தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டாயா பீச்'. இங்கு 7 ஜோடிகள் கின்னஸ்' சாதனைக்காக முத்தம் கொடுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த முத்தப்போட்டி 13.02.2012 ஆரம்பித்து, இன்று (14.02.2012) காதலர் தினம் வரை நடக்கும். இந்தப் போட்டியில், இவர்கள் தங்கள் ஜோடியுடன் உதட்டோடு உதட்டை' வைத்து, இடைவிடாமல் முத்தம் கொடுக்கவேண்டும்.ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியே ஒரு சதுரமீட்டர் இடம் ஒதுக்கப்பட்டு, இந்தப்போட்டி நடக்கிறது. திடஉணவு மற்றும் திரவ ஆகாரம் ஆகியவற்றை ஸ்டிரா' மூலம்தான் உட்கொள்ளவேண்டும். பல் துலக்கும்போதும்கூட உதடுகள் விலகக்கூடாது'. அப்படி விலகும்பட்சத்தில், போட்டிக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
போட்டி ஆரம்பித்த முதல் 3 மணி நேரத்திற்கு கழிப்பறைக்கு செல்ல, போட்டிக்கு இடைவேளை' அனுமதிக்கப்படும்.கடந்த வருடம் நடந்த முத்தப்போட்டியில் 46 மணிகள், 24 நிமிடங்கள், 9 நொடிகள் என்ற கால அளவில் இடைவிடாது முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை செய்த லக்கானா திரனரத் (வயது 31) என்ற பெண் தனது கணவருடன் மீண்டும் இந்த முறையும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த முறை மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறோம். இந்தமுறை போட்டி எவ்வளவு கடினமானதாக இருக்கப்போகிறது என்பதை பார்போம். எனினும், தங்கள் சாதனையை முறியடிக்க முயற்சி செய்வோம்' என்று லக்கானா திரனரத் கூறினார்.இந்த கின்னஸ் சாதனை முத்தப்போட்டி'யில் வெல்லும் ஜோடிக்கு 3,333 அமெரிக்க டாலர் மதிப்பு வைர மோதிரமும், சொகுசு ஓட்டலில் தங்குவதற்கான 6,666 அமெரிக்க டாலர் மதிப்பு வவுச்சர்களும் பரிசாக அறிவித்துள்ளனர்.இந்த போட்டியில் ஜோடிகள் வெற்றி கொள்ள தங்கள் காதலை' உணர்த்த கடும்சோதனை'யை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment