ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
01 February, 2013
காதலனுடன் தனியாக ஓர் இரவு?
முற்றிலும் பெண்களே பங்கேற்கும் ஏ.கே.பி.48 என்ற பாப் இசைக்குழு கடந்த 2005ம் ஆண்டு ஜப்பானில் துவங்கப்பட்டது.
16 முதல் 20 வயதுக்குட்பட்ட சுமார் 90 பெண்கள் இந்த இசைக்குழுவில் பாடகிகளாக உள்ளனர்.
ஜப்பானையும் தாண்டி ஆசியா கண்டம் முழுவதும் ஏ.கே.பி.48 பாப் இசைக்குழு பிரபலமடைந்துள்ளது.
இந்த இசைக்குழுவில் இடம் பெற்றுள்ள பாடகிகளுக்கு நிர்வாகத்தின் சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில்,
ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகக்கூடாது என்பது முக்கிய கட்டுப்பாடு ஆகும்.
இந்த கட்டுப்பாட்டை மீறி, வேறொரு இசைக்குழுவில் பணியாற்றும் அலன் ஷிராஹாமா
என்ற வாலிபரின் வீட்டிலிருந்து
ஏ.கே.பி.48 பாடகி மினாமி மினேகிஷி வெளியே வரும் புகைப்படத்துடன் கூடிய
செய்தி நேற்று ஜப்பான் பத்திரிகைகளில் வெளியாகின.
இந்த செய்தி வெளியான சில மணி நேரத்திற்குள் தனது தலைமுடியை மொட்டை
அடித்துக்கொண்ட மினாமி மினேகிஷி வீடியோ மூலம் ரசிகர்களிடம் மன்னிப்பு
கேட்டுக்கொண்டுள்ளார்.
'இப்படி மன்னிப்பு கேட்பதால் மட்டும் எனது தவறு நியாயமாகிவிடும் என நான் கருதவில்லை. இந்த இசைக்குழுவில் இருந்து வெளியேற்றப்பபடுவதை நான் விரும்பவில்லை. நான் செய்த தவறுக்காக வருத்தப்படுகிறேன். எனது ரசிகர்களும், இசைக்குழுவின் நிர்வாகிகளும் என் தவறை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என கண்ணீர் பொங்க அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
'இப்படி மன்னிப்பு கேட்பதால் மட்டும் எனது தவறு நியாயமாகிவிடும் என நான் கருதவில்லை. இந்த இசைக்குழுவில் இருந்து வெளியேற்றப்பபடுவதை நான் விரும்பவில்லை. நான் செய்த தவறுக்காக வருத்தப்படுகிறேன். எனது ரசிகர்களும், இசைக்குழுவின் நிர்வாகிகளும் என் தவறை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என கண்ணீர் பொங்க அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை!
, ஓடும் பேருந்தில், மருத்துவக் கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். நாட்டையே, உலுக்கிய இந்த அதிர்ச்சி
சம்பவத்துக்கு, நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து,
சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.வர்மா தலைமையில், இமாச்சல்
பிரதேச ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, லீலா சேத், முன்னாள் சொலிசிட்டர்
ஜெனரல், கோபால் சுப்ரமணியம் ஆகிய, மூன்று பேர் அடங்கிய குழு
அமைக்கப்பட்டது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, மேற்கொள்ள வேண்டிய
நடைமுறைகள், பாலியல் வன்முறையை தடுக்க தேவையான சட்டங்கள், பெண்களின்
பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இந்த குழு, ஆய்வு செய்து, 200
பக்கங்களை உடைய அறிக்கையை, உள்துறை அமைச்சகத்திடம், பரிந்துரையாக, கடந்த,
23ம் தேதி அளித்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, தூக்கு
தண்டனை வழங்குவது உட்பட, பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டு இருந்தன.
இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது பற்றி, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என, நீதிபதி வர்மாவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம், நேற்று நடந்தது. இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், வர்மா கமிஷன் அறிக்கை பரிந்துரை குறித்தும், அவசர சட்டம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.பின், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு, ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த அவசர சட்டத்தை, நாளை மறுநாள் மத்திய அரசு வெளியிடும் என, தெரிகிறது.மிக கொடூரமான பலாத்கார குற்றத்திற்கு, தூக்கு தண்டனை, பலாத்கார குற்றத்துக்கு, 20 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் வகையில், அவசர சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது
இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது பற்றி, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என, நீதிபதி வர்மாவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம், நேற்று நடந்தது. இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், வர்மா கமிஷன் அறிக்கை பரிந்துரை குறித்தும், அவசர சட்டம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.பின், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு, ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த அவசர சட்டத்தை, நாளை மறுநாள் மத்திய அரசு வெளியிடும் என, தெரிகிறது.மிக கொடூரமான பலாத்கார குற்றத்திற்கு, தூக்கு தண்டனை, பலாத்கார குற்றத்துக்கு, 20 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் வகையில், அவசர சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது
மூளை செயல்பட 1.5 வினாடிகள்?
நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதற்கு காரணம் அதிவேகம்.
ஏனெனில், நெடுஞ்சாலையில் செல்லும்போது காரின் வேகத்தை சரியாக உணர்ந்து
கொள்ள முடியாததே இதற்கு காரணம். நெடுஞ்சாலையில் செல்லும்போது காரின்
கதவுகளை முழுவதுமாக அடைத்துவிட்டு, ஏசியை போட்டுக் கொண்டு செல்லும்போது
வேகத்தை முழுமையாக உணர முடியாது.
100 கிமீ வேகத்துக்கும் மேல் செல்லும்போது கூட சாதாரணமாகவே தெரியும்.
இதனைத்தான் Speed blindness என்று கூறுகின்றனர். மேலும், முன் பின்
செல்லும் வாகனங்களின் வேகமும் உங்களது வாகனமும் ஒரே வேகத்தில் செல்வதால்
உங்கள் வாகனத்தின் வேகத்தை உணர முடியாமல் மெதுவாக செல்வது போன்ற மாயையை
மூளைக்கு ஏற்படுத்தி விடும்.
ஒருவேளை, அவசரத்தில் திடீரென பிரேக் பிடித்தால் கூட அது பயனளிக்காது.
உதாரணமாக, 80 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் குறைந்தது
28.11 மீட்டர் தூரத்தில்தான் கார் நிற்கும். இதற்கு 2.59 வினாடிகள் ஆகும்.
இதுவே 100 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 54.33 மீட்டர்
தூரத்தில்தான் கார் நிற்கும். இதற்கு 3.73 வினாடிகள் ஆகும். இது
சாலைநிலைகளை பொறுத்து. சில வேளை சாலையில் மணல் படர்ந்திருந்தால் இந்த
தூரம் மேலும் அதிகரிக்கும். இதுதவிர, காரின் எடையை பொறுத்தும் இந்த தூரம்
மாறுபடும்.
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட கார்களில் இந்த தூரம் கணிசமாக குறையும்.
சாதாரண பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட காராக இருந்தால் ஒருமுறை பம்ப் செய்து
பின்னர் பிரேக் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், கார் கட்டுக்குள் கொண்டு
வருவது சிரமம் என்பதோடு, பல்டி அடிக்கும் வாய்ப்பும் அதிகம். நாம்
கால்களால் பம்ப் செய்து பிரேக் பிடிப்பதைதான் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
குறிப்பிட்ட இடைவெளியில் சீராக பிரேக்கிங் பவரை வீல்களுக்கு அனுப்புகிறது.
இதனால், கார் ரோல்ஓவர் ஆகாமல் சரியான இடத்தில் நிற்கும்.
அதெல்லாம் சரி, காரை கட்டுக்குள் கொண்டு வர உங்களது மூளை வேளை செய்ய
வேண்டுமே. அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அவசர நிலையை உணர்ந்து மூளை
செயல்பட 1.5 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். சமதள பாதையில் செல்லும்
வேகத்தை விட சரிவான பாதையில் வேகத்தை பாதியளவு குறைத்துவிடுவது நல்லது.
விபரீதத்தை உணர்ந்து மூளை செயல்படுவதற்கு எடுக்கும் கால விரயத்தைத்தான்
MOTION INDUCED BLINDNESS என்று கூறுகின்றனர். எனவே, நம் நாட்டில்
நெடுஞ்சாலைகளில் அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் செல்வது கூடுதல் பாதுகாப்பு.
அதுவும், சாலையில் போக்குவரத்து நிலையை பொறுத்தும் நம் வேகம் இருக்க
வேண்டும்.
மேலும், இந்த ஸ்பீடு பிளைன்ட்னஸ் வராமல் இருக்க அடிக்கடி ஸ்பீடோமீட்டரிலும்
ஒரு கண் வைக்க வேண்டும். குவான்ட்டோ உள்ளிட்ட கார்களில் 100 கிமீ வேகத்தை
தாண்டும்போது பீப் ஒலி அடித்து எச்சரிக்கும் வசதி இருக்கிறது. எது
எப்படியோ, மித வேகம், மிக நன்று அல்லவா?
அப்பா இப்பத்தான் ஆரம்பிக்கிறாங்களாம்?
வங்கிகளில் செக் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி
முடிவு செய்திருக்கிறார். ஆன்லைன் மூலமான பயன்பாட்டை ஊக்குவிக்கும்
வகையில் செக் பயன்பாட்டுக்கு கணிசமாக ஒரு தொகையை பிடித்தம் செய்யவும்
தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
செக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் எத்தனை சதவீதத்தை
கட்டணமாக வசூலிப்பது என்பதை ரிசர்வ் வங்கி தீர்மானிக்கவில்லை. செக்
புத்தகங்களுக்கு அதிக கட்டணத்தை வசூலிப்பது என்பதும் ரிசர்வ் வங்கியின்
யோசனை.இதற்காக மக்களிடம் கருத்து கேட்புகளைக் கோருகிறது ரிசர்வ் வங்கி..
ஆன்லைன் பரிமாற்றத்துக்கு என்ன மாதிரியான சலுகைகள் கொடுக்கலாம்., செக்
பயன்பாட்டுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது பற்றி
ரிசர்வ் வங்கிக்கு கருத்து தெரிவிக்கலாமாம்.
அடுத்த ஆட்டம் அமெரிக்காவில்!
அமெரிக்காவில் வெளியாகியுள்ள கோக் விளம்பரப் படம் அங்குள்ள அரபு
அமெரிக்கர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
கோகோ கோலா சூப்பர் பவுல் விளம்பரம்தான் தற்போது அங்கு பஞ்சாயத்தைக்
கிளப்பியுள்ளது. எப்படி தமிழகத்தில் விஸ்வரூபம் இஸ்லாமியர்களின்
அதிருப்தியை வாரிக் கட்டிக் கொண்டுள்ளதோ அதேபோல அரபு அமெரிக்கர்கள், இந்த
கோக் விளம்பரத்திற்கு எதிராக வரிந்து கட்டிக் கிளம்பியுள்ளனர்.
எப்பப் பார்த்தாலும் அராபியர்களை இழிவுபடுத்துவது போலவே காட்டுகிறார்களே
இந்த அமெரிக்கர்கள் என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)