|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 November, 2011

ரீசார்ஜ் மோசடி: அனில் அம்பானி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு!


 ரீசார்ஜ் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் இன்போகாம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனில் அம்பானியின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பிரதாப் குமார் வர்மா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவருடைய மனைவி, ரிலையன்ஸ் செல்போன் சிம்கார்டு வாங்கி இருந்தார். அதை 'ஈசி ரீசார்ஜ்' செய்தபோது, அந்த குறிப்பிட்ட திட்டத்துக்கென அறிவிக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கவில்லை. இதனால், ரிலையன்ஸ் நிறுவனம், தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று கூறி, கடந்த 2009-ம் ஆண்டு பிரதாப் குமார் வர்மா மோசடி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், கடந்த மே 21-ந் தேதி, அனில் அம்பானிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு மாஜிஸ்திரேட் பி.கே.பாண்டே நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவுக்கு தடை கோரி வழக்குத் தொடர தயாராகி வருகிறார் அனில் அம்பானி.

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்!


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர். தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள்.

கைகளை வீசி நடங்கள் காலை 6 மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம். நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம்.

உடல் எடை குறையும் உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரண ஒன்றாகிவிட்டது. சரியான உடல் உழைப்பு இல்லாதது. இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது. இதனால் உடல் எடை கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். எனெனில் உடல் எடைதான் எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ளது.

புத்துணர்ச்சி அடையும் எடை அதிகரிப்பினால் ஆங்காங்கே தசைகள் லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமின்றி காணப்படும். இவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள லூசான தசைகள் வலுவடையும்.காலையில் மேற்கொள்ளும் நடை பயிற்சியினால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.

நீரிழிவு கட்டுப்படும் தினசரி காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே நீரிழிவு நேயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

கொழுப்பு குறையும் நடைபயிற்சியின் மூலம் உடலில் தேவையற்ற இடங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு குறைவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு குறைகிறது. ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.

முதுகு வலி எட்டிப்பார்க்காது ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் ஒரு சிலர் முதுகு வலி கழுத்துவலியினால் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த தீர்வாகும். காலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி முதுகுவலியை தூர விரட்டும்.

குழந்தை பேறு கிடைக்கும் நடை பயிற்சியினால் தீராத சிக்கல்களுக்கும் கூட தீர்வு கிடைத்திருக்கிறது. குழந்தையில்லாத தம்பதியர் கூட சீரான நடைபயிற்சி மேற்கொண்டதன் மூலம் குழந்தை பேறு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராணுவ கெடுபிடிகளை மீறி பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடிய யாழ். மாணவர்கள்!


தமிழீழ தேசிய மாவீரர் நாள், மற்றும் பிரகபாகரன் பிறந்தநாள் நிகழ்வுகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடக்கூடும் என்பதால், அதைத் தடுக்க ராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். ஆனாலும் இந்த நெருக்கடியையும் மீறி யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் பிரபாகரன் பிறந்தநாளை பட்டாசு வெடித்துக் கொண்டி ராணுவத்தை அதிரவைத்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பே மாவீரர்களை நினைவேந்தியும், பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து இலங்கை காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், வெளியே ராணுவத்தினரும் படைப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, மாணவர்களை அச்சுறுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர். நேற்று பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்த ராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகத்தையே சுற்றிச் சுற்றி வந்தனர்.

ஆனாலும் இவர்கள் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவும் விதத்திலும் சிங்களத்தை தலைகுனிய வைக்கும் வகையிலும் யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் நேற்றிரவு பட்டாசு கொளுத்தி பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாடினர். பட்டாசு சத்தத்தைக் கேட்ட செய்தியாளர்கள் பல்கலைக் கழகத்தைச் சுற்றி நின்ற படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக எண்ணி அச்சமடைந்தனர். ஆனால் நேரில் சென்ற பின்னரே உண்மை நிலையை அறிந்து திரும்பினர்.

இன்றைக்கு தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பல்கலை வளாகத்தில் மாணவர்கள் எழுச்சி நிகழ்வுகளை மேற்கொள்வர் என்ற எதிர்பார்ப்பில் சிங்கள ராணுவத்தினரும் உளவுப் பிரிவினரும் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆயுத அடக்குமுறைகளால் தமது உணர்வுகளை அடக்கிவிட முடியாது என்றும், இவை தமது விடுதலை வேட்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழர் எமது மதம், தமிழீழம் எமது ஆலயம், தலைவர் பிரபாகரன் எமது கடவுள் என்று பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் மக்கள் கொண்டாட்டம்!


விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் 57 ஆவது பிறந்த தினம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது. ராணுவம், போலீஸ் கெடுபிடி என அனைத்து வழிகளிலும் இலங்கை அரசு அடக்குமுறையை ஏவிவிட்ட போதும் மக்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் தங்கள் தலைவரின் பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆலயங்களில் தலைவருக்கு நல்லாசி வேண்டியும் நீண்ட ஆயுளுடன் வாழவும் விசேட பூஜைகள் நடத்தினர். இந்த நிகழ்வுகளில் மக்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கருணா குழு, பிள்ளையான் குழு மற்றும் இலங்கை படையினரின் நடமாட்டத்திற்கு மத்தியிலும் மக்கள் வருவது வரட்டும் என்ற மனப்பான்மையுடன் பிரபாகரன் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.

தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் பிரபாகரன் எந்த அளவு நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துவதாக இந்த கொண்டாட்டங்கள் அமைந்தன.  அதேபோல இன்று மாவீரர் தினத்தை முன்னிட்டு பல இடங்களில் மாவீரர்களின் நினைவாக விளக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விரிவான அறிவிப்புகளுடன் இந்த மாவீரர் தினத்தைக் கொண்டாடினால் ராணுவம் கலைத்துவிடும் என்பதால், திடீரென பல இடங்களில் ஒரே நேரத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போலீஸ் தடை தமிழகத்தில் பல இடங்களில் பிரபாகரன் பிறந்த நாளைக் கொண்டாட சீமான், கொளத்தூர்மணி உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. நாமக்கல்லில் சீமானின் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஒரு திருமண மண்டபத்தில் வைத்து அவர் பேசினார்.

ஒட்டுமொத்த தமிழினத்தின் தாகமும் தமிழீழம்தான்! - விடுதலைப் புலிகள்!


சுதந்திர தமிழீழம் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கனவு, தாகம். இந்த இனம் உள்ளவரை தமிழீழ தாகம் தொடரும் என்று விடுதலைப் புலிகள் தங்கள் மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் நவம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகள் தமிழர்களின் சரித்திரத்தில் முக்கிய நாட்களாகப் பார்க்கப்படுகின்றன. நவம்பர் 26-ம் தேதி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள். அடுத்த நாள் தமிழீழத்துக்காக உயிர்த் தியாகம் செய்த போராளிகளின் நினைவாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் வழக்கமாக பிரபாகரன் தோன்றி உரை நிகழ்த்துவார். கடந்த மூன்று தினங்களாக விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் இந்த உரையை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு மாவீரர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி, விடுதலைப் புலிகளின் தலமையகம் வெளியிட்டுள்ள மாவீரர் தின அறிக்கை:

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிருக்குயிரான வீரமறவர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள். இது உலகத்தமிழினம் விடுதலை வேட்கை கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழரெல்லாம் தமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது விடுதலைப் பயணத்தின் முக்கியமான கட்டத்தில் இன்று நாம் நிற்கின்றோம். போராட்டம் இன்னும் ஓயவில்லை. தமிழீழத் தாகம் தீரவில்லை. மிகவும் கொடுங்கோன்மையான இராணுவச் சர்வாதிகார ஆட்சி தமிழர் தாயகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆயுத பலத்தின் மூலம் தமிழீழ மக்களைச் சிங்களப் பேரினவாதம் அடக்கியாண்டு நிற்கின்றது.

துவளாத போராட்டம் போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை. இழப்புக்களை எண்ணிச் சோர்வடையாமல் இலட்சியப் போராட்டத்தைத் தொடரும் பணி எமதாகும். இன்று தமிழீழத்துக்கான போராட்டம் தாயகத்தில் மட்டுமன்றி உலகளவில் தமிழர்கள் வாழ்கின்ற எல்லாக் களங்களிலும் முனைப்புப்பெற்று நிற்கின்றது. நீண்டதும் கடினமானதுமான தமிழீழத்துக்கான விடுதலைப் போரில் நாம் சந்தித்த இன்னல்கள், இடையூறுகள் ஏராளம். ஆனாலும் நாம் மனம் துவண்டு விடவில்லை. சவால்கள் நிறைந்த காலகட்டமாக இன்றைய நாள் இருப்பினும் அதுவே எமது நம்பிக்கைக்கான காலகட்டத்தின் திருநாளாகவும் இருக்கிறது.

பிரபாகரனால் தெரிவு செய்யப்பட்ட நாள் தமிழர் வரலாற்றின் வழிவந்த வீரமரபை அடியொற்றிக் களமாடி மடிந்த விடுதலை வீரமறவர்களை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து மதிப்பளிக்கும் மாவீரர் நாளாக, எமதியக்கத்தின் முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நாளான நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டது. தமிழர் தாயகம் எதிரியின் பிடியில் வந்த பின்பு மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் எதிரிப் படைகளால் சிதைத்தழிக்கப்பட்டன.

சிங்களத்தின் காட்டுமிராண்டித்தனம் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மணலாறு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்த அனைத்துத் துயிலுமில்லங்களும் சிதைக்கப்பட்டதோடு அவற்றின் மேல் இராணுவத்தினருக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் ஆறாத ரணத்தையும் சினத்தையும் ஏற்படுத்திய இந்தக் காட்டுமிராண்டிச் செயலுக்கு நிகரானதொன்றை நாகரிக உலகின் பிறிதெந்தப் பாகத்திலும் காணமுடியாது.

ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்தாலும் கூட... ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தாலன்றித் தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 இல் முள்ளிவாய்க்காலைக் கடந்தும் தீராத தமிழீழத் தாகத்துடன் இன்னும் முனைப்புப் பெற்று நிற்கின்றது.

நவம்பர் 2011 இல் சிறிலங்கா அரசு நியமித்த 'உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு' அண்மையில் தனது அறிக்கையை வெளியிட்டது. குற்றவாளிகளை இனங்காண்பதற்கும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அறிக்கை வழிகோலும் எனக் கூறப்பட்டது. குற்றவாளிகளாகக் காண்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதி கூறினார். ஆனால் சிறிலங்கா அரசு நியமித்த ஆணைக்குழுவானது சிங்கள அரசின் தேவைக்கு உதவும் அறிக்கையையே வெளியிட்டது.

உண்மையான போர்க்குற்றவாளி ராஜபக்சேவும் அவர் தம்பிகளும் உண்மையான குற்றவாளிகளான சிறிலங்கா அதிபர் ராஜபக்ச உட்பட அவருடைய சகோதரர்களையும் கொலைவெறியோடு தமிழ்மக்களைக் கொன்ற இராணுவத் தலைமையையும் அந்த ஆணைக்குழுவால் எப்படிக் குற்றவாளிகளாகக் காண முடியும்? இலங்கை அரசியல் வரலாற்றில் ஆணைக்குழுக்களும் அறிக்கைகளும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மாத்திரமே.

ஐ.நா. மனித உரிமைச் சட்டங்கள், போர் நெறிமுறைகள் மற்றும் உலக இராசதந்திர ஒழுங்குகள் போன்றவற்றையெல்லாம் சிறிலங்கா அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், போர்க்குற்றம் புரிந்த தனது இராணுவ அதிகாரிகளை இராசதந்திரிகளாகவும் தூதரக அதிகாரிகளாகவும் வெளிநாடுகளிலுள்ள சிறிலங்காவின் தூதரகங்களில் துணிச்சலாக அமர்த்தியுள்ளது. இராணுவத்தளம், கடற்படைத்தளம், விமானப் படைத்தளம் உட்படப் பொருளாதார மையங்களையும் சிறிலங்காவில் அமைக்க உலகின் சில வல்லாதிக்க சக்திகள் போட்டியில் ஈடுபடுகின்றன. இதன்காரணமாகச் சிறிலங்கா அரசு செய்த போர்க் குற்றங்களை இந்நாடுகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த விழைகின்றன.

சேனல் 4-க்கு நன்றி சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற ஆவண ஒளிப்படத் தொகுப்பு உலக மனச்சாட்சியின் பார்வையை எம் மக்களின் பக்கம் திருப்பியிருப்பது நல்லதொரு அறிகுறியாகவே உள்ளது. அனைத்துலக ஊடகங்களால் கவனிக்கப்படாதிருந்த எமது மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சிக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான ஓர் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை அனைத்துலகச் சமுகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமிழீழம் மது கட்டுப்பாட்டில் இருந்தபோது.... தமிழீழம் எமது கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு மரியாதை கிடைத்திருந்தது. முப்பத்து மூன்று ஆண்டுகளாகச் சிங்கள மொழித்திணிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சிங்களக் குடியேற்றம் முற்றுமுழுதாகத் தடுக்கப்பட்டிருந்தது. தமிழீழத்தின் மீதான சிங்களப்படை வெறியர்களின் அடக்குமுறை, பொதுமக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் என்பன தடுக்கப்பட்டிருந்தன.

ஆனால் தந்தை செல்வாவின் காலத்தில் தமிழர்களுக்கு இருந்த அறப்போராட்ட உரிமைகூட இன்று மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்க்கட்சிகள் உண்ணாநிலைப் போராட்டமோ – சட்டமறுப்போ – மறியல் போராட்டமோ – கதவடைப்போ – ஒத்துழையாமையோ – ஏன் ஒரு பொதுக்கூட்டம்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகச் சட்டங்கள் வழங்கியுள்ள அறவழியிலான போராட்ட உரிமை – கருத்துத் தெரிவிக்கும் உரிமை அனைத்தும் எமது தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.

தமிழர் பூர்வீகங்கள் அழிப்பு சிங்கள ஆட்சியாளர்கள், தமிழீழ மக்களின் கோரிக்கையை மட்டுமல்ல தமிழீழ மக்களின் உரிமை தொடர்பான உலகநாடுகளின் வேண்டுகோள்களையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்குக்கிழக்கில் பூர்வீக அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. மூன்று இலட்சம் சிங்களப் படைகளாலும் அவர்களின் இராணுவக் காவலரண்களாலும் இன்றுவரை குடியேறிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான சிங்களக் குடியேறிகளாலும் தமிழீழம் ஆக்கிரமிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னான இந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழீழ மக்களின் அரசியல் தீர்வுக்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் அவர்களை இன்னமும் ஒரு அரசியல் வெறுமைக்குள் வைத்திருக்கவே சிறிலங்கா அரசாங்கம் முனைகிறது. ஏற்கனவே இருந்த உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் எமது மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் மேலும்பல தமிழர் வாழ்விடங்கள் இராணுவப் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுத் தமிழ்மக்கள் தமது வாழ்விடங்களுக்குச் செல்லமுடியாமல் தடுக்கப்படுகின்றனர்.

தமிழர் வாழ்விடங்களில் திட்டமிடப்பட்ட முறையில் கலாச்சாரச் சீரழிவு சிங்கள அரசால் பரப்பப்படுகிறது. கிறீஸ் மனிதன் போன்ற அசாதாரண சம்பவங்களை உருவாக்கித் தமிழ்மக்கள் மீது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியும் போரற்ற சூழ்நிலையிலுங்கூட மக்;கள் வாழ்விடங்களில் படையினரின் பிரசன்னத்தை அதிகரித்தும் எமது மக்களின் நாளாந்த வாழ்வியலைக் குழப்பி அவர்களைப் பதட்டநிலைக்குள் வைத்து அரசியல் செய்வதே இந்தச் சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கமாகும்.

எம் மீதான தடைகளை நீக்குங்கள் தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.

இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம். எமது விடுதலைக்கான போராட்டம் இன்று தமிழகம் தொட்டுத் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் எழுச்சி பெற்றுள்ளது. இன உணர்வும் மொழிப்பற்றும் மேலோங்கியுள்ளன. தமிழர் என்ற பெருமிதம் தமிழர் நெஞ்சில் ஊற்றெடுத்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்குத் தமிழுணர்வும் தமிழீழ மக்கள் மீதான ஆதரவும் தமிழ்நாட்டிலே வலுப்பெற்றுள்ளன.

தாயகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் ஒன்றிணைவதைத் தடுப்பதற்குச் சிங்களப்பேரினவாத அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. பலம் பொருந்திய சக்தியாக உலகத்தமிழர் உருவாவதைத் தடுக்க உலக நாடுகளின் ஆதரவையும் வேண்டி நிற்கின்றது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைக் குறைப்பதற்காகவும் மனிதநேயப் பணிகளை முடக்குவதற்காகவும் சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் அரங்கேற்றப்படுகின்றன.

இளையோர் மீது பிரபாகரன் வைத்துள்ள நம்பிக்கை புலம்பெயர் தேசங்களில் அறிவாளிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் வளர்ந்துவரும் தமிழ் இளையோர் தம்மீது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் வைத்துள்ள அபரிமிதமான நம்பிக்கையை உணர்ந்து தமிழீழத்தின் விடியலுக்காகத் தொடர்ந்தும் அயராது உழைக்கவேண்டும். எமது தாயகத்தில் சிங்கள இராணுவ நெருக்குவாரத்துக்குள்ளும் சிறிலங்கா அரசின் சிறைகளுக்குள்ளும் வாடும் தமது வயதையொத்த இளையவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கும் பொறுப்பும் கடமையும் தமக்கு உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு தாயக விடுதலைக்கான தமது முழுமையான பங்களிப்பை ஆர்வமுடன் செய்ய விரைந்து முன்வரவேண்டுமென அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்;. எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து தமிழரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவோம்.

இழப்புக்களைக் கண்டு அஞ்சாமல் தளராத உறுதியுடன் தொடர்ந்து போராடும் மக்களே இறுதியில் வெற்றிபெறுவாரென்ற உண்மையை நெஞ்சில் நிறுத்தி நாம் செயலுறுதியுடன் போராடுவோம்.காலம் இட்ட கட்டளைப்படி தமிழ்மக்களின் இருப்பைத் தக்கவைக்கும் தீர்வான தமிழீழத் தனியரசு கிடைக்கும் வரை நாம் எல்லா வழிகளிலும் தொடர்ந்து போராடுவோம். எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் எமது விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான ஈகங்களையும் நினைவுகூரும் இன்றைய நாளில் எத்தகைய துன்பங்களும் சவால்களும் எதிர்வந்தாலும் தமிழீழத் தனியரசை வென்றெடுக்கும் வரை தளராது போராடுவோம் என்று நாம் உறுதி கூறுகின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்” -இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் முகாமில் மாவீரர் தினம்!



புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொள்ளை இலங்கை தமிழர் முகாமில் மாவீரர் தினம் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டாடப்பட்டது. அகல் விளக்கு ஏற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கேட் தேர்வு மட்டுமே நுழைவாயில் அல்ல!


எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்றவுடன், உடனே கேட் எழுதி ஐ.ஐ.எம் -ல் சேர்ந்தால்தான் முன்னேறலாம் என்றில்லை. எம்.பி.ஏ. படிக்க ஐ.ஐ.எம் -கள்தான் சிறந்த கல்வி நிறுவனங்கள் என்றில்லை. அதேபோல், CAT தேர்வுதான் ஒரே வழி என்றில்லை. அதற்கும் வேறு வழிகள் உள்ளன. மராட்டிய மாநிலத்திலுள்ள JBIMS என்ற கல்வி நிறுவனம், வணிகப் படிப்பை மேற்கொள்ள நாட்டிலுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று. மராட்டிய அரசு நடத்தும் மாநில நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இக்கல்வி நிறுவனம் மாணவர்களை சேர்த்துக் கொள்கிறது. இந்நிறுவனத்தின் ஏறக்குறைய 85% இடங்கள் மராட்டிய மாநிலத்தின் மாணவர்களுக்கானது.
தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் சில புதிய ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களைவிட, TISS, XLRI, FMS மற்றும் IIFT போன்றவை சிறப்பான வசதிகளைக் கொண்ட சிறந்த கல்வி நிறுவனங்கள். எனவே, இதுபோன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் இடம்பெற, என்னமாதிரியான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மேற்கூறியவற்றில், TISS கல்வி நிறுவனம் அதற்கான சொந்த நுழைவுத்தேர்வை நடத்திக் கொள்கிறது. XLRI மாணவர்களை சேர்க்க GMAT மதிப்பெண்ணை ஏற்றுக்கொள்வதோடு, தனது சொந்த சேர்க்கைத் தேர்வையும் நடத்துகிறது. மற்ற கல்வி நிறுவனங்கள், MAT, ATMA மற்றும் GMAT போன்ற தேர்வுகளின் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கிறது. பல மாநிலங்கள், தங்கள் எல்லைக்குள் இருக்கும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர, தனி நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன. தற்போது சிலவகையான நுழைவுத் தேர்வுகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளலாம்.
AIMA - MAT(Management Aptitude Test) அனைத்திந்திய மேலாண்மை அசோசியேஷனின்(AIMA) பிரிவான, மேலாண்மை சேவைகளுக்கான மையம்(CMS) இந்த தேர்வை நடத்துகிறது. வருடத்திற்கு 4முறை(பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர்) இந்த தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வின் மதிப்பெண்கள் 1 வருடம் வரை ஏற்றுக்கொள்ளப்படும். பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன. இதற்கான பதிவு விண்ணப்பம் ரூ.1200 என்ற விலையில் கிடைக்கிறது.
தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு பட்டப்படிப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். வேலை அனுபவம் தேவையில்லை.
தேர்வுமுறை கேள்வித்தாள் Objective முறையிலானது. ஒரு மாணவர் இத்தேர்வை பேப்பர் முறையிலும் எழுதலாம் மற்றும் ஆன்லைனிலும் எழுதலாம். ஆனால், இரண்டுக்கும் மொத்தம் 2.5 மணி நேரங்கள்தான். விரிவான விபரம் அறிய  www.aima-ind.org என்ற இணையதளம் செல்க.
ATMA - AIMS Test for Management Admissions இத்தேர்வானது, MBA, MCA மற்றும் PGDM போன்ற படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க நடத்தப்படுகிறது. இதை, மத்திய மனிதவள அமைச்சம் அங்கீகரித்துள்ளது. இத்தேர்வு மதிப்பெண்கள் ஒரு வருடம் மட்டுமே செல்லுபடியாகும். இத்தேர்வு ஆன்லைனிலும் நடத்தப்படவுள்ளது. செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையான காலகட்டத்தில், தேவைக்கேற்ப, 15 நாட்களுக்கு ஒருமுறை, எத்தனைமுறை வேண்டுமானாலும் இத்தேர்வு நடத்தப்படும். இதன் விண்ணப்ப படிவம் ரூ.950.
தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுமுறை ஆறு பிரிவுகளில் 180 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி காலஅளவு உண்டு. தேர்வின் மொத்த நேரம் 3 மணிநேரங்கள். தவறான விடைகளுக்கு 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். இதன் முழுவிபரம் அறிய www.atmaonline.in என்ற இணையதளம் செல்க.
ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வு(ICET) ஆந்திராவிலுள்ள அனைத்து பல்கலைகள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் MBA மற்றும் MCA படிப்புகளில் மாணவர்களை சேர்க்க இத்தேர்வு வருடம் ஒரு முறை நடத்தப்படுகிறது.
கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழு விபரம் அறிய www.apsche.org என்ற இணையதளம் செல்க. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு(TANCET) தமிழக அரசின் பொருட்டு, மாணவர்கள் தமிழக கல்வி நிறுவனங்களில் MBA மற்றும் MCA போன்ற படிப்புகளில் சேர, அண்ணா பல்கலைக்கழகம் இத்தேர்வை நடத்துகிறது.
தகுதிகள் +2 முடித்து, பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் சரி, 10ம் வகுப்பு முடித்து, டிப்ளமோ முடித்து, அதன்பிறகு பட்டம் பெற்றிருந்தாலும் சரி, BE, B.Tech, B.Arch அல்லது B.Pharm போன்ற படிப்புகளை முடித்திருந்தாலும் சரி. விரிவான விபரம் அறிய www.annauniv.edu  என்ற இணையதளம் செல்க.
MAH - MBA/MMS CET(Maharashtra MBA Common Entrance Test) மராட்டிய மாநிலத்தின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால், MBA/MMS/PGDBM மற்றும் PGDM போன்ற படிப்புகளில் மாணவர்களை சேர்க்க இத்தேர்வு நடத்தப்படுகிறது. அரசு, பல்கலை நிர்வாகத்தின் கீழுள்ள மற்றும் அம்மாநிலத்தின் அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க இத்தேர்வு நடைபெறுகிறது.
தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளில், குறைந்தது 50% மதிப்பெண்களுடன், இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுமுறை மொத்தம் 200 Objective முறை கேள்விகளோடு, 150 நிமிடங்கள் ஒதுக்கப்படும். நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. விரிவான விபரங்களுக்கு www.dte.org.in/mba என்ற இணையதளம் செல்க.IBSAT (IBS Aptitude Test) ICFAI குழுமத்தால், மேலாண்மை படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு, இந்தியாவின் பல பெருநகரங்கள் மற்றும் வணிக மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவ கட்டணம் ரூ.1200.
தகுதி குறைந்தது 50% மதிப்பெண்களுடன், ஆங்கில வழியில் படித்த பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.தேர்வுமுறை மொத்தம் 2 மணிநேரம் காலஅளவாக ஒதுக்கப்படும். தேர்வர்களின் பலவித திறன்கள் சோதிக்கப்படும். விரிவான விபரம் அறிய www.ibsat.org  என்ற வலைத்தளம் செல்க.

வெளிநாட்டு வணிகத்தின் இந்திய கல்வி நிறுவன தேர்வு(Indian Institute of Foreign Trade) சர்வதேச வணிகப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, எழுத்துத் தேர்வை IIFT நடத்துகிறது. தற்போது IIFT டெல்லியிலும், கொல்கத்தாவிலும் 2 வளாகங்களைக் கொண்டுள்ளது. மேலும், கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் மற்றொரு வளாகத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனமாக IIFT திகழ்கிறது. நாட்டின் பல நகரங்களில் இந்த எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் விண்ணப்ப படிவக் கட்டணம் ரூ.1500. SC/ST மற்றும் PH மாணவர்களுக்கு மட்டும் ரூ.750.

தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வுமுறை இத்தேர்வு 2 மணி நேரங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்குப் பிறகு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற கட்டங்களுக்குப் பிறகே, இறுதித் தேர்வு நடைபெறும். விரிவான விபரம் அறிய www.iift.edu என்ற இணையதளம் செல்க.
NMAT (Narsee Monjee MAT) NMIMS என்ற மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கு, கடந்த 2003ம் ஆண்டு, UGC நிகர்நிலைப் பல்கலை அந்தஸ்தை அளித்தது. இக்கல்வி நிறுவனம் MBA Core, MBA Actuarial Science, MBA - Banking, MBA - Capital Market, MBA - HR, MBA - Pharmaceutical Management ஆகிய 2 வருட முழுநேரப் படிப்புகளை அதன் மும்பை வளாகத்திலும், PGDM படிப்பை பெங்களூர் மற்றும் ஹைதராபாத் வளாகத்திலும் வழங்கி வருகிறது. 3 மாத காலகட்டத்தில், பல்வேறான தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரும்பும் மாணவர்கள் 2 முறை தேர்வை திரும்ப எழுதலாம். முடிவில், 3 சிறந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும். இதன் விண்ணப்ப கட்டணம் ரூ.1650.
தகுதி ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுமுறை Objective முறையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். தேர்வு காலம் 2 மணி நேரங்கள். முழுவிபரம் அறிய www.nmims.edu  என்ற இணையதளம் செல்க. SNAP (Symbiosis National Aptitude Test) சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலையின் கீழ் இருக்கும் கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு நடத்துப்படுகிறது. ஆனால், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனத்திற்கென்று தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.1650. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் விண்ணப்பிக்கும்போது, ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
தகுதி ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுமுறை தேர்வுகாலம் மொத்தம் 2 மணிநேரங்கள். ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 நெகடிவ் மதிப்பெண் வழங்கப்படும். முழுவிபரம் அறிய  www.snaptest.org என்ற இணையதளம் செல்க.
XAT(Xavier Aptitude Test) இத்தேர்வை, சேவியர் அசோசியேஷன் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சார்பாக, XLRI - ஜாம்ஷெட்பூர் நடத்துகிறது. இத்தேர்வு மதிப்பெண்களை நாடு முழுவதும் சுமார் 77 கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இந்தியாவிலுள்ள 38 நகரங்களிலும், நாட்டிற்கு வெளியே 4 நகரங்களிலும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தகவல் விவரணம் மற்றும் விண்ணப்ப படிவம் ரூ.850 என்ற விலையில் கிடைக்கிறது.
தகுதி ஏதேனும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இத்தேர்வு குறித்து முழுவிபரம் அறிய www.xatonline.net.in  என்ற தளம் செல்க.

இதே நாள்...


  • அல்பேனியா விடுதலை தினம்(1912)
  •  நியூசிலாந்தில் பெண்கள் முதல்முறையாக வாக்களித்தனர்(1893)
  •  பனாமா, ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது(1821)
  •  நாசா, செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது(1964)

அரசு மருத்துவமனையில் நர்ஸ் போல் நடித்து குழந்தை கடத்தல் பெண் கைது!


குழந்தை இல்லாத ஏக்கத்தில், ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மருத்துவமனையில், நர்சு போல் நடித்து, ஆண் குழந்தையை கடத்தி சென்ற பெண்னை, மருத்துவமனை ஊழியர்கள், மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்தவர், ராஜசேகர், கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜனனி, 23. ராயப்புரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி ஆண் குழந்தை பெற்றார். வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் 12 மணிக்கு, ஒரு பெண், நர்சு வேடம் போட்டு, வார்டுக்கு சென்றார். தடுப்புசி போட வேண்டும் எனக் கூறி, குழந்தையை தூக்கிச் சென்றார். குழந்தையை தூக்கி கொண்டு, மருத்துவமனை விட்டு வெளியே வந்தார். அப்போது, வாசலில் நின்ற காவலாளி, "டிஸ்சார்ஜ்'க்கான ஆவணங்களை கேட்டுள்ளார். பெண் திரு திருவென முழிப்பதை பார்த்து, அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில், ராயபுரம் சூரிய நாராயண தெருவைச் சேர்ந்த கந்தவேலு மனைவி அனுசுயா, 25 என்பதும், திருமணமாகி மூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் அவதிப்பட்டதால், இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாய பொருட்களை சேமித்து பாதுகாக்க 50 நவீன கிடங்குகள்.


விவசாயப் பொருட்களை பாதுகாக்க 82 கோடி ரூபாய் செலவில், 50 நவீன கிடங்குகளை புதிதாக அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த ஆண்டு தானிய உற்பத்தியில், 115 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயர் இலக்கை, தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கும், அதன் வாயிலாக அவர்களின் தனிநபர் வருமானம் உயருவதற்கும், வழிவகை செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிறு மற்றும் குறு விவசாயிகள், பயிர்க் கடனை திரும்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும், பயிர்களை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதாலும், அறுவடை முடிந்தவுடன் கிடைத்த விலைக்கு தங்கள் விளைபொருட்களை விற்று விடுகின்றனர். இதனால், தாங்கள் விளைவித்த பயிர்களுக்கு, நல்ல விலை கிடைக்காமல், விவசாயிகள் அவதிப்படுகின்றனர். விலை வீழ்ச்சியின் போது, பொருட்களை பாதுகாத்து, பின்னர் விலை ஏற்றத்தின் போது விற்பனை செய்வது, விவசாயிகளின் வருவாயை பெருக்க உதவும். அறுவடை காலங்களில் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சியும், தேவை அதிகரிக்கும் போது, உற்பத்தி இல்லாததால் விலை ஏற்றமும் ஏற்படுவது தடுக்கப்படும். இவற்றை கருத்தில் கொண்டு, எடை போடும் இயந்திரங்கள், எடை மேடைகள், ஈரப்பதமானி போன்ற வசதிகளுடன் கூடிய, நவீன முறையிலான சேமிப்புக் கிடங்குகள் கூடுதலாக உருவாக்கப்படும். இதன்படி, லாரி நிறுத்தம் வசதியுடன் கூடிய 10 ஆயிரம் டன் கொள்ளளவில், 25 கோடி ரூபாய் செலவில், எட்டு கிடங்குகளும், 2,000 டன் கொள்ளளவில் 37 கோடி ரூபாய் செலவில் புதிய கிடங்குகள் அமைக்கப்படும். இதற்கு அடுத்ததாக, தமிழகத்தின் 37 இடங்களில் கிடங்குகளும் பல பகுதிகளில் அமைகின்றன. மொத்தம் 50 நவீன கிடங்குகள் உருவாக்கப்படுவதன் மூலம், விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பொருட்களை நல்ல முறையில் பாதுகாத்து, அவற்றை நல்ல விலைக்கு விற்பனை செய்ய வழிவகை ஏற்படும். இவ்வாறு, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு இலங்கை ஏஜன்ட் போல் செயல்படுவதா? விஜயகாந்த்!!


இலங்கை அரசின் ஏஜன்ட் போல் செயல்படுவதை, மத்திய அரசு இனியாவது விட்டுவிட வேண்டும். தமிழக மீனவர்கள், இந்திய குடிமக்கள் என்று உணர்ந்து, கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை திரும்பப் பெற வேண்டும்'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை : இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், கடலோர காவல் படை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குச் செல்வதால் தான் ஆபத்து ஏற்படுவதாகவும், கடல் எல்லையில் இருந்து ஐந்து மைல் தூரம் வரை மீன் பிடிக்கக் கூடாது என அறிவித்து விட்டதால், இனி பிரச்னை எழாது என்றும் தெரிவித்துள்ளது. இது பொறுப்பற்ற, விஷமத்தனமான, தீமை விளைவிக்கக்கூடிய போக்காகும்.

இந்த கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும், காலம் காலமாக மீன்பிடித்து வருகின்றனர். விடுதலைப் புலிகள் பேரை சொல்லி தமிழக மீனவர்கள் மீது, இலங்கை அரசு தாக்குதல் நடத்தியது. இப்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தை இல்லாமலே செய்துவிட்டோம் என, இலங்கை அரசு கூறுகிறது.இதன் பிறகும் இலங்கை கப்பல் படை, தமிழக மீனவர்களை தாக்குவதும், அவமானப்படுத்துவதும், பிடித்து வைத்துள்ள மீன்களையும், படகுகளையும் கைப்பற்றுவதும் நடக்கிறது. இந்த கொடுமையில் இருந்து மீனவர்களை காப்பதற்காகவே, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய கடலோர காவல் படை அளித்துள்ள பதிலை பார்க்கும் போது, இலங்கை அரசே, மத்திய அரசை விட எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல், நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கில், முதலுக்கே மோசம் என்ற அளவில் மத்திய அரசின் பதில் அமைந்துள்ளது. உண்மையிலேயே தமிழக மீனவர்கள், இந்திய குடிமக்கள் என்ற உணர்வு, மத்திய அரசுக்கு இருக்குமானால், கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை திரும்ப பெற வேண்டும்.இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி இந்திய, இலங்கை கடல் பகுதியில் இருநாட்டு மீனவர்களும் தாராளமான மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும். இனியாவது மத்திய அரசு தனது தவறை உணர்ந்து இலங்கை அரசின் ஏஜன்ட் போல் செயல்படுவதை விட்டுவிட வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 38 கோயில்கள் அருகே விதிமுறைகளை மீறிய கட்டடங்களை அகற்றும் உத்தரவின் கெடு முடிந்தும் நடவடிக்கை இல்லை!


தமிழகம் முழுவதும் 38 கோயில்கள் அருகே விதிமுறைகளை மீறிய கட்டடங்களை அகற்றும் உத்தரவின் கெடு முடிந்தும் நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அதிகாரிகள் தயக்கத்தில் உள்ளனர். தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர்கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் என தமிழகம் முழுவதும் 38 கோயில்கள் தமிழகத்தின் புராதான கோயில்களாக உள்ளன. தூரத்தில் இருந்து பார்த்தாலும் கோபுர தரிசனம் தெரியவேண்டும் என்ற நோக்கிலும் கோயில்களுக்கு அருகே பெரிய கட்டங்கள் கட்டினால் கோயில்களின் அழகு மறைக்கப்படும் என்பதால் கடந்த 97ல் தமிழக அரசு உத்தரவை ஒன்றை பிறப்பித்தது. 

இதன்படி கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் கட்டப்படும் கட்டடங்களின் உயரம் தரைத்தளம், முதல் தளத்தை சேர்த்து 9 மீட்டர் உயரத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது. 97ம் ஆண்டிலேயே இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும் சிறிய கடைக்காரர்கள், வீடு கட்டுவோரிடம்தான் மாநகராட்சி, உள்ளாட்சி நிர்வாகத்தினர் கெடுபிடியாக உள்ளனர். ஆனால் பெரிய வியாபாரிகளையோ, அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவோர்களையோ கண்டுகொள்வதில்லை. தமிழகம் முழுவதும் 38 கோயில்களை சுற்றிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அதன் உரிமையாளர்களை 9 மீட்டருக்கு

மேல் இருந்தால் இடித்துக்கொள்ளவேண்டும் என்றும் மீறி மாநகராட்சி நிர்வாகம் அகற்றவேண்டி வந்தால் அதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்தவேண்டிவரும் எனவும் அகற்றாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அகற்றுவோம் எனவும் இந்த உத்தரவு வழங்கப்பட்டு 7 நாட்களுக்குள் கட்டடத்தை அகற்றவேண்டும் எனவும் கூறியிருந்தனர். ஆனால் இந்த நோட்டீஸ் கட்டட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிறது.

பக்தர்கள் எதிர்பார்பு ? இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கட்டட உரிமையாளர் ஒருவர் கூறுகையில், 97ம் ஆண்டிலேயே இந்த உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது. திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் 97க்கு பிறகும் கூட புதிய கட்டடங்கள், நெல்லையப்பர் கோயில் கோபுரத்தை மறைக்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றுக்கொண்ட கட்டட உரிமையாளர்கள் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. நெல்லை மாநகராட்சி அதிகாரிகளும் இதுகுறித்து நோட்டீசை கொடுத்ததோடு கடமை முடிந்துவிட்டதாக உணர்கின்றனர். நடவடிக்கை எப்போது இருக்கும் என பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தலாய்லாமா பங்கேற்கும் டில்லி நிகழ்ச்சியால் சீனாவுக்கு அதிருப்தி!


புத்த மத துறவியான தலாய்லாமா இந்தியாவில் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பேசவிருக்கிறார் என்ற விஷயத்தினால் அதிருப்தி அடைந்த சீனா இந்தியாவுடன் நடத்தவிருந்த முக்கிய பேச்சில் பங்கேற்காமல் தள்ளி போட்டுள்ளது. திபெத்தில் வாழும் புத்த பிட்சுகள் தனி உரிமைக்காக போராடி வரும் தலாய்லாமா என்றாலே சீனாவுக்கு எப்போதும் கடும் வெறுப்பாகத்தான் இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவை சந்திக்கவிருக்கிறார் என்றதும் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் இருந்து புத்த துறவிகள் பங்கேற்கும் 4 நாள் விழா டில்லியில் வரும் புதன்கிழமை துவங்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வெளியுறவு துறை அமைச்சகமும் இணைந்து நடந்துகிறது. 

இந்த நிகழ்ச்சி குறித்து அதிருப்தி அடைந்த சீனா தனது குமுறலை தெரிவிக்கும் விதமாக இருநாடுகள் மூத்த அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு தடை பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் பெய்ஜீங்கில் அந்நாட்டு <உயர் அதிகாரிகளுடனான பேச்சு நடத்தினார். இதனையடுத்து 15ம் கட்ட பேச்ச வார்த்தை நாளை ( திங்கட்கிழமை ) நடப்பதாக இருந்தது. ஆனால் எவ்வித காரணம் தெரிவிக்காமல் இந்த பேச்சு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய - சீன தரப்பில் யாரும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். இருப்பினும் இன்னும் எதிர்காலத்தில் இருதரப்பினருக்கும் வசதியாக ஒரு நாள் நிர்ணயிக்கப்படும் என அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.

வேலை தருவதாக முறையற்ற செக்ஸ் உறவு


வேலை தருவதாகக் கூறி, தகாத உறவு கொண்டு ஏமாற்றியதால், தொழில் அதிபரை கொன்றோம் என்று, தம்பதியினர் போலீசாரிடம் கூறியுள்ளனர். சென்னை, நங்கநல்லூர், அபிலாஷ் அப்பார்ட்மென்டைச் சேர்ந்த சந்திரசேகர், 55. கொசுவலை பொருத்தும் தொழில் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி கவுரி, 45; வங்கி அதிகாரி.கடந்த 18ம் தேதி பணிக்குச் சென்ற கவுரி, இரவு 10:30 மணிக்கு வீடு திரும்பிய போது, வீட்டின் படுக்கையறையில், அவரது கணவர் சந்திரசேகர் பிணமாகக் கிடந்தார். ஆறு மோதிரங்கள், பிரேஸ்லெட் என, எட்டு சவரன் நகைகள், வாட்ச், இரண்டு மொபைல்கள் மாயமாகியிருந்தன.பழவந்தாங்கல் போலீசார் விசாரித்தனர்.

துணை கமிஷனர் சண்முகராஜேஷ்வரன் மேற்பார்வையில், தனிப்படை அமைத்து, கொலை செய்ததாக சிவக்குமார், 36, மற்றும் கவிதா, 28, ஆகியோர் பல்லடம் அருகே சின்னக்கரையில், கைது செய்தனர்.விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில், அவர்கள் கொலையாளிகள் என உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், சூரக்குடியைச் சேர்ந்தவர் சிவக்குமார். பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால், வீட்டாருடன் தொடர்பற்றுப் போனது. மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அவர் பிரிந்து சென்ற நிலையில், சிவக்குமார், அவினாசிக்கு வந்துள்ளார்.அங்கு தான், புதுச்சேரி அருகில் உள்ள பாகூரைச் சேர்ந்த கவிதாவை சந்தித்துள்ளார். கணவனை பிரிந்து குழந்தையுடன், ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய கவிதாவை, திருமணம் செய்தார்.பின்னர் சென்னையில் வேலை தேடியபோது, சந்திரசேகரின் விளம்பரத்தை பார்த்து, கவிதா அதிலிருந்த எண்ணில், சந்திரசேகரை தொடர்பு கொண்டுள்ளார். அதன்பின், கவிதாவை பலமுறை தொடர்பு கொண்ட சந்திரசேகர், வேலைக்கு வந்தால், அதிகளவில் சம்பளம் தந்து பார்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 16ம் தேதி , கவிதா பணியில் சேர்ந்தார். அன்று பிற்பகல் மனைவி வங்கிக்குச் சென்றதும், கவிதாவை அழைத்த சந்திரசேகர், பணமும், இருக்க இடமும் தருவதாகக் கூறி, உறவு வைத்துக் கொண்டார். அடுத்த நாளும் அழைத்து உல்லாசம் அனுபவித்ததுடன், தனக்கு தெரிந்த வேறு ஒருவருடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றார். இதற்கு ஒப்புக் கொள்ளாத கவிதா, சிவக்குமாரிடம் நடந்ததை கூறியுள்ளார். இருவரும் சந்திரசேகரை ஒழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு, 18ம் தேதி, சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று, அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.அப்போது, சந்திரசேகரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி, டெலிபோன் ஒயரைக் கொண்டு கழுத்தில் இறுக்கி கொலை செய்துவிட்டு, நகைகள் மற்றும் மொபைல் போன் உள்ளிட்டவற்றை எடுத்து தப்பிவிட்டனர்.கொலையாளிகள் பிடிபட்டதை, சென்னை பெருநகர சட்டம் - ஒழுங்கு கூடுதல் கமிஷனர்  நிருபர்களிடம் விளக்கினார்.

கருமமே கண்ணாயினராக இருக்கும் எதிர்க்கட்சிகள்...?


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, உச்சக்கட்ட வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கனிமொழிக்கும், ராஜாவுக்கும் பெயில் கிடைக்குமா என்ற கேள்வி புறந்தள்ளப்பட்டு, அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற அளவுக்கு வேகமெடுத்துவிட்டது. ஆனால், இந்த வழக்கின் இரண்டு கிளைகள் இன்னமும் தொடப்படாமலேயே உள்ளன. ஒன்று, ஸ்பெக்ட்ரம் வழக்கில், இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பங்கு. அடுத்தது, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மீதான நடவடிக்கை.அரசியல் கட்சிகள், எப்போதுமே அடுத்தடுத்த விஷயங்களுக்கு தாவும் குணமுடையவை. ராஜா விலக வேண்டும் எனக் கோரின. அவர் விலகியதும், தயாநிதியை நீக்கக் கோரின. அவர் ராஜினாமா செய்ததும், சிதம்பரம் பக்கம் பார்வையைத் திருப்பிவிட்டன. ராஜா, நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபடி வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.அதே போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான தயாநிதி, பார்லிமென்டில் அமர்ந்தபடி, சிதம்பரத்துக்கு எழுந்துள்ள சிக்கலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆளுங்கூட்டணி வரிசையிலேயே அவர் அமர்ந்திருந்தும், கருமமே கண்ணாயினராக இருக்கும் எதிர்க்கட்சிகள், சிதம்பரத்தை மட்டுமே குறிவைக்கின்றன; தயாநிதியை மறந்துவிட்டன.அந்த நிம்மதியில் இருக்கும் சி.பி.ஐ.,யும், அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டது. இதேபோல, தயாநிதிக்கு எதிராக அமளி துமளி ஏற்பட்டபோது, கடந்த அக்., 9 ல், சி.பி.ஐ., அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு பண்ணியது. மறுநாள் காலை, அவருக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில், "திடீர்' சோதனை மேற்கொண்டது. அதோடு அந்த அத்தியாயம் முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது. மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.அப்படியானால், அந்த முதல் தகவல் அறிக்கையில் வலு இருக்கிறதா, இல்லையா? 

இதோ எப்.ஐ.ஆரின் முழு விவரம்: பதியப்பட்ட நாள்: 9.10.2011 காலை 10 மணி. இடம்: டில்லி சி.பி.ஐ., அலுவலகம். சட்டப் பிரிவுகள்: இந்திய தண்டனைச் சட்டம் 120 பி. ஊழல் தடுப்புச் சட்டம் 7, 12 மற்றும் 13 (1)டி-யுடன் இணைந்த 13 (2). குற்றச்சாட்டு: சதித்திட்டம், சட்ட விரோதமாக ஆதாயம் அடைதல், பொது ஊழியர் முறைகேட்டில் ஈடுபடுதல். சம்பவம் நடந்த இடங்கள்: டில்லி, சென்னை, மலேசியா, மொரீஷியஸ் மற்றும் சில. குற்றம் சாட்டப்பட்டவர்கள்: முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி, சன் டைரக்ட் "டிவி' இயக்குனர் கலாநிதி, ஆஸ்ட்ரோ ஆசியா நெட்வொர்க் நிறுவன இயக்குனர் ரால்ப் மார்ஷல், மலேசியாவின் உசாகா டேகாஸ் நிறுவனத் தலைவர் அனந்தகிருஷ்ணன், சன் டைரக்ட் "டிவி', ஆஸ்ட்ரோ ஆசியா நெட்வொர்க், மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனங்கள் மற்றும் பெயர் தெரியாத அதிகாரிகள், பிரமுகர்கள்.   

குற்றச்சாட்டு விவரம்:தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஏர்செல் டெலிவென்சர்ஸ் நிறுவனத்தை, தொழிலை விட்டே ஓடச் செய்யும் அற்ப நோக்கத்தோடு, அவர்கள் விண்ணப்பத்திருந்த ஏழு தொலைத்தொடர்பு வட்டங்களுக்கான உரிம விண்ணப்பத்தை, வேண்டுமென்றே தாமதித்தார்.அது மட்டுமின்றி, மத்திய பிரதேச வட்டத்துக்கான உரிமத்தை நீட்டிப்பது, உத்தர பிரதேசம் கிழக்கு மற்றும் மேற்குக்கான உரிமம் கோரும் கோப்பை நீண்ட நாட்களுக்கு தாமதித்த தயாநிதி, அற்பமான சந்தேகங்களையும், ஆட்சேபனைகளையும் எழுப்பி, தனது தனி உதவியாளர் சஞ்சய் மூர்த்தி மூலம் விளக்கம் கேட்டார்.அதே காலகட்டத்தில் விண்ணப்பித்த ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கு, எந்தச் சந்தேகமும் கேட்காமல் உரிமம் வழங்கப்பட்டது. இந்த தாமதத்தால், நுழைவுக் கட்டணம், உரிமக் கட்டணம், அலைவரிசைக் கட்டணங்கள் என, கிடைத்திருக்க வேண்டிய பல வருவாயை தொலைத்தொடர்புத் துறை இழந்தது.

ஏர்செல் பங்குகளை மாக்சிஸுக்கு விற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானதும், வங்கிக் கணக்கு பரிமாற்றம் தொடர்பாக, 2005 அக்டோபரில், ரால்ப் மார்ஷல் மற்றும் சிவசங்கரன் இடையே ஒரு பேச்சுவார்த்தைக்கு (கான்பரன்ஸ் கால் மூலம்) ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி ஏற்பாடு செய்தது. அப்போது, "மாறன் சகோதரர்களிடம் ஒப்புதல் வாங்கி விட்டேன். ஏர்செல்லின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும்' என ரால்ப் கூறியுள்ளார்.அதன் பிறகு, சிவசங்கரனை தொலைபேசியில் அழைத்த தயாநிதி, ஏர்செல் பங்குகளை மாற்றுவது தொடர்பாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கியுள்ளார். தொடர்ந்து, சிவசங்கரன் - கலாநிதி சந்திப்பு, 2005 நவம்பர் 12ம் தேதி சென்னையில் நடந்தது. அப்போது, "100 சதவீத பங்குகளையும் மாக்சிஸுக்கே விற்க வேண்டும். இதுதொடர்பாக தயாநிதி பேசுவார்' என கலாநிதி கூறியுள்ளார். சொன்னபடியே, அதே நாளில் தயாநிதியிடம் இருந்து சிவசங்கரனுக்கு போன் வந்தது. அன்றே சிவசங்கரன் - ரால்ப் சந்திப்பு, தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடந்தது. சிவசங்கரனிடம் நான்கு விதமான வாய்ப்புகளைக் கொடுத்து, அதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி ரால்ப் கூறினார். இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கு முன், தயாநிதியை கோலாலம்பூரிலும், டில்லி அலுவலகத்திலும் ரால்ப் சந்தித்து வந்தார்.ஏர்செல் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நிறுவனம், 629 கோடியே ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 203 ரூபாயை சன் டைரக்டில் முதலீடு செய்தது. இதற்காக, அப்போது தொழிலையே துவக்கியிராத சன் டைரக்டின் சந்தை மதிப்பு 4,039 கோடி ரூபாய் வரை மிகைப்படுத்திக் காட்டப்பட்டிருந்தது.

ஆனால், அன்று சந்தையின் 50 சதவீதத்தை ஆக்கிரமித்திருந்த டாடா ஸ்கை நிறுவனத்தின் வர்த்தக மதிப்பே 2,500 கோடி ரூபாயாகத் தான் இருந்தது. விசாரணையில், அந்த முதலீடு ஓர் உண்மையான வர்த்தகப் பரிமாற்றம் அல்ல; ஆதாயப் பணத்தைப் பெறுவதற்கான ஒரு வழியே எனத் தெரிய வந்தது.ஏர்செல் டெலிவென்சர்ஸ் நிறுவனத்தின் உரிமை மாற்றப்பட்ட பின், 2004 முதல் நிலுவையில் இருந்த மூன்று உரிமங்கள், 2005ல் இருந்து நிலுவையில் இருந்த நான்கு உரிமங்கள் என மொத்தம் ஏழு விண்ணப்பங்களும், 2006 டிச., 18 ல் வழங்கப்பட்டுவிட்டன. இதன் மூலம், தயாநிதி, தனது சகோதரர் கலாநிதி மூலம், சட்ட விரோதமாக, 549 கோடியே, 96 லட்சத்து, 1,793 ரூபாய் அளவுக்கு ஆதாயம் அடைந்தார்.

மேற்சொன்ன உண்மைகள் மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில், இவர்கள் அனைவரும் குற்றம் புரிந்ததற்கான பூர்வாங்க முகாந்திரங்கள் இருப்பது தெரிய வருகிறது. எனவே, சி.பி.ஐ.,யின் துணை கண்காணிப்பாளர் எஸ்.கே.சின்காவால் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.இவ்வாறு அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இவ்வளவு தகவல்கள், ஆரம்ப கட்ட விசாரணையிலேயே சி.பி.ஐ.,க்கு கிடைத்துள்ளன எனும்போது, முழு வீச்சிலான விசாரணை நடந்தால், எவ்வளவு உண்மைகள் வெளிவருமோ!

முகவரி மாற்றம் இனி முன் அனுமதி தேவையில்லை...


பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு, முன் அனுமதியின்றி நேரில் விண்ணப்பிக்கலாம்,'' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், கூடுதல் பக்கங்கள் சேர்ப்பு போன்ற பணிகள், ஒருவரின் பாஸ்போர்ட்டிலேயே செய்யப்பட்டு வந்தன. தற்போது, தனியார் பங்களிப்புடன் கூடிய புதிய பாஸ்போர்ட் வழங்கும் முறையில், இம்மாற்றங்களை செய்ய விரும்புவோர், புதிதாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இவ்விண்ணப்பங்களை சமர்பிக்க, நீண்ட காத்திருப்பிற்கு பின் தான், ஆன் - லைனில் அனுமதி கிடைத்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, இப்பணிகளுக்கான விண்ணப்பங்களை, முன் அனுமதி பெறாமல், தாம்பரம் பாஸ்போர்ட் உதவி மையத்தில் நேரில் சமர்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. aவிண்ணப்பத்தை, http://www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். விண்ணப்பதாரர்கள், ஆன் - லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், விண்ணப்ப குறிப்பு எண்(ஏ.ஆர்.என்.,) மற்றும் தேவையான அசல் சான்றிதழ்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். தாம்பரம் பாஸ்போர்ட் உதவி மையத்தில், வேலை நாட்களில் காலை 10 முதல், 1 மணி வரை, இவ்வசதியை பெறலாம்.

சர்க்கரை, இருதய நோயை குணப்படுத்தும் சாலூர் கிராம விவசாயிகள்!


 சர்க்கரை, இருதய நோயை குணப்படுத்தும் மருத்துவ குணமுள்ள கீரை வகைகளை, சாலூர் கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் பயிரிட்டு வருகின்றனர். சிவகங்கை அருகே சாலூர் கிராம ஊராட்சியின் கீழ் கீழ, மேல சாலூர், செவல்பட்டி, பாப்பாகுடி, பெருமாள்பட்டி, கொளுஞ்சிப்பட்டி உள்ளன. இங்குள்ள ஆயிரத்து 500 குடும்பத்தினரின் முக்கிய தொழில் விவசாயம். இரண்டாயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, மஞ்சள், பூ வகைகள் விளைகின்றன. இங்கு, நடக்கும் விவசாயத்தின் சிறப்பு, மருத்துவ குணமுள்ள கீரை வகைகளை விளைவிப்பது தான். இவை சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு உணவு, மருத்துவ தேவைக்காக அனுப்பப்படுகிறது.

வகைகள்: சிவப்பு, நாட்டு, வெள்ளை, பச்சை பொன்னாங்கன்னி, தண்டங்கீரை, பாலக்கீரை, காசினிக்கீரை, மணத்தக்காளி, சிறு கீரை, மஞ்சள் கரிசலாங்கன்னி, பருப்புகீரை, அரைக்கீரை, சக்கரவர்த்தி உட்பட 20க்கும் மேற்பட்ட வகையான கீரைகளை ஒரே கிராம விவசாயிகள் விளைவிக்கின்றனர்.

மருத்துவ குணம்: இக்கீரைகளை சாப்பிட்டால், இருதயத்தில் ரத்த ஓட்டம் சீராகும். காசினிக்கீரை சர்க்கரை, ரத்த கொதிப்பு நோயை தீர்க்கும். மணத்தக்காளி வயிற்றுப்புண் ஆற்றும். சிறுகீரை உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தும். மஞ்சள் கரிசலாங்கன்னி சாப்பிட்டால், மஞ்சள் காமாலை வராது. இக்கீரை சாற்றை, தலையில் தேய்த்தால் முடி கொட்டாது. வழுக்கை தலையில் முடி வரும்.பொன்னாங்கன்னி உடல் சூட்டை தணிக்கும். விவசாய பணிக்கே ஆள் பற்றாக்குறை உள்ள நிலையில், லாபம் இல்லாவிட்டாலும் மருத்துவ குணமுள்ள கீரைகளை விளைவித்து, மக்களை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதை, சேவையாக கருதி இக்கிராம விவசாயிகள் பணியாற்றுகின்றனர்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும்!

முதல் பகுதி ரொம்ப மெதுவாக படம் நகருகிறது பத்தாதற்கு இசை G.V. பிரகாஷ் தானான்னு யோசிக்க வைக்குது   பிற்பகுதி ரொம்ப நல்லா கொண்டுபோய் இருக்கும் செல்வராகவனுக்கு பாராட்டுக்கள் ஒரே  இசை படம் முழுவதும். ரொம்ப மொக்கையாய் பாராட்டுக்கள்.    

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...