ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
04 October, 2011
அஜித்தை நடிக்க வைக்க ஏ.எம்.ரத்னம் மும்முரம்!
ஷங்கரின் படைப்புகளிலேயே அதிக கவுரவத்திற்குரிய படம் 'இந்தியன்'தான்.
அப்படத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்திருந்தார் கமல். ஊழலுக்கும்
லஞ்சத்திற்கும் எதிராக இந்தியன் தாத்தா போட்ட ஃபைட் அதன்பின் வேறெந்த
படங்களிலும் அவ்வளவு தத்ரூபமாக வெளிப்பட்டதா என்றால், படு திமிரோடு
சொல்லலாம் இல்லை என்று. க்ளைமாக்சில் முன் தலையில் முடிக் கற்றையை ஸ்டைலாக
நீவியபடியே வெளிநாட்டு வீதியொன்றில் நடந்து போகும் இந்தியன் தாத்தா,
சொல்லாமல் சொன்ன விஷயம்... இப்படத்தின் செகன்ட் பார்ட் சீக்கிரம்
வரப்போகிறது என்பதைதான். அது சீக்கிரம் நடக்கவில்லை என்றாலும் சில
வருடங்கள் கழித்து நடக்கவிருக்கிறது. ஆனால் அதில் நடிக்கிற அதிர்ஷ்டம்
கமலுக்கு இல்லை என்பதுதான் சோகம். மாறாக அஜித்திற்கு வந்து
சேர்ந்திருக்கிறது அந்த வாய்ப்பு. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில்
உருவாகவிருக்கும் புதிய படம் 'இந்தியன் பார்ட்-2'வாக இருக்கலாம் என்று
சுடச் சுட தகவலை கசிய விடுகிறார்கள் கோடம்பாக்கத்தில். சம்பந்தப்பட்ட
இடத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் செய்திகள் யாதெனில்,
'இந்தியன்' படத்தை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம் என்பதால் இப்படத்தின்
தொடர்ச்சியை எடுக்கிற உரிமையும் அவருக்கே உரித்தானது. அதனால் மிக எளிதாக
இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் அவர் என்பதுதான். இதை ஷங்கரே
எடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்பது ரத்னத்தின் விருப்பம். இது
தொடர்பாக அவர் ஷங்கரிடமும் பேசி வருகிறாராம். 'ஜீன்ஸ்' படத்திலேயே முதலில்
அஜித்தை நடிக்க வைக்கதான் நினைத்தார் ஷங்கர். அப்போது கைகூடவில்லை அந்த
முயற்சி. போகிற போக்கை பார்த்தால் இப்போது நிறைவேறிவிடும் போலிருக்கிறது. எப்டியோ... நலிந்துபோன தயாரிப்பாளருக்கு 'தல' மூலமா நல்லகாலம் பொறந்தா சரி!
இந்த வார ராசி பலன் (03-9-11 முதல் 09-10-11 வரை)
மேஷம்: பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம் மேம்படும். பண வரவு சீராக இருக்கும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். திட்டமிட்ட சுப காரியங்கள் நல்லபடியாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம்.
வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும்.
இருப்பினும் சிறப்பாக செயல்பட்டு உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.
மற்றபடி அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
இதே நாள்...
கறுப்புபணம் தகவல் பெற நிதித்துறையில் இந்தியா-சுவிஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
கறுப்புப்பணம் குறித்த தகவலினை பெற
சுவிட்சர்லாந்து இந்தியா இடையே வரி விதிப்பு முறையில் நிதித்தொடர்பான
பேச்சுவார்த்தையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு
வங்கியில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புபணம் பற்றிய தகவலினை பெற சில
வெளிநாட்டு வங்கிகள் தகவலினை தர உள்ளன. இதில் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள்
பதுக்கியுள்ள கறுப்புப்பணம் குறித்து வெளியிட இரு நாடுகளிடையே ஒரு
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு்ள்ளது. தற்போது சுவிட்சர்லாந்து
சென்றுள்ள இந்திய குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் அந்நாட்டு
தலைவர் மிச்செலியன்காலமி ஆகியோர் முன்னிலையில், சுவிட்சர்லாந்திற்கான
இந்திய தூதர் சித்ரா நாராயணன், சுவிஸ் நிதித்துறை செயலர் மைக்கேல்ஆம்புஹல்
ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம்
இந்தியாவிலிருந்து வரும் கறுப்புப்பணப்பரிமாற்றம் வெளியே வரும். மேலும்
இரு நாடுகளிடையே வரி விதிப்பு முறையிலும் மாற்றம் ஏற்படும்.
உலகளவில் சிறந்த 10 ஆன்லைன் வர்த்தக மையங்களில் 2015-ம் ஆண்டில் இந்தியாவின் பெங்களுரூ நகரமும்!
உலகளவில் சிறந்த 10 ஆன்லைன் வர்த்தக மையங்களில்
2015-ம் ஆண்டில் இந்தியாவின் பெங்களுரூ நகரமும் இடம் பெறும் என தகவல்கள்
வெளியாகியுள்ளன.. தகவல் தொழில் நுட்பத்துறையி்ல் இணையதள பயன்பாட்டை
பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது
தொலை தொடர்புத்துறையில் 3-ஜி சேவை, அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்)
ஆகியவற்றின் பயன்பாடும் இந்தியாவில் பரவலாக உள்ளது. தற்போது மலேஷியா,
பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இணையதளம் வாயிலாக அகண்ட அலைவரிசை, 3-ஜி
சேவையினை வெகுவாக பயன்படுத்தி முன்னேறி வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை
ஆன்லைன் வர்த்தகத்தில் பெங்களுரூ நகரமே முதலிடம் வகிக்கிறது. இதன்படி வரும்
2015-ம் ஆண்டிற்குள் உலகளவில் சிறந்த 10 ஆன்லைன் வர்த்தக மையங்களில்
இந்தியாவின் பெங்களுரூ நகரம் இடம் பெறும் என இந்திய ஆன்லைன் வர்த்தகத்தின்
பி-பி கம்யூனிகேசன் அமைப்பின் தலைவர் தீபாதாமஸ் தெரிவித்தார்.
கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்!
சரஸ்வதிபூஜையன்று மாணவர்கள் பாராயணம் செய்வதற்காக இப்பகுதி இடம்
பெற்றுள்ளது. புத்தகங்களை அடுக்கி தூபதீபம் காட்டியபின், இதனை மனம் ஒன்றி
படியுங்கள். கலைமகளின் அருளால் கல்வியில் முன்னேறலாம்.
அழகிய வெண்தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளே! அன்னையே! என்
மனத்தாமரையிலும் நீயே வீற்றிருக்க வேண்டும். பிரம்மதேவன் விரும்புகின்ற
வெண்சங்கு போன்ற நிறமும், அழகிய திருவடிகளும் கொண்ட தாயே! உன்னை
வணங்குகிறேன். அறுபத்து நான்கு கலைகளுக்கும் இருப்பிடமானவளே! வெண்பளிங்கு
போல் ஒளி பொருந்தியவளே! எனது கல்வியில் தடை நேராதவாறு என்றென்றும் நீயே
காத்தருள வேண்டும். வெண்பளிங்கு நிறமும், பவளம் போல் சிவந்த இதழும்,
உடுக்கை போல இடையும், தாமரை மலர் போன்ற கரங்களும் உடைய கலைமகளே! தினமும்
உன்னை மறவாமல் நினைக்கும் பாக்கியத்தை தந்தருளவேண்டும். அறிஞர்களால்
விரும்பப்படுபவளே! பச்சை இலைகளைக் கொண்ட மணம் மிக்க தாமரையில் வாழ்பவளே!
முத்துமாலையைக் கையில் ஏந்தியவளே! கலைகளின் நாயகியே! வேதம் நான்கையும்
காத்தருள்பவளே! உன் அருளின் தன்மையை வியந்து போற்றுகின்றேன். சொர்க்கம்,
பூமி, பாதாளம் ஆகிய மூவுலகங்களையும் படைத்தவளே! சூரியோதய வேளையிலும்,
சந்திரோதய வேளையிலும் எழில் ஓவியம் போன்று காட்சி தருபவளே! அன்று மலர்ந்த
பூவைப் போன்ற முகத்தையுடையவளே! என்னை ஆட்கொண்டு கல்வி நலம் தந்தருளி
அருள்புரிய வேண்டும். அன்னையே! உன் திருவடியை வணங்குபவர்களின் மனதில்
புகுந்து அக இருளைப் போக்குபவளே! அறிவிற்கு ஆதாரமாய் திகழ்பவளே! ஞானத்தின்
பிறப்பிடமே! நாவில் உறையும் நாமகளே! திருமாலின் உந்திக் கமலத்தில் வாழும் பிரம்மனின்
துணைவியே! மாலை நேர நிலவொளியாய் குளிர்ச்சி கொண்டவளே! தாயே! உன்னருளை என்
மீது பொழியச் செய்யவேண்டும். பெண் மான் போன்ற மருட்சி தரும் பார்வை
உடையவளே! குற்றத்தைப் போக்கியருளும் குணக்குன்றே! அறியாமையை நீக்கும்
மாமருந்தே! மெல்லிய பூங்கொடியாய் மகிழ்ச்சியில் திளைப்பவளே! உன் திருவடித்
தாமரைகளை என் முடி மீது வைத்து அறிவுக்கண்ணைத் திறந்தருள்வாயாக. சுவடி,
ஸ்படிகமாலையைத் தாங்கி இருப்பவளே! உபநிஷதங்களின் உட்பொருளானவளே! பாடுவோர்,
கல்வி பயில்வோர் நாவில் குடியிருப்பவளே! உலகத்தில் இருக்கும் பொருட்செல்வம்
யாவும் அழிந்து போனாலும், என்றென்றும் அழியாத கல்விச் செல்வத்தை
தந்தருள்பவளே! உன்னையன்றி வேறு கதி எனக்கில்லை! உன் கருணைப் பார்வையை என்
மீது சிந்துவாயாக. கருணை விழிகாட்டி கல்வியை வாழச்செய். சரஸ்வதி தாயே!
உன்னை நினைக்கும் நேரமெல்லாம் என் மனதிற்குள் புகுந்து விடு. பேசும்போது
என் நாக்கில் அமர்ந்து கொள். என்னை நல்வழிப்படுத்து. சகலகலாவல்லியே! தரமான
கல்வி, தர்ம வழியில் ஈட்டிய செல்வம், புகழ்மிக்க வாழ்வு ஆகியவற்றை எனக்கு
தந்தருள்வாயாக.
சரஸ்வதிக்குரிய நட்சத்திரங்கள்: சரஸ்வதிக்குரிய
நட்சத்திரம் மூலம். இந்த நட்சத்திரம் உச்சமாயிருக்கும் வேளையில் சரஸ்வதியை
ஆவாஹனம் செய்து பூஜிப்பது வழக்கம். திதியின் அடிப்படையில் நவமியன்று பூஜை
செய்வர். அதனால் சரஸ்வதி பூஜைக்கு மகாநவமி என்றும் பெயருண்டு. இந்த ஆண்டு
அக்.4ல் மூலநட்சத்திரம் வந்தது. அக்.5ல் நவமி வந்துள்ளது. இந்தக்
குழப்பத்தை தீர்க்கத்தான், ஒரு காலத்தில் மூலத்தன்று தொடங்கி திருவோண
நட்சத்திரம் வரை நான்கு நாட்கள் சரஸ்வதிக்கு பூஜை செய்தனர். காலப்போக்கில்
இவ்வழிபாடு மறைந்துபோனது. நட்சத்திரங்களில் மூலமும், திருவோணமும்
கல்விக்குரியவை. திருவோணத்திற்கு சிரவணம் என்றும் பெயருண்டு. சிரவணம்
என்பதற்கு குருவின் உபதேசங்களைக் கேட்டல் என்று பொருள்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்: கல்வி தெய்வமான
சரஸ்வதிக்குரிய பூஜையை ஆயுதபூஜை என்பர். தொழில்முறையில் அவரவருக்குரிய
தொழிற்கருவிகளை இந்நாளில் வழிபடுவதால் இப்பெயர் வந்தது. வாழ்வில் வெற்றி
பெற, ஒருவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க
வேண்டும். அம்பிகையின் அருள் ஒருவனுக்கு இருந்தால், அவன் தைரியசாலியாக
இருப்பான். சரஸ்வதியின் அருள் பெற்றவர்களின் கையில் கத்திக்குப் பதிலாக
எழுத்தாணியே இருந்தது. இதையே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று
குறிப்பிட்டனர். எழுத்து என்பது மிகப்பெரிய சக்தி. பல வல்லரசுகளையும்
ஒருவனது எழுத்து கவிழ்த்து விடும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத்
தூண்டும்.இலக்கிய விருதில்
வாக்தேவி சின்னம்! இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஞானபீடம் விருது வழங்கப்படுகிறது. இந்த
விருதில் இடம்பெற்றுள்ள சின்னத்தை வாக்தேவி (வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி)
என்பர். கி.பி.1034ல் போஜமகாராஜன் உஜ்ஜயினியில் நிர்மாணித்த கோயிலில் உள்ள
சரஸ்வதியின் வடிவம் இது. தற்போது இந்தச்சிலை லண்டன் பிரிட்டிஷ்
அருங்காட்சியகத்தில் உள்ளது. ஞானபீடபரிசு பெறுபவருக்கு பஞ்சலோக வாக்தேவி
சிலை வழங்கப்படும். அவள் 14 இதழ்களைக் கொண்ட பத்மபீடத்தில் நின்றபடி
காட்சிதருவாள். இந்த இதழ்கள் 14 இந்திய மொழிகளைக் குறிப்பதாகும். இவளது
கைகளில் கமண்டலம், பத்மம், ஜபமாலை, சுவடி இருக்கும்.
ஃபார்மசிஸ்ட் படிப்பின் முக்கியத்துவம்!
மருத்துவ சுற்றுலாவில் இந்தியா பிரதான இடம் வகிக்கிறது. வெளிநாடுகளில்
இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருபவர்களின் எண்ணிக்கை
அதிகரித்திருக்கிறது. சிறு நகரங்களில் கூட பல்நோக்கு மருத்துவ மையங்கள்
வந்து விட்டன. கிராமங்களுக்கு மிக அருகில் மருத்துவமனைகளும், ஏராளமான மருந்து விற்பனைக் கடைகளும் தோன்றியிருக்கின்றன. அதிக மக்கள்தொகை, அதிகரித்திருக்கும் உடல் நலம் பேணுதல் பற்றிய
விழிப்புணர்வு போன்றவற்றால், மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்து கொண்டே
இருக்கிறது. மருத்துவர்களுக்கான தேவை மட்டுமின்றி மருத்துவம் சார்ந்த பிற
துறைகளிலும் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் மருந்தாளுனர்
பணியிடமும் ஒன்று.
பிளஸ் 2வில் கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் படித்திருக்க
வேண்டும். இத்துறையில் டிப்ளமோ(டிஃபார்ம்) மற்றும் இளநிலைப்
படிப்புகள்(பிஃபார்ம்) வழங்கப்படுகின்றன. பிஃபார்ம் படிப்புக்கு மாநில
அளவிலான நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மருந்தாளுனர்
பணி என்பது டாக்டரின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை தயாரித்தல்,
மருந்துக் கலவைகளை உருவாக்குதல், மாத்திரைகள், ஊசிமூலம் செலுத்தப்படும்
மருந்துகள் தயாரித்தல், ஆயின்மென்ட்கள், மருந்துப்பொடிகள் தயார்செய்தல்
உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கியது.
மருந்துகளைப் பயன்படுத்தும் முறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி
விளக்கத் தெரிய வேண்டும். வேறுபட்ட மருந்துகளின் குணம் பற்றி, டாக்டருக்கு
ஆலோசனைகள் வழங்க வேண்டி இருக்கும். மருந்துக்கடைகள் பற்றிய அரசு ஆணைகள்,
நெறிமுறைகள் பற்றிய ஆவணங்களை முறையாக பரமாரித்து வர வேண்டும். மருத்துவமனைகளில் பணிபுரியும் மருந்தாளுனருக்கு, டாக்டரால்
பரிந்துரைக்கப்படும்; வெளிச்சந்தையில் எளிதில் கிடைக்காத சில மருந்துகளை
கலவைகளின் மூலம் உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும். சில அவசர
காலகட்டத்தில் டாக்டர் அருகில் இல்லாத போது, நரம்பு வழி மருந்து
செலுத்துதல் போன்ற முதலுதவி செய்ய வேண்டும்.
சில்லறை விற்பனைக் கடைகளில் மருந்துகளை விற்பனை செய்பவராகவும், சொந்தமாக கடை நடத்துபவராகவும் இப்படிப்பு உறுதுணையாக இருக்கும்.
இதில் உயர்படிப்புகள் படிப்பதன் மூலம், மருந்துகளின் தரம் பற்றி ஆய்வு
செய்யும் பணியில் ஈடுபடலாம். மருந்து ஆய்வாளர் பணியிடம், ஆய்வகங்களில்
பரிசோதகர், பயிற்றுனர் போன்ற பணிகளையும் செய்யலாம். முதுநிலை, பிஎச்.டி.,
படிப்புகளும் இதில் உள்ளன. கல்லூரிகளில் விரிவுரையாளராகச் சேரலாம்.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய,
விற்பனைப் பிரதிநிதிகளை நியமனம் செய்கின்றனர். மெடிக்கல் ரெப் எனும்
இப்பணியிடத்துக்கு டிஃபார்ம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தகுதி
கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கலந்துரையாடும் திறனும்,
மொழிவளமையும் மிக்கவர்கள் மெடிக்கல் ரெப் பணியிடத்தில் கணிசமான வருவாய்
ஈட்ட முடியும்.
அரசு மற்றும் தனியார் துறையில் ஏராளமான பணியிடங்கள் உள்ளன.
அரசுத்துறையில் உள்ள சில பணியிடங்கள் மாநில அரசின் தேர்வாணையத்துறையால்
நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. சில பணியிடங்கள்
வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தனியார்
துறையில் வேலைவாய்ப்பை ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களின் மூலம்
அறியலாம். விருப்பமுள்ளவர்கள் சொந்தமாக சில்லறை விற்பனைக் கடைகளை துவக்கி
தொழில்முனைவோர் ஆகலாம். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இதற்கான கல்லூரிகள் உள்ளன. இப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான தகவலுக்கு www.pci.nic.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.
வறுமைக்கோட்டுக்கு புதிய அளவுகோல் மத்திய அரசு!
நாளொன்றுக்கு ரூ 32க்கு மேல் நுகர்வுத் திறன் கொண்ட தனி நபர்கள்
'வறுமைக்கோட்டு'க்குக் கீழ் வசிப்பவர்கள் என மத்திய அரசு முதலில்
அறிவித்திருந்தது. ஆனால் அந்த அறிவிப்பு பெரும் சர்ச்சைக்குள்ளானதால் புதிய
முறையில் வறுமைக்கோடு அளவு நிர்ணயம் செய்யப்படும் என்று, மத்திய அரசு
அறிவித்துள்ளது.
நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு,
உணவு பொருட்கள் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களில் சலுகைகள்
வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்
யார்? என்பதை வரையறை செய்வதில் குழப்பம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக,
உச்சநமீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மத்திய திட்டக் குழு சார்பில் பிரமாண
பத்திரம் ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில்
நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.32-ம் (5 பேர் கொண்ட குடும்பத்துக்கு
ரூ.4824), கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.26-க்குள்ளும் (5 பேர்
கொண்ட குடும்பத்துக்கு ரூ.3905) செலவழிப்பவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்
உள்ளவர்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு திட்டக்
குழுவின் இந்த விளக்கத்துக்கு, அரசு தரப்பு உள்பட நாடு முழுவதும் பலத்த
எதிர்ப்பு கிளம்பியது. மராட்டிய மாநில பழங்குடியினப் பெண்கள், குறிப்பிட்ட
இந்த தொகைக்கு ஏற்ப நீங்கள் குடும்பம் நடத்த முடியுமா? என்று கேட்டு,
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு காசோலை ஒன்றை அனுப்பி, வித்தியாசமான முறையில்
தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர்
ராகுல் காந்தி, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, தேசிய
ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்கள் அருணா ராய், என்.சி.சக்சேனா ஆகியோரும்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், திட்டக் குழு துணைத்
தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிந்து
வந்தவுடன் நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்த
விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் இந்த விவகாரம்
குறித்து திட்ட கமிஷனின் நிலைப்பாடு குறித்து திங்கட்கிழமை (நேற்று)
அறிக்கை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து,
மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அலுவாலியாவை
நேற்று சந்தித்துப் பேசினார். கூட்டத்தின் முடிவில் நிருபர்களிடம் பேசிய
ஜெய்ராம் ரமேஷ், இந்த விவகாரத்துக்கு தாங்கள் சுமுக தீர்வு கண்டுவிட்டதாக
தெரிவித்தார்.
காரில், பார்க்கில், பாத்ரூமில்... 'செக்ஸ்!
நியூயார்க்கில் செக்ஸ் குறித்த ஒரு சர்வேயை எடுத்துள்ளனர். அதில் பல
நூதனமான, வித்தியாசமான விவரங்கள் கிடைத்துள்ளதாம். வழக்கமாக எல்லோரும்
படுக்கை அறையில்தான் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். இதுதான் இயல்பானது.
ஆனால், இந்த சர்வேயில் கிடைத்துள்ள தகவல்கள் வியப்பளிப்பதாக உள்ளது.
சர்வேயில்
மொத்தம் 500 பேர் கலந்து கொண்டு தாங்கள் எங்கெல்லாம் செக்ஸ் உறவை வைத்துக்
கொள்வோம் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். சர்வேயில் கலந்து
கொண்டவர்களில் 46 சதவீதம் டாக்சியின் பின்பக்க டிக்கியில் உறவு வைத்துக்
கொள்வோம் என்று கூறியுள்ளனர். 31 சதவீதம் பேர் காரில் வைத்துக்
கொள்வதாகவும், 18 சதவீதம் பேர் பார்க்கில் என்றும், 9 சதவீதம் பேர் பொதுக்
கழிப்பறைகள் மற்றும் பாத்ரூம்களில் என்றும் பதிலளித்துள்ளனர்.
ப்ரூக்ளினைச்
சேர்ந்த 29 வயதுப் பெண் ஒருவர் கூறுகையில், நானும், எனது துணையும்
எப்போதுமே பொது கழிப்பறை மற்றும் பாத்ரூமில்தான் உறவு கொள்வோம். ஒருமுறை
ரெஸ்டாரென்ட் ஒன்றுக்குச் சென்றோம். நேராக பாத்ரூமுக்குப் போனோம், அங்கு
செக்ஸ் வைத்துக் கொண்டோம். பின்னர் கிளம்பிப் போய் விட்டோம். ஒரு கூல்
டிரிங்ஸ் கூட சாப்பிடவில்லை என்றாராம். சர்வேயில் கலந்து
கொண்டவர்களில் 43 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன்
உறவு கொள்வதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 55 சதவீதம் பேர் குரூப்
செக்ஸில் தவறில்லையே என்று தெரிவித்துள்ளனர்.
மன்ஹாட்டனைச் சேர்ந்த
52 வயது நபர் கூறிய தகவல் 'கிரேஸி'யாக இருந்தது. நானும், எனது கேர்ள்
பிரண்ட்டும் டின்னருக்கு ஒரு ரெஸ்டாரென்ட்டுக்குப் போயிருந்தோம். அங்கு
சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினோம். பின்னர் இருவரும் செக்ஸ் வைத்துக்
கொண்டோம். அதை முடித்து விட்டு நான் மீண்டும் ரெஸ்டாரென்ட் வந்தேன். அங்கு
நாங்கள் சாப்பிட்ட டேபிளின் பொறுப்பாளராக இருந்த சர்வர் பெண்ணை அப்போதே
நான் கண் வைத்து விட்டேன். அவரிடம் போய் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்று
கேட்டன், அவரும் ஓ.கே. சொன்னார். பின்னர் அதே இரவில் அவருடனும் உறவு
கொண்டேன் என்று கூறியுள்ளார்.
சர்வேயில் பங்கேற்றவர்களில்
கிட்டத்தட்ட 69 சதவீதம் பேர் முரட்டுத்தனமான காதலில் தாங்கள் ஈடுபடுவதாக
கூறுகின்றனர். அதாவது உண்மையான அன்பு, நேசம், காதல் என்றில்லாமல்,
உறவுக்காக மட்டுமே தாங்கள் பெண்கள் அல்லது ஆண்களை நாடுவதாக அவர்கள்
கூறியுள்ளனர். 15 சதவீதம் பேர் தீவிர காதலில் தாங்கள் இன்னும் ஈடுபடவில்லை
என்றும், ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது முயற்சிப்போம் என்றும்
கூறியுள்ளனர்.
சரி இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் மற்றும் அவரது
தங்கை பிப்பா மிடில்டன் ஆகியோரில் யார் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள் என்று
கேட்டபோது, 55 சதவீதம் பேர் பிப்பா மிடில்டனையும், 45 சதவீதம் பேர் கேட்
மிடில்டனையும் கூறியுள்ளனர். செக்ஸ் உறவு என்பது மோசடியாக உள்ளதா
என்ற கேள்விக்கு 69 சதவீதம் பேர் ஆம் என்றும் 30 சதவீதம் பேர்
அப்படியெல்லாம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இவர்களையெல்லாம்
இந்தியாவில் ஒரு மாதம் தங்க வைத்தால் செக்ஸ் குறித்த இவர்களது பார்வையில்
நிறைய 'மாற்றங்களை' உணர்வார்கள் என்று நம்பலாம்.
3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஒருவர் மரணம்!
ஸ்டாக்ஹோம்: கனடாவைச் சேர்ந்த ரால்ப் ஸ்டெய்ன்மேன், அமெரிக்காவைச் சேர்ந்த
புரூஸ் ப்யூட்லர் மற்றும் பிரான்சைச் சேர்ந்த ஜூல்ஸ் ஹாப்மேன் ஆகிய 3
பேரும் மருத்துவத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். இதில்
வருத்தம் என்னவென்றால் ரால்ப் கடந்த வெள்ளிக்கிழமை தான் புற்றுநோயால்
காலமானார். கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி ரால்ப் ஸ்டெய்ன்மேன் (68).
அவர் அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் ப்யூட்லர்(53) மற்றும் பிரான்சைச்
சேர்ந்த ஜூல்ஸ் ஹாப்மேன் (70) ஆகியோருடன் மருத்துவத்திற்கான நோபல் பரிசை
வெல்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக கணையப்
புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ரால்ப் கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். சுயநினைவின்றி இருந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிர்
இழந்தார். இந்த நிலையில், நேற்று அவருக்கு உயரிய விருதான நோபல்
பரிசு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் இறந்துவிட்டதால்
அந்த பரிசு அவரது வாரிசுகளுக்கு அளிக்கப்படும்.
மனித உடலில் உள்ள
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ரகசியத்தை இந்த 3 விஞ்ஞானிகளும்
கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் புற்று நோயை குணப்படுத்தலாம், புதிய
மருந்துகள் கண்டுபிடிக்கலாம், நோய்த் தொற்றுகள், வீக்கம் போன்றவற்றுக்கான
சிகிச்சைகளை மேம்படுத்தலாம். இந்த கண்டுபிடிப்பின் மூலம் நோய்
எதிர்ப்பு சக்தி குறைவு, ருமாட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் (முடக்கு வாதம்),
ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு புதிய சிறந்த மருந்துகள் கண்டுபிடிக்க முடியும்.
1.5 மில்லியன் டாலர் பரிசு அந்த 3 பேருக்கும் பிரி்த்துக் கொடுக்கப்படும்.
புற்றுநோயை
குணப்படுத்த வழிவகை கண்ட ரால்ப் கணையப் புற்றுநோய்க்கே
பலியாகியிருந்தாலும், அவரது கண்டுபிடிப்பை வைத்துத்தான் இத்தனை காலம் அவர்
தனது வாழ்நாளை நீட்டித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நோபல்
பரிசு அறிவிக்கும் வரை நோபல் பரிசுக் குழுவுக்கே ரால்ப் இறந்தது தெரியாது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நோபல் பரிசுக் குழு தங்கள் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொண்டது. ரால்ப் ஒரு சிறந்த விஞ்ஞானி. அவர் வந்து பரிசைப்
பெறுவார் என்று நினைத்தோம். ஆனால் நடக்காத விஷயம் ஆகிவிட்டது என்று அந்த
குழு தெரிவித்துள்ளது.
வலிமையாக்கும் கற்ப மூலிகை!
எந்த நோய்க்கு எவ்வாறு மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும், நோய் வராமல்
இருப்பதற்கு எந்தெந்த மூலிகைகளை சாப்பிடவேண்டும் என்றும் சித்தர்கள் அன்றே
கூறியுள்ளனர். வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே மேல் என்பதற்கேற்ப நோய்
வருமுன் காக்க கண்டு பிடிக்கப்பட்ட முறைதான் கற்ப முறை. கற்ப முறையில்
எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான இசங்கு, இந்தியாவில் கடற்கரை
ஒரங்களிலும், இலங்கையிலும் அதிகம் காணப்படும் மூலிகையாகும். இதற்கு
குண்டலி, கோல், மீச்செங்கன் என்று பல பெயர்கள் உண்டு.
நம்
முன்னோர்கள் மூலிகைகளை முறையாகப் பயன்படுத்தி நோயின்றி வாழ்ந்தனர். ஆனால்
இன்றோ நாம் நம் சுய தேவைக்காக மூலிகைகளையும், மரங்களையும் அழித்து, அதன்
பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். அப்படி அழிந்துகொண்டு வரும்
மூலிகைகளில் ஒன்றான இசங்கு என்ற மூலிகை மருத்துவ குணம் கொண்டுள்ளது.
காய்ச்சலை கட்டுப்படுத்தும் புடலங்காயின் கசாயம்!
நம் வீட்டுத் தோட்டங்களில் சரம் சரமாய் தொங்கும் புடலங்காயின் தாயகம்
இந்தியாதான். இதன் தாவர விஞ்ஞானப் பெயர், டிரிச்சோசன்தீன் ஆங்கினா
(Trichosanthes anguina) என்பதாகும். நம் நாட்டு மருத்துவத்தில் முக்கியமான
பங்கு வகிக்கும் புடலை இலை இப்போது இந்திய இயற்கை மருத்துவத்திலும்
முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
உயிரின் எடை 21 அயிரி'க்கு 41 வெட்டு!
உயிரின் எடை 41 அயிரி (கிராம்) என்ற படத்துக்கு தணிக்கை குழு 41 இடங்களில்
கட் கொடுத்துள்ளது. இந்த வெட்டுக்களோடு படத்தை வெளியிடலாம். இல்லையேல்
படத்தை வெளியிடக் கூடாது என்று தணிக்கைக் குழு கண்டிப்பாக
உத்தரவிட்டுள்ளது.
எ ட்ரீம் வேர்ல்டு தயாரித்துள்ள 'உயிரின் எடை 21 அயிரி' படத்தை, ஏகன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். வினிதா ஹீரோயின்.
ஊரே
நடுங்கும் தாதா படுத்த படுக்கையாகி கிடக்கும்போது உயிரின் மதிப்பை, அன்பை
எப்படி உணர்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளாராம்
ஏகன். ஆனால் பச்சையான உடலுறவுக் காட்சிகள் மற்றும் கோரமான வன்முறை
காட்சிகள் உள்ளதால் படத்துக்கு இத்தனை கட் கொடுத்துள்ளார்களாம்.
ஆனால்
இதனை கடுமையாக எதிர்க்கிறார் ஏகன். அவர் கூறுகையில், "தணிக்கைக் குழு
இரட்டை நிலையை எடுக்கிறது. இதைவிட மோசமான இந்திப் படங்களை அப்படியே
அனுமதிக்கிறார்கள். உதாரணம் 'எ கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்'. ஆனால்
எங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறார்கள்.
பெண்களின் தலைமுடியை
பிடித்து இழுக்கும் காட்சிக்கு கூட கட் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள்
சின்ன தயாரிப்பாளர்கள். எதிர்த்து எதுவும் கேட்க முடியில்லை. படத்தில்
சென்சார் வெட்டிய இடங்களை திரையில் கருப்பாக காட்டி அதை ரசிகர்களுக்கு
தெரிவிக்க இருக்கிறோம். வரும் 17-ம் தேதி படத்தை வெளியிடப் போகிறோம்,"
என்றார்.
Sitting with soundarya & seeing the edit of rajini sir's shoot.he is like a celestial being...the whole office is beaming with happiness.WOW
யார் நமக்கு என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் மனதில் வைக்காமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதில் ரஜினிக்கு நிகரில்லை. திரையுலகில்
தன்னை வசைபாடியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் அத்தனை பேருக்கும்,
ஆபத்தான நேரத்தில் கைகொடுத்தவர் இதே ரஜினிதான். அந்தப் பட்டியல் பெரியது.
ரஜினி
ரோபோ என்ற பெயரில் படம் நடிக்க ஆரம்பித்தபோது, ஷாரூக்கான் அந்த 'ரோபோ'
என்ற உச்சரிப்பில் வரும் ஏழு தலைப்புகளை மும்பையில் தன் பெயரில் பதிவு
செய்தார். ஷங்கர் இயக்கும் இந்தப் படம் எப்படி ரோபோ எனும் தலைப்பில்
வெளிவரப்போகிறது பார்க்கலாம் என்ற நினைப்பில். ஆனால் படம் இந்தியில் அதே பெயரில் வெளியானது வேறு விஷயம்.
இன்று
அதே ஷாரூக்கானுக்காக தனது உடல் நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல், வீட்டில்
எழுந்த எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு (சௌந்தர்யா தவிர வேறு யாரும்
ரஜினியின் இந்தப் பயணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்!), மும்பைக்குப்
பயணம் செய்து நடித்துக் கொடுத்து வந்திருக்கிறார் என்றால், அதை என்னவென்று
சொல்வீர்கள்! ரஜினியின் இந்த குணம், ஷாரூக்கானை ரொம்பவே ஆடிப் போக வைத்துவிட்டது.
இதுகுறித்து
தனது ட்விட்டரில், "மிகுந்த குழப்பத்தில், புரிதலின்மையில், மன
அழுத்தத்தில் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். அப்போது ரஜினி சார்
செட்டுக்குள் வந்தார். கடவுள் எதற்காக சினிமா படைத்தார் என்பதைப் புரிந்து
கொண்டேன். ரஜினி எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் முழுமை பெற்றோம். அவரது
பெருந்தன்மை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. அவருக்கும்
குடும்பத்துக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும்," என்று
குறிப்பிட்டிருந்தார். அடுத்த நாள், ரஜினி நடித்துக் கொடுத்த காட்சியை தனது எடிட் ஸ்டுடியோவில் போட்டுப் பார்த்து பிரமித்துப் போனாராம் ஷாரூக்.
இதுகுறித்து
அவர் கூறுகையில், ""சௌந்தர்யாவுடன் அமர்ந்து எடிட் செய்த ரஜினி சாரின்
காட்சிகளைப் பார்த்தேன். ரஜினியின் வானத்திலிருந்து வந்த தெய்வப் பிறவி போல
தெரிகிறார். காட்சியைப் பார்த்த மொத்த அலுவலகமும் சந்தோஷத்தில்
விம்மியது... வாவ்! (Sitting with soundarya & seeing the edit of
rajini sir's shoot.he is like a celestial being...the whole office is
beaming with happiness.WOW) என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி
உங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து நடித்துக் கொடுப்பார் என்று
எதிர்ப்பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "உண்மையாக
சொல்ல வேண்டும் என்றால்... எதிர்ப்பார்க்கவில்லை. காரணம், இப்படியெல்லாம்
கூட மனிதர்கள் இருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. ரஜினி சார்
என்னை அழவைத்துவிட்டார் என்றால் மிகையல்ல. உண்மையான ஜென்டில்மேன்,
மனிதாபிமானி. என் வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி,"
என்றார்.
அரவான் பாடல்களை வெளியிடும் ஏஆர் ரஹ்மான்!
இந்த ஆண்டு நல்ல சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த படங்கள் இரண்டு.
ஒன்று சற்குணம் இயக்கி வெளியாகியுள்ள வாகை சூட வா. அடுத்தது வசந்த பாலன்
இயக்கத்தில் வரவிருக்கும் அரவாண். இரண்டுமே பீரியட் பிலிம்ஸ் என்ற வகையைச்
சேர்ந்த வரலாற்றுப் படங்கள். இவற்றில் வாகை சூட வா வெளியாகி, பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. நாளுக்கு நாள் ரசிகர் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து அரவாண் முறை. அரவாண்
படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. அதன் முதல்
படியாக, நாளை புதன்கிழமை மாலை இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா
சென்னையில் நடக்கிறது.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ள இந்தப்
படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பாடகர் கார்த்திக். ஏ ஆர்
ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின்
செல்லப் பிள்ளையாக பின்னர் மாறியவர் கார்த்திக். இசையமைப்பாளராக அறிமுகமாக இதைவிட ஒரு சிறந்த வாய்ப்பு அவருக்கு வாய்த்திருக்காது எனலாம்.
பாடல்களை
வெளியிடப் போகிறவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். பெற்றுக் கொள்பவர்
மணிரத்னம். இந்த மேடையிலேயே, தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக
இயக்குநர் சிகரத்துக்கு ஒரு பாராட்டு விழாவையும் எடுக்க இயக்குநர் வசந்த
பாலன் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமை ஜெயா தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
முருகதாஸின் ஏழாம் அறிவு... தியேட்டர்கள் அறிவிப்பு!
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படம் என
விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு. முற்றிலும்
புதிதான கதை, இதுவரை பார்த்திராத நாடுகளில் படப்பிடிப்பு என கூறப்பட்டு
வருவதால், தீபாவளிப் படங்களில் ஏழாம் அறிவுக்கு தனி முக்கியத்துவம்
கிடைத்துள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு இன்னும் 22 நாட்கள் உள்ள
நிலையில், இப்போதே படம் வெளியாகும் அரங்குகளின் பட்டியலை வெளியிட்டு அதிர
வைத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை
நகரினழ் பிரதான சினிமா அரங்குகளான சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி,
அபிராமி, பிவிஆர், சங்கம், உதயம், ஏஜிஎஸ் போன்றவற்றில் இந்தப் படம்
ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது. இவை தவிர, சிங்கிள்
ஸ்கிரீன்ஸ் எனப்படும் தனி அரங்குகளிலும் படம் வெளியாகிறது.
சூர்யா
நடித்த படம் ஒன்று நகரில் இத்தனை அரங்குகளில் வெளியாவது இதுதான் முதல்
முறை. இந்தப் படத்துடன், உதயநிதி ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி
படத்தின் ட்ரெயிலரும் திரையிடப்படும் என உதயநிதி அறிவித்துள்ளார். வேலாயுதம், மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்களும் தீபாவளி ரேஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
5 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸை தோற்கடிக்க பிரச்சாரம் - அன்னா ஹஸாரே!
வலுவான லோக்பால் கொண்டுவரவில்லை என்றால் அடுத்து சட்டசபைத் தேர்தல்
நடக்கவிருக்கும் உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸை எதிர்த்துப்
பிரச்சாரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார் அன்னா ஹஸாரே.
ஊழலுக்கு
எதிராக வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று
அன்னா ஹசாரே கோரி வருகிறார். இதற்காக டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் 12
நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்
கொண்டாலும், நடைமுறை சிக்கல் காரணமாக லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில்
இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
அடுத்து வர இருக்கிற பாராளுமன்ற
குளிர் கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியே தீர வேண்டும்
என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக மீண்டும் போராட்டத்துக்கு
தயாராகிறார். இந்த முறை அவர் காங்கிரசுக்கு எதிராக நேரடியாக பிரசாரத்தில்
ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி அன்னாஹசாரே இன்று தனது
சொந்த ஊரான ராலேகான் சித்தி கிராமத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
"லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு காலம் கடத்துகிறது.
பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடருக்கு முன் லோக்பால் மசோதாவை
நிறைவேற்ற வேண்டும்.
இல்லையெனில் மீண்டும் போராட்டத்தில்
ஈடுபடுவேன்.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தர பிரதேசம்,
உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம்
செய்து காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன்.
அடுத்தது ஜெர்மனி நாட்டு செயற்கைக்கோள் பூமியில் மோத ரெடி! ANOTHER satellite to crash land soon
செத்துப் போன அமெரிக்க செயற்கைக் கோள் சமீபத்தில் பூமியில் வந்து
விழுந்ததைத் தொடர்ந்து, இந்த மாத இறுதியில் ஜெர்மனி நாட்டு செயற்கைக்கோள்
ஒன்று பூமியில் விழவிருக்கிறது. இது கடந்த சில தினங்களுக்கு முன்பு
பூமியில் விழுந்த நாசா செயற்கைக்கோளை விட ஆபத்தானது என்று வி்ஞ்ஞானிகள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான்
பேருந்து சைஸிலான நாசாவின் செயலிழந்த செயற்கைக்கோளான யூஏஆர்எஸ் பூமியில்
வந்து விழுந்தது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் இன்னொரு செயற்கைக்கோள்
பூமியில் வந்து விழவிருக்கிறது.
2.4 டன் எடை கொண்ட ரான்ட்ஜன்
செயற்கைக்கோள் அல்லது ரோசாட் எனப்படும் ஜெர்மனி நாட்டு செயற்கைக்கோள் கடந்த
1999-ம் ஆண்டு செயல் இழந்தது. அதில் இருந்து கடந்த 12 ஆண்டுகளாக விண்ணில்
மிதந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த செயற்கைக்கோள் பல துண்டுகளாக
பூமியில் விழவிருக்கிறது.
அதில் சில துண்டுகள் 400 கிலோ எடை
கொண்டதாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த துண்டுகளால் பூமியில்
இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. காரணம் இந்த
செயற்கைக்கோள் துண்டுகள் எங்கு விழும் என்றே விஞ்ஞானிகளால் கணிக்க
முடியவில்லை.
அழகிய பெங்களூர் உலகின் ஆறாவது மோசமான நகரம் !
போக்குவரத்து நெரிசல் மற்றும் மோசமான பார்க்கிங்கில் சர்வதேச அளவில் ஆறாவது
மோசமான நகரம் பெங்களூர் என ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. பயணிகளின் வேதனை குறித்த ஐபிஎம் நிறுவனத்தின் சமீபத்தில் ஒரு ஆய்வில்,
கடந்த
எட்டு மாத இடைவெளியில் ஆகஸ்ட் 2011 வரை, கார்கள் உள்ளிட்ட வாகனங்களின்
சட்டவிரோத/ தவறுதலான பார்க்கிங் என 4 லட்சம் வழக்குகள் பெங்களூர்
போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெங்களூர்
நகர போக்குவரத்து போலீஸ் பதிவுகளின்படி, ஒவ்வொரு மாதமும் 50,000
வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த
கணக்குப்படி, உலகளாவிய சராசரி நேரம் 20 நிமிடங்களில் ஏற்படும்
போக்குவரத்து நெரிசல் குறித்து 6 கண்டங்களில் உள்ள 20 நகரங்களைச் சேர்ந்த
8042 பயணிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பெங்களூர் 44% சதவீதம் மோசம்
என தெரியவந்துள்ளது. இதன் மூலம் மோசமான நகரங்களில் 6 வது இடம்
பெங்களூருக்கு கிடைத்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட பஜார் பகுதிகளில்
வாகன ஓட்டிகள் மோசமாக சண்டை போட்டுக் கொள்வதில் டெல்லிக்கு அடுத்த இடத்தை
பெங்களூர் பிடித்துள்ளது (இவர்கள் 'சண்டையில்' சென்னையை விட்டுவிட்டார்கள்
போலிருக்கிறது!)
பெங்களூரில் ஒருவர் தன் வாகனத்தை இடம் தேடி
நிறுத்தி வைக்க சராசரியாக 20 முதல் 35 நிமிடங்கள் ஆவதாகவும், சர்ச் தெரு,
ரெய்ஸ்ட் ஹவுஸ் ரோடு, எம்ஜி ரோடு போன்ற பகுதிகளில் தவறான பார்க்கிங் அல்லது
நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்துவது போன்றவற்றால் தொடர் போக்குவரத்து
நெரிசல் ஏற்படுவதாக இந்த சர்வே தெரிவிக்கிறது.
Subscribe to:
Posts (Atom)