தமிழகம் முழுவதும் 38 கோயில்கள் அருகே விதிமுறைகளை மீறிய கட்டடங்களை அகற்றும் உத்தரவின் கெடு முடிந்தும் நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அதிகாரிகள் தயக்கத்தில் உள்ளனர். தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர்கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் என தமிழகம் முழுவதும் 38 கோயில்கள் தமிழகத்தின் புராதான கோயில்களாக உள்ளன. தூரத்தில் இருந்து பார்த்தாலும் கோபுர தரிசனம் தெரியவேண்டும் என்ற நோக்கிலும் கோயில்களுக்கு அருகே பெரிய கட்டங்கள் கட்டினால் கோயில்களின் அழகு மறைக்கப்படும் என்பதால் கடந்த 97ல் தமிழக அரசு உத்தரவை ஒன்றை பிறப்பித்தது.
இதன்படி கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் கட்டப்படும் கட்டடங்களின் உயரம் தரைத்தளம், முதல் தளத்தை சேர்த்து 9 மீட்டர் உயரத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும் என கூறப்பட்டிருந்தது. 97ம் ஆண்டிலேயே இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும் சிறிய கடைக்காரர்கள், வீடு கட்டுவோரிடம்தான் மாநகராட்சி, உள்ளாட்சி நிர்வாகத்தினர் கெடுபிடியாக உள்ளனர். ஆனால் பெரிய வியாபாரிகளையோ, அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவோர்களையோ கண்டுகொள்வதில்லை. தமிழகம் முழுவதும் 38 கோயில்களை சுற்றிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அதன் உரிமையாளர்களை 9 மீட்டருக்கு
மேல் இருந்தால் இடித்துக்கொள்ளவேண்டும் என்றும் மீறி மாநகராட்சி நிர்வாகம் அகற்றவேண்டி வந்தால் அதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்தவேண்டிவரும் எனவும் அகற்றாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அகற்றுவோம் எனவும் இந்த உத்தரவு வழங்கப்பட்டு 7 நாட்களுக்குள் கட்டடத்தை அகற்றவேண்டும் எனவும் கூறியிருந்தனர். ஆனால் இந்த நோட்டீஸ் கட்டட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிறது.
பக்தர்கள் எதிர்பார்பு ? இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கட்டட உரிமையாளர் ஒருவர் கூறுகையில், 97ம் ஆண்டிலேயே இந்த உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது. திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் 97க்கு பிறகும் கூட புதிய கட்டடங்கள், நெல்லையப்பர் கோயில் கோபுரத்தை மறைக்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றுக்கொண்ட கட்டட உரிமையாளர்கள் அதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. நெல்லை மாநகராட்சி அதிகாரிகளும் இதுகுறித்து நோட்டீசை கொடுத்ததோடு கடமை முடிந்துவிட்டதாக உணர்கின்றனர். நடவடிக்கை எப்போது இருக்கும் என பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment