|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 March, 2012

ஏழைகள் யார்?

 மத்திய அரசு வெளியிட்டுள்ள வறுமைக்கோடு பற்றிய புதிய வரையறை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ22.42 செலவிடுவோரும் நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ28.65 செலவிடுவோரும் ஏழைகள் அல்ல என்கிறது மத்திய திட்டக் குழு. இதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 
திட்டக் குழு சொல்வது என்ன? - கிராமங்களில் ஒரு மாதத்துக்கு ரூ672.8 செலவிடும் சக்தி படைத்தோர் ஏழைகள் அல்ல. நகர்ப்புறங்களில் ஒரு மாதத்துக்கு ரூ859.6 செலவிடும் சக்தி படைத்தோரும் ஏழைகள் அல்ல. - இந்தியாவில் வறுமை என்பது படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2004-05ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2009-10ஆம் ஆண்டில் 5 கோடிப் பேர் வறுமையிலிருந்து "விடுதலை" பெற்றுவிட்டனர். அதாவது 2004-05ல் 40 கோடியே 72 லட்சமாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை 2009-10ம் ஆண்டில் 34 கோடியே 47 லட்சமாக குறைந்துவிட்டதாம்..
நகர்ப்புறங்களைவிட கிராமங்களில்தான் வறுமை "வேகமாக" குறைந்து வருகிறது. இத்ற்குக் காரணம் அரசின் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்தான். 2004-05ம் ஆண்டில் 37.2 சதவீதமாக இருந்த தனி நபர் செலவு விகிதம், 2009-10ல் 7.3 சதவீதம் குறைந்து 29.8 சதவீதமானது. அதில் கிராமங்களில் ஒரு நாளைக்கு தனி நபர் செலவு விகிதம் என்பது 8 சதவீதம் குறைந்து 33.8 சதவீதமானது. நகரங்களில் 4.8 சதவீதம் குறைந்து 20.9 சதவீதமானது. - வடகிழக்கு மாநிலங்களில் வறுமை அதிகரித்து வருகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புள்ளிவிவரங்களை திட்டக் குழு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில்.... நாடாளுமன்றத்தில் திட்டக் குழுவின் இந்த அறிக்கை விவகாரம் எதிரொலித்தது. திட்டக் குழு அறிக்கை மீது விவாதம் நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. ஒருநாளைக்கு ரூ22ஐ வைத்துக் கொண்டு ஒருவேளை உணவு கூட உண்ணமுடியாத நிலையில் திட்டக் குழுவின் வரையறையை ஏற்க முடியாது என்பது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாதம். ஆனால் இது பற்றி விவாதிக்க மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி மறுத்துவிட்டார்.
முந்தைய சர்ச்சை கடந்த ஆண்டு ஜூன் மாதம் உச்சநீதிமன்றத்தில் திட்டக் குழு தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில், நகரங்களில் ஒரு நாளைக்கு ரூ32 செலவு செய்வோரும் கிராமங்களில் ரூ26 செலவு செய்வோரும் ஏழைகள் அல்ல என்று கூறியபோதே கடும் கண்டனங்களும் சர்ச்சைகளும் வெடித்துக் கிளம்பின. இந்நிலையில் கடந்த ஆண்டைவிட இம்முறை மிகவும் குறைத்து மதிப்பிட்டு ஏழைகள் யார் என வரையறை செய்துள்ளது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஆரோக்கியம் தரும் வழிபாட்டு முறைகள்!

ஆலயத்திற்கு நாம் உடலை சுத்தம் செய்து தூய்மையான ஆடையணிந்து செல்லும் போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுடன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும். பின் ஆலயத்திற்குள்  செல்லும் முன் கோபுர தரிசனம் செய்ய வேண்டும். கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பர். கோபுரதரிசனம் செய்ய மேல்நோக்கி பார்க்கும் போது தலைக்கான பயிற்சி ஆரம்பிக்கின்றது. மூன்றுமுறை கீழிருந்து மேலாக பார்த்து வணங்கும் போது தலைக்கான இரத்தோட்டம் சீராகும்.  ஆலயம் உள் சென்ற உடன் முதலில் செய்வது விநாயகர் வழிபாடு. விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு புருவப் பொட்டில் மூன்றுமுறை குட்டி வழிபடுவது வழக்கம், இவ்வாறு குட்டுகின்ற போது புத்தியைச் செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும் இதனால் இரத்தோட்டம் அதிகரிக்கும் செவிகள் இரண்டையும் இழுக்கும் போது நரம்பு கீழ்நோக்கி இழுபடும் இதனால் மூளையில் சிந்திப்பதற்கான பகுதி செயல்படும். அடுத்து ஆலயத்தை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை வலம் வருவர். வலம் வரும் போது நடப்பது ஓர் சிறந்த உடல் பயிற்சி என்பர். 

சிலர் பிரதட்ணம் பண்ணுவர். இதனால் குடல் தொடர்பான நோய்களுக்கும் இரத்தோட்ட சீரக்கத்துக்கும் சிறந்த உடல் பயிற்சி என்பர்.  அடுத்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்கின்றனர். அஷ்டாங்க நமஸ்காரம் என்னும் போது அஷ்டாங்கம் என்பது தலை கையிரண்டு செவியிரண்டு மோவாய் புஜங்களிரண்டு என்னும் எட்டவயங்களும் நிலத்தில் பொருந்தும் படி வலக்கையை முன்னால் நீட்டியும் இடது கையை பின்னும் நேரே நீட்டிய பின் அம்முறையே மடக்கி வலபுயமும் இடபுயமும் மண்னிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டிவலக்காதை முன்னும் இடக்காதை பின்னும் மண்னிலே பொருந்தச் செய்வதாகும். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த ஆண்களுக்கான உடல் பயிற்சியாகும். இது போன்று பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர் பஞ்சாங்க என்பது தலை கையிரண்டு முழந்தாளிரண்டு என்னுதைந்தவயவங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும். இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்.

தொடர் மின்தடையால் மாணவர் தேர்ச்சி குறையும்: மருத்துவர்கள்!


தொடர் மின்தடையால், மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்பட்டு, அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறையும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர், இரவில் சரியான தூக்கமின்றி சோர்வுடன் காணப்படுகின்றனர்; ஞாபக மறதி, படபடப்புடன் தேர்வு எழுதுகின்றனர். இதனால், கோவையில் இந்தாண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர், கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.
தமிழக அரசு பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, மின்தடை நேரத்தை அறிவித்துள்ளது. அறிவித்த நேரம் தவிர, கூடுதலாக நான்கு மணி நேரம் இரவிலும் மின் தடை ஏற்படுகிறது. கோவையில் பகலில் ஏற்படும் ஆறு மணி நேர மின் தடையை, சகித்துக்கொண்டாலும், இரவில் ஏற்படும் நான்கு மணி நேர மின்தடையால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டால், தற்போது மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்தான். இரவில் 7.00 முதல் காலை 6.00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. இதனால், ஏற்படும் தூக்கமின்மையால், மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவ, மாணவியர், மறுநாள் தாங்கள் எழுதவிருக்கும் தேர்வை நினைத்து பயம் கொள்கின்றனர்.
சரியான தூக்கமின்றி தவிக்கும் இவர்களின் நிலை குறித்து, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். அப்போதுதான், மறுநாள் புத்துணர்ச்சியுடன் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட முடியும். தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடக்கின்றன. இந்நேரத்தில் மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராக மாலை முதல் இரவு வரை பாடங்களை படித்தாலும், சரியான தூக்கமின்மையால் மறுநாள் காலை தேர்வு எழுதச் செல்லும்போது, சோர்வடைகின்றனர்.இதனால் வெறுப்பு, படபடப்பு, ஞாபக மறதி, கோபம், மன உளைச்சலுக்குள்ளாகின்றனர். தேர்வு எழுதும் அறையில் கேள்வித்தாளை பார்த்ததும், ஓராண்டாக பள்ளியில் கற்ற சாதாரண கேள்விக்குக்கூட, பதட்டத்துடன் பதில் எழுதுகின்றனர். முன்தினம் இரவு படித்து மனப்பாடம் செய்திருந்த பதிலை, ஞாபக மறதியால், கோர்வை இல்லாமல் எழுதும் நிலைக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறு எழுதும்போது, முழுமதிப்பெண் கிடைக்காது. வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியரே, தற்போதைய நிலையில் மதிப்பெண் குறைவாக பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு, மருத்துவர்கள் தெரிவித்தனர். பகலில் மின்தடையை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, மாணவ, மாணவியரின் எதிர்காலம் கருதி இரவிலாவது தடையின்றி மின் வினியோகம் செய்ய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மார்ச் 20 - சர்வதேச சிட்டுக் குருவிகள் தினம்


சர்வதேச குருவிகள் தினமாக மார்ச் 20ஐ பறவை, விலங்கின ஆர்வலர்கள் 2010 முதல் கொண்டாடி வருகின்றனர். "கீறீச்சிட்டு' பறக்கும் குருவிகளை இன்று நகரங்களில் பார்க்க முடியவில்லை. குருவிகளின் உயிரை பறிக்கும் கோடாலிகள் எவை தெரியுமா? "மொபைல் போன் டவர்'களில் இருந்து வரும் ரேடியோ அலைகள் தான் என்கிறார், மதுரையில் பறவையினங்களை ஆய்வு செய்து வரும் டாக்டர் பத்ரி நாராயணன்.
இனி அவரே...: மனித வாழ்க்கை மாறியதும், குருவி இனத்தை பாதித்தது. முன்பு வீடுகள் ஓட்டு கட்டடங்களாக இருந்தன. ஓட்டுக்கும், சுவருக்கும் இடையே காற்றோட்டத்திற்காக இடைவெளிகள் விடப்பட்டன. அங்கு குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தன. இப்போதைய கட்டடங்கள் குருவிகள் வாழ வழியில்லாமல் செய்து விட்டன.முன்பு சாக்கு மூட்டைகளில் தானியங்கள் சேமிக்கப்படும். மூட்டைகளை இரும்பு கொக்கி மூலம் தூக்கும் போது ஏற்படும் துளைகள் வழியே தானியங்கள் சிதறும். அவற்றை குருவி, காகம் போன்ற பறவையினங்கள் உண்டு வாழ்ந்தன. இப்போது அரிசி உட்பட தானியங்களை "பேக்' செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் செல்கின்றனர். விவசாயத்திற்கு பூச்சி மருந்து அடிக்க ஆரம்பித்ததன் விளைவு, மண்ணில் உள்ள பூச்சியினங்களை மறையச் செய்து விட்டது. இதனால், குருவி தன் குஞ்சுக்கு இரையாக கொடுக்க பூச்சிகள் இல்லாமல் போனது.
இந்த உலகமே தனக்காக தான் படைக்கப்பட்டுள்ளது என்ற சுயநலம் மனிதர்களுக்கு ஏற்பட்டு, வாழ்க்கை முறையையும் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டனர். இதனால், பல உயிரினங்கள் அழிந்தன. ஒரு உயிர் அழிந்தால் மற்றொரு உயிரினம் கூடும். பறவையினங்கள் எலிகளை பிடித்து உண்ணும்.பறவையினங்கள் குறைந்தால் எலிகள் அதிகரிக்கும். "பிளேக்' போன்ற நோய்கள் ஏற்படும். உலகில் சமநிலை இல்லாமல் வாழ்வது ஆபத்தானது. மனிதர்கள் முதலில் அதை உணர வேண்டும் என்றார் டாக்டர் பத்ரி நாராயணன்.குறுகி வரும் குருவியினத்தை காக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குருவிகளுக்காக இனி குரல் கொடுப்போமா?
கணக்கெடுப்பு பணி:சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி, சென்னையில் முதன்முறையாக இ-மெயில் மூலம் சிட்டுக் குருவிகளை கணக்கெடுக்கும் பணியை, சென்னை இயற்கை ஆர்வலர்கள் சங்கம் துவக்குகிறது.சென்னை நகரில் சிட்டுக் குருவிகளை பார்ப்பவர்கள் mnssparrow@yahoo.in என்ற இ-மெயிலில் தகவல் தெரிவிக்கலாம். சிட்டுக் குருவிகளின் தோற்றத்தை சிறப்பாக புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு, ஊக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

இதே நாள்...

  • சர்வதேச ஜோதிட தினம்
  •  டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது(1602)
  •  சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது(1948)
  •  பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது(1956)
  •  ஐன்ஸ்டீன் தனஐ சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார்(1916)

பார்த்ததில் பிடித்தது!

இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றாலும் அனைத்திலும் ஸ்ரீலங்கா வெள்ளை அடிக்கப்பட்டதில் சந்தோசமே...  

Age-Tamil Short Film -ஒரு உண்மை சம்பவம்


பார்த்ததில் பிடித்தது!


அடப்பாவிகளா....
அன்னிக்கு ஆஸ்திரேலியா லீக் ஆட்டத்துல இலங்கை தோற்கணும்னு கும்பிட்டீங்க..... இன்னிக்கு பங்ளாதேஷ் லீக்-ல இலங்கை ஜெயிக்கணும்னு கும்பிடுறீங்க! ... யாருய்யா நீங்க எல்லாம்? ( பாவப்பட்ட கடவுள் :)
இலங்கையுடனான இந்தியாவின் historical relationship'பையும், தமிழ் மக்களின் உணர்வையும் மனதில் கொண்டு இந்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து முடிவெடுக்கும்." - எஸ்.எம்.கிருஷ்ணா.
Perfect 8 Pack... No gym..! 
ரோல்ஸ் ராய்ஸ் - இந்த காரை வாங்குவதற்கு பணத்தைவிட முக்கியமானது,,,, தகுதி.

இதனுடைய கொள்கையின் படி அப்பா, தாத்தா, பாட்டன், பூட்டன் என்று பரம்பரையையே தோண்டி துருவி பார்த்து, அது மதிப்புடையதாக இருந்தால் மட்டும்தான் கார் உண்டு. இல்லை என்றால் கோடிகள் கொட்டி கொடுத்தாலும் கார் கிடையாது. இப்படி மறுக்கப்பட்ட லிஸ்ட்-டில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறார் “கலா சலா” பாட்டுக்கு பட்டையை கிளப்பிய மல்லிகா ஷெராவத். கார் வாங்க போன அவரிடம் “உங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போதிய பாரம்பரியம் இல்லை என்பதை நாசூக்காக கூறி கார் தர மறுத்துவிட்டதாம்.
இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் கூறிய விளக்கத்திற்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியுள்ள பேச்சுக்கும் இடையே ஆறு வித்தியாசம் அல்ல, 6000 வித்தியாசங்கள் உள்ளன. இதன் மூலம் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மீண்டும் ஒரு இரட்டை வேட நாடகத்தை அரங்கேற்றப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உழைப்பே உயர்வு... நம் விவசாயி.  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...