உலகளவில் சிறந்த 10 ஆன்லைன் வர்த்தக மையங்களில்
2015-ம் ஆண்டில் இந்தியாவின் பெங்களுரூ நகரமும் இடம் பெறும் என தகவல்கள்
வெளியாகியுள்ளன.. தகவல் தொழில் நுட்பத்துறையி்ல் இணையதள பயன்பாட்டை
பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது
தொலை தொடர்புத்துறையில் 3-ஜி சேவை, அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்)
ஆகியவற்றின் பயன்பாடும் இந்தியாவில் பரவலாக உள்ளது. தற்போது மலேஷியா,
பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இணையதளம் வாயிலாக அகண்ட அலைவரிசை, 3-ஜி
சேவையினை வெகுவாக பயன்படுத்தி முன்னேறி வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை
ஆன்லைன் வர்த்தகத்தில் பெங்களுரூ நகரமே முதலிடம் வகிக்கிறது. இதன்படி வரும்
2015-ம் ஆண்டிற்குள் உலகளவில் சிறந்த 10 ஆன்லைன் வர்த்தக மையங்களில்
இந்தியாவின் பெங்களுரூ நகரம் இடம் பெறும் என இந்திய ஆன்லைன் வர்த்தகத்தின்
பி-பி கம்யூனிகேசன் அமைப்பின் தலைவர் தீபாதாமஸ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment