பஹ்ரைனில் நடைபெறுவதாக இருந்த யுனெஸ்கோ பாரம்பரிய மாநாடு திடீரென பாரீஸ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது.இத்தகவலை யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் இரினா போகோவா தெரிவித்துள்ளார். பஹ்ரைன் நாட்டில் தற்போது அரசியல் குழப்பம் நிலவுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. யுனெஸ்கோ பாரம்பரிய மாநாடு வரும் ஜூன் மாதம் பஹ்ரைனில் நடைபெறுதாக இருந்தது. உலகின் பாரம்பரியச் சின்னங்களை தேர்வு செய்வது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இத்தகைய மாநாட்டில் முடிவு எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், பஹ்ரைனில் நடைபெறவிருந்த ஃபார்முலா ஒன் கார் பந்தயம், அரசியல் ஸ்திரமற்ற நிலையால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது திடீரென யுனெஸ்கோ பாரம்பரிய மாநாடு பாரீஸ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment