சென்னை ஐகோர்ட்டில் `நாம் தமிழர்' இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் சவு.சுந்தரமூர்த்தி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சினிமா இயக்குனரும், `நாம் தமிழர்' இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கு கொரட்டூரில் பாராட்டு பொதுக்கூட்டம் நடத்த அம்பத்தூர் உதவி போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம்.

ஆனால் எங்களுக்கு அனுமதி தராமல் 11.12.10 அன்று எங்கள் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து உதவி கமிஷனர் உத்தரவிட்டார். இது அரசியல் சாசனம் தந்துள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. எனவே உதவி கமிஷனரின் உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்து அம்பத்தூர் உதவி கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், ஏப்ரல் 2-ந் தேதி கொரட்டூர் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடத்த `நாம் தமிழர்' இயக்கத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கூட்டத்துக்கு தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்
No comments:
Post a Comment