சேலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் சாணக்குழியில் கிடந்தது. அக்குழந்தையை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் சம்போடைவனம் பகுதியில் சாணம் கொட்டும் குப்பைக் குழி உள்ளது. இந்த குழியில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குப்பைகளை கொட்டுவது வழக்கம்.நேற்று காலையில் சாணக்குழியில் சிலர் குப்பைகளை கொட்ட வந்த போது குழிக்குள் பச்சிளம் குழந்தையின் கால்கள் தெரிந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் குப்பைகளை அகற்றிப் பார்த்தபோது பிறந்து சில மணிநேரமேயான பச்சிளம் குழந்தை கிடந்தது.
குழியில் வீசப்பட்ட குழந்தை அழுவது வெளியே கேட்காத வகையில் அதன் வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்தது. இதனால் குழந்தை கை, கால்களை அசைத்துக் கொண்டிருந்தது. உடனடியாக குழந்தையை மீட்ட பொதுமக்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அந்த குழந்தை 2.8 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பிறந்த குழந்தையை சாணக்குழியில் வீசியது யார்? குழந்தையின் பெற்றோர் யார்? சாணக்குழியில் வீசப்பட்ட காரணம் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment