ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
09 October, 2012
நான் ஈயை சுட்டது...?
அடுத்த அடிக்கு தயாராகும் ருபாய்!
இந்த ஆண்டு இந்தியாவின்
பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று சர்வதேச
பொருளாதார நிதியம் (International Monetary Fund) கணித்துள்ளது.2011ம்
ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது. ஆனால், அடுத்து
மானியங்களை அதிகரித்து, கடன் அளவை இந்தியா அதிகரித்துக் கொண்டது. மேலும்
அரசியல் நெருக்கடி, கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியால் பொருளாதார
சீர்திருத்த நடவடிக்கைகளை அமலாக்காமல் தாமதம் செய்ததால் முதலீடுகளும்
குறைந்துவிட்டன.மேலும் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்த
ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல்கள், பெரும் மின்சாரப் பற்றாக்குறை, வரித்துறை
சீர்திருத்தங்களில் தொய்வு ஆகியவையும் அன்னிய முதலீட்டாளர்களை கவலையடையச்
செய்துவிட்டன. இதனால் இந்தியாவுக்கு போதிய முதலீடுகள் வரவில்லை.
இதனால்
இப்போது இந்தியாவின் வளர்ச்சி 5.5 சதவீதமாகவே உள்ளது. இந்த நிலைமை மேலும்
மோசமாகும். மொத்தத்தில் இந்த ஆண்டு நாட்டின் வளர்ச்சி விகிதம் 4.9
சதவீதமாகவே இருக்கும் என்று ஐஎம்எப் கூறியுள்ளது.அதே நேரத்தில்
இப்போது வரும் சில்லறை வணிகம், காப்பீட்டுத்துறை, பென்சன் துறை,
விமானத்துறைகளில் அன்னிய முதலீட்டை இந்தியா அனுமதிக்க ஆரம்பித்து அதற்கான
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மேலும் பெருமளவு
மானியத்தை சாப்பிடும் சமையஸ் கேஸ், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தி
அரசின் செலவை இந்தியா குறைத்துள்ளது.இதனால் 2013ம் ஆண்டில், அதாவது அடுத்த ஆண்டில், இதற்கான பலன்களை இந்தியா பெறும் என்றும் ஐஎம்எப் கூறியுள்ளது.இப்போதுள்ள
நிலையில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை நாட்டின் ஒட்டு மொத்த
உற்பத்தியில் (GDP) 3.8 சதவீதமாக அதிகரிக்கவுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
செக்ஸ், சிகரெட்டை விட மோசமானதாம்!
செக்ஸ், சிகரெட் பழக்கத்தை விட படு மோசமானதாக மாறியிருக்கிறது பேஸ்புக், டிவிட்டரைப் பார்க்கும் பழக்கம் என்று கூறுகிறது ஒரு ஆய்வு.சிகாகோ
பல்கலைக்கழகத்தின் பூத் பிசினஸ் பள்ளி இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியது.
அதில் பேஸ்புக், டிவிட்டர், பிளாக்பெர்ரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும்
நபர்களை வைத்து ஆய்வு நடத்தினர். 7 நாட்கள் இந்த ஆய்வு நடந்தது.ஆன்லைன்
மூலமாக நடந்த இந்த சர்வேயில் 250 பேர் கலந்து கொண்டனர். அதில் செக்ஸ்,
சிகரெட் பழக்கத்தை விட மிக மோசமான முறையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட
சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் அடிமையாகிக் கிடப்பது தெரிய வந்ததாம்.
செக்ஸ்,
சிகரெட்டை விட பேஸ்புக்கும், டிவிட்டரும்தான் அனைவரையும் அதிகம்
தூண்டுகிறதாம். ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறையாவது பேஸ்புக், டிவிட்டர்
பக்கம் போய் விடுகின்றனராம் அதற்கு அடிமையானவர்கள். மேலும் ஒரு நாளைக்கு
சராசரி 14 மணி நேரத்தை இதற்காக செலவிடுகிறார்களாம். செக்ஸுக்காக கூட இப்படி
மெனக்கெடுவதில்லையாம்.இன்னும் படுக்கை அறையில் பக்கத்தில் மனைவியோ
அல்லது காதலியோ இருந்தால் கூட அப்போது கூட பேஸ்புக் அல்லது டிவிட்டர் பற்றி
நினைக்கிறார்களாம்.இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், செக்ஸ்,
சிகரெட், போதைப் பழக்கம், விளையாட்டு என அனைத்தையும் தகர்த்து்த்
தரைமட்டமாக்கும் அளவுக்கு இந்த பேஸ்புக், டிவிட்டர் பழக்கம் விஸ்வரூபம்
எடுத்து நிற்பதாக கூறியுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)