|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 August, 2011

புதிய சிந்தனைகளுக்கு எப்போதுமே வரவேற்ப்பை பெறுகின்றன!


சோனியாவின் மாப்பிளை!


இரத்த சோகை நீக்கும் பசலை கீரை!

வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன. வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை வழங்குகின்றது. கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை அன்னை தன்னுடைய மிக விரிவான ஜீவாதாரமான ரசவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள். உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர்.

பசலையில் செடிப்பசலை என்ற இனம் உண்டு. இது குத்துச் செடியினம். இது இலங்கையிலிருந்து வந்ததால் சிலோன்கீரை என்றும் அழைப்பர். இதன் இலைகள் சிறிதாக எதிர் அடுக்கில் இருக்கும். இதன் தண்டைக் கிள்ளி வைத்தால் வளரும். மற்றொன்று தரைப்பசலை என்பது. இது தரையில் படர்ந்து வளரும். இலைகள் சிவப்பாகவும் பசுமையாகவும் இருக்கும். குணம் எல்லாம் ஒன்று தான். கொடிப்பசலையின் இலைகள் பச்சையாகவும், வட்டமாக நீண்டு இருக்கும். கொடி 90 அடிக்கு மேல் படரும். படத்தில் உள்ள கொடிகள் என் மாடிவீடு வரை படர்ந்துள்ளது. பல வருடம் இருக்கும். பழங்கள் கருநீலத்தில் இருக்கும். கொடியை வெட்டி வைத்தால் வளரும். விதை மூலமும் வளரும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தொட்டித்தாவரமாக வளர்க்கப்படுகிறது. பச்சை இலைகள் கொண்ட வகை பஞ்சாப், உத்தரபிரதேசத்திலும் பசுமை-சிவப்பு இலைகள் வகை அஸ்ஸாம், மேற்கு வங்காளம் மற்றும் தென் இந்தியாவில் காணப்படுகிறது. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இதில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள் மற்றும் பைபிளேவனாய்டுகள் உள்ளன. வைரசுக்கு எதிராக செயல்படும் கிளைக்கோ புரதம் ஒன்றும் காணப்படுகிறது.

ரத்தம் விருத்தியாகும்: பசலைக்கீரை மிக உயர்ந்த உணவாக உள்ளது. எளிதில் செரிமானமாகும் இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எரிச்சலைத் தணிக்கின்றது. இதில் தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் அதிக அளவில் உள்ளன. வைட்டமின் ‘ஏ’ பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும்.

பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. இரத்த விருத்தி உண்டாக்கும். சோடியம், போலாசின்,கால்சியம் உள்ளன ஆனால் கொழுப்பு சத்து இல்லை.

தாது கெட்டிப்படும்: இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும்.இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும்.இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். இலைகள் சிறுநீர் போக்கு தூண்டுவது. இலையின் சாறு குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களின் மலச்சிக்கல் போக்க பயன்படுகிறது. பிசின் போன்ற பொருள் கொண்ட இலைகளின் பசை கட்டிகளின் மீது பற்றாகப் போடப்படுகிறது.

நீரிழிவு குணமடையும்: பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அளிவை இது குறைக்கின்றது. இதில் உடல் வறட்சிக்கு எதிரான பெரிபெரி என்னும் வீக்க நோயிக்கு எதிரான, கரப்பான் வியாதிக்கு எதிரான சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன. கொழுந்தாக உள்ள கொடிச் சுருளைப் பச்சையாகவே உண்பது மிகுந்த நன்மையைத் தருகின்றது.

நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது.இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.

இலைகளை (1 லிருந்து 10 வரை)க் கக்ஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன. இத்தகைய நோய்களின் போது இது எரிச்சலைத் தணிக்கின்றது. துவர்ப்பு மருந்தாக உதவுகின்றது, சிறுநீரைப் பெருக்குகின்றது. உட்கொள்ளும் அளவு 1 அல்லது 2 அவுன்சு. இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். ஏனெனில் இதில் அதிக ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன. மிகுதியான தண்ணீரை கொட்டிவிடாமல் மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம்.

பசலைக்கீரையின் இளம், மென்மையான முளைகளைச் சமைக்காத பச்சடிகளில் பயன்படுத்தலாம். இவற்றைப் பச்சடிக் கீரையின் கொழுந்துகளுடன் சேர்த்து உண்ணலாம். இது பசியை நன்கு தூண்டும். எனவே வளரும் இளம்பெண்கள் பசலைக் கீரையை அதிகமாக உண்ணவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புது மணப் பெண்களைத் தாக்கும் அச்சங்கள்!

வாழ்ந்த வீட்டையும் சொந்த பந்தங்களையும் விட்டு புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய்களில் முக்கியமானது நிரோடிக் டிஸ்ஆர்டர் எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட அச்ச பாதிப்புகள். இந்த நோய் உள்ள பெண்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். ஆனால் மனதுக்குள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.

நிரோடிக் நோய் தாக்கியவர்கள் தினசரி வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் அச்சப்படுவார்கள். குறிப்பாக விபத்து நடந்த இடத்தை பார்க்கவோ அல்லது விபத்தில் சிக்கியவர்களின் உடலைப் பார்த்தோ மிகவும் பயப்படுவார்கள். ரத்தத்தை கண்டால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும். இதனால் உடல்ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொள்வார்கள். அவர்களின் உடலில் வியர்வை, நடுக்கம், விரைவான இதயத்துடிப்பு ஆகியவை ஏற்படும். சிறுகுடல் பாதிக்கப்படும். கொந்தளிப்பான உணர்வால் மூர்ச்சை உண்டாகும். இப்படி பயப்படும் பெண்கள் முதலில் வாழும் முறையை மாற்றவேண்டும்.

வாழும் முறையில் மாற்றம்:  பள்ளிக்கு செல்லும் குழந்தை வீடு திரும்பும் வரை பயப்படுவது, கணவரை நினைத்து கவலைப்படுவது ஆகியவை தேவையில்லாத பயம் என்பதை இந்த நோய் தாக்கியவர்கள் உணர வேண்டும். தனிமையில் இருந்தால் பயமாக இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. அச்சம் தரும் சந்தர்ப்பங்களை குறைத்துக் கொள்ளவேண்டும்.

நிரோடிக் நோய் தாக்கியவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். பயப்பட வைக்கும் சூழ்நிலையை எதிர்த்து போராடும் மனநிலையை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். எதற்கும் பயப்படத் தேவை இல்லை என்று அவர்கள் மனதில் பதியும் வகையில் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அச்சத்தால் உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும்.

மனப்பான்மையை மாற்றுங்கள்: எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனப்பான்மையை உருவாக்க வேண்டும். எதையும் பாஸிட்டிவ்வாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். தினமும் யோகா, தியானம், இசை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. மனதில் அச்சம் தோன்றும்போது ஏதாவது பாடலை பாடலாம். எப்போதும் நமக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் அச்சம் தரும் சிந்தனை குறையும். இவை அனைத்தையும் விட, குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். இதனால் மனதில் அச்சம் குறையும்.

மன உளைச்சலை போக்கும் வால்நட்!

விலை உயர்ந்த கட்டைகளை தரக்கூடியது அக்ரூட் மரம். மருத்துவ குணம் கொண்ட இந்த மரம் சிக்கிம், நேபாளம், ஆகிய பகுதிகளிலும் இமாலயப் பகுதிகளில் இயற்கையாக காணப்படுகிறது. அதிகம் காணப்படுகிறது. இந்த மரத்தின் இலை, பட்டை மற்றும் கனி போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. இந்த மரத்தில் கிடைக்க வால்நட் விதைகள் அதிக சத்து நிறைந்தவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் இருந்து பல வைட்டமின்கள், அமினோஅமிலங்கள், பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. வைட்டமின் டி, வைட்டமின் பி6, அஸ்கோரிப் அமிலம், சிஸ்டெயின், டிரிப்டோபேன், தயாமின், போஃபிளேவின்,நிக்கோடினிக் அமிலம், போலிக் அமிலம், பயோடின், ஜீக்ளோன்.

வாதநோய்களுக்கு மருந்து: இலை மற்றும் பட்டை வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. இவை தோல்நோய்கள், பால்வினைநோய், எக்ஸிமா, காசநோய், ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. கனிகள் வலுவேற்றியாகவும், வாதநோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகின்றன. காய்களின் மேல் உறை கிருமிகளை போக்க வல்லது. விதைகளை ருசியானவை. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது.


கொழுப்பு நீக்கும் வால்நட்; வால்நட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஓமேகா 3 அதிகம் காணப்படுகின்றன. இது வேலைப்பழுவினால் ஏற்படும் மன உளைச்சலை போக்க உதவுகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு குறைகிறது. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை வால்நட் தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் தடுக்கப்பட்டு மன அழுத்தம் ஏற்படுவது குறைகிறது.

தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து சதவிகிதம் வரை குறைகிறது. இத்துடன் இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமடைகின்றன.

இதய ஆரோக்கியம்: ஹார்வார்டு பல்கலைக்கழகம் கொலஸ்ட்ரலைக் குறைக்க வால்நட் பருப்பு சாப்பிடுங்கள் என்று சமீபத்தில் உறுதியாகத் தெரிவித்துள்ளது. இதற்காக வால்நட் தொடர்ந்து சாப்பிட்டவர்களின் இதய ஆரோக்கியம், கெட்ட கொலஸ்ட்ரல் அளவு முதலியவற்றை ஆராய்ந்தது. குறிப்பாக, 13 குழுக்களை ஆராய்ந்து முடிவை வெளியிட்டது. இதில் வால்நட் சாப்பிட்டவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாச்சே! இதனால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயல்பு. வால்நட்டில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ள பருப்பு வகை இது. நீங்கள் அதிகக் கலோரி உள்ள மற்ற உணவுகளைப் புறக்கணித்து விட்டு பயமின்றி வால்நட் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

ராணுவ பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து காதலுக்கு 'பை' சொன்ன இளவரசர்!

மாடல்அழகி பிளோரன்ஸ் புரூடுநெல் புரூசை விட்டு இங்கிலாந்து இளவசர் ஹாரி பிரிந்து விட்டாராம். இங்கிலாந்து பத்திரிகைகள் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து இளவரசி டயானாவின் முதல் மகனான வில்லியமிற்கு திருமணம் முடிந்த நிலையில், 2வது மகனான ஹாரியை பற்றிய பல வதந்திகள் பரவி வருகின்றன. அவரை, வில்லியமின் மனைவி கேட்மிடில்டனின் தங்கை பிப்பாவுடன் இணைத்து சமீபத்தில் வதந்திகள் வந்தன. இருவரும் நெருங்கிப் பழகுவதாக அந்த செய்திகள் கூறின.

இருப்பினும், இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றி வரும் ஹாரி, மாடல் அழகியான பிளோரன்ஸுடன் நெருங்கிப் பழகுவதாக நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. பிளோரன்சை, தனது அண்ணன் வில்லியம் உட்பட குடும்பத்தினருக்கு ஹாரி அறிமுகப்படுத்தியதாகவும் சில தகவல்கள் கூறின. ஆனால் தற்போது இந்தக் காதலில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஹாரி முடிவு செய்துள்ளதால் காதலைக் கைவிட தீர்மானித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஒரு வேளை பிப்பா மீதான மோகத்தில் பிளோரன்ஸை கைவிடுகிறாரா ஹாரி?

ஊழல் ஒழிய மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவர்கள்-கமல்ஹாசன்!

அன்னா ஹஸாரே குறித்து முதல்முறையாக தமிழகத்திலிருந்து ஒரு பிரபலக் குரல் எழுந்துள்ளது. குரல் கொடுத்திருப்பவர் கமல்ஹாசன். நாட்டின் மீதுள்ள பற்று காரணமாகத்தான் இன்னும் நாம் லஞ்சம் ஊழலை சகித்துக் கொண்டு வாழ்கிறோம் என்றும், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அன்னா ஹஸாரே போராட்டத்துக்கு வட இந்திய நடிகர் நடிகைகள் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால் தென்னிந்தியாவில் இதுவரை ஒருவரும் இதுபற்றி வாயே திறக்காமல் பெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள் தெளிவாகப்பேசவில்லை.திரையுலகினரும் கூட இதுகுறித்து இதுவரை எதையும் பேசாமலேயே உள்ளனர்.

இந்த நிலையில் முதல் குரலை எழுப்பியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன். அன்னா ஹஸாரேவின் போராட்டம் குறித்து மறைமுகமாக அவர் கருத்துதெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல் கூறுகையில், "மக்களிடம் வரி மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல் அடிப்படை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம் லஞ்சம், ஊழல் என போகிறது. ஆனாலும் நாட்டின் மீது உள்ள பற்று காரணமாக இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். என்னை மாதிரி உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறியுள்ளார் அவர்.

ஒர்க் பெர்மிட்' விதிகளை இறுக்கியது சிங்கப்பூர்!

வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுவதற்கான வேலை பெர்மிட் விதிமுறைகளை சிங்கப்பூர் அரசு இறுக்கியுள்ளது. இதனால் ஏராளமான இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. சிங்கப்பூரில் ஏராளமான வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு வெளிநாடடவர்கள் தங்கிப் பணி புரிவதற்கான வேலை பெர்மிட்டைப் பெற குறைந்தது மாதம் 2800 சிங்கப்பூர் டாலர் சம்பளம் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகள் உள்ளன. தற்போது இந்த விதிமுறையை இறுக்கி விட்டது சிங்கப்பூர் அரசு.

அதன்படி வேலை பெர்மிட் பெற விரும்பும் வெளிநாட்டவர்கள், மாதம் 3000 சிங்கப்பூர் டாலர் சம்பளமாக பெற வேண்டும். அதற்குக் குறைவாக சம்பளம் பெற்றால் வேலை பெர்மிட் கிடைக்காது. நாடு திரும்ப வேண்டியதுதான். இந்த உத்தரவை 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப் போவதாக சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.

சிங்கப்பூர் அரசின் இந்தப் புதிய கெடுபிடியால் கடுமையாக பாதிக்கப்படப் போவது இந்தியர்கள்தான். காரணம், இந்தியர்கள்தான் பெருமளவில் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர். அதிலும் 3000 டாலருக்குக் கீழ் சம்பளம் வாங்கக் கூடிய வேலைகளில் அதிகம் இருப்பவர்கள் இந்தியர்கள்தான். அவர்கள் அத்தனை பேரும் நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் 3800 இந்திய நிறுவனங்கள் உள்ளன.இங்கு பெரும்பாலும் இந்தியர்கள்தான் அதிகஅளவில் பணியாற்றுகின்றனர். மேலும் சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதம்பேர்தான் சிங்கப்பூர் குடிமக்கள். மீதமுள்ள 35 சதவீதம் பேரும் வெளிநாட்டவர்களே. வெளிநாட்டவர்கள் பெருமளவில் சிங்கப்பூரில் வேலை பார்க்க வருவதால் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பு பறி போவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே இந்த நடவடிக்கையை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டுள்ளது.

இருப்பினும் சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்று பணியாற்றுவோருக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் கூறுகையில், உள்ளூர்வாசிகளின் நலனையும் நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது. எனவேதான் இந்த மாற்றம் என்று தெரிவித்தார்.

ராம்லீலா மைதானம், 25,0000 பேர், 7 நாள் உண்ணாவிரதம்- அரசு நிபந்தனை ஏற்க அன்னா மறுப்பு!

அன்னா ஹஸாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒரு வார காலம் உண்ணாவிரதம் இருக்கலாம். 25,000 பேர் வரை அங்கு கூட அனுமதிக்கிறோம். தேவைப்பட்டால் உண்ணாவிரதத்தை நீட்டிக்க அனுமதிக்கிறோம் என்று கூறிய டெல்லி காவல்துறையின் நிபந்தனையை ஏற்க அன்னா ஹஸாரே மறுத்து விட்டார். இதனால் அவர் இன்றைக்குள் திஹார் சிறையிலிருந்து வெளி வரும் வாய்ப்புகள் மங்கியுள்ளன. இழுபறி நீடிக்கிறது.

காவல்துறையின் எந்த நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என ஹஸாரே கூறிவிட்டார். மேலும் தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை திஹார் சிறையை விட்டு வெளியே வர மறுத்து விட்டார். நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு பெருகி வருவதை அடுத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தது. பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.

ஆனால் அன்னாவின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க அரசு தயாராக இல்லை. அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க அன்னா தயாராக இல்லை. இந்நிலையில் அன்னா 1 மாத காலம் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் அரசோ 7 நாட்கள் அனுமதி அளித்துள்ளது. அன்னா டெல்லி ராம்லீலா மைதானத்தில் 1 வார காலம் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதுவும் அரசு விரும்பினால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளறது.

ஆனால், அரசின் நிபந்தனைகளை ஏற்க அன்னா மறுத்துவிட்டார். எந்தவித நிபந்தனைகளும் இன்றி அவர் விரும்பும் இடத்தில், விரும்பும் காலம் வரை உண்ணாவிரதம் இருக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளார். ஊழலை எதிர்த்து பாபா ராம்தேவ் தனது ஆதரவாளர்களுடன் இதே ராம்லீலா மைதானத்தில் தான் உண்ணாவிரதம் இருக்க வந்தார். ஆனால் அவர்களை உண்ணாவிரதம் இருக்க விடாமல் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னா ஹஸாரே விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அரசு மேலும் இறங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்லீலா மைதானத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் அளவுக்கு அதிகமாக வாகனங்கள் நிறுத்தக் கூடாது. ஒலி பெருக்கிகளை எந்த நேரத்தில் எந்த அளவில் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி தான் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. ஆனால் அவற்றை அன்னா சட்டையே செய்யவில்லை.

இன்றைக்குள் வர மாட்டார் அன்னா-கிரண் பேடி: இதற்கிடையே இன்று திஹார் சிறை முன்பு கூடியிருந்த அன்னா ஆதரவாளர்களிடையே கிரண் பேடி பேசுகையில், அன்னா இன்றைக்குள் சிறையிலிருந்து வர வாய்ப்பில்லை. எனவே இங்கு யாரும் கூடியிருக்க வேண்டாம். மாறாக இந்தியா கேட்டுக்குச் செல்லுங்கள். இது அன்னாவின் வேண்டுகோள் என்றார்.

இந்தியா கேட்டில் மக்கள் கூட்டம்: அன்னாவின் கோரிக்கையைத் தொடர்ந்து இன்று மாலை முதல் இந்தியா கேட் பகுதியில் மக்கள் பெருமளவில் கூடத் தொடங்கினர். அங்கு ஊழலுக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும், அன்னாவை வாழ்த்தியும் கோஷமிட்டிபடி மக்கள் குழுமியிருந்தனர்.

அன்னா போராட்டம் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் ஏன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை?

அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் ஆதரவு காணப்படுகிறது. அவருக்காக ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தென்னிந்தியாவில் அப்படி ஒரு எழுச்சியைக் காண முடியவில்லை. குறிப்பாக தமிழகம், கேரளாவில் அதைக் காண முடியவில்லை. இது ஏன்?

ஊழலை ஒழிக்க வேண்டும், அதற்காக வலுவான லோக்பால் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஹஸாரே குழுவினரின் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கைக்காக கடந்த சில மாதங்களாக அவர்கள் இடைவிடாமல், தீவிரமாக போராடி வருகின்றனர். எத்தனை அடக்குமுறைகள் வந்தபோதும் விடாமல் போராடி வருகின்றனர். இதனால்தான் மக்கள் மத்தியில் அவர்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

ஆனால் இந்தப் போராட்டத்துக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுவதைப் போன்ற எழுச்சி தமிழகத்திலும், கேரளாவிலும் அவ்வளவாக இல்லை. ஆந்திராவிலும் கூட பெரும் அலையைக் காண முடியவில்லை. கர்நாடகத்தில் கூடஓரளவுக்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்பது புரியவில்லை.

இருப்பினும், ஆரம்பத்திலிருந்தே அன்னா ஹஸாரேவின் போராட்டம் ஏதோ வட இந்தியர்களின் போராட்டம் போலவே காட்சி அளித்து வருகிறது, பார்க்கப்பட்டு வருகிறது. இது ஒரு காரணமாக இருக்கக் கூடும். அன்னா ஹஸாரே குழுவினரின் போராட்டம் குறித்து இரு விதமான கருத்துக்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகின்றன. ஹஸாரேவின் போராட்டத்தை தீவிரமாக ஆதரிப்போர் ஒருபக்கமும் இருக்கும் நிலையில், அவரை கடுமையாக விமர்சிப்போரும் கணிசமாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

அன்னா ஹஸாரே குழுவில் இடம் பெற்றுள்ள முக்கியஸ்தர்கள் பலரும் வட இந்தியர்களே அல்லது அன்னா சார்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். தென்னிந்தியர் என்று பார்த்தால் சந்தோஷ் ஹெக்டே மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளார். இருப்பினும் அவரும் கூட ஆரம்பத்தில் இருந்ததைப் போல இப்போது தீவிரமாக அவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதில்லை.

தென்னிந்தியாவில் ஏராளமான புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர்கள், காந்தியவாதிகள் உள்ள போதிலும் அவர்களையும் தங்களுடன் இணைத்து செயல்பட, தென்னிந்தியாவிலும் பேரெழுச்சியை உருவாக்க அன்னா ஹஸாரே குழு தவறி விட்டதோ என்று தோன்றுகிறது. தேசிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவகையில் போராடக் கூடியவர்கள் தென்னிந்தியர்கள் என்பது கடந்த காலங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தியாவின் பிற பகுதிகளை விட தமிழகத்தில்தான் மிகப் பெரிய அளவில் நடந்தது.அதனால் நேருவே பணிய நேர்ந்தது என்பது வரலாறு.

அதேபோல பல்வேறு தேசியப் பிரச்சினைகளில் தென்னிந்தியர்கள், பிற இந்தியர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். ஆனால் இந்தமுறை அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு தென்னிந்தியாவில் பேரெழுச்சியைக் காண முடியவில்லை என்பதே உண்மை. தென்னிந்தியர்களின் இந்த அமைதிக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் புரியாத போராட்டமாக அன்னாவின் போராட்டத்தை தென்னிந்திய மக்கள் பார்க்கிறார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

இதுவே கார்கில் போரின்போது இந்தியாவின் எந்தப் பகுதியையும் விட தென்னிந்தியாதான் குறிப்பாக தமிழகம்தான் அதிகம் கொதித்தது, கொந்தளித்தது, குமுறியது. கார்கில் போர் வீரர்களுக்காக நிதி திரட்டியபோது தமிழக மக்கள்தான் மிகப் பெரிய அளவில் அள்ளிக் கொடுத்து தேச பக்தியை வெளிப்படுத்தினர். கார்கில் போர் அவர்களுக்குப் புரிந்தது. அன்னாவின் ஊழலுக்கு எதிரான போர் தமிழக மக்களுக்கு புரியாமல் போனதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்பது புரியவில்லை.

அதேசமயம் அன்னா ஹஸாரே குழுவினர் யாருமே ஆங்கிலத்தில் பேசுவதில்லை.மாறாக சுத்தமான, இந்தியில்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியில் பேசுவதில் தவறில்லை. ஆனால் அவர்கள் பேசுவது அனைவருக்கும், குறிப்பாக தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இந்தி தெரியாதவர்களுக்கும் புரியும் வகையி்ல இருந்திருந்தால் ஒருவேளை எழுச்சி அதிக அளவில் இருந்திருக்கலாமோ என்னவோ.

அன்னா ஹஸாரேவின் போராட்டம் மக்களிடையே மேலும் நெருக்கமாக சென்றடைய இந்த பாஷைப் பிரச்சினையும் ஒரு காரணமோ என்னவோ தெரியவில்லை. முழுக்க முழுக்க இந்தியிலேயே தலைவர்கள் பேசி வருவதால் இதை இந்திக்காரப் பிரச்சினையாக தமிழக மக்கள் கருத வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் இந்தியாவில் மிகப் பெரிய எழுச்சிய அன்னாவின் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நடமாடும் காந்தி என்று அன்னாவைக் கூறும் அவரது ஆதரவாளர்கள், காந்தியைப் போலவே நாடு முழுவதும் சென்றடையும் வகையில் தனது கருத்துக்ளுக்கு நாடு தழுவிய ஆதரவைப் பெறத் தவறி விட்டார் அன்னா என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதே நாள்...


  • தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்
  •  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம்(1945)
  •  விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது(1958)
  •  செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)
  •  பியேர் ஜான்சென், ஹீலியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தார்(1868)
  • துரோகம் தொடர்ந்தால் வரைபடம் மாறும் வைகோ!

    மத்திய அரசின் துரோகம் தொடர்ந்தால், இந்தியாவின் வரைபடத்தில் சில பகுதிகள் மறைய வாய்ப்புள்ளது,'' என மதுரையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார். பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை கண்டித்தும், துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் மதுரையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது.

    உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது: ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேவை, ஊழல்வாதிகள் நிறைந்த திகார் சிறையில் அடைத்துள்ளனர். ராஜிவ் கொலையில் மரண தண்டனை விதித்தவர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும். தமிழர்களை வஞ்சிக்க, காங்., கம்யூ.,கள் கேரளாவில் இணைகின்றன. இங்கும் அது நடக்க வேண்டும். மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, ஒட்டுமொத்த தமிழகத்தை பாதிக்கும். கேரளா உதவ மறுத்தால், அவர்களுக்கு பொருள் செல்லும் கம்பம் மெட்டு, போடி மெட்டு, களியக்காவிளை ரோடுகள் பெயர்க்கப்படும். தமிழகத்திற்கு மத்தியஅரசின் துரோகம் தொடர்ந்தால், நூற்றாண்டு சுதந்திரம் காணும் போது, இந்தியாவின் வரைபடத்தில் சில பகுதிகள் விடுபட நேரிடும், என்றார்.
    பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் அப்பாஸ், பெரியார் திராவிடக்கழக தலைவர் கொளத்தூர் மணி, ம.தி.மு.க., அவைத்தலைவர் துரைச்சாமி, பொருளாளர் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், நகர் செயலாளர் பூமிநாதன், புறநகர் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், நான்காம் பகுதி செயலாளர் ரஞ்சித்குமார், ஐந்தாம் பகுதி செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். உலக தமிழர் பேரமைப்பு தலைவர் நெடுமாறன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத்தை நிறைவு
    செய்தார்.

    அய்யோ... பாவம் தி.மு.க.,! : கேரளா விவகாரத்தில் தி.மு.க., விளைத்த துரோகம் அதிகம். நொந்து, வெந்து போய்; அய்யோ... பாவம் என்ற கதியில் நிராயுதபாணியாக நிற்பவர்களை நாம் விமர்ச்சிக்க வேண்டாம். என் போராட்ட பின்னணியில் ஓட்டு வேட்கை இல்லை. தமிழக உரிமையை மீட்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு ம.தி.மு.க., துணை நிற்கும். இதை கூட்டணிக்கு தூதாக யாரும் நினைக்க வேண்டாம். பலன் எதிர்பாராமல் தமிழகத்தை
    நேசிக்கிறோம், ஆதரவு கொடுங்கள், என வைகோ உருக்கமாக பேசினார்.

    அன்னா ஹசாரேயை யாரென்றே தெரியாது'' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்!

    சென்னையில் நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பில், ராமதாஸ் கூறியதாவது: மக்களுக்கு இலவசங்கள் வழங்க, தி.மு.க., ஆட்சியில் ஐந்தாண்டுகளில் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டனர். இந்த அ.தி.மு.க., ஆட்சியில், இலவசங்களுக்கு இவ்வாண்டு மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட உள்ளதாகக் கூறுகின்றனர். இலவசங்களைக் கொடுத்தே மக்களை மழுங்கடிக்கப் பார்க்கின்றனர். மது விற்பனை மூலம் 2002 - 2003ம் ஆண்டில், 2,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 2011ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம், 17 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது குடிமக்களின் உயர்வைவிட "குடி'மகன்களின் வளர்ச்சியைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்தில், திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்ததற்கு, பா.ம.க., மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. மக்கள் எங்களுக்கு பாவ மன்னிப்பு வழங்க வேண்டும்.

    உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, என் தலைமையில் டாஸ்மாக் கடை மூடும் போராட்டம் நடத்த உள்ளோம். என் மகன் அன்புமணிக்கு தகுதியும், திறமையும் இருந்ததால் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தகுதியில்லாமலே சிலரது வாரிசுகள் அரசியல் நடத்துகின்றனர். அன்னா ஹசாரேயை யாரென்று எனக்குத் தெரியாது. அவர் போராட்டம் நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

    லெனின் தங்கப்பா நூலுக்கு சாகித்ய அகடமி விருது!

    புதுச்சேரி எழுத்தாளர் லெனின் தங்கப்பா நூல், சாகித்ய அகடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சாகித்ய அகடமியால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில், சிறந்த படைப்பிலக்கியங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, குழந்தை இலக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு விருதையும், சாகித்ய அகடமி வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுக்கான (2010) குழந்தை இலக்கிய விருதுக்கு, புதுச்சேரி எழுத்தாளர் லெனின் தங்கப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 14ம் தேதி டில்லியில் நடக்கும் விழாவில், இதற்கான விருது வழங்கப்பட உள்ளது. இவர் எழுதிய,"சோளக்கொல்லை பொம்மை' என்ற நூல், இவ்விருதைப் பெற்றுத் தந்துள்ளது. 40க்கும் மேற்பட்ட நூல்களை தங்கப்பா எழுதியுள்ளார். நெல்லை மாவட்டம், குறும்பலாபேரியை சொந்த ஊராகக் கொண்ட இவர், 1959 முதல், புதுச்சேரியில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளரான தங்கப்பா, தமிழக அரசின் பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். எழுத்தாளர் தங்கப்பா கூறுகையில்,"உண்மையான தகுதி மதிக்கப்பட வேண்டும். குழந்தைகளோடு பழகி, இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததன் 

    வெளிப்பாடாக,"சோளக்கொல்லை பொம்மை' நூலை எழுதினேன். தகுதியான நூலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' எனக் குறிப்பிட்டார். சாகித்ய அகடமி பொதுக்குழு மற்றும் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் மகரந்தன், பூவுலகின் நண்பர்கள், நட்புக் குயில்கள், கலை இலக்கியப் பெருமன்றம், புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழக நிர்வாகிகள் எழுத்தாளர் தங்கப்பாவை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

    15 Minutes of Exercise Per Day Lowers the Risk of Death and Raises Life Expectancy


    15 Minutes of Exercise Per Day Lowers the Risk of Death and Raises Life Expectancy: n the heels of a recent meta-analysis of thirty three studies looking at the correlation between coronary heart disease and physical activity conducted by researchers from the Harvard School of Public Health, a newly published study put out by the National Health Research Institutes in Taiwan has come to the same conclusion that if inactive people increase their physical activity by just 15 minutes per day, they can reduce their risk of death by lowering their overall risk of heart disease by 14 percent and increase their life expectancy by three years. Also just as reported by the Harvard analysis, they found that the risk of developing coronary heart disease, along with a list of other life threatening ailments, reduces progressively the more physical activity a person does. esearch conducted in Taiwan included more than 400,000 people participating in a medical screening program between 1996 and 2008, with an average follow-up every eight years. Participants were placed into one of five categories of exercise levels ranging from inactive to high-level. By calculating hazard ratios for mortality risks for every group compared with the inactive group they were able to calculate the life expectancy for every group. They concluded, empirically, that just 15 minutes a day, or 92 minutes per week, reduced the risk of death by 14% as well as the risk of cancer death by 10% and added three years on average to a person’s life. Every additional 15 minutes of daily exercise a day on top of the minimum 15 minute amount further reduced the risk of death by 4 percent and cancer death by 1 percent. The benefits applied to all age groups and both sexes and even to those with existing heart disease risks. Also, inactive individuals had a 17 percent increased risk of death compared to those in the low-level of activity category. 

    As noted by the authors in the study quote, “If the minimum amount of exercise we suggest is adhered to, mortality from heart disease, diabetes, and cancer could be reduced. This low volume of physical activity could play a central part in the global war against non-communicable diseases, reducing medical costs and health disparities."

    விண்வெளியில் ஓட்டல் அமைக்க ரஷ்யா திட்டம்!

    விண்வெளியில் செயற்கை முறையில் ஓட்டல் ஒன்றை நிர்மாணிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. பூமியிலிருந்து 217 மைல்கள் உயரே அமையவிருக்கும் இந்த ஓட்டலில் ஒரு நேரத்தில் 7 பேர் தங்கும் வகையில் நான்கு அறைகள் மற்றும் பூமி கீழே சுற்றுவதை எளிதாக பார்க்கும் வகையில் அமைந்த பெரிய ஜன்னல்கள் ஆகியவை இடம் பெறும். ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் உதவியுடன் 2 நாட்கள் பயணம் செய்து இதனை அடையலாம். விண்வெளி சுற்றுலா செல்ல விரும்பும் பணக்காரர்கள், விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்வோர் ஆகியோருக்கு ஏற்ற வகையில் உருவாகும்.

    இதில் 5 நாட்கள் தங்குவதற்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் பவுண்டுகள் வரை செலவாகும். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் அவசர காலத்தில் பூமிக்கு திரும்புவதற்கு பதிலாக தங்குமிடமாகவும் இந்த ஓட்டல் இருக்கும். இதனை ஆர்பிடல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் உருவாக்குகிறது. வரும் 2016-ம் ஆண்டிற்குள் இதன் பணிகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று இங்கிலாந்துடன் நான்காவது மோதல்!

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. ஏற்கனவே தொடரை இழந்த இந்திய அணி, இப்போட்டியில் வென்று மானம் காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை 0-3 என இழந்ததோடு, டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் "நம்பர்-1' இடத்தையும் பறிகொடுத்தது. இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேறியது.  இரு அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று, லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.
     

    துவக்கம் மோசம்: இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். கடந்த போட்டியில் சேவக் இரண்டு இன்னிங்சிலும் முதல் பந்தில் அவுட்டானார். காம்பிரும் சொதப்புகிறார். "மிடில் ஆர்டரில்' டிராவிட் (302 ரன்கள்) தவிர, கேப்டன் தோனி (200), லட்சுமண் (156) ஆகியோரது செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடிப்பார் என, எதிர்பார்க்கப்பட்ட சச்சின் (159), ரெய்னா (105) ஆகியோரும் சோபிக்கவில்லை.


    கோஹ்லி வாய்ப்பு:  இன்று ரெய்னாவுக்குப் பதில், விராத் கோஹ்லிக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். மற்றபடி ஓவல் மைதானம், இந்திய அணிக்கு சற்று சாதகமாகவே இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தி, இத்தொடரில் முதன் முறையாக ஒரு இன்னிங்சில் 300 ரன்களுக்கும் மேல் கடந்து, தங்களை நிரூபிக்க வேண்டும்.


    பிரவீண் சந்தேகம்: பவுலிங்கில் அசத்தி வரும் பிரவீண் குமார் (15 விக்.,), கைவிரல் காயம் காரணமாக இந்த டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் தான். இவருக்குப் பதில் ஆர்.பி.சிங் களமிறங்கலாம். இஷாந்த் சர்மா (10), ஸ்ரீசாந்தின் (5), பவுலிங், முனை மழுங்கிய ஆயுதமாகத் தான் உள்ளது. அமித் மிஸ்ரா (3) எதிர்பார்த்தபடி பந்தை சுழற்றாததால், அவரது இடத்தை பிரக்யான் ஓஜா தட்டிச் செல்வார் என்று தெரிகிறது.


    பேட்டிங் படை: தொடரை வென்றது மட்டுமன்றி இந்தியாவை 4-0 என்று தோற்கடிப்போம் என்று வீர வசனம் பேசி வருகின்றனர் இங்கிலாந்து வீரர்கள். இதற்கேற்ப, பீட்டர்சன் (358), குக் (314), பெல் (269), பிரையர் (253), மார்கன் (193), கேப்டன் ஸ்டிராஸ் (189) என வலுவான பேட்டிங் படையினர், மீண்டும் இந்திய அணிக்கு தொல்லை தர காத்திருக்கின்றனர். பவுலர்களான பிராட் (182), பிரஸ்னன் (154) கூட தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்க்கின்றனர்.


    ஆண்டர்சன் சந்தேகம்: வேகப்பந்து வீச்சில் ஸ்டூவர்ட் பிராட் (21), ஆண்டர்சன் (18), பிரஸ்னன் (12) கூட்டணி மிரட்டுகின்றனர். இதில் ஆண்டர்சன் காயம் காரணமாக இன்று விளையாடுவது உறுதியில்லாமல் உள்ளது. இவருக்குப் பதில் கிரகாம் ஆனியன் சேர்க்கப்பட்டுள்ளார். சுழலில் வழக்கம் போல சுவான், நம்பிக்கை தருகிறார். சொந்த மண்ணில் அசத்தும் இங்கிலாந்து அணி, கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் தூள் கிளப்புகிறது. அதே நேரத்தில் டெஸ்ட் போட்டியை எப்படி விளையாடுவது என தெரியாமல் தவிக்கும் இந்திய அணியினர், இம்முறை எழுச்சி காண வேண்டும். தங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்த வேண்டும்.


    ராசியான ஓவல் மைதானம்: இந்திய அணிக்கு லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானம் ராசியானது. இங்கு பங்கேற்ற 10 டெஸ்டில், 2 போட்டிகளில் மட்டுமே தோற்றுள்ளது. ஒரு போட்டியில் வெற்றி (1971) தவிர, மற்ற அனைத்திலும் "டிரா' செய்துள்ளது. * இங்குதான் இந்திய வீரர்கள் கவாஸ்கர் (221 ரன்கள், 1979), டிராவிட் (217 ரன்கள், 2002) இரட்டைசதம் அடித்தனர். சுழல் ஜாம்பவான் கும்ளே, தனது முதல் சதத்தை (110*) இந்த மைதானத்தில் தான் எடுத்தார். பறிபோகுமா "நம்பர்-2'  சர்வதேச டெஸ்ட் தரவரிசையில், "நம்பர்-1' இடத்தை இழந்துள்ள இந்திய அணி, தற்போது இரண்டாவது (119) இடத்தில் உள்ளது. இன்றைய நான்காவது டெஸ்டிலும் தோல்வியடையும் பட்சத்தில், இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். இங்கிலாந்து (125), தசம புள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணிகள் (117), முதல் இரண்டு இடத்தில் இருக்கும். சோகத்தை தவிர்க்குமா? இந்திய அணியின் 79 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில், 4 அல்லது 5 போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து (0-5, 1959), வெஸ்ட் இண்டீஸ் (0-5, 1961-62), ஆஸ்திரேலியா (0-4, 1967-68) அணிகளுக்கு எதிராக மட்டுமே முழுமையாக தோல்வியடைந்தது. மற்றபடி 1967, 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக 0-3 எனவும், 1999-2000ல் ஆஸ்திரேலியாவுடன் 0-3 எனவும் மோசமாக தோற்றது. இம்முறை இந்த சோகத்தை தவிர்க்கும் என்று நம்புவோம்.

    இதே நாள்...



  • இந்தோனேஷிய விடுதலை தினம்(1945)
  •  முதலாவது சிடி, ஜெர்மனியில் வெளியிடப்பட்டது(1982)
  •  இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ரெட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது(1947)
  •  மொன்டானாவில் குவேக் ஏரி அமைக்கப்பட்டது(1959)
  • LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...