மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவிற்கு 134 வது இடம்!
ஐநா சபை வெளியிட்டுள்ள மனித வளர்ச்சி குறியீடு முன்னேற்ற மதிப்பீட்டு பட்டியலில் இந்தியா 134 இடத்தை பெற்றுள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் வருவாய் குறியீடுகளில் நீண்டகால முன்னேற்றம் குறித்து குறித்த மதிப்பிட்டு ரேங்க் பட்டியலை ஐ.நா சபை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த ஆண்டு மொத்தம் உள்ள 187 நாடுகளில் இந்தியாவிற்கு இதில் 134 வது ரேங்க் கிடைத்து உள்ளது. சீனா 97 வது ரேங்கிலும் சீனா 101 வது இடத்திலும் மாலதீவுகள் 109 இடத்திலும் பூடான் 141 வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், பங்களாதேஷ் 145, 146 வது இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய பிலிப்பைன்ஸ், போரால் பாதிக்கபட்ட ஈராக் நாடுகள் எல்லாம் நம்மைவிட முதன்மையான இடத்தை பிடித்து உள்ளன. 2010 ல் தரவரிசையில் 169 நாடுகளில் இந்தியா 119 ரேங்க் இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment