|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 January, 2012

மனைவியை சிலுவையில் அறைந்த கணவர்!


ஆந்திராவில் கடவுள் வந்து அழைப்பதாக கூறிய பெண்ணை சிலுவையில் அறைந்த கணவன், சகோதரனை போலீசார் கைது செய்தனர். சிலுவையில் அறையப்பட்ட பெண்ணை உடனடியாக மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் குஞ்சான்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்காயம்மா (35). அவரது கணவர் பிரான்சிஸ். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். அதன்பிறகு வெங்காயம்மா தனது பெயரை தேவகுமாரி என்று மாற்றிக்கொண்டார். கடந்த சில மாதங்களாகவே தனது கனவில் அடிக்கடி ஏசு கிறிஸ்து வருவதாக தேவகுமாரி தனது உறவினர்களிடம் கூறி வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரிடம் திரண்டு சென்று ஜெபம் செய்து ஆசி பெற்று வந்தனர்.

சிலுவையில் அறைய வேண்டும் இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேவகுமாரி கணவர் மற்றும் சகோதரர்கள் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரிடம், 'ஏசு கிறிஸ்து தனது கனவில் தோன்றி மகளே நீ என்னிடம் வர விரும்பினால், உன்னை உயிருடன் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்க வேண்டும்' என்று கூறினார் என்று தெரிவித்தார். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தேவகுமாரியின் உறவினர்கள் வேண்டாம் இந்த விபரீதம் என்று கூறி தடுத்தனர். ஆனாலும் தேவகுமாரி சிலுவையில் அறைய வேண்டும் என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததால் கணவர்- சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேவகுமாரியை வெள்ளிக்கிழமை அன்று ஏசு கிறிஸ்து போல் சிலுவையில் அறைய திட்டமிட்டனர்.

தேவகுமாரி சிலுவையில் அறையப்படும் சம்பவம் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது. ஆயிரக்கணக்கானோர் குஞ்சான பள்ளி கிராமத்தில் திரண்டனர். தேவகுமாரி ஏசு கிறிஸ்து போல் வெள்ளை உடை, சிகப்பு சால்வை சகிதம் வந்தார். சிறிது நேரம் சிலுவை முன்பு நின்று பைபிள் வசனங்களை வாசித்து அங்கு திரண்டிருந்த மக்களிடம் போதனை செய்தார்.

ரத்தம் கொட்டியது இதனையடுத்து தேவகுமாரியை கணவரும் சகோதரர்கள் சிலுவையின் மீது படுக்க வைத்து இடது கையில் ஆணி அறைந்தனர். அப்போது ரத்தம் மளமளவென கொட்டியது. அப்போதும் அவர் அசரவில்லை. வேதனையால் துடிக்கவில்லை. அமைதியாக இருந்தார். பின்னர் அவரது இரு கைகளையும் கயிற்றால் கட்டி சிலுவையை தூக்கி நிறுத்தினர். ஏசு கிறிஸ்துவுக்கு அணிவிக்கப்பட்டது போல் தேவகுமாரிக்கும் முள் கிரீடம் தலையில் சூட்டப்பட்டது. சிலர் தங்களது செல்போன்களில் இதை ஆர்வமாக படம் பிடித்தனர்.

கணவன், சகோதரர்கள் கைது தகவல் அறிந்ததும் தாடே பள்ளி சப்- இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரராவ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சிலுவையில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்த தேவகுமாரியை கீழே இறக்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிலுவையில் அறைந்த பிரான்சிஸ், சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அதிகாரங்களை, நாங்களே வைத்துக் கொள்வோம்' நிபுணர் குழுவிடம் கேரளா மனு!

முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும். அந்த அணையின் உரிமை, கட்டுப்பாடு, தண்ணீர் திறந்து விடுவதை ஒழுங்குபடுத்துவது போன்ற அதிகாரங்களை, நாங்களே வைத்துக் கொள்வோம்' என, நிபுணர் குழுவிடம் கேரளா மனு அளித்துள்ளது. இதன் மூலம், "தமிழகத்துக்கு தண்ணீர்; கேரளாவுக்கு பாதுகாப்பு' என்ற கோஷம் கலைந்து, கேரளாவின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தரும்படி, ஐவர் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த குழுவும் பலமுறை கூடி ஆலோசனை மேற்கொண்டு, இரு மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து வந்தது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள தத்தே மற்றும் மேத்தா ஆகியோர், அணைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி அறிக்கையும் தாக்கல் செய்தனர்.

கேரளா கோரிக்கை நிராகரிப்பு : அந்த அறிக்கையில், "அணை முழு பலமாக உள்ளதென்றும், நிலநடுக்கங்களால் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை' என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நிபுணர் குழு ஏற்றுக்கொண்டு விட்டது. தவிர, 136 அடியிலிருந்து 120 அடி வரை நீர்மட்டத்தை குறைத்திட வேண்டுமென்ற கோரிக்கையையும், ஐவர் குழு நிராகரித்து விட்டது. மேலும், அந்த ஆலோசனையில் நீதிபதி ஆனந்த், இரு மாநில அரசு பிரதிநிதிகளிடமும் ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது, புதிய அணையைக் கட்டுவது குறித்து தமிழக - கேரள அரசுகள் என்ன நினைக்கின்றன என்பது பற்றி, எழுத்துப்பூர்வமாக கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டிருந்தார்.புதிய அணை குறித்த மனு : இந்நிலையில், நேற்று கேரளா சார்பில் நீதிபதி ஆனந்திடம், புதிய அணை குறித்த மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மூன்று முக்கிய விஷயங்களை கேரளா தெளிவுபடுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு: தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்ட வேண்டும். அதில், எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அவ்வாறு கட்டப்படும் புதிய அணையின் உரிமையாளர் அந்தஸ்தை, கேரளா தான் வைத்திருக்கும்; அணையின் கட்டுப்பாட்டையும் கேரளாவே  மேற்கொள்ளும். தண்ணீர் திறந்து விடுவதை ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரத்தையும், கேரளாவே வைத்திருக்கும். புதிய அணையில் தண்ணீர் எவ்வளவு தேக்கி வைக்க வேண்டும் என்பதை, தமிழக - கேரள மாநிலங்கள் கூட்டுக்குழு அமைத்து, அந்த குழு மேற்பார்வையிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுயரூபம் தெரிந்தது :புதிய அணை ஏன் என்பது குறித்து கேரளா இதுவரை செய்த பிரசாரத்தின் கோஷமே, "தமிழகத்துக்கு தண்ணீர்; கேரளாவுக்கு பாதுகாப்பு' என்பது தான். தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தற்போது கிடைக்கும் அளவில் துளி கூட குறைக்க மாட்டோம் என்றும், பெரிய அளவில் பிரசாரம் நடத்தியது. நேற்றைய மனுவிலோ, கேரளாவின் உண்மையான சுயரூபம் தெரிந்துவிட்டது. இதன் மூலம், புதிய அணை கேட்பதன் நோக்கத்தின் பின்னணி அம்பலமாகியுள்ளது.

வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிக்கும் போலீசார் குறித்து, எஸ்.எம்.எஸ்.,சில், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யும் முறை!

வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிக்கும் போலீசார் குறித்து, எஸ்.எம்.எஸ்.,சில், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யும் முறை, தமிழகத்தில் முதன்முறையாக ஜன.,15ல் மதுரையில் அறிமுகமாகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது உட்பட 20 விதிமீறல்களை தடுக்க, "வெய்கிள் டிராகிங் சிஸ்டம்' வசதி, கடந்த நவ., 8ல், தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான சாப்ட்வேரில், தமிழகம் முழுவதுமுள்ள 1.50 கோடி வாகனங்களின் பதிவெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவெண்ணை குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம். எஸ்., மூலம் போலீஸ் அனுப்பினால் போதும். மூன்று வினாடிகளில் வாகனத்தின் முழு விபரத்தையும் எஸ்.எம்.எஸ்.,சில் அறிய முடியும். "இவ்வசதியால் இதுவரை 19 திருட்டு வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது,'' என்கிறார், இந்த சாப்ட்வேரை உருவாக்கிய, மதுரை எஸ்.எஸ். காலனி "ஆக்மி சாப்ட்வேர் டெக்னாலஜி' இயக்குனர் எஸ்.கே. மாரியப்பன்.நமது நிருபரிடம் அவர் கூறியதாவது : குடிபோதையில் வாகனம் ஓட்டி மாட்டும்போது, அதுகுறித்த விபரமும் பதியப்படும். மீண்டும் அதே நபர் சிக்கும்போது,போலீசார் எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், எத்தனை முறை விதிமீறல் செய்துள்ளார் என்ற விபரம் உடனுக்குடன் தெரிவிக்கும் வசதி உள்ளது. பதிவெண்ணை திருடர்கள் மாற்றினாலும், இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பரை கொண்டு வண்டியின் முழுவிபரத்தையும் அறிய முடியும். இரு ஆண்டுகளுக்கு முன், எஸ்.எம்.எஸ்.,சில்(97881 11000) புகார் செய்யும் முறை, மதுரையில் அறிமுகமானது. சில காரணங்களால் அது நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது, மீண்டும்


இத்திட்டத்தை செயல்படுத்த ஆஸ்ரா கர்க் எஸ்.பி., கூறியுள்ளார். புகார் குறித்து பொதுமக்கள்எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அதை ஏற்றுக் கொண்டதற்கான மனு எண் புகார்தாரருக்கு உடனடியாகஅனுப்பப்படும். அந்த புகார் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு தெரிவிக்கப்படும். அவர் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரித்து நடவடிக்கை எடுப்பார். அதுகுறித்து எஸ்.எம்.எஸ்., மூலம் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் அனுப்புவார். போலீசார் வழக்குப்பதிவு செய்யாதது குறித்தும் எஸ்.பி., அலுவலகத்திற்கு பொதுமக்கள் எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். ஜன.,15ல் இவ்வசதியை அறிமுகப்படுத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர், என்றார். 

இதே நாள்...


  • அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி திறக்கப்பட்டது(1782)
  •  வில்லியம் கென்னடி டிக்சன், அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்(1894)
  •  அமெரிக்காவில் முதல் முறையாக அரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது(1789)
  •  புரூணை, ஆசியான் அமைப்பில் உறுப்பு நாடாக இணைந்தது(1984)

இனி மொபைலிலேயே ரயில் டிக்கெட் புக் செய்யலாம்.


ரயில் டிக்கெட்டுகளை மொபைல்போனிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் சேவையை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் பெட்டியின் நீளத்தைவிட, ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய காத்திருக்கும் க்யூ நீளம் அதிகமாக இருக்கிறது. ஆன்-லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதிகள் இருந்தும் கால்கடுக்க காத்திருக்கும் நிலை இன்னும் மாறவில்லை. ஆன்-லைனில் டிக்கெட் புக் செய்தாலும், ப்ரின்ட் அவுட் எடுக்க ஒட வேண்டி இருக்கிறது. இந்த சிரமத்துக்கெல்லாம் குட்பை சொல்ல ஒரு புதிய வசதியை ஐஆர்சிடிசி துவங்கியுள்ளது.
இனி மொபைலிலேயே ரயில் டிக்கெட் புக் செய்யலாம். இதற்கு ப்ரின்ட் அவுட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைலில் டிக்கெட் புக் செய்த பின்பு கிடைக்கும் மெசேஜை டிடிஆரிடம் காட்டினால் போதும். ஆனால் கையில் ஐடி ப்ரூஃப் அவசியம்.எனினும், மொபைல்களுக்காக ஐஆர்சிடிசி உருவாக்கியுள்ள இணையதளத்தில் புதிய முகவரியை உருவாக்கினால்தான் இந்த வசதியை பெற முடியும். முகவரி மற்றும் பாஸ்வேர்டை பெற்றவுடன் இந்த இணையதளத்துக்குள் சென்று ரயில் டிக்கெட்டை புக்கிங் செய்யலாம்.
வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்மார்ட்போன் மார்க்கெட் வேகமாக வளர்ந்து வருவதால் ஐஆர்சிடிசியின் புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த வசதியை சிம்பையான், ஆன்ட்ராய்டு போன்ற இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனில் பெறலாம். இருந்த இடத்தில் இருந்தே வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்க ஒரு புதிய வசதியை ஐஆர்சிடிசி ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறது.

ரத்த அழுத்தத்தைப் போக்கும் கடுகு எண்ணெய்!


கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உயர்தர சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்ஸின் போன்றவை நச்சுத்தன்மையை நீக்குகிறது. 

விஷத்தை கட்டுப்படுத்தும் தற்கொலை எண்ணத்தோடு விஷம், பூச்சிமருந்து, அருந்தியவர்களுக்கு இரண்டுகிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும்.இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும். 
ஜீரணம் ஏற்படும் கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.

மூட்டுவலி நீங்கும் அடிபட்டு ரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும். 
ஆஸ்துமா, தலைவலி நீங்கும் தேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்துமா, கபம் குணமடையும். கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும் 

ரத்த அழுத்தம் கட்டுப்படும் கடுகில் உள்ள பி-காம்ளக்ஸ் வைட்டமின் போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோப்ளோவின், வைட்டமின் பி – 6 போன்றவை அதிகம் காணப்படுகின்றன. கடுகில் உள்ள ப்ளேவனாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் கிடைத்த அரிய 5000 பொருட்கள் ஏலம்!















கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தம்ப்டான் பகுதியில் இருந்து டைட்டானிக் சொகுசு கப்பல் நியூயார்க் புறப்பட்டது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இக்கப்பல் தனது முதல் பயணத்தின் போதே வடக்கு அட்லான்டிக் கடலில் மிகப்பெரிய பனி கட்டியில் மோதி மூழ்கியது. உலகிலேயே அப்போது மிகப்பெரிய சொகுசு கப்பல் இதுதான். இதில் மொத்தம் 2,223 பேர் பயணம் செய்தனர். அந்த காலத்தில் நவீன தொழில் நுட்பத்தில் ஒயிட் ஸ்டார் லைன் என்ற கம்பெனி இதை உருவாக்கியது. விபத்தில் 1517 பேர் பலியாயினர். உலக வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக இது இன்னும் இடம்பெற்றுள்ளது. 

கப்பலில் பாதுகாப்பு அதிகமாக உள்ளது. எனவே, லைப் போட் தேவையில்லை என்று கப்பல் நிறுவனம் கூறியது. பல சர்ச்சைகளுக்கு இடையில் 1178 பேருக்கு மட்டுமே லைப்போட் இணைக்கப்பட்டு கப்பல் தனது முதல் பயணத்தை 1912 ஏப்ரல் 10ம் தேதி தொடங்கியது. அடுத்த 2வது நாளே பனி கட்டியில் மோதி கடலில் மூழ்கியது. அதன்பின், பல தனியார் நிறுவனங்கள், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்தன. அதில் இருந்து பல அரிய பொருட்களை மீட்டு வந்தன. இந்நிலையில், கப்பலில் கிடைத்த மிகச்சிறிய ஹேர்பின் முதல் கப்பலின் உடைந்த இரும்பு பாகங்கள் வரை 5,000 அரிய பொருட்களை வரும் ஏப்ரலில் ஏலம்விட அமெரிக்காவின் நியூயார்க் குர்ன்சே ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே டயானாவின் நகைகள், அமெரிக்க அதிபர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட போது பாதுகாப்பு சென்ற போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் போன்ற பல அரிய பொருட்களை ஏலம் விட்டுள்ளது. கப்பலில் பொருத்தி இருந்த கலைநயமிக்க பாகங்கள், தகரங்கள், பயணிகளின் பர்ஸ், கூலிங் கிளாஸ்கள் உள்பட பல பொருட்கள் ஏலத்துக்கு தயாராக உள்ளன. எனினும், ‘‘டைட்டானிக் பொருட்களை தனியாருக்கு விற்க கூடாது. பொருட்களை ஏலம் எடுப்பவர்கள், அவற்றை நன்கு பராமரிக்கவும், அவ்வப்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கவும் ஒப்புக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்பவர்களுக்கே டைட்டானிக் பொருட்களை விற்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் உதவியாளருடன் இலங்கை ஓட்டலில் காட்டிக்கொடுத்த கருணா கும்மாளம்!

இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தலைமையிலான படையில் கிழக்கு மாகாண படையை நிர்வகிக்கும் கர்னல் பொறுப்பில் இருந்தவர் விநாகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா. ஒரு கட்டத்தில் இவர் செய்த நிதிமுறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பிரபாகரன் இவரைக் கண்டித்தார்.  

 உடனே தனது பொறுப்பில் இருந்த வீரர்களுடன் விடுதலைப்புலிகள்  இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா,   தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற தனி அமைப்பை தொடங்கினார். அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்.  பின்னர் ராஜபக்சே அரசிடம் விலைபோனார்.    

கடந்த 2008ம் ஆண்டு ராஜபக்சே கட்சியில் சேர்ந்த கருணா,  தேர்தலில் போட்டியிட்டு  எம்.பி. ஆனார்.  பின்னர் 2009ம் ஆண்டு இவருக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் பதவியையும் ராஜபக்சே வழங்கினார். சொகுசு வாழ்க்கையை அனுபதிதுக்கொண்டிருக்கும் கருனா,  அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று  அங்குள்ள தமிழின ஆதரவாளர்களையும் சந்தித்து அவர்களையும் தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.    ஆனால் கருணாவின் துரோகத்தை மறக்க தமிழர்கள் ஒருபோதும் தயாராக இல்லை.  அவரை புறக்கணித்து வருகின்றனர்.




இந்நிலையில் கடந்த 1ம் தேதி இலங்கை ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை மது விருந்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.    இவரது அலுவலகத்தில் அந்தரங்க பெண் உதவியாளராக இருப்பவர் சாந்தினி.  இவருடன் மிக நெருக்கமாக ஆடிப்பாடி  மகிழ்ந்துள்ளார் கருணா.  இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.  இவையெல்லாம் கருணா மீது ஏற்கவே உலகத்தமிழர்களுக்கு இருக்கும்  கோபத்தை பன்மடங்கு அதிகரிக்கச்செய்துள்ளன.கருணாவின் சுயரூபத்தை பாருங்கள்  என்று தமிழர்கள் தங்கள் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.   தமிழினத்தை காட்டிக்கொடுத்தற்கு ராஜபக்சே கொடுத்த பரிசுதான் இந்த சிங்களப்பெண் சாந்தினி என்றும் கடுமையாக சாடியுள்ளனர்.

சூரியநமஸ்காரம் பண்ணுவோம் அதுக்கு முன்னாடி உங்களுக்கு கண்ணு போகணும் ஜி.கே.வாசன்!


இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற இந்திய அரசு உதவும்' என்று மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார். காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் எழுதியுள்ள தமிழினத்தின் இதயம் இலங்கை' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே.வாசன் தலைமை தாங்கி நூலை வெளியிட அதனை தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பேசியதாவது: இலங்கை இந்தியா நட்பும், உறவும் நீண்டு நெடியது. 1927ல் காந்தி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விடுதலை விதை விதைத்தது முதல் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இலங்கை தமிழர்களுக்காக ஆற்றிய பணிகள் பற்றி இதில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் இந்த உறவு அறுந்து போனது என்று வேதனையோடு அவர் குறிப்பிடுகிறார். மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கை தமிழர்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. போரில் பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது. ரூ.1000 கோடி நிதியுதவி முதல் இலவச டிராக்டர், மீன் பிடி படகுகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், ரெயில் பாதை, துறைமுக மேம்பாடு உள்பட பல உதவிகளை செய்து வருகிறது.

இலங்கை தமிழர்களுக்கு வாழ்வும், வளமும் அளிப்பது தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அவர்களுக்கு உதவி செய்வதால் மட்டுமே அவர்களை நண்பர்களாக மாற்ற முடியும். இதனை சிங்களர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் இன்றைக்கு அமைதி நிலையை காட்டும் என்று கூறியிருக்கிறார். இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்றால் ராஜீவ் காந்தி   ஜெயவர்த்தனே ஒப்பந்தம் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் மீண்டும் பெற வேண்டும். அதற்கு இந்திய அரசு உதவி செய்யும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

ஆட்டம் ஆரம்பம்...நக்கீரன் அலுவலகம் மீது ?





 நக்கீரன் இதழை தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினரும் 
ரவுடிகளும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். சோடாபாட்டில், பாறாங்கல், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன்அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். 

100க்கும் அதிகமான அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிக்க, பாதுகாப்பு என்ற பெயரில் வந்த போலீசார் வேடிக்கை பார்த்தபடியே நின்றனர். அ.தி.மு.கவினரின் த்ôக்குதலைக் கண்டு நடுங்கி 
ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர்.தொடர்ந்து கற்களும் சோடாபாட்டில்களும் நக்கீரன் அலுவலகத்திற்குள் பறந்து வந்தபடியே இருந்தன. பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினர் ஆகியோர் களத்திற்கு நேரில் வ்ந்து செய்தி சேகரிக்கும்போது அவர்கள் முன்னிலையிலேயே அ.தி.மு.க ரவுடிகள் கற்களை வீசினர். 

போலீசார் அவர்களைப் பெயருக்குத் தடுத்தபோது, போலீசாரைத் தள்ளிவிட்டுவிடடு அ.தி.மு.க ரவுடிகள் தாக்குதலைத் 
தொடர்ந்தனர். நக்கீரன் அலுவலக்ததிற்குள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகையினரும் தாக்குதலை நேரடியாக எதிர்கொள்ளவேண்டியிருந்தது. காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, அ.தி.மு.கவின் ஒவ்வொரு அணியினரும் கூட்டம் கூட்டமாக வந்து தாக்குதலைத் தொடர்ந்தபடியே இருக்கிறார்கள். தற்போதும் வன்முறை வெறியாட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...