|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 October, 2011

அழகிய பெங்களூர் உலகின் ஆறாவது மோசமான நகரம் !


போக்குவரத்து நெரிசல் மற்றும் மோசமான பார்க்கிங்கில் சர்வதேச அளவில் ஆறாவது மோசமான நகரம் பெங்களூர் என ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. பயணிகளின் வேதனை குறித்த ஐபிஎம் நிறுவனத்தின் சமீபத்தில் ஒரு ஆய்வில், 

கடந்த எட்டு மாத இடைவெளியில் ஆகஸ்ட் 2011 வரை, கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் சட்டவிரோத/ தவறுதலான பார்க்கிங் என 4 லட்சம் வழக்குகள் பெங்களூர் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெங்களூர் நகர போக்குவரத்து போலீஸ் பதிவுகளின்படி, ஒவ்வொரு மாதமும் 50,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கணக்குப்படி, உலகளாவிய சராசரி நேரம் 20 நிமிடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து 6 கண்டங்களில் உள்ள 20 நகரங்களைச் சேர்ந்த 8042 பயணிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பெங்களூர் 44% சதவீதம் மோசம் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் மோசமான நகரங்களில் 6 வது இடம் பெங்களூருக்கு கிடைத்துள்ளது. 

மேலும் குறிப்பிட்ட பஜார் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மோசமாக சண்டை போட்டுக் கொள்வதில் டெல்லிக்கு அடுத்த இடத்தை பெங்களூர் பிடித்துள்ளது (இவர்கள் 'சண்டையில்' சென்னையை விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது!)

பெங்களூரில் ஒருவர் தன் வாகனத்தை இடம் தேடி நிறுத்தி வைக்க சராசரியாக 20 முதல் 35 நிமிடங்கள் ஆவதாகவும், சர்ச் தெரு, ரெய்ஸ்ட் ஹவுஸ் ரோடு, எம்ஜி ரோடு போன்ற பகுதிகளில் தவறான பார்க்கிங் அல்லது நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்துவது போன்றவற்றால் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக இந்த சர்வே தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...