|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 November, 2011

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிருக்குரிய தண்டனை !


கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிருக்குரிய தண்டனை விவரம் இன்று வெளியாகிறது. தீர்ப்புக்குப் பின் இவர்கள் ஜெயிலில் அடைக்கப்படுவர் என்று தெரிகிறது.கடந்த ஆண்டு நடந்த லார்ட்ஸ் டெஸ்டில், பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டன் சல்மான் பட், 27, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், 28, முகமது ஆமிர் 19, ஆகியோர் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டு பிடிபட்டனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சல்மான் பட் (10 ஆண்டு), முகமது ஆசிப் (7 ஆண்டு), முகமது ஆமிர் (5 ஆண்டு) ஆகியோருக்கு, போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 


குற்றம் நிரூபணம்: இந்த மூன்று வீரர்கள் மீதும் சதிசெய்து ஏமாற்றுதல், லஞ்சப்பணம் பெறுதல் போன்ற பிரிவுகளில், லண்டனில் உள்ள "சவுத்வொர்க் கிரவுன்' கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது. குற்றத்தை ஒத்துக் கொண்ட முகமது ஆமிரிடம் விசாரணை நடக்கவில்லை. 


இன்று ஜெயில்:  மற்ற இருவரும் குற்றவாளிகள் என, விசாரணைக் குழு தீர்ப்பு வழங்கியது. இதில் முகமது ஆசிப் மீதான, லஞ்சப் பணம் பெறுதல் குற்றச்சாட்டு மட்டும் இன்னும் <உறுதி செய்யப்படவில்லை. இவர்களுக்குரிய தண்டனை என்ற விவரம் இன்று வெளியாகிறது.  இதில் இரு பிரிவுகள் குற்றம் நிரூபிக்கப்பட்ட சல்மான் பட்டிற்கு ஏழு ஆண்டு, முகமது ஆசிப்பிற்கு இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும். குற்றத்தை முன்னதாகவே ஒத்துக்கொண்ட முகமது ஆமிருக்கு குறைந்த அளவிலான தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.


பத்திரிகைக்கு பாராட்டு:  இதுகுறித்து லண்டன் புலனாய்வு தலைமை சூப்பிரடென்டெண்ட் மாட் ஹார்ன் கூறுகையில்,"" இதுபோன்ற தீர்ப்புகளால், வீரர்கள் <<உண்மையான உணர்வுடன் போராடுவார்கள். இந்த சூதாட்டத்தை வெளியே கொண்டு வர உதவிய "தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகையின் செயல் பாராட்டத்தக்கது,'' என்றார்.


மகிழ்ச்சியாக உள்ளது: ஸ்பெஷல் கிரைம், பயங்கரவாதி பிரிவு சீனியர் வக்கீல் சல்லி வால்ஷ் கூறியது: மக்கள் பணம் கொடுத்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை, பொழுதுபோக்கு மற்றும் தொழிலாக வைத்துள்ளனர். தாங்கள் பார்ப்பது உண்மையான போட்டியா, இல்லையா என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. ஆனால், பாகிஸ்தானின் மூன்று வீரர்களும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். இதனால் தான் இந்த வழக்கு, சூதாட்டம் என்று மட்டும் எடுத்துக் கொள்ளாமல், "கிரைம்' பிரிவில் நடத்தப்பட்டது. தவறு நடந்ததை ஆதாரத்துடன் <உறுதி செய்து தீர்ப்பு தந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு சல்லி வால்ஷ் கூறினார்.


ஐ.சி.சி., வரவேற்பு: தீர்ப்பு குறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாருண் லார்கட் கூறுகையில்,"" பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டின் விதிகளை மட்டும் மீறவில்லை. அவர்கள் இங்கிலாந்தின் சட்டத்துக்கு புறம்பாகவும் நடந்துள்ளனர். இந்த தீர்ப்பு கிரிக்கெட்டில் ஊழல் செய்ய நினைக்கும் மற்ற வீரர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது,'' என்றார்.


கம்ரானிடம் விசாரணை:இந்த வழக்கின் போது போலீஸ் தரப்பில் வாதாடிய வக்கீல் அப்தாப் ஜாபர்ஜீ கூறுகையில்,"" சூதாட்ட சர்ச்சையில் கம்ரான் அக்மல், வகாப் ரியாஸ் ஆகியோரது நடவடிக்கைகள் ஆழமாக, மிக ஆழமாக சந்தேகத்தை ஏற்படுத்தியது,'' என்றார். இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,"" கம்ரான் அக்மல், வகாப் ரியாஸ் இருவரும் சூதாட்ட ஏஜன்ட் மசார் மஜீத்துடன் இணைத்து பேசப்பட்டனர். இதனால், இவர்கள் மீதான புகார் குறித்து புதிய விசாரணை நடத்த ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது,'' என, தெரிவித்துள்ளது.

---

மோடிக்கு கொலை மிரட்டல்: சூதாட்டம் குறித்து ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடி கூறுகையில்,"" ஐ.பி.எல்., போட்டிகளின் போது, "மேட்ச் பிக்சிங்' செய்யுமாறு, நிழல் உலக தாதாக்கள் என்னை மிரட்டினர். இதை ஏற்காததால் மூன்று முறை கொல்ல பார்த்தனர். ஏனெனில் சூதாட்ட புக்கிகளும், தாதாக்களும் என்னை கொல்ல விரும்பினர். இதுகுறித்த விவரங்களை மத்திய ஏஜன்சிகளிடம் தெரிவித்துள்ளேன். மும்பை போலீசிற்கும் இது தெரியும். இதுகுறித்து மேலும் எதுவும் பேசவிரும்பவில்லை. ஏனெனில், சிக்கலான இந்த பிரச்னை, எனது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது,'' என்றார்.
--
மீடியா மீது பாய்ச்சல்: சூதாட்ட பிரச்னையில் பாகிஸ்தான் மீடியா, சரியாக உதவவில்லை என்று சல்மான் பட் சகோதரி ஆவேசமாக கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,""சல்மான் பட் மீதான விசாரணை நடந்த போது, நீங்கள் எவ்விதத்திலும் <உதவவில்லை. நீங்கள் <<உண்மையில் மீடியாவே இல்லை,'' என, கோபமாக தெரிவித்தார்.
--
முழு விசாரணை நடத்த வேண்டும்: லார்ட்ஸ் டெஸ்டில் நடந்த சூதாட்டத்துக்கு மட்டும் தான் லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி பங்கேற்ற போட்டிகள் <உட்பட, அனைத்தையும் ஐ.சி.சி., விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னால் கேப்டன் நாசர் ஹுசைன் கூறுகையில்,""கடந்த 2000ல் கராச்சியில் நடந்த டெஸ்டில், பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் இருந்து, திடீரென குறைந்த ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியின் போது ஏதோ நடந்துள்ளது என்று மட்டும் எனக்கு அப்போது தெரிந்தது,'' என்றார்.

இதே நாள்...



லஞ்சம் தருவதில் முன்னிலை சீன, ரஷ்ய நிறுவனங்கள்!

வெளிநாடுகளில் நிறுவனங்களை நடத்த சீனா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்களே அதிக லஞ்சம் தருவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில் லஞ்சம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும் Transparency International நிறுவனம் சமீபத்தில், லஞ்சம் கொடுப்போர் பற்றிய அட்டவணை ஒன்றை வெளியிட்டது. 28 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே 27 மற்றும் 28-ம் இடத்தைப் பிடித்து கடைசியில் உள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் தொழில் நடத்த எந்த அளவுக்கு வேண்டுமானாலும் லஞ்சம் தரத் தயாராக உள்ளனவாம்.பிரிட்டன் எட்டாவது இடத்தையும் அமெரிக்கா ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளன.டச்சு, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் இதில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அதாவது இங்கெல்லாம் நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்கு சாதகமான முடிவுகளைப் பெற லஞ்சம் தருவது குறைவு என்கிறது ஆய்வு.ஆனால் இந்தியாவில் பரவாயில்லை எனும் அளவுக்கு லஞ்சத்தின் நிலை உள்ளதாம். சீனா, ரஷ்யா அளவுக்கு மோசமாக இல்லாவிட்டாலும் ஓரளவு லஞ்சம் அதிகமாக உள்ள நாடு என்று வேண்டுமால் இந்தியாவைச் சொல்லலாம் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவிற்கு 134 வது இடம்!


ஐநா சபை வெளியிட்டுள்ள மனித வளர்ச்சி குறியீடு முன்னேற்ற மதிப்பீட்டு பட்டியலில் இந்தியா 134 இடத்தை பெற்றுள்ளது.  சுகாதாரம், கல்வி மற்றும் வருவாய் குறியீடுகளில் நீண்டகால முன்னேற்றம் குறித்து குறித்த மதிப்பிட்டு ரேங்க் பட்டியலை ஐ.நா சபை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த ஆண்டு மொத்தம் உள்ள 187 நாடுகளில் இந்தியாவிற்கு இதில் 134 வது ரேங்க் கிடைத்து உள்ளது. சீனா 97 வது ரேங்கிலும் சீனா 101 வது இடத்திலும் மாலதீவுகள் 109 இடத்திலும் பூடான் 141 வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், பங்களாதேஷ் 145, 146 வது இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய பிலிப்பைன்ஸ், போரால் பாதிக்கபட்ட ஈராக் நாடுகள் எல்லாம் நம்மைவிட முதன்மையான இடத்தை பிடித்து உள்ளன. 2010 ல் தரவரிசையில் 169 நாடுகளில் இந்தியா 119 ரேங்க் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜராஜ சோழனின் 1026வது சதய விழா...!


 மாமன்னர் ராஜராஜனின் 1026 வது சதய விழா வரும் நவ.4, 5 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெறவுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சோழமன்னன் ராஜ ராஜ சோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 30 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி செய்து போர்களில் வெற்றி பெற்ற மாமன்னன் ராஜராஜனுக்கு மும்முடிச்சோழன் என்ற பெயரும் உண்டு. தஞ்சையில் சிறப்பு வாய்ந்த பெரிய கோவிலை கட்டியதன் வாயிலாக தமிழர்களின் பெருமையை உலகறியச்செய்த மன்னன் ராஜராஜன். அறுபதாயிரம் யானைப்படையும், ஒரு லட்சம் குதிரைப் படையும், ஒன்றரை லட்சம் காலாட்படையும், ஆகியவற்றை உள்ளடக்கிய வலிமையான இராணுவத்தை கொண்டு ஆட்சி புரிந்துள்ளான். இந்தியாவின் முதற் கப்பற்படை அமைத்து கடல் கடந்து நாடுகளை வென்ற பெருமைக்குரிய மன்னன் ராஜராஜன். தஞ்சை, உறையூர் மற்றும் காஞ்சி மூன்று தலைநகரையும் கொண்ட தமிழ் நாட்டை அமைத்ததால் மும்முடிச்சோழன் என்ற சிறப்பு வாய்ந்த பெயரால் அழைக்கப்பட்டவன். இத்தகைய பெருமைக்குரிய மாமன்னனின் 1026 வது சதயவிழா நவம்பர் 4,5-ம் தேதிகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கலை நிகழ்ச்சிகள்: சதயவிழாவை ஒட்டி இரண்டு நாட்களும் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், வழக்காடு மன்றம், பட்டிமன்றம், நாட்டிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அன்றைய தினத்தில் மாமன்னன் ராஜராஜனின் சிறப்புகளை விளக்கும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் விழாவில் வழங்கப்படவுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கியத்திற்கு மூலிகை டீ!


காலையில் எழும்போதே காபி, அல்லது டீயின் முகத்தில் விழிப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். காபியோ, டீயோ எதுவென்றாலும் இன்றைக்கு சுத்தமானதாக இருப்பதில்லை. காசு செலவாவதோடு கலப்படத் தூளினை காய்ச்சி குடிப்பதால் உடல்நலம்தான் சீர்கேடு அடைகிறது. எனவே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பருகினால் ஆரோக்கியமாக வாழலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் இயற்கை ஆர்வலர்கள். பால் கலக்கத் தேவையில்லாத இந்த பானத்தை தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம்.

செம்பருத்திப்பூ: மூன்று செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து டிகாசன் போல வடிகட்டி எடுக்கவும். அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் கலந்து டீயாகச் சுவைக்கலாம் இது இதயநோயை தடுக்கும். தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர இதயம் வலிமை பெறும். படபடப்பு வலி, மாரடைப்பு ஏற்படாது.

ஆவாரம்பூ: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். இது பித்தப்பையில் உள்ள கல்லை நீக்கும். நீரிழிவை குணமாக்கும்.

மாம்பூ: மாம்பூ, மாந்தளிர் இரண்டையும் நீரில் போட்டு கொதிக்கவைத்து தேன் கலந்து இளம் சூட்டில் பருகிவர பல்வலி குணமடையும். நூறு கிராம் மாம்பூக்கள் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி அடுப்பில் சுண்ட வைத்து காலை மாலை பருகிவர சீதபேதி குணமாகும்.

துளசி இலை: சில துளசி இலைகளை பறித்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சளி, கபம் போக்கும்.

கொத்தமல்லி தழை: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும். சுவையான இந்த சுக்கு மல்லி காபி பித்தம் தொடர்பான நோயை போக்கும்

புதினா இலை: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இது அஜீரணத்தை அகற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்தும், சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். மாதவிடாய்த் தடங்கல்களை நிவர்த்தி செய்யும். சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும். ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்

கொய்யா இலை: கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும். கடுமையான இருமலால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகிவர இருமல் கட்டுப்படும், காய்ச்சல் குறையும்.

மகிழ்ச்சியாய் இருப்பவர்களுக்கு மரணமில்லை!


எந்த நேரமும் மகிழ்ச்சியாய் இருப்பவர்களை மரணம் எளிதில் நெருங்குவதில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாக கொண்டவர்கள் எந்த நோய்க்கும் ஆளாவதில்லை என்கின்றது அந்த ஆய்வு. லண்டனில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்று இந்த ஆய்வினை மேற்கொண்டது. 52 முதல் 79 வயது வரை உடைய 4ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஐந்து ஆண்டுகளாக சோதனைக்கு உட்படுத்தியதில் நேர்மறை எண்ணத்துடன், மகிழ்ச்சியுடன் இருந்தவர்கள் அனைவரும் எந்த நோயுக்கும் ஆட்படாமல் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்தது.

கவலையை விரட்டுங்கள்: ஆய்வில் பங்கேற்றவர்களின் உடல்ஆரோக்கியம் குறித்து மருத்துவர்கள் சோதனை செய்தனர். வயது, பாலினம், மனஅழுத்தம், நோய்பாதிப்பு குறித்து 5 ஆண்டுகள் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கவலைப்படுபவர்களை விட, மகிழ்ச்சியுடன் இருந்தவர்களுக்கு 35 சதவிகித அளவிற்கு நோய் தாக்குதல் குறைந்துள்ளது தெரியவந்தது.

நேர்மறை எண்ணங்கள்: நேர்மறை எண்ணம் கொண்ட வயதானவர்களை எந்த நோயும் தாக்குவதில்லை என்று ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர் ஆன்டூரு ஸ்டீயூ என்பவர் டெயில் மெயில் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த ஆய்வு முடிவினை நேசனல் அகாடமி ஆப் சயின்ஸ் வெளியிட்டுள்ளது.

விதி மீறலை கண்டுகொள்ளாத 31 அதிகாரிகளும் கைது!


 சென்னை தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை அப்பட்டமாக மீறும் வகையில் வர்த்தக நிறுவனங்கள் அதி உயர கட்டடங்களைக் கட்டிக் குவித்தபோதும் அதைக் கண்டுகொள்ளாமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்மூடித்தனமாக இருந்து விட்ட 31 சிஎம்டிஏ அதிகாரிகளும் கைதாவார்களா என்றஎதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒரு காலத்தில் அருமையான பகுதியாக இருந்த தி.நகர் இன்று சந்தைக் கடையாக மாறி மக்களின் நிம்மதியை நாறடித்து விட்டது. என்று இந்தப் பகுதி வணிக மையமாக மாறிப் போனதோ அன்றே இந்தப் பகுதியில் சட்ட மீறல்களும், விதி மீறல்களும் எகிறிப் போய் விட்டது. இன்று சென்னை தி.நகரில் உள்ள 90 சதவீத பிரமாண்ட வர்த்தக கட்டடங்கள் விதி மீறலில் ஈடுபட்டுள்ளன. இவர்கள் செய்த விதி மீறலுக்காக இன்று தங்களது கடைகளையும் திறக்க முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அங்கு சிறிய அளவில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள்.

இந்த நிலையில், இந்த விதி மீறல் நடந்தபோதெல்லாம் அதைக் கண்டுகொள்ளாமல், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டபோது அதை தடுக்க முயலாமல் நடந்த சிஎம்ஏடி அதிகாரிகள் 31 பேரையும் வழக்கில் சேர்த்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப் போவதாகவும் தலைமை நீதிபதி இக்பால் அறிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள் முழு விவரம்:
ஐஏஎஸ் அதிகாரிகள்

  1. முகம்மது நசிமுதீன் - உறுப்பினர் செயலாளர்.
  2. எம்.ஆர்.மோகன் - உறுப்பினர் செயலாளர்
  3. விக்ரம் கபூர் - உறுப்பினர் செயலாளர்
  4. தயானந்த் கட்டாரியா - உறுப்பினர் செயலாளர்

பிளானர்கள்
  1. சுபாஷ் சந்திரா - சீஃப் பிளானர்
  2. சிவசுப்ரமணியன் - சீஃப் பிளானர்
  3. குருசாமி - சீஃப் பிளானர்
  4. ரவீந்திரன் - சீனியர் பிளானர்
  5. ராஜசேகர பாண்டியன் - சீனியர் பிளானர்
  6. தங்கபிரகாசன் - டெபுட்டி பிளானர்
  7. செல்வக்குமார் - டெபுட்டி பிளானர்
  8. பெரியசாமி - டெபுட்டி பிளானர்
  9. நாகலிங்கம் - டெபுட்டி பிளானர்
  10. ராஜேந்திரன் - டெபுட்டி பிளானர்
  11. ஜெயச்சந்திரன் - டெபுட்டி பிளானர்
  12. கிருஷ்ணக்குமார் - டெபுட்டி பிளானர்
  13. ருத்திரமூர்த்தி - டெபுட்டி பிளானர்
  14. துளசிராமன் - டெபுட்டி பிளானர்
  15. சபாபதி- உதவி பிளானர்
  16. நாகசுந்தரம் - உதவி பிளானர்
  17. மாணிக்கவாசகம் -உதவி பிளானர்
  18. நாகராஜன் -உதவி பிளானர்
  19. ராஜேந்திரன் - உதவி பிளானர்
  20. பன்னீர்செல்வம் - உதவி பிளானர்
  21. முனுசாமி -உதவி பிளானர்
  22. ரவிப்பிரசாத் - உதவி பிளானர்
  23. ஆர்.கே.மூர்த்தி - உதவி பிளானர்
  24. கிருஷ்ணக்குமார் -உதவி பிளானர்
  25. ராஜாராமன் - உதவி பிளானர்
  26. பிரேம் ஆனந்த் சுரேந்திரன் -உதவி பிளானர்
  27. ஏ.பாலசுப்ரமணியன் - உதவி பிளானர்

இந்த 31 பேர் தவிர தி.நகர் பகுதியின் கீழ் வரும் மாநகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டு அதற்கான பட்டியலும் தயாராகி வருகிறதாம். விரைவில் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்பதால் இந்த விவகாரம் மேலும் பெரிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாகிறது!


கடந்த திமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பார்த்துப் பார்த்துக் கட்டிய, சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் உயர் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அங்குள்ள நூலகம் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு மாற்றப்படும், டிபிஐவளாகம் ஒருங்கிணைந்த அறிவு சார் பூங்காவாக மாற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதி நவீன அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவிலேயே அதி நவீன வசதிகள் கொண்ட முதல் நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் எட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்தான். 172 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள இந்த நூலகத்திற்கு ஆகஸ்ட்- 16, 2008 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. மூன்று லட்சத்து 75 ஆயிரம் சதுர அடியில், எட்டுத்தளங்களோடு பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த நூலகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் அண்ணா பிறந்த தினத்தன்று அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.

எட்டுத் தளங்களைக் கொண்ட இந்நூலகத்தில் ஒவ்வொரு தளமும் ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பி’ பிரிவு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளுகுளு வசதியோடு கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தின் அனைத்துத் தளங்களிலும் சுற்றுச் சூழலுக்கு தீங்குவிளைவிக்காத சி.எஃப்.எல். விளக்குகள் பொறுத்தப்பட்டுளளன. இளநீலநிற, கண்ணாடி சுவர் வழியே சூரிய வெளிச்சம் முழுமையாக கட்டடத்திற்குள்ளே செல்லும் படியாக வடிவமைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘பசுமை கட்டடமாக’ கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகக்கட்டடத்தினை தற்போது குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த நூலகம் சென்னை கல்லூரிச்சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் டிபிஐ வளாகம் அறிவுசார் பூங்காவாக மாறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: 2011-2012 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சென்னை டி.பி.ஐ. (Directorate of Public Instruction) வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலான முடிவுகள் 1.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. இதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து இயக்ககங்கள், பயிற்சி மையம், கூட்டரங்குகள், பள்ளிக் குழந்தைகளுக்கான அறிவுசார் பட்டறைகள், விளையாட்டு வளாகம், கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையம், இங்கு பேஷன் சென்டர் மற்றும் நவீன மைய நூலகம் ஆகியவை இந்த ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா வளாகத்தில் அமையப்பெறும்.ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமையவிருக்கும் டி.பி.ஐ. வளாகம், கன்னிமாரா மைய நூலகம் மற்றும் தேசிய வைப்பு நூலகத்திற்கு மிக அருகில் உள்ளதால் நவீன மைய நூலகத்தினை அறிவுசார் பூங்காவிலேயே அமைப்பது பொருத்தமாகவும், சிறந்ததாகவும் அமையும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 


எனவே, சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அண்ணா நூற்றாண்டு நூலகம் டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட பின், தற்போது கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம், உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அமைக் கப்படும். குழந்தைகளுக்கான இதுபோன்ற அரசு மருத்துவமனை இந்தியாவிலேயே இதுவரை நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் நலனுக்கென இது போன்ற உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம், குழந்தைகள் நலனை பேணிப் பாதுகாப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்..

அத்துமீறும் சீனாவை அடக்க 1 லட்சம் இந்திய வீரர்கள் எல்லையில் !

பாகிஸ்தானைத் தொடர்ந்து சீனாவும் இந்தியாவுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறது. அருணாசலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடியது. ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. சீனாவில் விரட்டப்பட்ட திபெத் புத்தமத துறவி தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்து இருப்பதும் அந்த நாட்டுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லைப் பிரச்சினையை காரணம் காட்டி 1962-ல் சீனா இந்தியா மீது போர் தொடுத்தது. அப்போதைய பிரதமர் நேரு இதை சமாளித்தார். அதன் பிறகு அடிக்கடி இந்திய எல்லைப் பகுதியில் சீனப்படைகள் அத்துமீறி ஊடுருவ முயற்சி செய்து வருகிறது.குறிப்பாக காஷ்மீரின் லடாக் பகுதியிலும், உத்தரகாண்ட் இமயமலை பகுதியிலும் சீனா ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்காக சாலை போடும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. 

இதேபோல் அந்தமான் தீவுகளை குறிவைத்து வங்க கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் சீன கப்பல்களின் ரகசிய நடமாட்டத்தை சமீபத்தில் இந்திய கடற்படை கண்டுபிடித்தது.   சீனாவில் இந்த அத்துமீறல்கள் பற்றி இந்திய ராணுவ தளபதிகளின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் சீன எல்லைப் பகுதியில் 1 லட்சம் வீரர்களை குவிக்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் வீரர்கள் படிப்படியாக எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. முதலில் லடாக் பகுதியிலும், ஜார்க்கண்ட் எல்லையிலும் வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். மற்ற இடங்களில் படிப்படியாக வீரர்கள் குவிக்கப்பட உள்ளனர். சீன எல்லையில் 4 டிவிஷன்களில் வீரர்கள் குவிக்கப்படுகிறார்கள். இதற்காகவும், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்காகவும் கூடுதலாக ரூ.64 ஆயிரம் கோடி நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது. 1962-ம் ஆண்டு போருக்கு பின் எல்லை பாதுகாப்பு படைக்காக இந்த அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது. இதற்காக ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு பணியை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் நினைவு நாள்!

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும் வர்ணிக்கப்படும் தியாகராஜ பாகவதர் நடித்த, ஹரிதாஸ் என்ற படம் 4 தீபாவளிகளையும் தாண்டி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற தியாகராஜ பாகவதர், உடல் நலக்குறைவால், 1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இறந்தார்.திருச்சியின் மற்றொரு மைந்தனாக திரையுலகில் வலம் வந்த எம்.ஆர். ராதா ஏற்பாட்டில், தியாகராஜ பாகவதர் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.அதன்பின், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலத்துடன் அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டு திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு அருகேயுள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தியாகராஜபாகவதரின், 53வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. தியாகராஜ பாகவதரின் சின்னம்மா சம்பூரணத்தம்மாளின் மகள் ஆனந்தலட்சுமி, அவரது கணவர் தெட்சிணாமூர்த்தி, இவர்களது மகன் தனபால் ஆகியோர் பாகவதர் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த நேற்று வந்தனர்.

 கடந்த 1948ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ராஜமுத்தி சினிமாவில் இடம் பெற்ற, "மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ' என்ற பாடலை உரக்கப் பாடி அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினர். 
 தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் நினைவுநாளை அனுசரிக்கக்கூட திரையுலகிலிருந்து, ரசிகர்கள் யாரும் வராதது, அவரது குடும்பத்தாருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தியாகராஜ பாகவதர், திருச்சி பாலக்கரை, எடத்தெரு, கான்மியான் மேட்டுத்தெருவில் வசித்த கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியார் - மாணிக்கத்தம்மாள் தம்பதிக்கு, 1910 மார்ச் 1ம் தேதி பிறந்தார். அப்பகுதியில் உள்ள ஜெபமாலை மாதா துவக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு வரை படித்த அவர், நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். பின்னர், 1934ம் ஆண்டு பவளக்கொடி என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். நவீன சாரங்கதாரா, அம்பிகாபதி, திருநீலகண்டர், சிவகவி, ஹரிதாஸ், அசோக்குமார், ராஜமுக்தி உள்பட, 14 படங்களில் நடித்து பிரபலமானார்.

கணவன் கிட்னியை விற்று வாங்கி வந்த பணத்துடன் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்! கலிகாலம் !!

சேலம் மாவட்டம், கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள மனியாரக்குன்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் கிருஷ்ணன். வயது-35, இவரது மனைவி, பூங்கொடி வயது-32.இந்த கிருஷ்ணனுக்கு “காலில்”தான் ஊனம், ஆனால் “மன”தில் ஊனம் இல்லை போல... அதனால் மனம் போன போக்கில்... கணவன் மனைவி இருவரும் . செல்வராணி வயது-15, அழகுராஜ் வயது-13, பாலமுருகன்-10, முடியரசன், வயது-5 என இந்த தம்பதிகளுக்கு வரிசையாக நான்கு குழந்தைகள் பெற்று தள்ளிவிட்டனர்.கிருஷ்ணன் கருமந்துரையில் உள்ள ஒரு சிறிய ஓட்டலில வேலை செய்துகொண்டுள்ளார். 

நேற்று சேலம் மாவட்ட்ட ஆட்சியரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், நான் கருமந்துரையில் வசித்து வருகிரேன், என்னால் கடுமையாக உழைத்து வேலை செய்ய முடியாது, அதனால் ஓட்டல கடையில் வேலை செய்து வருகிறேன். என்னுடைய சம்பாத்தியம் குடும்ப செலவுக்கு பத்தாத போதும்,.  என்னுடைய மனைவியை நான் எங்கும் வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைத்திருந்தேன், இரண்டு வருடம் முன்னர் எனக்கு தெரிந்த ஜான் என்பவரிடம் எனது “கிட்னி”யை ஐம்பது ஆயிரத்துக்கு விற்று, அந்த  பணத்தையும் எனது மனைவியிடம் கொடுத்திருந்தேன்.

என்னுடன் ஓட்டல் கடையில் “சரக்கு மாஸ்டராக” இருந்த ராயப்பன் என்கிற ரவியை வீட்டுக்கு அடிக்கடி கூட்டிப்போனேன், அவனுக்கும் எனது மனைவி பூங்கொடிக்கும் “கள்ள தொடர்பு” ஏற்பட்டு விட்டது. இதை நான் பலதடவை கண்டித்தேன். கடந்த நான்கு மாதம் முன்னர், எனது மனைவி பூங்கொடி, ராயப்பன் இருவரும் நான் வைத்திருந்த பணம், எனது ரேஷன் கார்டு, குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், எனது அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

இது குறித்து நான், கருமந்துறை மற்றும் ஏத்தாப்பூர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்துல்ளேன், ஆனால் காவல்துறையினர் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய ரேஷன் கார்டு  கூட என்னிடம் இல்லாமல் இருப்பதால் நான் சாப்பாட்டுக்கு கூட அரிசி  வாங்க கூட முடியாமல் நான்கு குழந்தைகளுடன் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் சிரமப்படுகிறேன்.கிட்னியையும் விற்று விட்டதால், என்னால் இப்போது வேலையும் செய்ய முடியவில்லை... அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய எனது மனைவி பூங்கொடியை கண்டுபிடித்து எனது பணத்தையும், ரேஷன் கார்டையும் மீட்டு தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்குக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம்

திருச்சியில் பெற்ற தாய்க்கு 5 கோடியில் கோவில் துறையூரைச் சேர்ந்த சிதம்பரம்!

திருச்சியை அடுத்துள்ள துறையூரைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி தனபாக்கியம். இவர்களது 4-வது மகன் சுரேஷ்குமார் தொழில் அதிபர். இவர் தனது தாயார் தன பாக்கியம் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். இந்நிலையில் தனபாக்கியம் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது நினைவாக துறையூரில் கோவில் கட்ட முடிவு செய்தார். இதற்காக அவர் 5 கோடி ஒதுக்கியுள்ளார். இக்கோவில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் 64 அடி உயரத்தில் நினைவுத் தூண் அமைத்துள்ளார். கோவிலின் நடுவில் தாயார் தனபாக்கியத்தின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அரங்கம் ஒன்று அமைக்கப்படுகிறது. 

இதை பொது மக்களுக்கு இலவசமாக வழங்க சுரேஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.இது குறித்து சுரேஷ்குமார், ’’எனது தாய் என் மீது காட்டிய பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவர்தான் நான் அறிந்த தெய்வம். அவருக்கு நான் சேமித்து வைத்துள்ள பணத்தில் கோவில் கட்டி வருகிறேன். இதனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிட்டுள்ளேன். என் தாய்க்கு கோவில் கட்டுவதற்கு எனது மனைவி சாவித்ரி உதவியாக இருக்கிறார். இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் தாயை தெய்வமாக வழிபட வேண்டும். தாய்தான் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் பாசம் காட்டுவார். தாயை உயர்வாக மதிக்கும் அனைத்து குழந்தைகளும் வாழ்வில் நிச்சயம் சாதனையாளர்களாக மாறுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

மழைக்கால நோயில் இருந்து தப்பிக்க!

மழைக்கால நோயில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து முன்னாள் பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ, ’’மழைக்காலங்களில் குழந்தைகள், முதியவர்களை வயிற்று போக்கு-வாந்தி பேதி அதிகம் பாதிக்கும். இதனால் பொதுவாக தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். தெருவோரம் மற்றும் சாலை யோரங்களில் விற்க கூடிய உணவு பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், பெரியவர்களுக்கு உணவுகளை சூடாக கொடுக்க வேண்டும்.   வீடுகளில் கழிவு நீர் தேங்கிய பகுதிகளை கண்டறிந்து அகற்ற வேண்டும். வீடுகளில் கொசு வலை பயன்படுத்த வேண்டும். கொசு வலையை பயன்படுத்தினால் கொசுவினால் ஏற்படக் கூடிய மலேரியா, டெங்கு, மூளை காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தப்பித்து கொள்ளலாம். ஓட்டல்களில் உணவு பொருட்கள் தயாரிப்பதை சுகாதாரத்துறை தீவிர ஆய்வு செய்ய வேண்டும். சுத்தமான நீரில் உணவு தயாரிக்கப்படுகிறதா? உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஈ மொய்த்த பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றை பின் பற்றினால் மழைக்காலத்தில் வரக்கூடிய நோயில் இருந்து தப்பிக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.
 

காவல் துறைக்கு ரூ4500, எனக்கு 500....!

இந்த லட்சணத்தில ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையான திறமையாம்.

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்.!

கேள்வி: கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு பணிச் சுமைகளுக்கிடையே அவரது திரைக்கதை வசனத்தில் பல படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. முழு ஓய்வில் இருக்கும் இத்தருணத்தில் அவரது பட விளம்பரம் ஒன்றைக்கூட பார்க்கமுடியவில்லையே?

பதில்: இது கேள்வி அல்ல; கிண்டல்! அவர் முதலமைச்சராக இருந்தபோது படம் தயாரிக்கப் பணம் முதலீடு செய்யவும்... கதை வசனத்துக்கு 25 லட்சம் ஊதியத்தை அவருக்குத் தரவும் பலர் முன்வந்தார்கள். இப்போது யார் தயார்?

"ஏழாம் அறிவு" மறைக்கும் உயிரியல் போர் வரலாறு!


ஏழாம் அறிவு படத்தின் முடிவில் கதாநாயகன் சூர்யா சொல்வார்:"தமிழர்களுக்கு வரலாறு தெரியாததால், அறிவியல் கண்டுபிடிப்புகளை இழந்து விட்டார்கள்." உண்மை தான். தமிழர்களுக்கு வரலாறு தெரியாததால் தான், ஏழாம் அறிவு போன்ற வரலாற்றை திரிக்கும் பிரச்சாரப் படங்களை எடுத்து வியாபாரம் செய்ய முடிகின்றது. போதி தர்மர் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் சரி தானா, என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும். படத்தின் முக்கிய கதைக்கரு, உயிரியல் யுத்தம் (Biological warfare) பற்றியது. 6 ம் நூற்றாண்டில் "தமிழனான" போதி தர்மர், சீனா சென்றிருந்த சமயத்தில், அங்கு பரவிய வைரஸ் தொற்று நோயை தடுக்கும் மருந்தை கண்டுபிடித்துக் கொடுத்திருந்தார். இன்றைய சீனர்கள், அதே வைரசை இந்தியாவில் பரப்பி, இந்திய மக்களை கொல்வதற்கு முனைகின்றனர். இதுவரை நடக்காத கற்பனைக்கதை தான். இருப்பினும், "வரலாற்றின் முக்கியத்துவம்" உணர்ந்த இயக்குனர், உண்மையான வரலாற்றுக் கதையை எடுத்து படமாக தயாரித்திருக்கலாம். "உயிரியல் யுத்தம், இருபத்தியோராம் நூற்றாண்டிற்கான நவீன போரியல் முறை" என்று இயக்குனரே நினைத்துக் கொண்டிருக்கலாம். "பயங்கரவாத எதிர்ப்பு போர்" குறித்து அமெரிக்கா பிரச்சாரம் செய்த மிகைப் படுத்தப் பட்ட அச்சமூட்டல்களின் பாதிப்பில் அவ்வாறு நினைக்கிறார் போலும். சீனாவும், இந்தியாவும் ஏற்கனவே உயிரியல் போரினால் பாதிக்கப் பட்ட நாடுகள் தான். இவை பற்றிய தகவல்களை வரலாற்று நூல்களில் இருந்து எடுத்து படமாக தயாரித்திருந்தால், "ஏழாம் அறிவின்" உயரிய நோக்கத்தை நாம் பாராட்டலாம்.

ஏழாம் அறிவை தயாரித்தவர்களின், முதலாம் அறிவில் உள்ள அரசியல் சார்புத் தன்மை, கடந்த நூற்றாண்டின் வரலாற்றை கூட பின்னோக்கிப் பார்க்க விடாது தடுக்கின்றது. இன்றைய நவீன உலகில் மட்டும் தான், பரிசோதனை சாலைகளில் உருவாக்கப்படும் நோய்க் கிருமிகள் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப் படுகின்றது, என்று நினைப்பது தவறு. பண்டைய காலங்களில், நச்சுப் பாம்புகளை பிடித்து விடுவதும் உயிரியல் போர் முறைக்குள் அடங்கும். இருப்பினும், ஐரோப்பிய காலனிய காலகட்டத்தின் பொழுது தான், பெருந்தொகையான மக்களை அழிக்கும் நோய்க் கிருமிகள் வேண்டுமென்றே பரப்பப் பட்டன. அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த செவ்விந்திய பூர்வகுடிகளின் அழிவுக்கு காரணம், ஐரோப்பியர் காவிக் கொண்டு சென்ற கிருமிகள் என்பது வரலாற்றுத் தகவல். வெளி உலகில் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு, அந்த நோய்களை எதிர்க்கும் சக்தி இருக்கவில்லை. ஆரம்பத்தில் தற்செயலாக அந்த கிருமிகள் தொற்றியிருந்தாலும், பிற்காலத்தில் இனவழிப்பு செய்யும் நோக்கில் வேண்டுமென்றே பரப்பப் பட்டன.

நம்மில் பலருக்கு, சின்னம்மை என்ற நோய் தொற்றியிருக்கலாம். அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத காலத்தில், பாமர மக்கள் அதனை "அம்பாளின் சீற்றத்தால் தொற்றும் நோய்" என்று நம்பியதால் தான், அதற்கு "அம்மை நோய்" என்று பெயர் வந்தது. சின்னம்மை பண்டைய தமிழர் சமுதாயத்தில் இல்லாத நோய். காலனிய காலத்தில் ஆங்கிலேயரால் கொண்டு வந்து பரப்பப் பட்டது. இந்த உண்மை இன்று எத்தனை தமிழருக்கு தெரியும்? ஏழாம் அறிவு திரைப்படத்தின் கதை அதுவாக இருந்திருந்தால், தமிழர்களுக்கு ஒரு வரலாற்று உண்மையை எடுத்துச் சொன்ன பெருமை கிடைத்திருக்கும். "ம்...வந்து... ஆங்கிலேயர்கள் அதனை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தவில்லை." என்று சப்பைக் கட்டு கட்டலாம். இந்தியாவில் அம்மை நோயை வேண்டுமென்றே பரப்பியதற்கான வரலாற்று ஆவணம் எதுவும் இது வரை கிடைக்கவில்லை. அமெரிக்க கண்டத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அங்கே அம்மை நோயை பரப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

1763 ம் ஆண்டு, அதாவது இந்தியாவை காலனிப் படுத்திக் கொண்டிருந்த அதே காலத்தில், வட அமெரிக்காவில் காலனிய போர் நடந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், பிரெஞ்சு ஏகாதிபத்தியமும், இன்று கனடா என்று அறியப்படும் நிலத்திற்காக போரிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அங்கே வாழ்ந்த செவ்விந்திய பழங்குடி மக்களை இனவழிப்பு செய்வது ஆங்கிலேயரின் நோக்கமாக இருந்தது. வட அமெரிக்காவில் பிரிட்டிஷ் படைகளின் தலைமைத் தளபதியான Sir Jeffrey Amherst, இவ்வாறு கூறினார்:"... சின்னம்மை நோய்க் கிருமிகளை ஏவி விட்டாவது, இந்த செவ்விந்திய இனங்களை குறைக்க வேண்டும்." அவரின் உத்தரவின் பேரில், சின்னம்மை நோய்க் கிருமிகள் உள்ள போர்வைகள், செவ்விந்திய மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் வீசப் பட்டன. அதனால், பல ஆயிரம் செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க சுதந்திரப்போர் காலத்திலும் சின்னம்மை நோய் வேண்டுமென்றே பரப்பப் பட்டது. ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற புதிய அமெரிக்க அரசு, உயிரியல் ஆயுதத்தை மேலும் விரிவாக்கியது. 1942 ம் ஆண்டு, அமெரிக்காவில் 400 கறுப்பின கைதிகள் பரிசோதனை எலிகளாக பயன்படுத்தப் பட்டனர். அவர்களுக்கு தெரியாமலே, மலேரியா நோய்க் கிருமிகள் தொற்ற வைக்கப் பட்டன. பிற்காலத்தில், ஜெர்மனியில் நியூரன்பேர்க் போர்க்குற்ற நீதிமன்றத்தில், நாஜி வைத்தியர்கள் அதனை தமது தரப்பு சாட்சியமாக முன் வைத்தார்கள்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானின் உயிரியல் ஆயுத விஞ்ஞானியாக இருந்தவர் Dr. Shiro Ishii. அவர் ஜப்பான் சக்கரவர்த்தியின் படைகளின் ஆக்கிரப்பில் இருந்த சீனாவின் மஞ்சூரியா மாநிலத்தில் பணியாற்றினார். அங்கிருந்த சீன, ரஷ்ய, அமெரிக்க கைதிகளின் மீது உயிரியல் கிருமிகளை தொற்ற வைத்து பரிசோதனை நடத்தினார். 1931 ம் ஆண்டு, ஜப்பான் மஞ்சூரியா மாநிலத்தை ஆக்கிரமித்ததில் இருந்து, 580000 சீனர்கள் உயிரியல் ஆயுதங்களால் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இது, Dr. Shiro Ishii யின் குழுவினால் பக்டீரியா தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கையாகும். அமெரிக்கர்களிடம் ஜப்பான் சரணடைந்த பின்னர், Dr. Shiro Ishii க்கு மன்னிப்பு வழங்கப் பட்டது. 

இலட்சக்கணக்கான சீன மக்களை படுகொலை செய்த கொலைகாரன், சுதந்திரமாக திரிய விடப்பட்டான். அநேகமாக, அமெரிக்காவின் உயிரியல் ஆயுத திட்டத்திற்கு, அவரின் உதவி பெறப் பட்டிருக்கலாம். Dr. Shiro Ishii வின் குழுவை சேர்ந்த சிலரை, சோவியத் இராணுவம் கைது செய்திருந்தது. உயரியல் ஆயுத பரிசோதனையால் பாதிக்கப்பட்ட சீன மக்களின் சாட்சியங்களை ஆதாரமாக கொண்டு, அவர்கள் மேல் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால், அமெரிக்காவின் அன்றைய தூர கிழக்காசிய கட்டளைத் தளபதி மக் ஆர்தர், இவையெல்லாம் "கம்யூனிசப் பொய்கள்" என்று கூறினார். சில வருடங்களின் பின்னர், மக் ஆர்தரின் படைகள், கொரியாப் போரின் போது உயிரியல் ஆயுதங்களை பிரயோகித்தன. சீனாவில் கம்யூனிசப் புரட்சியின் பின்னர், இரகசியமாக ஊடுருவிய அமெரிக்க விமானங்கள் விசிறிய கிருமிகள், பயிர்களை அழித்து நாசமாக்கின. நிச்சயமாக, அமெரிக்கா இன்று வரை இந்த உண்மைகளை மறுத்து வருகின்றது.

1971 ம் ஆண்டு, கியூபாவில் பன்றிக் காய்ச்சல் என்ற புது வகை நோய் பரவியது. பல தசாப்தங்களுக்குப் பின்னர், பல உலக நாடுகளில் அந்த தொற்று நோய் பரவியிருந்ததை பலர் அறிந்திருப்பீர்கள். அன்று, பனாமாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸ்ட்ரோ எதிர்ப்பு கியூபர்களிடம், பன்றிக் காய்ச்சல் கிருமிகளை கொடுத்ததாக, ஒரு சி.ஐ.ஏ, அதிகாரி பின்னர் ஒத்துக் கொண்டார். 1981 ம் ஆண்டு, கியூபாவிலும், (சோஷலிச) நிகராகுவாவிலும் ஒரு புதிய வகை தொற்று நோய் பரவியது. கியூபாவில் 188 பேர் மரணமடைந்தனர். நிக்கராகுவாவில் சுமார் 50000 பேருக்கு நோய் தொற்றி இருந்தது. 1988 ல், கியூப எதிர்ப்புரட்சியாளரான Eduardo Arocena , சி.ஐ.ஏ.யின் பணிப்பின் பேரில் நோய்க் கிருமிகளை கியூபாவினுள் கடத்திச் சென்றதாக தெரிவித்தார். 1996 ம் ஆண்டு, கிருமிநாசினி தெளிக்கும் அமெரிக்க விமானங்கள், கியூப வான்பரப்பில் தென்பட்டன. இதன் விளைவாக, உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப் பட்டது. இந்த சம்பவம் குறித்து, கியூபா ஐ.நா. மன்றத்தில் முறையிட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர், இந்தியாவிலும், இலங்கையிலும் பரவியிருந்த சிக்கின்குனியா போன்ற மர்மமான தொற்று நோய்கள் கூட, உயிரியல் போரினால் ஏற்பட்டிருக்கலாம். இவை குறித்த தகவல்களை, ஏழாம் அறிவு போன்ற திரைப்படத்தில் எடுத்துக் கூறியிருந்தால், அது தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஊட்டியிருக்கும். மாறாக, அமெரிக்க அரசின் வெளிவிவகார கொள்கைக்கு இசைவாக எடுக்கப்படும் ஹாலிவூட் படங்களின் பாணியில் எடுக்கப் பட்டுள்ளது. தமிழனுக்கு, இந்திய தேசிய வெறி ஊட்டுவதற்காக தயாரிக்கப் பட்டது தான், ஏழாம் அறிவு. அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்த அரசியல் பிரச்சாரத்தை, வரலாறு என்று கற்றுத் தருகின்றது. ஆறு அறிவும் இல்லாதவர்களுக்கே, ஏழாம் அறிவு தேவைப் படுகின்றது.

நன்றி: மகிழ்நன்  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...