|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 January, 2013

நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு!.




கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் லோகநாதன். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக யானைகளை படம் எடுத்து வருபவர்.யானைகளை பற்றி நிறைய தகவல் சொல்கிறார். முதலில் ஓரு இடத்தில் யானைகள் நன்றாக இருக்கிறது என்றால் அங்கு காடு நன்றாக இருக்கும், காடு எங்கு நன்றாக இருக்கிறதோ அங்கு நாடும் நன்றாக இருக்கும். ஆகவே யானைகளை எப்போதுமே குற்றம் சொல்லக்கூடாது, அதன் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உண்டு. அதனை புரிந்து கொள்ளாமல், அதன் வழித்தடத்தில் வீடுகளையும், ஆஸ்ரமங்களையும், கல்லூரிகளையும் கட்டிவிட்டு, யானை வருகிறது, யானை வருகிறது என்றால், அது பல நூறு ஆண்டுகளாய் வந்து போய்க் கொண்டிருந்த வழித்தடத்தில் வராமல் வேறு என்ன செய்யும். வழித்தடம் மாறும் போதும், உணவிற்கு வழியில்லாத போதும் வயலுக்கு வருகிறது, ஊருக்குள் புகுகிறது.
 
சினிமாக்களில் காட்டுவது போல யானைகள் மோசமான மிருகம் அல்ல, தன்னை சீண்டுபவனையும், துன்புறுத்துபவனையும்தான் யானை தாக்குமே தவிர மற்றபடி அது சாதுவான பிராணியே. பொதுவாக யானைக்கு மதுவின் வாடையே ஆகாது, குடித்துவிட்டு பக்கத்தில் வருவது பாகனே ஆனாலும் பொறுத்துக் கொள்ளாது. அதே நேரம் குட்டி போட்டு இருக்கும் நேரத்தில் யாராக இருந்தாலும் குட்டியிடம் நெருங்கவிடாது, அந்த அளவிற்கு பாசம் அதிகம். மனிதர்களைப் போல குட்டிக்கு தும்பிக்கை வழியாக மூச்சு காற்றை செலுத்தி பிழைக்க வைத்த நிகழ்ச்சி எல்லாம் உண்டு. பத்து கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ளவைகளை மோப்பம் பிடித்தே அறிந்து கொள்ளும். யானைக்கு கழுத்து பகுதி கிடையாது என்பதால், திரும்பிப் பார்க்கவேண்டும் என்றால் அது உடம்பையே திருப்பித்தான் பார்க்குமே தவிர ,கழுத்தை மட்டும் திருப்பிப்பார்க்காது. அதே போல யானைக்கு நேர் பார்வைதான் உண்டு, அது விரட்டும் போது நேர் பார்வையில் படாமல் பக்கவாட்டில் தப்பி ஒடினாலே பிழைத்துக் கொள்ளலாம்.
 
சினிமாக்களில் காட்டுவது போல கும்கி யானையை தனியார் வளர்க்க முடியாது. அரசாங்கத்தின் வனத்துறையினர்தான் வளர்க்கமுடியும். காட்டில் இருந்து நாட்டிற்குள் வரும் யானையை விரட்டியடிக்க பயிற்சியளிக்கப்பட்ட யானையே கும்கி. குட்டியில் இருந்தே சரியான யானையை அடையாளம் கண்டு அதனை கடுமையான பயிற்சி கொடுத்து வனத்துறையினர் வளர்த்து வருவார்கள். அந்த கும்கி யானை கூட பெண் யானையைத்தான் விரட்ட முடியும், இதைவிட உயரமான "டஸ்கர்' என்று சொல்லக்கூடிய பத்து அடி உயரத்திற்கு மேல்பட்ட ஆண் யானையைக் கண்டால் கும்கி யானையே ஒடிவந்துவிடும், அந்த மாதிரி யானையை இரண்டு கும்கி யானைகளைக் கொண்டுதான் விரட்டுவார்கள்.

சட்டை காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்!

ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை காட்டிலும், மதுபான, "சரக்கு' விற்பனையில், தமிழகம், "நம்பர் 1' இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த, 2003ம் ஆண்டு முதல் மதுபான விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும், 6,805 "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான சரக்குகளை சப்ளை செய்ய, 22, குடோன்கள் உள்ளன. தினமும், 50 கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது. "குடி'மகன்களின் தாகத்தை தீர்க்க, 200க்கும் மேற்பட்ட வகையான சரக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களை, 11 கம்பெனிகளும், பீர் வகைகளை 7 கம்பெனிகளும், ஒயின் மதுபானங்களை, 3 கம்பெனிகளும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சப்ளை செய்கின்றன.

கடந்த, 2011-12 மார்ச் மாதம் வரை, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள், 536.35 லட்சம் பெட்டிகளும், 284.29 லட்சம் பீர் பாட்டில்களும் விற்பனையாயின. இதன்மூலம், 23 ஆயிரத்து 505 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவுக்கு நடந்த விற்பனையில், 18 ஆயிரத்து 81 கோடியே 16 லட்சம் ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைத்துள்ளது.அடுத்து, 2011-12 டிசம்பர் மாதம் வரையில், 19.74 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சி விகிதம் உள்ளது. இது வரும் மாதங்களிலும் அதிகரித்து, இலக்கான, 22 சதவீதத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம், 2013 மார்ச் நிதியாண்டு முடிவில், 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு விற்பனை இருக்கும் என்றும், 20 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
கேரளா அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மொத்தம், 338 கடைகளில் மட்டுமே மதுபான விற்பனை நடக்கிறது. கேரள நுகர்வோர் அமைப்பின் சார்பில், 45 கடைகள் நடத்தப்படுகின்றன. கேரளாவில் கடந்த, 2011-12 நவம்பர் மாதம் வரையில், 7 ஆயிரத்து 860 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த விற்பனையில், அரசுக்கு, 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.காலை, 9:00 மணி முதல் திறக்கப்படும் மதுபான கடைகள் இரவு, 9:00 மணி வரை செயல்படும். மதுபானங்களில் தண்ணீர் கலப்பது, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, ஊழியர்கள் பணியிடை நீக்கம் என்று எந்தவிதமான பிரச்னைகளும் கேரளாவில் இல்லை. மதுபான மொத்த விற்பனையில் மட்டுமே ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகளை ஏலம் எடுத்து, தனியாரே நடத்தி வருகின்றனர். 2011-12 நவம்பர் மாதம் வரையில் 14 ஆயிரத்து 846 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த மதுபான விற்பனையில், அரசுக்கு 9 ஆயிரத்து 169 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

கர்நாடக அரசு, மதுபான மொத்த விற்பனையில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. மதுபான கடைகளை தனியாரே ஏற்று நடத்தி வருகின்றனர். 2011-12 நவம்பர் மாதம் வரையில், 13 ஆயிரத்து 814 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த மதுபான விற்பனையில், 9 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைத்துள்ளது. இவ்வாறு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் டாஸ்மாக், "சரக்கு' விற்பனை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. இது குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் தனசேகரன் கூறியதாவது: கேரளா போல் தமிழகத்திலும் டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்த வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை, பணி நிரந்தரம் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்தினால், மதுவில் தண்ணீர் கலப்பது, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். இவ்வாறு தனசேகரன் கூறினார்.

ஆந்திரா, கர்நாடகாவில் ஆண்டுதோறும், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், மிலாது நபீ, திருவள்ளூவர் தினம், வள்ளலார் தினம், உழைப்பாளர் தினம், மஹாவீர் ஜெயந்தி ஆகிய, எட்டு நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த மாதத்தில், 25, 26 மற்றும் 27ம் தேதிகளில் மிலாது நபீ, குடியரசு தினம், வள்ளலார் தினம் ஆகியவை தொடர்ந்து வருகிறது. இதனால், தொடர்ந்து மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை பேசுகிறது...!

மணி அடித்து முதல்வரை உட்கார வைத்ததில் இருந்தே இங்குள்ள அதிமுகவினர் மத்திய அரசு மீது கோபமாகத்தான் இருக்கின்றனர். தங்கள் கோபத்தை பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு வழியே இது. முதல்வர் ஆள்வதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பிரமாதமாக இருக்கிறதாம். விரைவில் டில்லி செங்கோட்டையிலும் பொறுப்பேற்று அதனையும் முதல்வர் பிரமாதப்படுத்துவராம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...