நடனங்களில் பல வகை உண்டு.பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சுப்புடி,
கதக், ஒடிசி என்று உங்களுக்கு எல்லா வகையான நடனங்கள் பற்றியும்
தெரிந்திருக்கலாம்.
ஆனால், தவளைகளின் நடனம் பற்றி யாருக்காவது தெரியுமா? சிலர் தவளை போல
ஆடுவதைச் சொல்லவில்லை. நிஜமாகவே தவளைகள் ஆடும் காதல் நடனம் பற்றியது இது.
ஆம், தவளைகளும் நடனமாடும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக ஆண் தவளைகள்தான் நடனத்தில் "எக்ஸ்பர்ட்" என்றும்
கண்டறிந்துள்ளனர்.நடனமாடக்கூடிய 14 புதிய தவளை இனங்களை தென்னிந்தியாவிலுள்ள மேற்குத்
தொடர்ச்சி மலைத்தொடரில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிலோன் ஜர்னல் ஆஃப்
சயன்ஸ் என்ற பத்திரிக்கையில் இந்த புதிய இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பின்னங்கால் நடனம்:
தன்னுடைய இணையைக் கவர்வதற்காக ஆண் தவளைகள் இந்த வித்தியாசமான நடன முறையைக்
கையாளுகின்றன.பின்னங்கால்களை லேசாக விரித்து, விரித்து வாயைக் குவித்து
இந்த நடனத்தை ஆடி பெண் தவளைகளைக் தன்வசம் இழுக்கின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலை:
மகாராஷ்ட்ரா முதல் தென்குமரி வரைக் காணப்படும் மேற்குத் தொடர்ச்சிமலையில்
இந்த வகைத் தவளைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
மில்லியன் ஆண்டுகள்:
மத்திய அமெரிக்காவிலும், கிழக்கு ஆசியாவிலும் கூட இத்தகைய தவளைகள்
காணப்பட்டாலும் இந்த இந்தியத் தவளை இனங்களிதான் 85 மில்லியன் ஆண்டுகளாக
சரியான பரிணாம வளர்ச்சிப் பெற்றுள்ளன.