நக்கீரன் இதழை தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். சோடாபாட்டில், பாறாங்கல், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன்அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர்.

100க்கும் அதிகமான அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிக்க, பாதுகாப்பு என்ற பெயரில் வந்த போலீசார் வேடிக்கை பார்த்தபடியே நின்றனர். அ.தி.மு.கவினரின் த்ôக்குதலைக் கண்டு நடுங்கி ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர்.தொடர்ந்து கற்களும் சோடாபாட்டில்களும் நக்கீரன் அலுவலகத்திற்குள் பறந்து வந்தபடியே இருந்தன. பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினர் ஆகியோர் களத்திற்கு நேரில் வ்ந்து செய்தி சேகரிக்கும்போது அவர்கள் முன்னிலையிலேயே அ.தி.மு.க ரவுடிகள் கற்களை வீசினர்.
போலீசார் அவர்களைப் பெயருக்குத் தடுத்தபோது, போலீசாரைத் தள்ளிவிட்டுவிடடு அ.தி.மு.க ரவுடிகள் தாக்குதலைத் தொடர்ந்தனர். நக்கீரன் அலுவலக்ததிற்குள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகையினரும் தாக்குதலை நேரடியாக எதிர்கொள்ளவேண்டியிருந்தது. காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, அ.தி.மு.கவின் ஒவ்வொரு அணியினரும் கூட்டம் கூட்டமாக வந்து தாக்குதலைத் தொடர்ந்தபடியே இருக்கிறார்கள். தற்போதும் வன்முறை வெறியாட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment