|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 March, 2011

இதே நாள் 23 மார்ச் 2011

  • உலக வானிலை தினம்
  •  பாகிஸ்தான் குடியரசு தினம்(1956)
  •  தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு பிறந்த தினம்(1893)
  •  இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் இறந்த தினம்(1931)
  •  கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது(1868)

சந்தர்ப்பவாதத்துக்குச் சாவுமணி அடியுங்கள்! பழ. நெடுமாறன்

முட்டி மோதி, பிணங்கி, சுணங்கி ஏமாற்றுபவர் யார், ஏமாந்தவர் யார் என்பதெல்லாம் புரியாத நிலையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுத் தேர்தல் களம் காண கட்சிகள் புறப்பட்டு விட்டன.  1967-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் தனியாகப் போட்டியிடும் வலிமையோ, துணிவோ தி.மு.க.வுக்குக் கிடையாது. 1972-ம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க.வும் தனித்துப்போட்டியிட துணியவில்லை

கூட்டணிக் கட்சிகளின் தோள் மீது ஏறி இரு கழகங்களும் தங்களை உயரமாகக் காட்ட முற்படுகின்றனவே தவிர, தனித்து நின்று தங்களின் குள்ள உருவத்தை அம்பலப்படுத்திக் கொள்ள முன்வரவில்லை.  ஆனால், தாங்கள்தான் பெரிய கட்சிகள் என்பதைப் போலவும், கூட்டுசேரும் கட்சிகள் எதுவானாலும் தங்களின் தயவில்லாமல் வெற்றிபெற முடியாது என்பதைப் போலவும் ஒரு மாயையை உருவாக்கி, மற்ற கட்சிகளுக்குப் பிச்சை போடுவதைப் போல சில தொகுதிகளைக் கொடுத்து ஆட்டிப்படைக்க இரு கழகங்களும் தவறுவதில்லை.

1967-ம் ஆண்டிலிருந்து இன்று வரை 44 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீட்டுக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இரு கழகங்களின் பல்லக்குத் தூக்கிகளாகத்தான் கூட்டணிக் கட்சிகள் இருக்க வேண்டும் என இரு கழகத் தலைமைகளும் கருதுகின்றன.  கூட்டணியில் உள்ள கட்சிகளை எவ்விதக் காரணமும் இல்லாமல் கழற்றிவிடுவதும், மீண்டும் வெட்கமில்லாமல் சேர்த்துக் கொள்வதும் இரு கழகங்களுக்கும் ஆகிவந்த கலையாகும்.

கூட்டணியில் சேர்ந்த பாவத்துக்காகக் கட்சிகள் இரு கழகங்கள் குறித்து எவ்வித விமர்சனமும் செய்வதைச் சகித்துக்கொள்ளும் பக்குவம் கழகத் தலைமைகளுக்கு அறவே கிடையாது. ஜனநாயக ரீதியில் கழக ஆட்சிகளின் குறைகளைக் கூட்டணிக் கட்சிகள் சுட்டிக்காட்டினால் அதைப் பொறுத்துக்கொள்ளும் பக்குவமோ தவறுகளைத் திருத்திக் கொள்ளும் குணமோ கழகத் தலைமைகளுக்கு இருப்பதில்லை. மாறாகக் கூட்டணியில் உள்ள கட்சிகளை மிரட்டுவதும், அவதூறுகளை அள்ளி வீசுவதும், கூட்டணியில் இருந்து நீக்குவதும் போன்ற பாசிசப் போக்கு இரு கழகத் தலைமைகளுக்கும் நிறையவே உண்டு.

கூட்டணிகளில் யாரைச் சேர்ப்பது, யாரை நீக்குவது என்பது போன்ற முக்கிய பிரச்னைகளில் முடிவெடுப்பது கழகத் தலைமைகள் மட்டுமல்ல. தலைமைகளின் குடும்ப உறுப்பினர்களும் அல்லது குடும்பத்துக்கு நெருக்கமானவர்களும் இதில் தலையிடுகிறார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப முடிவுகளை இரு கழகத் தலைமைகளும் எடுக்கின்றன. இதில் இருவருக்குமிடையே எவ்வித வேறுபாடும் கிடையாது.  குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, வேறு சிலரும் கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள், ஆகியோரின் தேர்விலும் தலையிடும் அவலப் போக்கு இரு கழகங்களிலும் நீடிக்கிறது.

மணல் திருடர்கள், கிரானைட் கொள்ளையர்கள், நாட்டு வளங்களைச் சூறையாடுபவர்கள், இயற்கைச் சூழலை மாசுபடுத்தும் மாபாவிகள், சாராய சாம்ராஜ்யவாதிகள் போன்ற சமூக விரோதக் கூட்டமும் இரு கழகங்களின் தலைமைகள் எடுக்கும் முடிவுகளைத் திருத்தவும், திசை திருப்பவும் சக்தி படைத்தவைகளாகத் திகழ்கின்றன.  தேர்தல் கூட்டணிக் கட்சிகளைவிட மிகஅதிகமான செல்வாக்குப் படைத்ததாக இந்தக் கொள்ளைக் கூட்டணிகள் விளங்குகின்றன. தேர்தல் கூட்டணிகளையே இவர்கள் தீர்மானிக்கிறார்கள். எவ்வித கூச்ச நாச்சமற்றவர்கள், மனசாட்சியை மறந்தவர்கள், தடித்த தோலர்கள், பஞ்சமா பாதகங்களுக்கும் அஞ்சாதவர்கள் கைகோத்து நிற்கிறார்கள். தமிழக அரசையும், அதை நடத்தும் இரு கழகத் தலைமைகளையும் தங்களின் பண வலிமையால் ஆட்டிப் படைக்கிறார்கள்.

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும் குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையிலும், இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனாலும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், கூட்டணி அரசின் நிறைகுறைகளை விமர்சிக்க ஒருபோதும் தயங்குவதில்லை. மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்னை ஏற்பட்டபோது, இடதுசாரிக் கூட்டணியில் அங்கம் வகித்த பல கட்சிகள் தங்கள் அரசைக் கண்டிக்க ஒருபோதும் தயங்கவில்லை. தங்கள் ஜனநாயகக் கடமையைச் செய்த அந்தக் கட்சிகள் மீது இடதுசாரிக் கூட்டணியின் தலைமை கோபப்படவில்லை.

ஆனால், இங்கு என்ன நடக்கிறது? கழக ஆட்சியின் தவறைச் சுட்டிக்காட்டிக் கண்டித்த கம்யூனிஸ்டு தலைவர் தா. பாண்டியனின் கார் எரிக்கப்பட்டது. இதுவரை காரை எரித்த குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் அனைவராலும் நன்கு மதிக்கப்படும் தியாகசீலர் நல்லகண்ணு மீது முதலமைச்சர் கருணாநிதி சேற்றை வாரி இறைக்கத் தவறவில்லை. இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் தியாகம், தொண்டு, துன்பம் ஆகியவற்றைத் தங்கள் தாரக மந்திரமாகக் கொண்டவர்கள். மக்கள் தொண்டுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். தி.மு.க.விலோ அல்லது அ.தி.மு.க.விலோ, கம்யூனிஸ்டுகள் அளவுக்குத் தியாகம் செய்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், அந்தக் கம்யூனிஸ்டுகளை இரு கழகத் தலைமைகளும் நடத்தும் விதம் வேதனைக்குரியதாகும். கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்துவரும் கம்யூனிஸ்டுகளை, கொள்கையற்ற கோமாளிகள் அவமானப்படுத்துகிறார்கள்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அவமானப்படுத்திய விதம் தமிழக மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க.வுடன் எல்லா வகையிலும் இணைந்து நின்றவர் வைகோ. அவரை முதலில் அழைத்து கூட்டணி பற்றிப் பேசவேண்டிய தலைமை, அவரைப் புறக்கணித்து, கடைசியில் ஏனோதானோ என்று நடத்திய விதம் அரசியல் பண்பாட்டுக்கு எதிரானதாகும். இதற்குப் பின்னணியில் பெரும் தொழில் நிறுவனம் ஒன்று இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்ற மேலவையிலும் அங்கம்வகித்து சிறந்த நாடாளுமன்றவாதியாகத் திகழ்ந்து முத்திரை பொறித்தவர் வைகோ ஆவார். தற்போதைய பிரதமரானாலும், பல்வேறு கட்சித் தலைவர்களானாலும் அவர்களைச் சந்திக்க வைகோ முற்பட்டால் உடனடியாக மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். ஆனால், மூத்த நாடாளுமன்றவாதியான வைகோவை சந்தித்துப் பேசுவதற்குப் பதில், யார்யாரையோ அனுப்பிப் பேசுவது தவறான போக்காகும். அவரை அவமதிப்பதாக நினைத்து, தங்களின் சுயவடிவத்தை அம்பலப்படுத்திக் கொள்வதாகும்.

தி.மு.க. கூட்டணியிலும் காங்கிரஸ் கட்சியை மிரட்டிப் பணியவைக்க தி.மு.க. தலைமை மேற்கொண்ட முயற்சிகள் எதிர்விளைவையே ஏற்படுத்தின. தொகுதிகளின் எண்ணிக்கைக்காக இந்த மோதல் நடைபெறவில்லை. மாறாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிகொண்டிருக்கிற தனது குடும்பத்தினரைக் காப்பாற்றுவதற்காகவே தி.மு.க. தலைமை இவ்வாறு நடந்துகொண்டது என்பதும், அது கடைசியில் பலிக்கவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது.

தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளரான ஆ. ராசா, ஊழல் பரப்புச் செயலாளரானதையும் இந்தியாவின் மிகப் பெரிய ஊழலை நடத்திக்காட்டிச் சாதனை படைத்ததையும் குறித்து கழகத் தலைமைக்கு வெட்கமில்லை. எனது தம்பி ராசா தவறு செய்யவேயில்லை என்று வக்காலத்து வாங்க கருணாநிதி பின்வாங்கவில்லை. ஊழல் புகாரில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகி, பதவி விலகி வரும் ராசாவுக்கு விமான நிலையத்தில் கழகத் தம்பிகளைக் கொண்டு ஆரவார வரவேற்பு அளிக்கவும் அவர் தயங்கவில்லை.

முதல்வரின் மனைவி, மகள் ஆகியோரை ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்களுக்காக சி.பி.ஐ. விசாரிக்கிறது. அதே வேளையில் அதே அறிவாலயக் கட்டடத்தின் இன்னொரு பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினருடன் கூட்டணி பற்றிய விவாதத்தில் கருணாநிதி ஈடுபட்டிருப்பதைக் காணும்போது எப்பேர்ப்பட்ட சரிவும் இழிவும் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுவிட்டது என்ற உணர்வு யாருக்கும் ஏற்படாமல் போகாது.

ஊழல்களையும் தவறுகளையும் மறைக்க இரு கழகத் தலைமைகளும் கையாளும் தந்திரம்தான் இலவசத் திட்டங்கள் ஆகும். இரண்டு கழகங்களுமே இலவசங்களை அறிவிப்பதில் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், இளைஞர்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், நாட்டின் தொழில் வளம் பெருகவும், வேளாண்மை சிறக்கவும், வயது வந்த குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்கவும், எவ்விதத் திட்டத்தையும் அறிவிக்க முன்வராத இந்தக் கட்சிகள், தொலைக்காட்சிப் பெட்டிகளையும், கிரைண்டர்களையும் கொடுத்து மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமலும், இலவசத் திட்டங்களின் மூலம் பொருளாதார வளர்ச்சி சீரழிவதைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்காமலும் இரு கழகங்களும் செயல்படுகின்றன.  ஊழலின் விளைவாகத் தாங்கள் மூட்டை மூட்டையாகச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும் பெரு முதலாளிகள் அள்ளித் தந்த பணத்தையும் மட்டுமே நம்பித் தேர்தல் களத்தில் இரு கழகங்களும் இறங்கியுள்ளன. பணத்தை வாரியிறைத்து ஜனநாயகத்துக்கு சவக்குழித் தோண்டிப் புதைத்துவிட்டு பணநாயகத்தை அரியணையில் ஏற்றுவதற்கு இரு கழகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கின்றன. இனி கோடீஸ்வரர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். ஏழை எளியவர்களுக்குத் தேர்தல் என்பது எட்டாக் கனியாக்கப்பட்டுவிட்டது.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் தி.மு.க.வுக்குக் கிடைத்த வாக்குகளின் சதவிகிதம் 26.46, அ.தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் 32.64. மேலும் இந்த வாக்கு சதவிகிதக் கணக்குகள் துல்லியமானவை அல்ல. தி.மு.க. பெற்ற வாக்குகளும், அ.தி.மு.க. பெற்ற வாக்குகளும் அந்தக் கட்சிகளுக்கு மட்டும் கிடைத்த தனித்த வாக்குகள் அல்ல. கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து கணக்கிட்டதால்தான் இந்த சதவிகிதம். இந்த வாக்கு சதவிகிதம் இந்தத் தேர்தலில் அப்படியே நீடிக்கும் என்று கூறமுடியாது. இது மேலும் குறையுமே தவிர ஒருபோதும் கூடாது.

இந்தக் குறைந்த அளவு வாக்குகளின் துணைகொண்டு தொடர்ந்து இரு கழகங்களும் ஆட்சியை மாறிமாறிக் கைப்பற்றுகின்றனவே தவிர, பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியில் அமரவில்லை. 1967-ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் இரு கழகங்களும் ஒரு தடவைகூட 50 சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகளைத் தனித்துப் பெற்றதே இல்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் இவைகள் மாறிமாறி வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளன என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்

தமிழகத்தின் எதிர்காலம் குறித்து உண்மையாகவே கவலை கொள்பவர்கள் வருந்தாமலிருக்க முடியாது. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த வாக்காளர்கள் செய்கிற தவறு பல தலைமுறைகளுக்கு மக்களைப் பாதித்துவிடக்கூடாது. 1933-ம் ஆண்டில் ஜெர்மானிய மக்கள் ஹிட்லரின் மாய்மாலப் பேச்சில் மயங்கி அவரின் நாசிக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அப்போதும் அவருக்குப் பெரும்பான்மை இல்லை. எப்படியோ ஆட்சிபீடம் ஏறிய பிறகு, அவர் சர்வாதிகாரியாக மாறினார். ஜெர்மானிய நாட்டை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தி ஐரோப்பாவையே நாசமாக்கினார். ஜெர்மனியும் அழிந்தது. ஹிட்லரும் அழிந்தார். இந்த அழிவிலிருந்து ஜெர்மனி எழுந்து நிற்க, 50 ஆண்டுகளுக்கு மேலாயிற்று. அறிவியல் ரீதியில் மிக முன்னேறிய சமூகமான ஜெர்மானிய சமூகம் ஒரு தடவை செய்த தவறைத் திருத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தேவைப்பட்டது என்று சொன்னால் நாம் இப்போது செய்கிற தவறை யார் திருத்துவது? எப்போது திருத்துவது?                  
      

சற்றென்று மாறுது வானிலை குறும்படம்

படம் சொல்லப்பட்ட விதம் கொஞ்சம் போரடிக்குது இளமை துள்ளும் தலைப்புக்கு நல்லா எடுத்துருக்கலாம் நாயகன் நடிப்பு அருமை எழுத்து,இயக்கம் .ஸ்ரீநிவாஸ் கவிநயம் . முன்னேற வாழ்த்துக்கள் ! 

இந்திய திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களான ரகுராம்-கிரிஜா ரகுராம் தம்பதிகளின் மகள்தான் சுஜா. தனது பெற்றொர்களிடம் இருந்து நடனத்தை கற்றுகொண்ட சுஜா, 'கிருஷ்ணதாசி' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து தன்னை சிறந்த நடிகையாகவும் வெளிக்காட்டிய இவரது நடன அரங்கேற்றம், 2000ஆம் ஆண்டு நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரது முன்னிலையில் அரங்கேறியது. 'காதலா காதலா', 'லிட்டில் ஜான்' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய இவர், தனது சித்தியும், பிரபல நடன இயக்குநருமான கலா மாஸ்ட்டரோடு இணைந்து உலகமெங்கும் பல நடன நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். 2002ஆம் ஆண்டு மனோஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறிய சுஜா, புகைப்படகலை, விமானம் ஓட்டுவது போன்ற பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டார். மேலும் 2005ஆம் ஆண்டு 'நர்தன சாலா' என்ற நடன அகடாமியை அமெரிக்காவில் ஆரம்பித்து 300க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அமெரிக்க மாணவர்களுக்கு நடன பயிற்சி அளித்து வருகிறார். இந்த நடன பள்ளியின் ஐந்தாவது ஆண்டு விழா பிரபுதேவா மற்றும் நயன்தாரா ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவில் உள்ள காசாஸ் சிட்டி-மிசோரி மகாணத்தில் வசித்து வரும் சுஜா மனோஜ். அமெரிக்காவில் உள்ள இந்தியாவை சேர்ந்த ஒரே பெண் நடன இயக்குநர் ஆவார். தனது நடன பள்ளியில் உள்ள மாணவர்களை கொண்டு பல நடன நிகழ்ச்சிகளை அமெரிக்காவில் நடத்தில் புகழ்பெற்ற இவர், 100 சிறந்த அமெரிக்க பாலே நடன கலைஞர்களுக்கு இந்திய வம்ச வழி நடன கலையை கற்றுகொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


குறும்படம் அறிவுதிறன்

ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுத்த குறும்படம்  எழுத்து ,இயக்கம் .தீபன் .samaritans  என ஆங்கிலப்பெயர்  வைத்ததுக்கு  நல்ல தமிழ் பெயர் வைத்து இருக்கலாம் வாழ்த்துக்கள் .    

அமெரிக்க பாலே டான்ஸர்களுக்கு இந்திய நடனத்தை கற்றுத்தரும் தமிழக நடன இயக்குநர்

இந்திய திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களான ரகுராம்-கிரிஜா ரகுராம் தம்பதிகளின் மகள்தான் சுஜா. தனது பெற்றொர்களிடம் இருந்து நடனத்தை கற்றுகொண்ட சுஜா, 'கிருஷ்ணதாசி' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து தன்னை சிறந்த நடிகையாகவும் வெளிக்காட்டிய இவரது நடன அரங்கேற்றம், 2000ஆம் ஆண்டு நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரது முன்னிலையில் அரங்கேறியது.

'காதலா காதலா', 'லிட்டில் ஜான்' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய இவர், தனது சித்தியும், பிரபல நடன இயக்குநருமான கலா மாஸ்ட்டரோடு இணைந்து உலகமெங்கும் பல நடன நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

2002ஆம் ஆண்டு மனோஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறிய சுஜா, புகைப்படகலை, விமானம் ஓட்டுவது போன்ற பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டார். மேலும் 2005ஆம் ஆண்டு 'நர்தன சாலா' என்ற நடன அகடாமியை அமெரிக்காவில் ஆரம்பித்து 300க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அமெரிக்க மாணவர்களுக்கு நடன பயிற்சி அளித்து வருகிறார்.

இந்த நடன பள்ளியின் ஐந்தாவது ஆண்டு விழா பிரபுதேவா மற்றும் நயன்தாரா ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவில் உள்ள காசாஸ் சிட்டி-மிசோரி மகாணத்தில் வசித்து வரும் சுஜா மனோஜ். அமெரிக்காவில் உள்ள இந்தியாவை சேர்ந்த ஒரே பெண் நடன இயக்குநர் ஆவார். தனது நடன பள்ளியில் உள்ள மாணவர்களை கொண்டு பல நடன நிகழ்ச்சிகளை அமெரிக்காவில் நடத்தில் புகழ்பெற்ற இவர், 100 சிறந்த அமெரிக்க பாலே நடன கலைஞர்களுக்கு இந்திய வம்ச வழி நடன கலையை கற்றுகொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மெரீனாவில் பார்வதி அம்மாள் அஸ்தி கரைப்பு

 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தி சென்னை மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கடலில் கரைக்கப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையின் பின்புறம் உள்ள கடற்கரையில் இன்று மாலை பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் திரண்டனர். சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளை பிடித்திருந்தனர். ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிக் கொடிகளும் பறந்தன.

மாலை 5.30 மணிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோவும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனும் வந்தனர். அவர்களோடு கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீரசந்தானம் ஆகியோரும் கலந்துக்கொள்ள, பார்வதி அம்மாளின் படத்துடன் பெரும் திரளாய் கடலை நோக்கிச் சென்றனர்.

கடல் நீரில் பார்வதி அம்மாளின் அஸ்தி கரைக்கப்படும்போது, பார்வதி அம்மாள் புகழ் வாழ்க என்று உரத்த குரலில் வைகோ முழக்கமிட, அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் முழக்கமிட்டனர்.

இந்நிகழ்ச்சி கடற்கரையில் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Justin Bieber and U2 to appear on Japanese charity disc


Justin Bieber and U2 are among artists who have agreed to contribute songs to an album to raise funds for victims of the Japanese earthquake and tsunami.
Record label Universal Music said it hoped to release the digital-only album globally by the end of the week.
Bon Jovi and Rihanna have also been confirmed for the album, which will raise money for the Japanese Red Cross.
On Tuesday police said the death toll from the disaster had risen to 9,079, with 12,645 people listed as missing.
"We are doing it only digitally because it is faster," said a Universal spokesman, adding that the record would be "a worldwide release".
Announcing his involvement with the album on Twitter, Bieber wrote: "Japan needs our help... We all need to step up."
Trinidadian singer and rapper Nicki Minaj, whose album Pink Friday went to number one in the US last year, is also confirmed.
Universal artist Lady Gaga may also appear on the album, with more artists set to be announced.
The Poker Face singer has designed a "We Pray for Japan" rubber wrist band to sell to fans, with all proceeds going to relief efforts.
Last week she announced her fans had raised $250,000 (£153,000) within the first two days of sales.

U.S. fighter crashes in Libya

A pilot and weapons officer aboard an F-15E Strike Eagle had flown from Aviano Air Base in Italy to Libya when the fighter experienced problems, the U.S. military command for Africa said in a statement. Both pilots ejected, the statement said.
The pilot and weapons officer suffered minor injuries but landed safely in two different places on Libyan soil, the military said.
The U.S. military dispatched a pair of Osprey tilt-rotor aircraft from the amphibious assault ship USS Kearsarge, about 100 miles off the coast of Libya, to pick up the pilot. He was then flown to the vessel, which has extensive medical facilities, military officials said.
Libyan rebels recovered the second crew member and "took good care of him" until coalition forces were able to reach him, a senior defense official said.

Power restored to Japanese reactor's control room, officials say


யுனெஸ்கோ பாரம்பரிய மாநாடு பாரீஸ் நகருக்கு மாற்றம்

பஹ்ரைனில் நடைபெறுவதாக இருந்த யுனெஸ்கோ பாரம்பரிய மாநாடு திடீரென பாரீஸ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது.இத்தகவலை யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் இரினா போகோவா தெரிவித்துள்ளார். பஹ்ரைன் நாட்டில் தற்போது அரசியல் குழப்பம் நிலவுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. யுனெஸ்கோ பாரம்பரிய மாநாடு வரும் ஜூன் மாதம் பஹ்ரைனில் நடைபெறுதாக இருந்தது. உலகின் பாரம்பரியச் சின்னங்களை தேர்வு செய்வது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இத்தகைய மாநாட்டில் முடிவு எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், பஹ்ரைனில் நடைபெறவிருந்த ஃபார்முலா ஒன் கார் பந்தயம், அரசியல் ஸ்திரமற்ற நிலையால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது திடீரென யுனெஸ்கோ பாரம்பரிய மாநாடு பாரீஸ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது.

IPDC Bureau to decide on its support to media development projects at meeting in Paris

IPDC Bureau to decide on its support to media development projects at meeting in Paris

5 ஆயிரம் பாக். ரசிகர்கள் இந்தியா வருகை

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் 5 ஆயிரம் பேர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கால் இறுதி ஆட்டம் ஆமதாபாத்தில் வருகிற 24ந் தேதியும், 2வது அரை இறுதிப் போட்டி மொகாலியில் வருகிற 30ந் தேதியும், இறுதிப் போட்டி மும்பையில் ஏப்ரல் 2ந் தேதியும் நடக்கிறது.
இந்த ஆட்டங்களை நேரில் காண பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் 5 ஆயிரம் பேர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்த ரசிகர்களுக்கு தேவையான சோதனைகளுக்கு பின்னர் 15 நாள் விசா அளிக்கப்பட்டு இருக்கிறது என்று அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பேட்டிங் வரிசையில் மாற்றம்: ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது அதனை சரி செய்வது எப்படி என்பது குறித்து விவாதங்கள் நடக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. இதனால் அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும் ஆட்டத்தில் நடந்த தவறுகள் என்ன? அதனை களைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங்குக்கு காரணம் சொல்ல முடியாது. டாஸ் வென்றது முதல் பிட்ச் உள்ளிட்ட எல்லா அம்சங்களும் எங்களுக்கு சாதகமாக இருந்தது. நல்ல ஸ்கோரை குவிக்க எங்களுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் அதனை நாங்கள் செய்யவில்லை. ஆட்டத்தை கைநழுவ விட்டு விட்டோம் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

தே.மு.தி.க.சார்பில் போட்டிடும் நடிகர் அருண் பாண்டியன்

நடிகர் அருண்பாண்டியன் தே.மு.தி.க. வேட்பாளராக பேராவூரணி தொகுதியில் போட்டியிடுகிறார்.   வேட்பாளரானது குறித்து அருண்பாண்டியன், 

விஜயகாந்தும் நானும் நெருங்கிய நண்பர்கள். ஊமை விழிகள் படத்தில் இருந்து நெருக்கமாக பழகி வருகிறோம். எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக சேவை பணிகளில் எனக்கு ஆர்வம் உண்டு. “நந்தலாலா”, “பேராண்மை”, “அங்காடித்தெரு” போன்ற நான் தயாரித்த படங்கள் சமூக சிந்தனை உடையவை. எனக்கு போதும் என்கிற அளவு பணமும், புகழும் இருக்கிறது. இனிமேல் மக்கள் பணியாற்றுவது என முடிவு செய்துள்ளேன்

பேராவூரணி எனக்கு பரிச்சயமான தொகுதி. அங்கு எனக்கு நிறைய நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர். என்னை வெற்றி பெறச் செய்தால் முன் மாதிரி எம்.எல்.ஏ.வாக பணியாற்றுவேன். சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்வேன்.  

தேர்தல் கமிஷனர்கள் பலர் வந்து போய் உள்ளனர். டி.என். சேஷன் பொறுப்பேற்ற போதுதான் அதன் மகத்துவத்தை அறிய முடிந்தது. நானும் எம்.எல்.ஏ. பதவியை பயன்படுத்தி முத்திரை பதிப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.  


அய்கரன் நிறுவனம் தரமான படங்களை அளித்துவரும் அருண்பாண்டியன் நிச்சயம் நல்ல MLA  வாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் நாம்  வாழ்த்துவோம்  நம்பிகைதானே வாழ்கை!          

சீமான் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி

சென்னை ஐகோர்ட்டில் `நாம் தமிழர்' இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் சவு.சுந்தரமூர்த்தி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சினிமா இயக்குனரும், `நாம் தமிழர்' இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கு கொரட்டூரில் பாராட்டு பொதுக்கூட்டம் நடத்த அம்பத்தூர் உதவி போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம்.
ஆனால் எங்களுக்கு அனுமதி தராமல் 11.12.10 அன்று எங்கள் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து உதவி கமிஷனர் உத்தரவிட்டார். இது அரசியல் சாசனம் தந்துள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. எனவே உதவி கமிஷனரின் உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்து அம்பத்தூர் உதவி கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், ஏப்ரல் 2-ந் தேதி கொரட்டூர் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடத்த `நாம் தமிழர்' இயக்கத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கூட்டத்துக்கு தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்

Dongala muta Telugu Movie Online

Superstar’s international invitation

ரஜினிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு! 

ஜப்பானிய மக்கள் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு, உடனே திரும்ப எழுந்துவிடுவார்கள். கடினமாக உழைக்கிற மக்கள் அவர்கள்.

அந்த மக்களுக்கு இயற்கை தொடர்ந்து இன்னல்களைக் கொடுத்து வருகிறது. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், தியானம்-பிரார்த்தனை மூலம் அவர்கள் மீண்டும் சகஜ நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்களுக்காக இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்.

ஜப்பானிய மக்கள் மிகவும் கட்டுக்கோப்பானவர்கள். கடமை தவறாதவர்கள். அங்கு சுனாமி வந்தபோது, ஒரு ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர், பயணிகளிடம் 'நம் நாட்டை சுனாமி தாக்கியிருக்கிறது. என்றாலும் நான் கடமையில் இருந்து தவறமாட்டேன்' என்று கூறி, தொடர்ந்து தனது கடமையை செய்திருக்கிறார்.

இன்னொரு இடத்தில் மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். சுனாமி தாக்கியதும் அவர்கள் சிதறிப் போனார்கள். சுனாமி அடங்கியபின் மீண்டும் அவர்கள் அதே வரிசையில் நின்று பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற கட்டுக்கோப்பும், கடமை உணர்வும்தான் ஜப்பானியர்களின் மிகச் சிறந்த குணம்.

ஜப்பானுக்கு வரும்படி என்னை, அந்த நாட்டின் பிரதமரும், சில முக்கியஸ்தர்களும் அழைத்திருக்கிறார்கள். ஜப்பானிய மக்கள் மீண்டும் சகஜ நிலையை அடைவதற்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார் ரஜினி.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைகிறார் அமிதாப்!


20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த் . ராணா படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அமிதாப்.


எண்பதுகளில் ரஜினி தனது பாலிவுட் பிரவேசத்தைத் தொடங்கியதே அமிதாப்புடன்தான். அந்தாகானூன் படத்தில் ரஜினியும் அவரும் இணைந்து நடித்திருந்தனர். தொடர்ந்து கிராப்தார், ஹம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.

1991-ல் வெளியான ஹம் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இந்த நிலையில் ராணா தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் நேரடிப் படமாகவே உருவாகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் அமிதாப். இதனை அமிதாப்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பெங்களூர் வருகிறார் உலகக் கோடீஸ்வரர் வாரன் பஃபே!

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டவருமான வாரன் பஃபே இந்த வாரம் இந்தியா வருகிறார்.


இந்த வருகையின் போது அவர் பார்க்க விரும்பும் முதல் இந்திய நகரம்... பெங்களூர்தான். இங்குள்ள டேகு டெக் இந்தியா என்ற நிறுவனத்தைப் பார்வையிடுகிறார் வாரன் பஃபே. அதென்ன இந்த நிறுவனத்தின் மீதுமட்டும் அவ்வளவு அக்கறை?

2000-ல் நிறுவப்பட்ட இந்த டேகு டெக், தென் கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐஎம்சியின் இந்தியப் பிரிவாகும். டங்ஸ்டன் கார்பைட் இழைகள் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனத்தின் 80 சதவீதப் பங்குகளை வாரன் பஃபேயின் பெர்க்ஷையர் ஹாத்வே வாங்கியுள்ளது.

இந்த முதலீட்டைப் பெற்ற சில ஆண்டுகளுக்குள் அதற்கான வருவாயை இரட்டிப்பாக்கிக் கொடுத்துள்ளது டேகு டெக். அதனால்தான், தனது இந்தியப் பயணத்தின் முதல் விசிட்டே பெங்களூராகத்தான் இருக்க வேண்டும் என வாரன் பஃபேயை முடிவு செய்தாராம்.

இதுகுறித்து டேகு டெக் நிறுவனத்தின் தலைவர் எல் கிருஷ்ணன் கூறுகையில், "வாரன் பஃபே வருகிறார் என்று தெரிந்ததுமே எனது போன்கள் ஓயாமல் அலறிக் கொண்டுள்ளன. அத்தனை விசாரிப்புகள். அவரது வருகை, ஒட்டுமொத்த இந்தியாவையும் எங்கள் நிறுவனத்தின் பக்கம் திரும்ப வைத்துள்ளது..." என்றார்.

இந்தப் பயணத்தின்போது, பெங்களூரில் உள்ள மற்ற பெரும் தொழில் நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் சிஇஓக்களையும், சிஐஐயின் உறுப்பினர்களையும் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் வாரன் பஃபே.

எஸ்பிஐ சேவையில் அதிருப்தியா... ஒரு எஸ்எம்எஸ் போதும்!!

நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சேவையில் உங்களுக்குத் திருப்தி இல்லையா.. ஒரு எஸ்எம்எஸ் போதும். அடுத்த 48 மணி நேரத்தில் உங்கள் அதிருப்திக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு சரி செய்வார்கள் அதிகாரிகள் என அறிவித்துள்ளது அந்த வங்கி.


13 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மிகப் பெரிய அரசு வங்கியாகத் திகழும எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை இது. இனி புகார் செய்ய பேப்பர், பேனா என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம்.

குறிப்பிட கிளையில் உங்களுக்கு திருப்தியான சேவை கிடைக்கவில்லை என்றால், உடனே உங்கள் மொபைலௌ எடுத்து Unhappy என்று டைப் செய்து 8008202020 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும். அடுத்த 48 மணி நேரத்துக்குள் உங்கள் பிரச்சினை சரி செய்யப்பட்டுவிடுமாம்.

Gaddafi forces shell Libyan city

Forces loyal to longtime Libyan leader Muammar Gaddafi have shelled Misurata, pressing their siege of the embattled western city.
Four children were killed in the shelling on Tuesday, a resident named Mohammed Ahmed told the Reuters news agency. The children were killed while trying to flee their home, a rebel spokesman told Al Jazeera.
Gaddafi's regime has encircled Misurata for days, bringing in tanks and stationing snipers on rooftops, in an attempt to choke off one of the only cities in the west where a strong rebel presence remains. Shelling there killed at least 40 people on Monday, Ahmed said.
Misurata lies around 200km east of Tripoli, the capital, and is home to a major oil refinery.
Libyan government spokesman Ibrahim said Misurata, Libya's third-largest city, was "liberated three days ago" and that Gaddafi's forces were hunting "terrorist elements".
But a spokesman for opposition fighters in the city told the AFP news agency that the opposition remained in control despite an onslaught by Gaddafi loyalists, who he said opened fire with tanks and set snipers on roofs to gun down people in the streets.
"Casualties fell in their dozens," after snipers and a tank "fired on demonstrators", the spokesman said.
The opposition spokesman said Gaddafi's troops "have taken up position along the main road where they have deployed three tanks, as well as positioning snipers on rooftops.

கல்லூரி மாணவிக்கு டி.சி.எஸ்., விருது

, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவிக்கு, டி.சி.எஸ்., சிறந்த மாணவி விருது நேற்று வழங்கப்பட்டது. டி.சி.எஸ்., சிறந்த கல்லூரி மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை, ராமாபுரம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் அப்துல் கனி வரவேற்றார். டி.சி.எஸ்., தென்னிந்திய தலைமை அதிகாரி பட்டாபிராமன், ஈஸ்வரி கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படிக்கும் ராஜேஸ்வரி என்ற மாணவிக்கு விருது வழங்கி பேசுகையில், "தமிழகத்தில் டி.சி.எஸ்., சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14 கல்லூரிகளில், ஈஸ்வரி கல்லூரியும் ஒன்று. தங்களை மேம்படுத்திக் கொண்டு மாணவர்கள் வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும்' என்றார்.

வற்றிய தண்ணீரும்... வற்றாத கண்ணீரும்: இன்று உலக தண்ணீர் தினம்


சிறைப்பட்டபோதும், சேவகன் ஒருவன் தாமதித்து கொண்டு வந்து இடது கையால் கொடுத்த குவளை தண்ணீரைக் குடிக்காமல், மானம் பெரிதென உயிர்விட்டான் சேரன் கணைக்கால் இரும்பொறை. இன்று அவன் இருந்திருந்தால், நம் தேசத்தின் தண்ணீர் கொள்கையை பார்த்தே மாண்டு போயிருப்பான்.

விருந்தோ, பகையோ வீடு தேடி வந்தவரை ஒரு குவளை தண்ணீருடன் வரவேற்பது கொங்கு நாகரிகம். உலகின் இரண்டாவது சுவைமிக்க குடிநீரைப் பருகிப்பார் என விருந்தோம்பிய கோவையில், தண்ணீர் போத்தல்கள் (பாட்டில்) கடைகளில் தொங்குவது, சிறுவாணி ஆறே தூக்கில் தொங்குவது போல் தோன்றுகிறது; காவியங்கள் சொன்ன காலத்தை கற்பனை செய்தால், கண்களின் ஓரங்களில் கண்ணீர் திரள்கிறது.முரண்களை அரங்கேற்றிய முடிகளாலும் (அரசு), பொறுப்பற்ற குடிகளாலும் (மக்கள்), வளம் பெருக்கிய ஆறுகள், வற்றி வறண்டு இன்று கழிவுநீர் கால்வாய்களாகி விட்டன. வரப்பெடுத்த வயலையும், நுரை பொங்கிய நதியையும், தேக்கிய நல் வாய்க்கால்களையும் பாரதிதாசனின் பாடல்களில் மட்டுமே காண முடிகிறது.

 ஐம்பதுகளை தாண்டியவர்களுக்கு வேண்டுமானால், பள்ளம், படுகையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் குளித்தது நினைவிருக்கலாம். முப்பாட்டன் குடித்த ஆறு, பாட்டன் குளித்த ஆறு, தந்தை பாதம் பதித்த ஆறு, இன்றைய தலைமுறைக்கு என்னவாக இருக்கிறது? முகம் சுளிக்கும் சாக்கடையாக தானே.ஏரிகளும், குளங்களும் பூமித்தாயின் வடுக்களாகி வருடங்கள் பல கடந்து விட்டன; சிற்றோடைகள் இருந்ததற்கு, கர்ண பரம்பரைக் கதைகள் மட்டுமே ஆதாரம். ஒரு லிட்டர் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கி ஒரு மிடறு விழுங்கியதும், அடுத்தடுத்த துளிகள் காசுகளாகவே கண்களுக்கு தெரிகிறது.பாதரசத்தை திரவத் தங்கம் என்பர். இனி தண்ணீரை தான் சொல்ல வேண்டும். தாயின் மார்பில் சுரக்கும் பாலை, துளைகளிட்டு உறிஞ்சினால் என்னவாகும்? பூமியெங்கும் இயந்திரமத்துகளால் ஆழ்குழாய் கிணறுகள் துளையிடப்படுவதும் அப்படி தானே?
எதிர்காலச் சந்ததியினருக்காக சேமிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை அப்பட்டமாக திருடுகிறோம். பணமும், அதிகார போதையும், விளம்பர புகழும் தண்ணீரின் அத்தியாவசியத்தை உணராமல் மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன. பணத்தை தண்ணீராய் செலவழித்த காலம் போய், தண்ணீருக்காக பணத்தை செலவழிக்கிறோம்.நமது தலைமுறை வறண்டிருக்கும் ஆறுகளையாவது பார்த்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு ஆறு என்பதை எப்படி காட்டப் போகிறோம். ஆறு தன் வரலாறு கூறும் கேள்வி, பாடப்புத்தகங்களில் இடம் பெறலாம். வரும் தலைமுறை அக்கேள்விக்கு எப்படி விடையெழுதும்; முன்பொரு காலத்தில் ஆறுகள் இருந்தன என்றா?

ஆற்றுமணல் பணமாக மாறலாம்; ஆனால், காகிதப் பணம் குடிநீராக மாறும் ரசவாத வித்தை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில காலம் கழித்து ஒரு தலைமுறை கேட்கும், எங்களுக்கான தண்ணீர் எங்கே என்று; உங்கள் வீட்டின் பிஞ்சுக் குழந்தையின் முகம் பாருங்கள். பரிதாபத்திற்குரிய அந்த தலைமுறைக்கு சில நீர் ஆதாரங்களையாவது விட்டுச் செல்லுங்கள். நீங்கள் மனிதராய் வாழ்ந்ததற்கு அதுவாவது ஆதாரமாய் இருக்கட்டும்.

உலக கோப்பை கிரிக்கெட்: நாளை முதல் காலிறுதி

உலககோப்பை கிரிக்கெட் முதல் கால் இறுதி போட்டி நாளை வங்க தேசத்தில் உள்ள மிர்பூரில் நடக்கிறது. இதில் பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. 24ம் தேதி ஆமதாபாத்தில் நடைபெறும் 2-வது கால் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கால்இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து, இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...