீட்டுக்கு வந்த உடன் குடையக்கூடாது. அவராக ஏதாவது சொல்கிறாரா என்று அமைதி காக்கவும். இல்லையா வேறு டாபிக் ஏதாவது பேசிவிட்டு அதோடு சேர்த்து மெதுவாக கேட்கவும். அப்புறம் சண்டைக்கு ஏது வழி? எது உண்மை என்று தெரிந்து கொண்டால் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கை உங்களுடையதுதான்.

முயலுக்கு மூன்று கால் எப்பொழுதுமே நீங்கள் சொல்வதுதான் சரி என்று நினைக்காதீர்கள். உங்கள் பக்கம் தவறு நேரவும் வாய்ப்பு உள்ளது. எனவே வாழ்க்கைத்துணையானவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்து கேளுங்கள். ஈகோ என்பது குடும்பத்திற்குள் எட்டிப்பார்க்க ஆரம்பித்தால் மகிழ்ச்சி என்பது காணமல் போய்விடும். அப்புறம் யார் பெரியவர், யார் சொல்வது சரி என்று எப்போதும் வாதம் செய்யவேண்டியதுதான். நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு வேடிக்கையாகிவிடும்.

தினமும் எழுதுங்கள் அன்றாடம் நடந்தவைகளை தினமும் எழுதுங்கள். அலுவலகமோ, வீடோ, எங்கே என்ன நடந்தது என்பதை எழுதி துணையின் பார்வைக்கு வைக்கலாம். அவர் அணிந்திருந்த உடை அழகாயிருந்தால் அதையும் கவிதையாய் குறிப்பிடலாம். தேவையற்ற பேச்சுக்கள் குறையும். உங்கள் செயல் யோசிக்க வைக்கும். சிறிய தவறென்றாலும் விட்டுக்கொடுத்துப் போங்கள். அப்புறமென்ன நீங்கள் தான் ஆதர்ச தம்பதிகள்.

சாணக்குழியில் வாயில் துணி திணித்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை!


சேலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் சாணக்குழியில் கிடந்தது. அக்குழந்தையை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் சம்போடைவனம் பகுதியில் சாணம் கொட்டும் குப்பைக் குழி உள்ளது. இந்த குழியில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குப்பைகளை கொட்டுவது வழக்கம்.நேற்று காலையில் சாணக்குழியில் சிலர் குப்பைகளை கொட்ட வந்த போது குழிக்குள் பச்சிளம் குழந்தையின் கால்கள் தெரிந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் குப்பைகளை அகற்றிப் பார்த்தபோது பிறந்து சில மணிநேரமேயான பச்சிளம் குழந்தை கிடந்தது.

குழியில் வீசப்பட்ட குழந்தை அழுவது வெளியே கேட்காத வகையில் அதன் வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்தது. இதனால் குழந்தை கை, கால்களை அசைத்துக் கொண்டிருந்தது. உடனடியாக குழந்தையை மீட்ட பொதுமக்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அந்த குழந்தை 2.8 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பிறந்த குழந்தையை சாணக்குழியில் வீசியது யார்? குழந்தையின் பெற்றோர் யார்? சாணக்குழியில் வீசப்பட்ட காரணம் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வெள்ளைக் கன்று ஈன்ற எருமை...


கேரளாவில் விவசாயி ஒருவரின் எருமை மாடு கடந்த 10ம் தேதி வெள்ளைக் கன்று ஈன்றுள்ளது. இந்த அதிசயக் கன்றை வளர்க்கத் தேவையான உதவியை செய்ய அம்மாநில அரசு முன்வந்துள்ளது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட அஞ்சால் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஷர்புதீன். அவர் கடந்த ஆண்டு இப்பகுதியில் உள்ள மாட்டு சந்தையில் பால் பண்ணை வைப்பதற்காக எருமை மாடுகளும், பசு மாடுகளும் வாங்கி பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சந்தையில் வாங்கிய ஒரு எருமை மாடு கடந்த 10ம் தேதி மதியம் ஒரு கன்றுகுட்டியை ஈன்றது.

கன்று குட்டியை கண்ட அவர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். காரணம் அக்கன்றுக் குட்டி வெள்ளை நிறத்தில் இருந்தது தான். இது குறித்து அவர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கவே அப்பகுதியே திரண்டு வந்து கன்றுக்குட்டியை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.இந்த அதிசய கன்றுக்குட்டி குறித்து அப்பகுதியினர் கூறும்போது 1930ம் ஆண்டிலும், 1950ம் ஆண்டிலும் வெளிநாட்டில் மட்டுமே இது போன்று கன்றுக்குட்டி பிறந்ததாகவும் இந்தியாவில் இதுதான் முதல் முறை என்றும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.இது குறிதது தகவல் அறிந்த கேரள அரசு இக்குட்டியை வளர்க்க உதவி செய்ய முன்வந்துள்ளது. இந்த அதிசய கன்றுக்குட்டிக்கு உரிமையாளர் அல்பீனா என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த கன்றுக்குட்டியை ரூ.3லட்சம் வரை கொடுத்து விலைக்கு வாங்க பலர் ஷர்புதீனை தேடி வந்த வண்ணம் உள்ளனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க யு.எஸ். முடிவு!


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜெனிவாவில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் மார்ச் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக பல்வேறு நாடுகள் ஒன்று சேர்ந்து தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன.

இலங்கையில் அமெரிக்க பிரதிநிதிகள் இந்த நிலையில் இலங்கை பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மரியா ஒட்டேரா மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் ஆகியோர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட இருக்கும் தீர்மானம் குறித்து ராஜபக்சேவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடான இறுதிப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமைக் கொடுமைகள் தொடர்பாக ராஜபக்சே அரசாங்கம் அமைத்த குழுவின் பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க தரப்பில் ராஜபக்சேவிடம் இருவரும் வலியுறுத்தினர்.

அலட்டிக்காத ராஜபக்சே அமெரிக்காவின் இத்தகைய கண்டிப்பான அணுகுமுறையை எதிர்பார்க்காத ராஜபக்சே, சற்றும் அலட்டிக் கொள்ளாமல், "ம். நான் ஏற்படுத்திய விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி "ஆராய்ந்து" வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அக்குழுவின் பரிந்துரைகளை ராஜபக்சே உடனே நடைமுறைப்படுத்தாவிட்டால் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் இதனால் சர்வதேச நாடுகளின் கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் ராஜபக்சேவை எச்சரித்துள்ளனர். பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் கைவசம் வைத்திருக்கும் திட்டங்களை அமெரிக்காவிடம் தெரிவிக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் தமிழர்களின் கட்சிகள் அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் கொண்டுவரப்பட உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவைப் போல் இந்தியாவும் ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. போருக்கு உதவி செய்த இந்தியா, போருக்குப் பின்னும் இலங்கை தமது நட்பு நாடாக இருக்கும் என எதிர்பார்த்தது. ஆனால் சீனா, பாகிஸ்தான் என இந்தியாவின் எதிர் முகாம்களோடு கை கோர்த்த ராஜபக்சே, இந்திய அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் எந்த ஒரு உருப்படியான அரசியல் தீர்வையும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் மரியா ஒட்டேரியா மற்றும் ராபர்ட் பிளேக்குடன் வாசிங்டனில் சில நாட்களுக்கு முன்பு இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதேபோல் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரியையும் மத்தாய் சந்தித்துள்ளார். இச்சந்திப்புகளின் போது ஐ.நா. தீர்மானத்தை ஆதரிப்பது என்று இருநாட்டு பிரதிநிதிகளும் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதனையடுத்தே அமெரிக்க் பிரதிநிதிகள் தமது கடுமையான நிலைப்பாட்டை இலங்கையிடம் நேரில் தெரிவிக்க பயணித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடாளுமன்றமும் கிடுக்குப் பிடி ராஜபக்சே உருவாக்கிய நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளையாவது நிறைவேற்றுங்கள் என்கிறது அமெரிக்கா. இதனிடையே இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.வின் வல்லுநர் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. "இலங்கையின் இறுதிப் போரின்போது சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மீறப்பட்டமைக்கும் போர்க் குற்றங்கள் புரியப்பட்டமைக்கும் நம்பத்தகுந்த சாட்சியங்கள் இருப்பதால் அது பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்'' என்பது ஐ.நா. வல்லுநர் குழுவின் அறிக்கை.ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானது ஐரோப்பிய நாடாளுமன்றம். இலங்கையில் அமெரிக்க பிரதிநிதிகள் நெருக்கடி கொடுத்த நிலையிலே ஐரோப்பிய நாடாளுமன்றமும் ராஜபக்சேவுக்கு எதிராக அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

உள்நாட்டில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களின் கடுமையான நிலைப்பாடு ஒருபுறம் இருந்தாலும் சீனா நமக்கு ஆதரவாக இருக்கும் என திடமாக ராஜபக்சே நம்புகிறார்.இதனிடையே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நெருக்கடிகளுக்கு இலங்கை அரசாங்கம் பணிந்துவருகிறது. இலங்கையை மேற்குலக நாடுகளிடம் ராஜபக்சே மண்டியிட வைக்கிறார் என்று முக்கிய எதிர்க்கட்சியான ஜே.வி.பி. கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை மண்ணில் இருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் கருத்து தெரிவிக்க எப்படி தைரியம் வந்தது என்று ஜே.வி.பி. பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

சொர்க்கத்துக்குப் போகும் பாதை


சொர்க்கம் , நரகம் செல்லுவதற்கான பாதை என்பது ஏதோ நீண்ட தூரத்தில் உள்ளது. அல்லது நம் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். நாம் செய்யும் செயலில் தான் சொர்க்கம் மற்றும் நரகத்திற்கு செல்வதற்கான பாதை உள்ளது என்பது தான் உண்மை. இதை மனதில் வைத்துக்கொண்டு நாம் உண்மையாக ஒவ்வொரு செயலையும் செய்தால் சொர்க்கத்தில வாசலுக்குள் நுழைந்து விடாலம்.  ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்ததன் பலனையும், ஒரு சத்தியத்தையும் தராசின் இரு தட்டுக்களில் வைத்தால், சத்தியமே மிகுந்திருக்கும் என்று மகாபாரதம் சொல்கிறது. வாய்மையே வெல்லும் என்று சொல்லப்படுவதற்குக் காரணம், சத்தியம் என்றுமே ஜெயிக்கும் என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்குத்தான். என்றென்றும் - எப்போதும் உண்மை பேசி வாழ்பவன் - அதாவது சத்தியத்தையே தன் கொள்கையாகக் கொண்டு வாழ்பவன், கவலை இன்றி வாழ்கிறான். இப்படிப் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து வாய்மையின் வழி நின்றால், அவனுக்கு வாக் ஸித்தி உண்டாகும். அவன் சொல்வதெல்லாம் பலிக்கும் என்று ஆன்மிக நூல்களில் குறிப்புகள் இருக்கின்றன.  உண்மையே கடவுள். எல்லா அறங்களும் உண்மையைப் பின்தொடர்கின்றன என்பார் வால்மீகி. உண்மையைச் சொல்வதற்காகத் தூக்கு மரம் ஏறவேண்டி வந்தாலும் தயாராக இருங்கள் என்பார் காந்திஅடிகள். பொறுமை, அடக்கம், நிதானம், அன்பு, நேர்மை, நியாயம் - இவை போன்ற குணங்களைக் கடைப்பிடித்து வாழும் ஒருவன் சத்தியம் தவற மாட்டான். இவற்றுள் எந்த ஒரு குணத்தை இழந்து விட்டாலும், நரகம் அவனுக்கு வலை விரித்துக் காத்திருக்கும். ஹக்குயின் என்ற பிரபல புத்த ஞானியிடம் ஜப்பானிய வீரன் ஒருவன் சந்தேகம் ஒன்றைக் கேட்டான். குருதேவா... சொர்க்கமும் நரகமும் இருப்பது உண்மைதானா? ஹக்குயின் அந்த வீரனை நோக்கி, நீ யார்? என்று கேட்டார். இந்த நாட்டு அரசனின் வீரம் மிக்க பாதுகாவலன் என்றான். முட்டாளே... உன் முகத்தை இதுவரை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா? கோழையைப் போல் தோற்றம் தரும் உன்னை வீரன் என்று எவன் ஒப்புக் கொண்டான்? என்று கேட்டார் புத்த ஞானி. வீரனுக்குக் கோபம் வந்தது. உடைவாளை உருவினான். ஹக்குயினைக் கண்டம்துண்டமாக வெட்டுவதற்கு நெருங்கினான். வீரன் தன்னை நெருங்குவதற்குள் ஹக்குயின் சிரித்தபடி சொன்னார். சற்றுமுன் நீ கேட்ட கேள்விக்குப் பாதி விடை கிடைத்து விட்டது. அதுதான் நீ திறந்து பார்த்திருக்கும் நரகம் என்ற உலகத்தின் பாதை. திடுக்கிட்டு சிலையாக நின்றான் வீரன். உருவிய வாளை உறைக்குள் போட்டான். ஞானியை சிரம் தாழ்த்தி வணங்கினான். புத்த ஞானி சட்டென்று சொன்னார்: நீ கேட்ட கேள்விக்கு மறு பாதி விடையும் இப்போது கிடைத்து விட்டது. சிந்திக்கத் துவங்கும்போது பொறுமையைக் கடைப்பிடித்தாய். சொர்க்கத்துக்குப் போகும் பாதை இதுதான்.

2 நாட்களாக இடைவிடாமல் முத்தம் கின்னஸ் சாதனை!





தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டாயா பீச்'. இங்கு 7 ஜோடிகள் கின்னஸ்' சாதனைக்காக முத்தம் கொடுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த முத்தப்போட்டி 13.02.2012 ஆரம்பித்து, இன்று (14.02.2012) காதலர் தினம் வரை நடக்கும். இந்தப் போட்டியில், இவர்கள் தங்கள் ஜோடியுடன் உதட்டோடு உதட்டை' வைத்து, இடைவிடாமல் முத்தம் கொடுக்கவேண்டும்.ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியே ஒரு சதுரமீட்டர் இடம் ஒதுக்கப்பட்டு, இந்தப்போட்டி நடக்கிறது. திடஉணவு மற்றும் திரவ ஆகாரம் ஆகியவற்றை  ஸ்டிரா' மூலம்தான் உட்கொள்ளவேண்டும். பல் துலக்கும்போதும்கூட உதடுகள்  விலகக்கூடாது'. அப்படி விலகும்பட்சத்தில், போட்டிக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.

போட்டி ஆரம்பித்த முதல் 3 மணி நேரத்திற்கு கழிப்பறைக்கு செல்ல, போட்டிக்கு  இடைவேளை' அனுமதிக்கப்படும்.
கடந்த வருடம் நடந்த முத்தப்போட்டியில் 46 மணிகள், 24 நிமிடங்கள், 9 நொடிகள் என்ற கால அளவில் இடைவிடாது முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை செய்த லக்கானா திரனரத் (வயது 31) என்ற பெண் தனது கணவருடன் மீண்டும் இந்த முறையும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த முறை மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறோம். இந்தமுறை போட்டி எவ்வளவு கடினமானதாக இருக்கப்போகிறது என்பதை பார்போம். எனினும், தங்கள் சாதனையை முறியடிக்க முயற்சி செய்வோம்' என்று லக்கானா திரனரத் கூறினார்.இந்த கின்னஸ் சாதனை  முத்தப்போட்டி'யில் வெல்லும் ஜோடிக்கு 3,333 அமெரிக்க டாலர் மதிப்பு வைர மோதிரமும், சொகுசு ஓட்டலில் தங்குவதற்கான 6,666 அமெரிக்க டாலர் மதிப்பு வவுச்சர்களும் பரிசாக அறிவித்துள்ளனர்.இந்த போட்டியில் ஜோடிகள் வெற்றி கொள்ள தங்கள்  காதலை' உணர்த்த  கடும்சோதனை'யை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.

One Fine Dream - Tamil Short Film


Indha Oru Tharunam - Tamil Short Film with English Subtitles


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...