சேலம் மாவட்டம், கருமந்துறை மலைப்பகுதியில் உள்ள மனியாரக்குன்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் கிருஷ்ணன். வயது-35, இவரது மனைவி, பூங்கொடி வயது-32.இந்த கிருஷ்ணனுக்கு “காலில்”தான் ஊனம், ஆனால் “மன”தில் ஊனம் இல்லை போல... அதனால் மனம் போன போக்கில்... கணவன் மனைவி இருவரும் . செல்வராணி வயது-15, அழகுராஜ் வயது-13, பாலமுருகன்-10, முடியரசன், வயது-5 என இந்த தம்பதிகளுக்கு வரிசையாக நான்கு குழந்தைகள் பெற்று தள்ளிவிட்டனர்.கிருஷ்ணன் கருமந்துரையில் உள்ள ஒரு சிறிய ஓட்டலில வேலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று சேலம் மாவட்ட்ட ஆட்சியரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், நான் கருமந்துரையில் வசித்து வருகிரேன், என்னால் கடுமையாக உழைத்து வேலை செய்ய முடியாது, அதனால் ஓட்டல கடையில் வேலை செய்து வருகிறேன். என்னுடைய சம்பாத்தியம் குடும்ப செலவுக்கு பத்தாத போதும்,. என்னுடைய மனைவியை நான் எங்கும் வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைத்திருந்தேன், இரண்டு வருடம் முன்னர் எனக்கு தெரிந்த ஜான் என்பவரிடம் எனது “கிட்னி”யை ஐம்பது ஆயிரத்துக்கு விற்று, அந்த பணத்தையும் எனது மனைவியிடம் கொடுத்திருந்தேன்.
என்னுடன் ஓட்டல் கடையில் “சரக்கு மாஸ்டராக” இருந்த ராயப்பன் என்கிற ரவியை வீட்டுக்கு அடிக்கடி கூட்டிப்போனேன், அவனுக்கும் எனது மனைவி பூங்கொடிக்கும் “கள்ள தொடர்பு” ஏற்பட்டு விட்டது. இதை நான் பலதடவை கண்டித்தேன். கடந்த நான்கு மாதம் முன்னர், எனது மனைவி பூங்கொடி, ராயப்பன் இருவரும் நான் வைத்திருந்த பணம், எனது ரேஷன் கார்டு, குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், எனது அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து நான், கருமந்துறை மற்றும் ஏத்தாப்பூர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்துல்ளேன், ஆனால் காவல்துறையினர் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய ரேஷன் கார்டு கூட என்னிடம் இல்லாமல் இருப்பதால் நான் சாப்பாட்டுக்கு கூட அரிசி வாங்க கூட முடியாமல் நான்கு குழந்தைகளுடன் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் சிரமப்படுகிறேன்.கிட்னியையும் விற்று விட்டதால், என்னால் இப்போது வேலையும் செய்ய முடியவில்லை... அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய எனது மனைவி பூங்கொடியை கண்டுபிடித்து எனது பணத்தையும், ரேஷன் கார்டையும் மீட்டு தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்குக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம்
No comments:
Post a Comment